ஆலிஃப் அலி
كل نفس ذائقة الموت
மற்றுமோர் இடத்தில் لكل امة اجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون
“ஒவ்வோர் சமூகத்துக்கும் (குறிப்பிட்டதொரு) தவனையுண்டு. அவர்களது தவனை வந்துவிட்டால் ஒரு நாழிகையேனும் பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.” (அல்குர்ஆன் – யூனுஸ்:49)
நவீன தொழிநுட்பங்களைப்பயன்படுத்தி எவ்வளவு பாதுகாப்புப் பொறிமுறைகளைக் கையாண்டு அமைக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்தாலும் மரணம் நிச்சயம் என்பதை மற்றுமோர் இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். (அது) மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்)களில் நீங்கள் இருந்தாலும் சரியே!” (அல்குர்ஆன் – அன்னிஸா:78)
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களைவைத்துப் பார்க்கும்போது மரணம் என்பது நிச்சயம் என்பதை விளங்கமுடிகிறது. வாழ்கின்றபோது மனிதர்களுக்குரிய கடமையாதெனில் கொடூரமான மரணவேதனையிலிருந்தும் அதன் பின்னுள்ள அகோரமான மண்ணறையின் தீங்குகளிலிருந்தும் அதனைத் தொடர்ந்துவரும் பயங்கரமான நரகப்படுகுழியின் தண்டனைகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் தன் உலக வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாகும்.
அவ்வாறு தன் வாழ்வைச் சிறப்புற அமைத்துக்கொள்ளும் பட்சத்தில் அவனது மரணவேதனை இதமானதாகவும் மண்ணறை சுவனப்பூஞ்சோலையாகவும் இறுதி ஒதுங்குமிடம் சதாவும் இன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிரந்தர சுவனமாகவும் அமையும்.
அந்தவகையில் நபியவர்கள் கூறிய இரண்டு விதமான மனிதர்களுடைய மரணநிலைபற்றியும் அவர்களது மண்ணறை வாழ்க்கை பற்றியும், பரா இப்னு ஆஸிஃப் ரளியல்லாஹு அன்ஹு
முஃமினின் நிலை
إن الذين قالوا ربنا الله ثم إستقاموا تتنزل عليهم الملئكة الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون
பரா இப்னு ஆஸிஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: “ஒருமுறை அன்ஸாரிய சகோதரர் ஒருவரின் ஜனாஸாவிலே கலந்துகொள்வதற்காக நாம் நபியவர்களோடு சென்றுகொண்டிருந்தோம். மண்ணறை மைதானத்தை அடைந்ததும் நபியவர்கள் அங்கு அமர்ந்துகொண்டார்கள். நாமும் அண்ணலாரைச் சூழ அமர்ந்தோம். எமது தலைகளில் பறவைகள் வந்து நிற்குமளவுக்கு நாம் எவ்விதச் சலனமுமின்றி நபியவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தோம். நபியவர்கள் அவரது கையிலிருந்த ஒரு சிறு தடியினால் நிலத்தில் தட்டிவிட்டு தலையை உயர்த்தி “கப்ருடைய வேதனையைவிட்டும் அல்லாஹ்விடம் அபயம் தேடிக்கொள்ளுங்கள்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூறினார்கள்.
பின்பு இவ்வாறு கூறினார்கள்:
ஒரு முஃமினான அடியான் மரணப்படுக்கையில் இருக்கும்போது சூரியனின் பிரகாசத்தோடும் வெண்நிற முகத்தோடும் “நாஷிதாத்” எனும் மலக்குகள் வானிலிருந்து இறங்கிவருவார்கள். அவர்களிடம் சுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கபனும் சுவனத்தின் வாசனைத் திறவியங்களும் இருக்கும். அவ்வானவர்கள் கண்ணெட்டும் தூரம்வரை அவருக்கு முன்னால் வீற்றிருப்பார்கள். பின்பு மலகுல்மௌத் வந்து அவரது தலைப்பகுதியில் அமர்ந்து “ஏ நல்ல ஆன்மாவே…! அல்லாஹ்வின் மன்னிப்பையும் திருப்பொறுத்தத்தையும் பெற்ற நிலையில் வெளியேறு” என்று கூறுவார். ஒரு குவலையிலிருந்து நீர் வடிந்தோடுவதுபோன்று அம்மனிதனின் ஆன்மா அவ்வுடலைவிட்டும் இலகுவான முறையில் வெளியேறும்.
உடனே அம்மலக்குகள் அவ்வான்மாவை சுவனத்து நறுமனங்கமலும் கபன் துணியில்வைத்து எடுத்துக்கொண்டு வானத்திற்கு உயர்ந்து செல்வார்கள். அந்த ஆன்மாவிலிருந்து கஸ்தூரி வாசம் வீசிக்கொண்டிருக்கும். வானத்தில் சஞ்ஜரித்துக்கொண்டிருக்கும் வேறு மலக்குகள் இம்மலக்குகளைக் கடந்துசெல்லும்போது “எவ்வளவு நறுமணமுள்ள ஆன்மா இது..!!” என்று கூறுவார்கள். அதற்கு அவ்வான்மாவைச் சுமந்துசெல்லும் மலக்குகள் “இது இன்னாரது மகன் இன்னாரது ஆன்மா” என்று உலகில் அவர் எப்பெயர் கூறி அழைக்கப்பட்டாரோ அப்பெயரையே கூறி மற்ற மலக்குகளுக்கு அறிமுகப்படுத்திவைப்பர்.
பின்பு முதல் வானத்தை அடைந்ததும் மலக்குகள் இவருக்காக அவ்வானத்தின் கதவைத் திறக்குமாறு கோறுவார்கள். வானம் திறபடும். இவ்வாறு ஒவ்வொரு வானத்தையும் கடந்து ஏழாவது வானத்தை அடைந்ததும் அல்லாஹ் “எனது அடியானை இல்லிய்யீனெனும் மிக உயர்ந்த இடத்தில் பதியுங்கள். பின்பு அவனை பூமிக்கே அனுப்புங்கள். ஏனெனில் அவனை நான் அங்குதான் படைத்தேன். அங்குதான் மரணிக்கச்செய்தேன். மீண்டும் அங்கிருந்தே உயிர்கொடுத்து உழுப்புவேன்” என்று வானவர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பான்.
மரண வீட்டில் இருக்கும் மையித் தன்னை விரைவாக கப்ரில் கொண்டுசென்று அடக்கம்செய்யுமாறும் கூறும். அதனைத் தாமதப்படுத்தும்போதெல்லாம் “ஏன் என்னைத் தாமதப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்கும். மிக்க சந்தோசமாக அமைதியாக இருக்கும். அவ்வாறு அம்மையித் பேசுவதை சுற்றியிருக்கும் மனு, ஜின் இனத்தைத் தவிர மற்றைய அனைத்துப் படைப்புகளும் உணர்ந்துகொள்ளும்.
மண்ணறையிலே கொண்டுசென்று அடக்கம்செய்துவிட்டு அனைவரும் மீண்டு செல்லும்போதும் அம்மையித் கலக்கமோ, நடுக்கமோ இன்றி மகிழ்வுடன் இருக்கும். பின்பு இல்லிய்யீனில் பதியப்பட்ட ஆன்மா பூமிக்குத் திருப்பப்பட்டு மண்ணறையிலிருக்கும் அதன் உடலோடு சேர்க்கப்பட்டுவிடும். அதனைத் தொடர்ந்து அழகான தோற்றத்தில் மனம்வீசும் நிலையில் இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் பிரகாசமாக இருப்பார்கள். மையித்தை அண்மித்து கேள்விகளை ஆரம்பிப்பார்கள்.
உனது இரட்சகன் யார்? من ربك؟
உனது மார்க்கம் எது? وما دينك؟
உனது வழிகாட்டி யார்? ومن نبيك؟
இவை ஒவ்வொன்றுக்கும் அம்மையித் அழகான முறையில்
அல்லாஹ்வே எனதிரட்சகன் ربي الله
இஸ்லாம்தான் எனது மார்க்கம் ديني الاسلام
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது வழிகாட்டி نبيي محمد (صل) என்று பதிலளிக்கும்.
உடனே வானிலிருந்து ஒரு அசரீரி ஒலிக்கும். صدق عبدي “எனதடியான் உண்மையுரைத்துவிட்டான்”
பின்பு அவ்வானவர்கள் அம்மையித்திற்கு அவரது இடது புறத்தில் பயங்கர நரகை எடுத்துக் காண்பிப்பார்கள். எனினும் வாழும்போது செய்த நல்லறங்களுக்காக அவரது வலப்புறத்தில் சுவனத்தை எடுத்துக்காண்பிப்பார்கள். பின்பு அவருக்கு சுவன ஆடைகள் அணிவிக்கப்பட்டு சுவன விரிப்புகளும் விரிக்கப்படும். அதுமுதல் அவ்வான்மா சுவனத்தின் இதமான தென்றல் காற்றை அனுபவித்துக்கொண்டிருக்கும். கண்ணெட்டும் தூரத்திற்கு அம்மண்ணறை விசாலமாக்கப்படும்.
அதன்பின்பு அழகானதொரு மனிதனின் தோற்றத்தில் மனம்வீசும் ஆடைகளை அணிந்துகொண்டு ஒருவர் அம்மையித்திடம் வருவார். வந்து “நீர் வாக்களிக்கப்பட்டிருந்த இந்நாளைக்கொண்டு நெற்செய்திபெறுங்கள்” என்று சுபசோபனம் கூறுவார்.
அதற்கு அவ்வான்மா “நீர் யார்?” என வினவும். அதற்கு அவ்வுருவம் “நீர் உலகில் செய்த நன்மையான காரியங்களின் மொத்த வடிவம்தான் நான்” என்று கூறும்.
பின்பு அம்மையித்திற்கு சுவனத்தின் காட்சிகள் காண்பிக்கப்படும். அதனைப் பார்த்து ரசித்துக்கொண்டே அவ்வான்மா “ربي أقم الساعة حتى ارجع إلى اهلي ومالي” “எனதிரட்சகனே! எனது குடும்பத்தின்பாலும் சொத்து செல்வங்களின் பாலும் நான் செல்வதற்காக மறுமையை துரிதப்படுத்திவிடு” என்று பிறார்த்திக்கும். பின்னர் அல்லாஹ் அவ்வுத்தம அடியானை புது மனமகனைப்போன்று மறுமைநாள் நிகழும்வரை உறங்கவைப்பான்.”
ஒரு முஃமினுடைய மரணத்தருவாயும் அதன்பின்னரான மண்ணறை நிகழ்வுகளும் இவ்வாறுதான் அமையும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதேசமயம் ஒரு இறை நிராகரிப்பாளனதுயூயூ இணைவைப்பவனது நிலைமை எத்தகையது என்பதையும் நபியவர்கள் எமக்குத்தெளிவுபடுத்தியுள்ளார்கள். தெளிவுபடுத்தியது மாத்திரமின்றி அதிலிருந்து பாதுகாப்புத்தேடுமாறும் வலியுருத்தியுள்ளார்கள்.
source: