Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஒரு குற்றவாளி பல பயங்கரவாதிகளால் தாக்கப்படுகின்றான்!

Posted on March 31, 2011 by admin

லிபியா மீது மேற்கின் தாக்குதல்கள் தொடர்கின்றது லிபியா மக்களின் போராட்டத்தை ஆதரித்துள்ள இஸ்லாமிய இயக்கங்கள், நிறுவனங்கள் என்பன மேற்குலகம் இராணுவ ரீதியில் லிபியா மீது தலையிடுவதை பெரும்பாலும் ஏற்று கொள்ளவில்லை. அதற்கு பிரதான காரணமாக மேற்கின் நிகழ்கால, கடந்த கால வரலாறு அமைந்துள்ளது.

மேற்கு லிபியாவின் மக்களை பாதுகாக்க களம் இறங்கியுள்ளதாக எந்த ஒரு சாதாரண சர்வதேச பார்வை கொண்ட மனிதனும் ஏற்றுகொள்ள தயாரில்லை அந்த அளவுக்கு மோசமான நடத்தையை கொண்டதுதான் இந்த மேற்கு நாடுகள் கடாபி கொலைகாரன் குற்றவாளி என்று கூறும் மக்கள் மேற்கின் இராணுவ நடவடிக்கையை குற்றவாளி மீது பயங்கரவாதிகள் செய்யும் தாக்குதலாகத்தான் பார்க்கின்றனர்

மேற்கு எப்போதும் அடுத்த நாட்டு மக்களின் நலன் என்பதை விட தனது தேசிய, பிராந்திய நலன்களை பாதுகாப்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளது 1980 களில் ஈரானையும் ஈராக்கையும் மோதவிட்ட இவர்கள் இரு நாடுகளுக்கும் தேவையான ஆயுதங்களை வழங்கிவந்துள்ளனர்.

விரிவாக துனூசியாவிலும், எகிப்திலும், யெமனிலும், லிபியாவிலும், பாகிஸ்தானிலும் மக்களை அடக்கி வந்த சர்வாதிகாரிகளுக்கு தமது நாடுகளில் நலனை பேணுவதற்காக அவர்களை ஆதரித்தும் அவர்களுக்கு தேவையான ஆயுதங்கை வழங்கியும் வந்துள்ளனர் இன்று லிபியா மீது நடத்தப்படும் தாக்குதல்களும் ஒட்டுமொத்த மேற்கின் நலன் கருதியதுதான் என்பதை எவரும் இலகுவாக விளங்கி கொள்வர்.

கடாபி ஒரு சோஷலிச சர்வாதிகாரி , இஸ்லாமிய அரசியல் பேசிய மனிதர்களை கொன்று குவித்த கொலைகாரன் என்று அறியப்பட்டவர் இன்று லிபியா மீது சிலுவை யுத்தம் திணிக்கப்பட்டுள்ளது அனைத்து இஸ்லாமிய வாதிகளும் அணிதிரளுங்கள் ஜிஹாத் உங்களை அழைக்கின்றது சுவர்க்கம் உங்களுக்காக காத்திருக்கின்றது என்று மக்களை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் இந்த கூற்றை யூசுப் அல் கர்ழாவி இது சிலுவை யுத்தம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

துருக்கி மேற்கின் இராணுவ நடவடிக்கையை வரவேற்கவில்லை என்று தெரிவித்துள்ளதுடன் நின்று கொண்டது எந்த முஸ்லிம் நாடுகளும் லிபியாவின் மக்களுக்கு உதவ முன்வரவில்லை பலமான அரபு முஸ்லிம் நாடு லிபியாவின் விடையத்தில் தலையிட்டால் மேற்கின் தலையிடு தவிர்க்க முடியுமானதாக இருக்கும் என்று ஹிஸ்புத் தஹ்ரீர் தெரிவித்து வருகின்றது ஆனால் மேற்கு வழமைபோல் தனது வேலையில் மிகவும் கவனமாக காய் நகர்த்துகின்றது தாக்குதல் தொடங்கியதில் இருந்து இன்று வரை 162 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது 300 தடவைகள் யுத்த விமானங்கள லிபியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது அவை எத்தணை குண்டுகளை போட்டுள்ளது என்று அறிவிக்கபடவில்லை பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கடாபி நிர்வாகம் கூறுகின்றது மேற்கின் தாக்குதல்கள் தொடர்கின்றது எதுவரை? எவ்வளவு காலத்துக்கு? என்பன அறியப்படாத விடயமாக இருக்கிறது.

இதற்கிடையில் லிபியாவின் கிழக்கு பிரதேசத்தில் உள்ள போராளிகள் இடைகால அரசு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள் இதன் பிரதமராக மஹ்மூத் ஜிப்ரி என்ற மேற்கு நாடுகளுக்கு மிகவும் தேவையான மனிதர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தாக்குதல்கள் தொடர்கின்றது ஒரு பெரும் குற்றவாளி பல பயங்கரவாதிகளினால் தாக்கப்படுகின்றான் மீண்டும் மேற்கு முஸ்லிம் உலகை தனது கட்டுப்பாட்டில் வைக்க தேவையான வெற்றிகளை பெற்றுவருகின்றது.

எம்மை ஈராக்கில் கொல்கின்றவர்கள், ஆப்கானிஸ்தானில் எம்மை அழிப்பவர்கள், இஸ்ரேலுக்கு எதிராக எமக்கு எந்த உதவியும் செய்யாதவர்கள், என்றும் இஸ்ரேலுக்கு பக்க துணையாக இருப்பவர்கள். இன்று லிபியாவிலும் தாக்குதல் நடத்துகின்றனர்; தாக்கபடுவது ஒரு சர்வாதிகாரியாக இருந்தாலும் தண்டிப்பவர்கள் நீங்களாக இருக்ககூடாது என்றுதான் இன்று முஸ்லிம் வாலிபர்கள் நினைக்கின்றனர்.

மேற்கு தனது தேசத்தின், பிராந்தியத்தின் நலன் பேணும் பல அவதாரங்களை எடுத்து வருகின்றது

source: http://ourummah.org/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb