[ நல்ல அமலொன்றைச் செய்வதால் அல்லாஹ்விடம் நன்மை கிடைக்காததற்குக் காரணம், அந்த அமலை அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் செய்யாமல் பிறமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அவர்களின் பாராடடுதலைப் பெற்றுக் கொள்வதற்காகவும் செய்வது செய்வது நயவஞ்சகம் ஆகும்.
மற்றவர்களின் முகஸ்துதியைப் பெறும் நோக்கில், தமது செல்வத்தை செலிவிடுவோர் தமது அமலைப் பாழாக்கிவிடுகின்றனர்.
”நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தை செலவிடுபவனைப் போல் உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும்; தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்…..” (அல்குர்ஆன் 2: 262)]
திருக்குர்ஆன் அல்லாஹ்வின் அருள்வாக்கு, அதன் ஒவ்வொரு சொல்லும் அல்லாஹ்வின் கட்டளை- மனிதகுல மேம்பாட்டுக்கான வழிகாட்டல்.
எனவே, மனிதர் யாவரும் அல்லாஹ்வின் திருவாக்கான குர்ஆனை நன்கு விளங்கி நற்கரு மம் புரியவேண்டும். குறிப்பாக, மனிதனிடம் காணப்படும் முகஸ்துதி பேசுதல் பற்றி குர்ஆனில் கூறப்பட்டதை அறிவோம்.
பொதுவாக முகஸ்துதி என்றால் ஒருவர் மற்றொருவரை முகத்துக்கு முன்னே புகழ்தலாகும். அவருக்குத் தெரியாது புகழ் கூறுவதல்ல- அவரின் உதவியை நாடி, அளவுக்கதிகமாகப் புகழ்ந்து அன்பை ஈர்த்து காரியத்தைச் சாதித்துக்கொள்கின்றனர் சிலர். இவர்களைப் பற்றி அல்குர்ஆன் கூற்றுக்கள் நமக்கு வழிகாட்டக் கூடியவைகளாகும்.
பின்வரும் குர்ஆன் வசனத்தை நோக்குவோம்.
”அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பாது மக்கள் புகழ்வதற்காக தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்) யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவனே கெட்ட நண்பன்” (அல்குர்ஆன் 4: 38)
இந்தக் குர்ஆன் வசனத்திலிருந்து, மக்களிடமிருந்து புகழை எதிர்பார்த்து தர்மம் செய்வோர் அல்லாஹ்விடத்தில் அருள் பெற்றவர்களல்லர்; ஷைத்தானின் நண்பர்களாக மாறி விடுகின்றனர். அல்லாஹ்வின் பொருத்தத்தை எதிர்பார்க்காது, மக்களின் பாராட்டுதலைப் பெறும் ஒரே நோக்குடன் மற்றவர்களுக்கு தம் செல்வத்திலிருந்து செலவிடுகின்றனர். அவர்களின் அமல் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
அதுமாத்திரமின்றி பிறர் புகழ்வதை ஆசை வைத்து செயற்படுவது நயவஞ்சகர்களின் போக்கு என்பதை பின்வரும் குர்ஆன் வசனம் கூறுகின்றது.
“நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் இருக்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்”. (அல்குர்ஆன் 4: 142)
நல்ல அமலொன்றைச் செய்வதால் அல்லாஹ்விடம் நன்மை கிடைக்காததற்குக் காரணம், அந்த அமலை அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் செய்யாமல் பிறமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அவர்களின் பாராடடுதலைப் பெற்றுக் கொள்வதற்காகவும் செய்வது செய்வது நயவஞ்சகம் என்பதை நன்கு அறிந்து கொள்கின்றோம்.
மேலும், திருக்குர்ஆன் முகஸ்துதி பற்றி பின்வருமாறு கூறுகின்றது.
”தமது இல்லங்களி லிருந்து பெருமைக்காகவும் மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தோரைப் போன்றும் ஆகிவிடாதீர்கள் அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.” (அல்குர்ஆன் 8:47)
மேலும் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தால், அல்லாஹ்வும் அவனது தூதருமே திருப்திப்படுத்தத் தகுதி படைத்தவர்கள். (அல்குர்ஆன் 9:62)
மேலும், பின்வரும் குர்ஆன் வசனத்தை கவனியுங்கள்:
”அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்” (அல்குர்ஆன் 107: 06)
மற்றவர்களின் முகஸ்துதியைப் பெறும் நோக்கில், தமது செல்வத்தை செலிவிடுவோர் தமது அமலைப் பாழாக்கிவிடுகின்றனர்.
பின்வரும் குர்ஆன் வசனத்தை நோக்குவோம்.
”நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தை செலவிடுபவனைப் போல் உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும்; தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்…” (அல்குர்ஆன் 2: 262)
எனவே, மற்றவர் புகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நல்ல அமல்கள் செய்வதில் பயன் கிடைக்காது என்பது தெளிவாகின்றது
-mjabir
source: http://ipcblogger.net/mjabir/