Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வெளிநாட்டு மோகம் தேவையில்லை!

Posted on April 12, 2011 by admin

APJ அப்துல் கலாம்

கோழை உதவாக்கரையாய் நாம் அமெரிக்காவுடன் ஓடுகிறோம். அவர்களின் சாதனை, பெருமை, நிர்வாகம் குறித்து புகழ்கிறோம். நியூயார்க் நகரம் பொருளாதாரம் சிக்கலில் வாழ, சிக்கி, சரிவு கண்டது. உடன் இங்கிலாந்து ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட்டம் அனுபவித்ததும், அடுத்த விமானத்தில் அரபு நாடு பறக்கிறோம். வளைகுடா பகுதியில் போர் மூண்டதும் காப்பாற்றுமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். இந்தியாவுக்கு திரும்ப அழைக்குமாறு வேண்டுகிறோம்.

முடிந்த அளவு, ஒவ்வொருவரும் நாட்டை திட்டுகிறோம். நாட்டு அமைப்பை சீர்திருத்த ஒருவரும் தயாராயில்லை. நமது மனச்சாட்சியை பணத்திடம் அடகு வைத்துள்ளோம். யாரேனும் ஒருவர் தொலைதூரத்திலிருந்து வந்து நாட்டை சுத்தப்படுத்துவார். அதிசய தொடப்பம் கொண்டுவரட்டும் என எதிர்பார்க்கிறோம்.

பம்பாய் நகராட்சி ஆணையர் தினைகர் ஒருமுறை கூறினார். விலைமதிக்க முடியாத கழிவை வெளியில் தள்ள பணக்கார நாய்கள் வீதியில் உலா வருகின்றன. கண்ட இடங்களில் சிறுநீர் கழிக்கின்றன. நாய் மலம் தெருவில் கொட்டப்படுகிறது. இத்தகைய மேல்தட்டு படித்த வர்க்கம் நகரம் மாசு அடைவதாக புகார் கூறுகின்றனர்.

நடைபாதை சரியில்லை என அரசாங்கத்தை குறை காண்கின்றனர். நாய் வெளியில் செல்லும்போது ஒரு துடைப்பத்துடன் அழைத்துச் செல்லுங்கள். நகரம் சுத்தமாகும். அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் நாய் மலம், மூத்திரத்தை நாய் உரிமையாளர் வீதியில் அகற்றவேண்டும். அரசாங்கத்தை தேர்வு செய்ததும் நமது அனைத்து கடமைகளையும் பொறுப்புகளையும் தட்டி கழிக்கிறோம்.

மீடியா இழிவுகளை மட்டுமே படம் பிடிக்கிறது. நமது சாதனை, வலிமை, அங்கீகரிக்க இந்தியாவில் வாழும் நாம் சங்கடப்படுகிறோம். நமது நாடு பெரியது. பாராட்டத்தக்க பல பெருமைகள் நமக்குண்டு.

பால் உற்பத்தியில் உலகில் முதலிடம். தொலைதூர விண்கல இயக்கத்தில் (ஸி.ஷி.ஷி.) முதலிடம். கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடம். அரிசி விளைச்சலில் உலகின் இரண்டாவது பெரிய நாடு. தன்னிறைவு பெற்ற சுய ஆதிக்கமுள்ள பல கிராமங்களை தனிநபர் உழைப்பு சாதித்துள்ளது.

பல லட்சம் உதாரணங்களை மீடியா புறக்கணிக்கிறது. கெட்ட செய்தி, தோல்வி, அழிவு மட்டுமே மீடியா காட்டுகிறது.

டெல் அவிப் இஸ்ரேல் நகரில் நான் செய்தித்தாள்களை படித்தேன். முதல் நாள் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. குண்டு வெடிப்பு, சாவு, ரத்தக்களரி. என்றாலும் செய்திகளில் முதல் பக்கத்தில் யூத விவசாயி சாதனை வெளியிடப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் பாலைவனப் பகுதியை சோலைவன சாதனைப் படுத்தியுள்ளார். அனைவரையும் உந்தி உயரே தள்ளும் அனுபவம். அழிவு சாவு செய்திகள் உட்புறத்தில் இதர செய்திகளுடன் புதையுண்டு பிரசுரிக்கப்பட்டதை படித்தேன்.

வெளிநாட்டு டி.வி., சட்டை, தொழில்நுட்பம் மீது அதிக மோகம். இறக்குமதி சரக்கு மீது ஆர்வம் இந்தியர்களுக்கு அளவிடமுடியாது. தன்னிறைவு மட்டுமே சுயமரியாதை தரும்.

ஹைதராபாத் நகரில் சொற்பொழிவாற்ற நான் வந்தேன். 14 வயது சிறுமி வளர்ந்த இந்தியாவில் வாழ்வது எனது லட்சியம் என்று கூறினார்.

இந்தியா நலிந்த நாடல்ல. மிகப்பெரிய வளர்ந்த நாடு.

ஹைதராபாத் நகரில் முன்னாள் குடியரசு தலைவர் மாண்புமிகு ஏபிஜே அப்துல் கலாம் உரை.

தகவல் : ஆரெம், டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb