Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கருத்து முரண்பாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும்

Posted on March 29, 2011 by admin

Related image

கருத்து முரண்பாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும்

  அஷ்ஷைக் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி    

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தனமானது, அவனது அருளும், சாந்தியும் இறுதி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வழி நடந்த ஸஹாபாக்கள், தாபீயீன்கள் தபவுத்தாபியீன்கள் அனைவர் மீதும் நிலையான சாந்தியும், சமாதானமும் நிலைக்கட்டுமாக!

   சீரமைப்பின் அவசியம்   

முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் மார்க்கம் தொடர்பான முரண்பாடுகளை இனம் கண்டு அவற்றை காத்திரமான வழிமுறைகள் மூலம் சீரமைப்பது தகுதியும், அறிவும் உள்ள இஸ்லாமிய அழைப்பாளர்கள் மீதுள்ள கடமையாகும்.

முன்னோர்களான அறிஞர்கள் நம்மை விட அறிவிலும், ஒழுக்கத்திலும், சட்டங்களை அகழ்ந்தெடுப்பதிலும் தமது காலங்களைத் தியாகம் செய்தவர்கள், அவர்கள் தமது பொன்னான நேர காலங்களை ஏன்? எதற்காக தியாகம் செய்தார்கள், எந்த அடிப்படைகளை எட்டுவதற்காக தம்மை அற்பணித்தார்கள் போன்ற கேள்விகளை நமக்கு நாம் எழுப்பிக் கொள்வதால் மார்க்கம் தொடர்பான நமது முரண்பாடுகளுக்கும் அலட்சியமாக நாம் விட்டுவிடும் மார்க்க அமச்ங்களுக்கும் தீர்வு காண வழி பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமூக நல்லிணகத்தையும், ஐக்கியத்தையும் காரணம் காட்டிக் கொண்டு செத்துப் போன பித்அத்துக்கள் உயிரோட்;டம் பெறுவதையும், சவக்குளிக்குள் தள்ளப்பட்ட மௌட்டீகங்கள் புத்துயிர் பெறுவதையும் சீரமைப்பு என்ற போர்வையில் அரங்கேறுவதை உண்மையான ஒரு அழைப்பாளன் அங்கீகரிக்கமாட்டான்.

 وَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَى مَا أَنْهَاكُمْ عَنْهُ إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ [هود : 88]

நான் உங்களைவிட்டும் எதைத் தடுக்கின்றேனோ அதில் உங்களுக்கு மாறாக நடக்க எனக்கு விருப்பம் கிடையாது. முடியுமானவரை சீர் திருத்துவதையே நான் விரும்புகின்றேன். எனக்குரிய அருள்பாலிப்பு அல்லாஹ்வைக் கொண்டே நடந்தேறும், அவன் மீதே நான் பூரண நம்பிக்கை வதை;துள்ளேன், அவன் பக்கமே மீளுவேன் (ஹுத்: வசனம்: 88) என இறைத்தூதர்களில் ஒருவரான ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.

அடிப்படை அம்சங்களில் நபிமார்கள் முரண்படவில்லை. முரண்பாடு என்பது சட்ட விவகாரங்களில்தான் ஏற்பட்டிருக்கின்றது

شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ [الشورى : 13]

நூஹுக்கு எதனை நாம் (மார்க்கமாக) உபதேசித்தோமோ அதையும், உமக்கும், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு எதனை வஹியாக அறிவித்தோமோ அதையே உமக்கு (அல்லாஹ்) மாரக்கமாக்கியுள்ளான். (அது) நீங்கள் (அனைவரும்) மார்க்கத்தை நிலை நாட்டுங்கள், அதில் பிரிந்துவிடாதீpர்கள் (என்பதாகும்). (அல்குர்ஆன்: அஷ்ஷுரா, வசனம்: 13).

இங்கு நபிமார்கள் அனைவரும் நிலைநாட்டிய மார்க்கத்தை முஹம்மத் நபிக்கும் மார்க்கமாக்கினான் எனக் கூறப்படுவது அடிப்படையான அம்சமான (தவ்ஹீதுல் உலூஹிய்யா) சார்ந்த வணக்க அம்சங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். (பார்க்க: இப்னு கஸீர்). இதை பின்வரும் நபி மொழியின் மூலம் இன்னும் தெளிவாக அறியலாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى ابْنِ مَرْيَمَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَالْأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلَّاتٍ أُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِد (صحيح البخاري / باب قَوْلِ اللَّهِ { وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذْ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا] (مسلم / فضائل عيسى عليه السلام)

மர்யமின் ஈஸாவிற்கு இம்மையிலும், மறுமையிலும் மிகவும் அருகதையயுடையவன் (நெருக்கமானவன்)நானே! நபிமார்கள் தந்தைவழிச் சகோதரர்கள், அவர்களின் அன்னையர் வெவ்வேறானவர்கள், அவர்களின் தீன் -மார்க்கம்- ஒன்றாகும். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

இந்தச் செய்தியின் அடிப்படையில் நபிமார்கள் போதித்த அடிப்படை அம்சமான அத்தவ்ஹீத் எனப்படும் ஓரிறைக் கோட்பாட்டின் நபிமார்கள் கொண்டு வந்த மார்க்கம் ஒன்று என்பதையும், சட்டம் சார்ந்தவைகளில் வேறுபாடுகளும், வேற்றுமைகளும் காணப்பட்டுள்;ளன என்ற உண்மையினையும் புரிந்து கொள்ளலாம்.

  கருத்து முரண்பாடுகள் காலத்தால் அழியாதவை    

இதைக் காரணமாகக் கூறிக் கொண்டு முரண்பாடற்ற கருத்துக்களை முரண்பாடுள்ளவைகள் எனக் கூறி சமூகத்தில் மார்க்கமாக அங்கீகரிக்கலாமா? அதை அறிவார்ந்த வாதமாகக் கொள்ளலாமா என்று அறிஞர் பெருமக்கள் சிந்திக்க வேண்டும். இதைக் காரணம் காட்டி மார்க்க அங்கீகாரமற்ற எத்தைனையோ விடயங்கள் மார்க்கமாகிவிட்டன, எத்தனை நவீன அனுஷ்டானங்கள் தொடர் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன என்று சிந்திக்க வேண்டும்.

وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى اللَّهِ

நீங்கள் எந்த ஒரு விஷயத்தில் முரண்பட்டாலும் அதற்கான தீர்வு அல்லாஹ்விடம் உண்டு (அல்குர்ஆன்: அஷ்ஷுரா, வச: 10) என்ற வசனத்தின் அடிப்படையில் சிந்தித்தால் அந்த விதி முரண்பாடாகத் தெரியவில்லையா?

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ

உமது இரட்சகன் அருள் செய்;தவர்களைத் தவிர (ஏனைய) அனைவர்களும் தமக்குள் முரண்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ( ஹுத்: வசனம்:118,119). என்ற வசனம் முரண்பாடு அல்லாஹ்வின் அருளை இல்லாதொழிக்கும் சக்தியுடையது என்பதை அறிய வேண்டும்.

மலக்குமார்களே கருத்து முரண்பட்டுக் கொண்டனர் ???

நூறு கொலை செய்த மனிதனின் உயிரைக் கைப்பற்ற வந்த வானவர்களே தமக்குள் கருத்து முரண்பட்டுக் கொண்டனர் என ஒரு ஷேக் கூறி குசியாக்கினாராம் சபையை. இவ்வாறு கூறுவதால் அ மலக்குகள் தமக்குள் முரண்பட்டுக் கொண்டனர் என்று முடிவுமில்லை, அவர்களின் முரண்பாட்டிற்கு தீர்வு இல்லாதிருந்தது என்ற அர்த்தமும் இல்லை.

மாற்றமாக, யார் இவ்வாறு கூறுகின்றார்களோ அவர்களே தொடர்ந்தும் முரண்பாட்டை விரும்புகின்றனர், தீர்வை விரும்பவில்லை என்பது அர்த்தமாகும். மலக்குகளின் முரண்பாட்டிற்கு அதில் தீர்வு எட்டப்பட்டது போல முரண்பாடானவற்றிற்கு தீர்வுகள் எட்டப்படும் என்பதை அவர் அறிந்து கொண்டே இவ்வாறு சொதப்பி இருக்கின்றார்.

இது இவரினதும், இவர் போன்ற பலரதும் பழக்கமும், இயல்பும். அதை நம்மால் மாற்ற முடியாது. இவரே ஒன்றும், ஒன்றும் இரண்டு என்றும் கூறலாம், ஒன்றும் ஒன்றும் பதின் ஒன்று கூறலாம் என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் கூறி இருந்தார். இது கணக்குப் பாடத்திற்கு வேண்டுமானால் சரிவரலாம், மார்க்க விவகாரங்களில் உள்ள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஒருக்காலும் உதவாது. இவர்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் டைலரின் சொல்லிக் கொடுக்கவா வந்தார்கள் என ஏழளமாகக் கேள்வியும் கேட்டாராம் அவரது உரை ஒன்றில்.

   முரண்பாடுகளின் தன்மைகள்     

   முரண்பாடுகள் கொள்ள முடியாத அம்சங்கள்    

(அல்லாஹ், மறுமை, சுவர்க்கம், நரகம், ஷீஆ, சன்னி போன்ற அகீதா சார்ந்த அம்சங்கள். சுபஹ் குனூத், கூட்டு துஆ, கத்தம், பாத்திஹா. ஆடையை கரண்டைக்குக் கீழால் தொங்கவிடுதல் போன்ற ஊர்ஜிதம் செய்யப்பட்ட வழிமுறைகள்)

முரண்பாடுகள் கொள்ள முடியுமான அம்சங்கள்

(பிறை விவகாரம், உறுப்புக்களைத் தானமாக வழங்குதல், இரத்ததானம், தாடியின் அளவு போன்ற அம்சங்கள்).

   முரண்பாடுகள் வரவேற்கப்பட்டதா?   

பொதுவாக முரண்பாடுகள் வரவேற்கத்தக்கதன்று, மாத்திரமின்றி மார்க்கத்தில் வெறுக்கப்பட்ட அம்சங்களில் முக்கியமானதாகும். தொழுகையில் வரிசையில் நிற்போர் சீராக நிற்க வேண்டும் எனக் கட்டளையிடும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ اسْتَوُوا وَلَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ (صحيح مسلم / 654 ترقيم المكتبة الشاملة/ صحيح مسلم / بَاب تَسْوِيَةِ الصُّفُوفِ وَإِقَامَتِهَا وَفَضْلِ الْأَوَّلِ فَالْأَوَّلِ مِنْهَا وَالِازْدِحَامِ عَلَى الصَّفِّ الْأَوَّلِ وَالْمُسَابَقَةِ إِلَيْهَا وَتَقْدِيمِ أُولِي الْفَضْلِ وَتَقْرِيبِهِمْ مِنْ الْإِمَامِ)

‘தொழுகையில் எங்களது தோழப்புயங்;;களைத் தடவியவர்களாக நீங்கள் சரியாக நின்று கொள்ளுங்கள், முரண்பட்டுக் கொள்ளாதீர்கள், அதனால் உங்கள் இதங்களும் முரண்பட்டுக் கொள்ளும் எனக் கூறுவார்கள். (முஸ்லிம்) இங்கு முரண்பாடு என்பது வரிசையில் சீரற்று நிற்பதையும், இமாம் செய்வதற்கு மாற்றமாக செய்வதையும் கூறப்படும். இருந்தும் அதில் கூட முரண்பாடு விரும்பத்தக்கதல்ல என்பதே அந்தக் கூற்றின் உள்ளர்த்தமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ (صحيح البخاري / الاقتداء بسنن رسول الله / 6744 ترقيم الشاملة)

நான் உங்களை விட்;ட வழியில் என்னை விட்டுவிடுங்கள். (பின்பற்றுங்கள்), உங்களுக்கு முன்பு வாழ்ந்தோர் தமது நபிமார்கள் மீது கருத்து முரண்பாடு கொண்டதும், அவர்களிடம் அதிகப்படியான கேள்விகள் கேட்டதும்தான் அவர்களை அழிவுக்கு இட்டுச் சென்றது, நான் ஒன்றை விட்டும் உங்களைத் தடுத்தால் அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள், ஏதாவது ஒரு கட்டiயையைக் கொண்டு ஏவினால் முடியுமானவரை அதில் இருந்து பின்பற்றுங்கள் (புகாரி). என்று அல்லாஹ்வின் தூதர் எச்சரிக்கின்றார்கள் என்றால் முரண்பட்டுக் கொள்வது சரிதானா என்ற கேள்வி நியாயமற்றதல்லவே!

    இப்படி ஒரு ஆதாரம்     

((اختلاف أمتي رحمة)). موضوع. “الأسرار المرفوعة” (506) . “تنزيه الشريعة” (2/402) . وقال الألباني: لا أصل له. “الضعيفة” (11) .( يراجع كتاب : مائة حديث مشهورة على ألسنة الخطباء)

எனது சமுதாயத்தவர் கருத்து முரண்பாடு கொள்வது அருளாகும் என்று நபியின் மீது கூறப்படும் பொய்யான செய்தியை வைத்துக் கொண்டு முரண்பாடுகளுக்கு தீர்வை விரும்பாதவர்களால் ஷிர்க்குகளும், பித்அத்துக்களும் நியாயப்படுத்தப்பட்டு இப்போதும் பார்க்கின்றோம். நபியின் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்டதை அமுதவாக்காகக் கொண்டு செயல்படும் இது போன்ற நடைமுறைகளும் கருத்து முரண்பாடுகள் வளரக் காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.

    மற்றொரு ஆதாரம்     

நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரம் பற்றி அல்குர்ஆனின் அல்அஃராஃப் அத்தியாயம் 142 வது வசனம் முதல் 156 வது வசனம் வரை இடம் பெறுகின்றது. அவற்றில் காளைமாட்டை வணங்குவதை எச்சரித்து நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தெளிவாக பிரச்சாரம் செய்தார்கள் என்பதைப் பார்க்கின்றோம்.

தாஹா அத்தியாம் 86 முதல் 98 வரையுள்ள வசனங்களில் காளைமாட்டை வணங்குவதை அல்லாஹ் விரும்பாத செயல் என்பதை எச்சரித்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரச்சாரம் செய்ததை இன்னும் தெளிவாகக் காணலாம்.

அந்த சரித்தரின் தொடரில் ‘எனது பேச்சை நீ கவனிக்காமல் பனூஇஸ்ரவேலர்கள் மத்தியில் பிரவினையைத் தோற்றுவித்தாய்’ என்று ஒரு இடத்தில் வரும் வசனத்தைத் தலை கீழாகப் புரிந்து ஹாரூன் நபி சமூக ஐக்கியத்தை நிலைநாட்டிட சிலை வழிபாட்டை அங்கீகரித்ததாக விளக்குகின்றனர்.

அல்குர்ஆனில் இக்திலாஃப் என்ற சொற்றொடரை ஆய்வு செய்தால் நபித்துவப் பிரச்சாரத்தின் பின்பே அப்போதய மக்கள் தமக்குள் முரண்பட்டுக் கொண்டனர் என்பதையும், நபித்துவத்தை நிராகரித்தனர் என்பதையும் அந்தச் சொல் அதிகம் விளக்குகின்றது.

குர்ஆன் பற்றிய இந்த அறியாமை மூலம் தமது கொள்கைகளை காய் நகர்த்த முணைவது எவ்வளவு பெருமம் அநீதி என்று என்று சிந்தியுங்கள், எப்போதுதான் இவர்கள் சத்தியத்தைச் சரியாகப் புரிவார்களோ தெரியவில்லை. பட்டதாரி சேக்குகளை உருவாக்கும் கலா நிலையத்தின் பிரதிப்பணிப்பாளராக இருப்பவர் கூட இதில் மூக்கை நுழைத்திருந்தாராம்.

உலகில் ஐக்கியத்தை நிலைநாட்டுவதில் பாரிய இடை வெளியினை இஸ்லாமியக் கொள்கைகள் தொற்றுவிப்பதாக கூச்சலிடும் ஐரோப்பியர்களும், யூதர்களும் அதன் பின்னணியின் இருப்பதாக கொக்கரிகின்றனர். அது தீக்கரையாக்கப்பட வேண்டும் என்றும் கோஷமிடுகின்றனர், குரல் கொடுக்கின்றனர் என்பது ஆச்சரியமான ஒன்றல்ல. மாற்றமாக, சமுதாய ஐக்கியத்தில் அகீதா பாரிய குந்தகத்தை ஏற்படுத்துகின்றது என்று ஐக்கியப் பிரியர்களும், கமால் அதாதுர்கின் அடிவருடிகளும் தூர நோக்கு தாயிக்களும் சொல்வதுதான் ஆச்சரியம்.

    கருத்து முரண்பாடுகளைக் கழைய காத்திரமான வழிமுறைகள் வேண்டும்   

மார்க்கத்தில் முரண்பாடு தோற்றுவதற்கான அணுகூலங்கள் இருக்கவே செய்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் குர்ஆனை ஓதும் முறையில் இரு ஸஹாபாக்கள் மத்தியில் முரண்பாடு தோன்றியது. ஒருவர் ஓதியமுறைக்கு மாற்றமாக மற்றவர் ஓதினார், தான் ஓதிய முறையே சரியானது என இருவரும் பிடிவாதமாக வாதிட்டுக் கொண்டனர், மாத்திரமின்றி அது ஒரு சர்ச்சையாகவும் காட்சியளித்தது, அதற்கான தீர்வை அல்லாஹ்வின் தூதரிடம் வேண்டிய போது:

عن عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو قَالَ هَجَّرْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا قَالَ فَسَمِعَ أَصْوَاتَ رَجُلَيْنِ اخْتَلَفَا فِي آيَةٍ فَخَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِي وَجْهِهِ الْغَضَبُ فَقَالَ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِاخْتِلَافِهِمْ فِي الْكِتَابِ صحيح مسلم / باب النهي عن اتباع متشابه القرآن / 4818 ترقيم الشاملة)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் ஒரு நாள் காலையில் சென்றிருந்தேன், இரு மனிதர்கள் ஒரு ஆயத்தில் முரண்பட்டுக் கொண்டதை செவியேற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் வெறுப்பால் கோபம் பொங்கியது. உங்களுக்கு முன்பிருந்தோர் அல்லாஹ்வின் வேதத்தில் முரண்பட்டே அழிந்து கொண்டார்கள் எனக் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்).

குர்ஆனை விளங்குவதில் முரண்பட்ட விளக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத ஒன்றாக ஏற்றுக் கொண்டாலும், அதுவும் விரும்பத்தக்க ஒன்றல்ல.

عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ صحيح البخاري /باب كراهية الخلاف / 6816 ترقيم المكتبة الشاملة) صحيح بخاري / بَاب اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ

உங்கள் இதயங்கள் ஒன்றுபடும் அம்சங்களில் குர்ஆனை ஓதுங்கள், நீங்கள் (அதை ஓதுகின்ற போது) முரண்பட்டுக் கொண்டால் அதை விட்டு விலகிக் கொள்ளுங்கள். (நூல்: புகாரி 6816) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

குர்ஆனை ஓதும் முறை இரண்டு விதமாக இருப்பதுண்டு, அதில் கூட முரண்பாடு ஏற்படுகின்ற போது உடன்பாடனது என முடிவு செய்யப்பட்ட முறையில் ஒன்றுபடுவதையும், முரண்படுகின்ற போது அதிலிருந்து விலகிக் கொள்வதையும் இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது.

    மூன்றாம் கலீபாவிற்கு ஹுஸைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவுரை    

அல்குர்ஆனை ஒரே ஓசையின் அமைப்பில் முதலாவது தொகுத்துவர் என்ற பெயர் மூன்றாம் கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் அவர்களுக்குண்டு. அவர்களின் ஆட்சியில் ஈராக்கின் கவர்ணராக இருந்து அர்மீனியா, அஸர்பைஜான் போன்ற பிரதேசங்களை வெற்றி கொள்வதற்காக ஈராக் மக்களை இணைத்து ஷாம் வாசிகளுக்கு எதிராக ஹஸுஸைஃபா இப்னில் யமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் குர்ஆனை ஓதும் முறையில் தமக்குள் குழம்பிக் கொள்வது ஹுஸைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்ளைத் திகில் கொள்ளச் செய்தது. கலீஃபா அவர்களுக்கு பின்வருமாறு அறிவுரை அனுப்பினார்கள்.

فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَدْرِكْ هَذِهِ الْأُمَّةَ قَبْلَ أَنْ يَخْتَلِفُوا فِي الْكِتَابِ اخْتِلَافَ الْيَهُودِ وَالنَّصَارَى (صحيح البخاري)

அமீருல் முஃமினீன் அவர்களே! யூத, கிரிஸ்தவர்கள் (தமது) வேதத்தில் முரண்பட்டுக் கொண்டதைப் போல் இவர்கள் முரண்பட்டுக் கொள்வதற்கு முன்னதாகவே இந்த உம்மத்தை நீர் அடைந்து கொள்ளும்’ (நூல்: புகாரி).

அல்குர்ஆன் எளிமைக்காக ஊழு முறைகளில் அருளப்பட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி).

இந்த ஏழு முறைகளையும் உள்ளடக்கி அமைப்பிலேயே இரண்டு கலீபாக்களின் காலம் வரையும் மக்கள் ஓதி வந்தனர். அரபுக்கள் அல்லாதவர்கள் இஸ்லாத்தில் இணைந்த போது ஓதும் முறைகளை அறியாதரவர்களாக இருந்தார்கள், குர்ஆனை அவர்கள் ஓதுவதில் பல பிரச்சினகைளை எதிர் நோக்கினார்கள். இது அவர்கள் மத்தியில் காலப்போக்கில் பாரிய பிளவை ஏற்படுத்தும் என தளபதி ஹுஸைபா அவர்கள் அஞ்சியதால் அனுமதிக்கப்பட்டிருந்த பல முறைகளில் ஒரு முறையிளன் மீது மக்களைப் பழக்கும்படி கலீஃபா அவர்களைப் பணித்தார்கள். முரண்பாடுகளின் போது எட்டப்பட முடியுமான வழிழமுறைகள் மூலம் முரண்பாடுகளை தாயிக்களும் அணுக வேண்டிய தேவை இருக்கின்றது.

    கலந்தாலோசனை செய்தல்     

கருத்து முரண்பாடுகளைக் கழைய இதுவும் முக்கியமானதொரு வழியாகும். இதை இரண்டாவது கலீபா உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைப்பிடித்தார்கள்.

சிரியாவில் தாவூன் என்ற பிளேக்கை ஒத்த கொடிய நோய் பரவியது. அவர்கள் ஸரஹ் என்ற இடத்தை அடைந்த போது அங்கு நோய் ஏற்பட்டது தெரிய வந்தது. பயணத்தைத் தொடர்வதா? இல்லையா என்ற நிலையில் ஆரம்ப முஹாஜிரீன்களை அழைத்து கலந்தாலோசனை நடத்தினார்கள், அவர்கள் முரண்பட்ட கருத்தைத் தெரிவித்தனர், அன்ஸாரிகளை அழைத்து ஆலோசனை செய்தார்கள், அவர்களும் முஹாஜிர்களைப் போன்று நடந்து கொண்டனர், அவர்களது கருத்தையும் உதாசீனப்படுத்தி விட்டு குரைஷியர்களில் தலைவர்களாக உள்ள மக்கா வெற்றிக்கு முன்னர் ஹிஜ்ரத் செய்து வந்தோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள், அவர்களில் இருவர் வேறுவிதாமான கருத்தைக் கூறி இருந்தனர், இறுதியில் கலீபா அவர்கள் மக்களிடம் நாளை மதீனா திரும்பப் போவதாக அறிவித்தார்கள். படைகளின் தளபதியாக அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் கத்ரில் இருந்தா வெருண்டோடுகின்றீர் எனக் கேட்டதற்காக கோபத்தை கொப்பளித்தவர்களாக , ஆத்திரமாகப் பதிலளித்த கலீபா அவர்கள் திரும்பிச் செல்லும் வழியில் அப்;துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் தன்னிடம் அது பற்றிய அறிவு ஞானம் இருப்பபதாகக் கூறி இவ்வாறான நோய் ஏற்பட்ட பிரதேசத்தில் வெளியில் இருப்போர் உள்ளே நுழைவதையும், உள்ளே இருப்பவர் அங்கிருந்து வெளியேறுவதையும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் விரும்பவில்லை என்ற செய்தியை எடுத்துரைத்தார்கள்;. இதைக் கேட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்த கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள் (நூல்: புகாரி 5188- ஷாமிலா நூலகம்).

நேரடியான சான்றுகள் இல்லாதபோதே கருத்துக் குழப்பங்கங்கள் எழ வாய்ப்புண்டு. அதனைக் கலந்தாசோனை செய்கின்ற போது நேரடியான சான்றுகள் இன்றி கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால் சான்றுகள் தெளிவாகக் கிடைத்த பின்பும் அதன் பக்கம் உடனே திரும்பி விடவேண்டும் என்பதை இந்த வரலாறு போதிக்கின்றது.

   ஆதாரத்துடன் அமைந்த இரு கருத்துக்களை முகமலர்வுடன் ஏற்றுக் கொள்ளுதல்   

இரு கருத்துக்களுக்கு இடம்பாடான விஷயங்கள் ஆதாரபூர்வமான செய்திகளில் வந்த பின்னர், அவற்றில் இரண்டையும் செய்யலாம் என்ற கொள்கைக்கும், மனப்பக்குவத்திற்கு அழைப்பாளராக இருப்பவர் முதலில் முன்வர வேண்டும். இது தாயிக்களிடம் இல்லாத பண்பாக இருப்பதால்தான் கருத்துக்களில் விரிசல்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.

ஒரு வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக்காண்பித்த முறைக்கு மாற்றமாக ஒரு மனிதர் ஓதுவதை நான் செவியுற்றேன், அவரை உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்துக் கொண்டு வந்து, விபரத்தைக் கூறிய போது, அவர்களின் முகத்தில் வெறுப்புத் தென்பட்டது,

وَقَالَ كِلَاكُمَا مُحْسِنٌ وَلَا تَخْتَلِفُوا فَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ اخْتَلَفُوا فَهَلَكُوا (صحيح البخاري)

நீங்கள் இருவரும் ஓதியது சரிதான் எனக் கூறிவிட்டு, நீங்கள் முரண்பட்டுக் கொள்ளாதீர்கள், உங்களுக்கு முன்பிருந்தோர் முரண்பட்டுக் கொண்டதால்தான் அழிந்து போனார்கள் என எச்சரித்தார்கள். (நூல்: புகாரி)

   முஸ்லிம் உம்மத்தில் அறிமுகற்ற சட்டத்தைக் கூறுவோரை சமூகத்தை விட்டும் விலக்குதல்    

மூன்றாம் கலீஃபா உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியில் அபுதர் அல்கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்க நகை சேமித்து

ஸைத் பின் வஹ்ப் என்பவர் கூறுகின்றார்கள்: நான் ரப்ஸா என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன், அங்கு அபூ தர்அல்கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டேன், அவர்களிடம், நீர் இங்கு இடத்தில் (தனிமையில்) தங்கி இருப்பதற்கான காரணம் என்ன எனக் கேட்டேன், அவர்கள், நான் ஷாமில் இருக்கின்ற போது நானும், முஆவியா அவர்களும் ‘ எவர்கள் தங்கம், மற்றும் வெள்ளியை சேமித்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவில்லையோ என்ற வசனத்தில் முரண்பட்டுக் கொண்டோம். முஆவியா அவர்கள் ( நீர் கூறுவது போன்றல்ல), இது வேதக்காரர்கள் மீது இறங்கிய வசனமாகும் என்றதும், இல்லை. நம்பேரில்தான் இறங்கியது என்றேன். இதனால் அவருக்கும் எனக்கும் இடையில் இது விஷயமாக (சர்ச்சை) இருந்து வந்தது. என்னைப் முறைப்பாடு செய்து உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் அனுப்பினார்கள், என்னை மதீனா வரும்படி உஸ்மான் (ரழி) அவர்கள் பணித்தார்கள், மக்கள் என்னை இதற்கு முன்னால் காணதாவர்கள் போல என்னிடம் மக்கள் அதிகமாக வந்தார்கள், உஸ்மான் அவர்களிடம் எனது கருத்தைக் கூறினேன், என்னிடம் உஸ்மர்ன அவர்கள்,

فَقَالَ لِي إِنْ شِئْتَ تَنَحَّيْتَ فَكُنْتَ قَرِيبًا فَذَاكَ الَّذِي أَنْزَلَنِي هَذَا الْمَنْزِلَ وَلَوْ أَمَّرُوا عَلَيَّ حَبَشِيًّا لَسَمِعْتُ وَأَطَعْتُ

‘நீ விரும்பினால் ஒதுங்கி, கொஞ்சம் தூரத்தில் இருந்து கொள்ளலாம் என்றார்கள். அதற்காவே நான் இங்கு வசித்து வருகின்றேன், ஹபஷி ஒருவரைத்தான் எனக்கு தலைவராக நியமித்தாலும் நானும் கேட்டு, வழிப்பட்டு நடப்பேன் எனக் கூறினார்கள். (நூல்: புகாரி).

தங்கம், வெள்ளியை யாரும் சேமித்துக் கொள்ளக் கூடாது, அவ்வாறு சேமித்து வைப்பதால் அவர்கள் அல்லாஹ் எச்சரிக்கின்ற தண்டனையைப் பெறுவார்கள் என தலைகீழாக விளங்கிய அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்து முஸ்லிம் உம்மத்திற்கு அன்னியமான, அறிமுகமற்ற கருத்து என்பதாலும், ஸஹாபாக்கள் மத்தியில் அவ்வாறானதொரு கருத்து சரியான கருத்தில்லை என்பதாலும் இவருக்குப் பின்னால் மக்கள் செல்வதைத் தடுப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை அவசியமாகின்றது. இதை இன்றைய தவ்ஹீத் வட்டம் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

காஃப் அத்தியாயம் ஓதாவிட்டால் ஜும்ஆக் கூடாது, மூன்று மிம்பர் படிகள் பித்அத், வழையலாகத் தயாரிக்கப்பட்ட தங்க நகைகள் பெண்கள் அணிவது ஹராம், திடலில் தொழுகின்ற போது ஸஃப் வரிசையை அடையாளப்படுத்துவதற்காக கட்;டப்படும் கயிர்கள் பித்அத் போன்ற பைத்தியங்கள் சமுதாயத்தில் உலா வருகின்றது.

இவ்வாறான ஆதாரமற்ற, சமூகத்தில் அறிமுகமற்ற கருத்துக்களால் நவீன முஃப்திகளால் கிளப்பப்படும் புரளிகளுக்கு குர்ஆன், ஹதீஸ் பேசுகின்ற மக்கள் இரையாகின்றனர், துண்டாடப்படுகின்றனர். இதற்கு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை போன்று குர்ஆன், நுன்னா பேசுவோர் முடிவெடுக்காத வரை தொடரவே செய்யும்.

   நஸ்ஸுடன் நின்று செயல்படல்     

நஸ் என்ற நேரடியான சான்று கிடைக்காத போது அறிஞர்கள் இஜ்திஹாதின் அடிப்படையிலான முடிவை முன்வைக்க மார்க்கம் அனுமதிக்கின்றது. சிலவேளை அதில் அவர் தவறிழைத்தாலும் பூதாகரமாக்க முடியாது.

عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ صحيح مسلم 3240

அறிஞர் ஒருவர் சட்டத்தீர்ப்பில் இஜ்திஹாத் செய்து தீர்ப்பளிக்கின்றார், சரியாகவும் அதை அணுகுகின்றார் என்றால் அவருக்கு இரு கூலிகள் அவருக்குண்டு. அதேவேளை, இஜ்திஹாத் செய்வதால் ஏற்படும் தீர்ப்பில் தவறிழைப்பாராயின் அவருக்கு ஒரு கூலி உண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்). ஆனால் நேரடியாக சான்றாகிய குர்ஆனில் தெளிவாக வந்திருப்பதை திரித்துக் கூறவதை, அதில் இருந்து விலகுவதை ஆலிம்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَرْضَى لَكُمْ ثَلَاثًا وَيَكْرَهُ لَكُمْ ثَلَاثًا فَيَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَيَكْرَهُ لَكُمْ قِيلَ وَقَالَ وَكَثْرَةَ السُّؤَالِ وَإِضَاعَةِ الْمَالِ (صحيح مسلم / باب : الشاملة3236 ترقيم / القضاء باليمين، والشاهد)

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று அம்சங்களைப் பொருந்திக் கொள்கின்றான், மற்றும் மூன்று அம்சங்களை உங்களுக்கு வெறுக்கின்றான், நீங்கள் அவனுக்கு எந்த ஒன்றையும் கொண்டு இணைகற்பிக்காது, அவனை வணங்க வேண்டும், அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) நீங்கள் பற்றிக் கொள்ள வேண்டும், பிரிந்து விடக்கூடாது ஆகியவற்றை உங்களுக்கு அவன் பொருந்திக் கொள்கின்றான், சொல்லப்பட்டது- கூறப்பட்டது, அதிகமதிகமதிகம் (அவசியமற்ற) கேள்விகள் கேட்பது, பொருட்களை வீண்விரயம் செய்வது ஆகியவற்றை உங்களுக்கு அவன் வெறுக்கின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ قَالَ أَتَى ابْنُ مَسْعُودٍ فِي رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً فَمَاتَ عَنْهَا وَلَمْ يَفْرِضْ لَهَا وَلَمْ يَدْخُلْ بِهَا فَسُئِلَ عَنْهَا شَهْرًا فَلَمْ يَقُلْ فِيهَا شَيْئًا ثُمَّ سَأَلُوهُ فَقَالَ أَقُولُ فِيهَا بِرَأْيِي فَإِنْ يَكُ خَطَأً فَمِنِّي وَمِنْ الشَّيْطَانِ وَإِنْ يَكُ صَوَابًا فَمِنْ اللَّهِ لَهَا صَدَقَةُ إِحْدَى نِسَائِهَا وَلَهَا الْمِيرَاثُ وَعَلَيْهَا الْعِدَّةُ فَقَامَ رَجُلٌ مِنْ أَشْجَعَ فَقَالَ أَشْهَدُ لَقَضَيْتَ فِيهَا بِقَضَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بِرْوَعَ ابْنَةِ وَاشِقٍ قَالَ فَقَالَ هَلُمَّ شَاهِدَاكَ فَشَهِدَ لَهُ الْجَرَّاحُ وَأَبُو سِنَانٍ رَجُلَانِ مِنْ أَشْجَعَ مسند أحمد17732 –

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் திருமணமாகி மஹரை நிர்யமும் செய்யாது, மனைவியுடன் இல்லத்திலும் ஈடுபாடாது மரணித்தவரின் மனைவி பற்றி வினவப்பட்ட போது ஒரு மாத காலம் அது பற்றி எதுவும் கூறாதிருந்தார்கள். பின்பு அவர்களிடம் (அது பற்றி) கேட்ட போது எனது கருத்தினைக் கூறுகின்றேன், அது தவறாக இருப்பின் என்னாலும் (திறமைக்குறைவால்), ஷெதானின் மூலம் ஏற்பட்டதாகும். அது சரியானதாக இருக்குமானால் (அது) அல்லாஹ்விடம் இருந்துமுள்ளதாகும் எனக் கூறிவிட்டு .அந்தப் பெண்ணுக்கு அவளது சகோதரிகளின் மஹர் போன்று கொடுக்கப்படவேண்டும், அவளுக்கு மீராஸ் சொத்தில் பங்குண்டு, அவள் இத்தாவிலும் இருக்க வேண்டும் எனக் கூறினார்கள். உடனே அஷ்ஜஃ கோத்திரித்தைச் சேர்ந்த ஒரு மனிதர் எழுந்து, வாஷிக் என்பவரின் மகள் பர்வஃ என்பவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தீர்ப்பளித்தது போன்றதொரு தீர்ப்பையே நீங்கள் தீர்ப்பாக முன்வைத்துள்ளீர்கள் என்றார். அதற்;கு இரு சாட்சிகளை வேண்டினார்கள், அதற்கு ஜர்ராஹ், அபூஸினான் என்ற இருவர் சாட்சியம் கூறினார்கள். (அஹ்மத்) இது அபூதாவூத், திர்மிதி போன்ற நூல்களிலும் பதிவாகி இருக்கின்றது.

source: http://www.thoothuonline.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb