ஒரே கேள்வி! இரு பதில்கள்!!
[ …. கணவன் என்னவானான் என்று தெரியாத நிலையிலிருக்கும் பெண் …. ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகவே தெரிகிறாள். அவள் விஷயத்தில் அவளின் பொறுப்புதாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூகத்தில் கலந்து வாழும் மனித ஓநாய்கள் அவளது இளமையை – தனிமையை கவனித்து அவளை பாழ்படுத்த எண்ணலாம்.
தன் கணவன் உயிரோடு இருக்கிறான். இந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியவரும் போது அந்த நம்பிக்கையே ஒரு பெண்ணை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் காத்திருக்க வைத்து விடும். சமூக போராட்டங்ளுக்கு மத்தியில் அவள் தன்னை காத்துக் கொள்ள தயாராகி விடுவாள்.
கணவனைப் பற்றிய நம்பிக்கையே அற்றுப் போன நிலையில் ஒரு பெண் எதை முன்னிருத்தி தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை பொறுப்புதாரிகள் சிந்தித்தால் “கிடைத்த பொருள் ஓராண்டுவரை அடைக்கலமாக இருக்கட்டும்” (சில அறிவிப்புகளில் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என்றும் வந்துள்ளது) என்று இந்த ஹதீஸில் வழிகாட்டியுள்ளப்படி அதிகப்பட்சமாக மூன்றாண்டுகள் கணவனைத் தேடும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தலாம்.
தகவல் புரட்சி விண்ணை முட்டும் காலத்தில் வாழ்கிறோம். ஒன்றைத் தெரிந்துக் கொள்வதற்கு மூன்றாண்டுகாலம் என்பது இன்றைக்கு பெரிய பொழுதுதான் என்றாலும் ஹதீஸ்களில் அந்த கெடு வந்துள்ளதால் அதையே கடைபிடிக்கலாம். நம்மாலான அனைத்து வழியிலும் கணவனை தேடி பார்க்க வேண்டும். மனைவி தேவை என்றால் இந்தக் காலகட்டங்களில் அவன் நிச்சயம் தொடர்புக் கொள்வான். அப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டு விட்டால் அவள் அதன் பிறகு காத்திருப்பது அவளது சொந்த விருப்பத்திற்குட்பட்டதாகிவிடும்.
இந்தக் காலகட்டத்திற்குள் கணவனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவள் விஷயத்தில் கணவன் நம்மை விட்டு பிரிந்து விட்டான் என்று முடிவு எடுத்துக் கொள்ள வேண்டிதான் வரும். பிரிந்த கணவனுக்கு மனைவி எத்தகைய நிலையை கடைபிடிக்க வேண்டுமோ அதை கடைபிடித்து விட்டு அவள் வேறு வாழ்க்கைக்கு தயாராகிக் கொள்ளலாம். அதன் பிறகு கணவன் உயிரோடு வந்தாலும் இவளைப் பொருத்தவரை அவனைக் கண்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை.]
Q. எனது தம்பி முஸ்லிமானவர் முஸ்லிமான பெண்ணை மணமுடிதபின்னர் நான்கு வருடங்கள் வாழ்ந்து வேறொரு இந்து பெண்ணை கூட்டி கொண்டு ஒடிவிட்டார் வருடம் இரண்டு முடிந்து விட்டது ஓடிப்போனவன் எங்கென்றும் தெரியவில்லை. முஸ்லிம் மனைவிக்கு முடிவு என்ன?
A – 1. இவ்வகையான வழக்கில் சட்டப்படி இந்தப்பெண் “காணாமல் போனவரின் மனைவி” என்று கருதப்படுகிறார், இதன்படி அப்பெண்ணின் கணவன் தொலைந்துவிட்டதாகவே கருதப்பட்டு அவனின் திரும்புதலுக்கான காத்திருப்பு காலமும் முடிந்துவிட்ட நிலையில் அவன் இறந்து போனவனாகவே கருதப்படுவான்.
இந்நிலையில் ஏற்கனவே இப்பெண்ணின் கணவன் ஓடிப்போய் இரண்டாண்டு காலம் முடிந்துவிட்டதாலும் அவன் இருக்குமிடம் தெரியவில்லை என்பதாலும் ஷரீயத் முறைப்படி நீதிபதியை (ஊர் ஜமாத்தை)அணுகி இத்திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள இந்த பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. பிறகு முறைப்படி (இறந்த கணவனுக்கு) இத்தா இருப்பதுபோல் இருந்துவிட்டு வேறு திருமணம் செய்துகொள்ளலாம். (ஆதாரம்: ஷேய்க் பின் உத்தைமீன் அவர்களின் ஃபத்வாவிலிருந்து.)
ஹசன் அல்பஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்;
ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டால் அவள் அவருக்கு விலக்க பட்டவளாக ஆயி விடுவாள் என்று அறிஞர் கூறுவதுடன் அதனை ஹரமுடன் பித்தலாக் அல்லது ஹராமுன் பில்பராக் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஆனால் இது உணவை ஒருவர் ஹராமாக்கி போன்ற தன்று. ஏனெனில், அனுமதிக்கப்பட்ட உணவை ஒருவர் தமக்கு விளக்கி கொள்வதால் ‘ஹரமான உணவு சொல்லப்பட்டது” மனவிலக்கு செய்யப்பட்ட பெண்ணை விலக்கப்பட்டவள் என்று சொல்வதுன்டு மூன்று கட்ட விஷயத்தில் அல்லாஹ் கூறினான்; பின்னர் அவன் (மூன்றாவது தவனையில்) அவன் தலாக் சொல்லிவிட்டால், பிறகு அவனில்லாத வேறொரு கணவனை மணக்கிறவரை அவள் மணக்கும் வரை அவனுக்கு அவள் அனுமதிக்கப்பட்டவள். -திருக்குர்ஆன் 2:230. (நூல் புகாரி 5263)
இதிலிருந்து மூன்று தலாக் சொல்லப்பட்ட பின் தான் அவளுக்கு அடுத்த கணவரை மணக்க ஹலால் என்று அனுமதிக்கப்படும்.
மனிதன் தன் மனைவியை ஹராமாக்கி கொண்டால் அது ஒரு பொருட்டல்ல (அது தலாக் ஆக கருத முடியாது) என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறி உண்மையில் அல்லாஹ்வின் தூதரரிடத்தில் தான் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது என்று கூறினார்கள் (புகாரி 5266)
அதனால் அவர் அவளை ஹராமாக்கி சென்றாலும் (விட்டு தனித்து சென்றாலும்) அது தலாக் ஆக முடியாது. நிச்சயம் அவன் அவளுக்கு மூன்று தலாக் கூறியே ஆக வேண்டும்.
எந்த பொருளுக்கு தான் உரிமையானில்லையோ, அந்த பொருளுக்கு நேர்ச்சை செய்ய ஆதமின் மகனுக்கு உரிமையில்லை, எந்த அடிமைக்கு அவன் உரிமையாளனில்லை அந்த அடிமையை விடுதலை செய்யவும் அவனுக்கு உரிமையில்லை.எந்த பெண்ணுக்கு(மணபந்ததின் வாயிலாக) உரிமையாளானாக இல்லை அவளை தலாக் செய்யவும் அவனுக்கு உரிமையில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பாட்டனர் வாயிலாக அறிவிக்கிறார். நூல் திர்மதி, அபுதாவுது, திர்மதியில் ஸஹிஹ் வான தரத்தில் அமைந்துள்ளது. இப்னு கதிர் ஹதிஸ் கித்தாபு 1120
அதனால் யாருக்கும் அவளை தலாக் அல்லது விடுவிக்க அதிகாரமும் அல்லது தலாக் சொல்ல உரிமையில்லை… அது ஊர் தலைவராக இருந்தாலும் சரி, வேற யாராக இருந்தாலும் சரி..அவளுடைய கணவன் தவிர..
உண்மையில் கணவர் மனைவி மத்தியில் உள்ள திருமண ஒப்பந்தம் கணவன் இருந்தால் அல்லது அவனால் முறிந்தால் தான் முடியும் வேறு எவராலும் சாதரணமாக முறிக்க முடியாது. ஆனால் கணவன் மறைந்துவிட்டானோ? உயிருடன் இருக்கின்றானோ என்ற சந்தேகம் இருக்கும் போது வேறு யார்? இந்த பந்தத்தை முறிக்க முடியும்? முறிப்பதாக இவர்கள் தீர்ப்பு செய்தபின் மறுபடி கணவன் வந்து விட்டால் என்னவாகும்? அல்லாஹ் அவனுக்கும் மட்டும் அளித்த் உரிமையில் கை வைக்க அதிகாரம் பெற்றவர் யார்?என்று கலிபா ஹஜ்ரத் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். மேலும் ” அல்லாஹ்வினாள் சோதிக்கப்பட்ட பெண்” என்று கூறினார்கள். நூல் தாரகுத்னி 3/313. இது ஸஹிவான ஹதிஸ் என்று தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.
இருவரது திருமண உறவைப் பிரிக்க கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழித்த பின்னரே அவன் இறந்து விட்டதாக முடியு செய்யப்படும். அவனது மனைவி அது வரை அவனது மனைவி இத்தா இருப்பாள் (நூல் கன்ஸீத்தகாயிக் பாகம் 1 பக்கம் 220)
சில இமாம்கள் 120 ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
சிலர் 70 ஆண்டுக்கு பிறகு என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்
இதை அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது உம்மத்தின் வயது 60 முதல் 70 வரை இருக்கும் என்ற ஹதிஸிலிருந்து தொகுத்தார்கள்..
அவன் இறந்துவிட்டால் அல்லது மூன்று தலாக் சொல்லும் வரை அவர்களின் திருமண பந்தம் பிரியாது.. யாரலும் பிரிக்க இயாலது என்று மார்க்க அறிஞர்களான் நல் இமாம்கள் கூறியுள்ளார்கள்..
இதற்கு மாற்றமாக திருமண செய்து கொள்ளலாம் என்று இருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருந்தால் தாரளாமாக எடுத்து கொள்ளுங்கள். இதில் ஏதெனும் குறை இருந்தால் அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து விடுங்கள்.
A – 2.
மனைவியை விட்டு ஓடி போய், தன்னைப் பற்றி எந்த தகவலையும் மனைவிக்கு தெரிவிக்காமல் ஒரு கணவன் இருக்கிறான் என்றால் அந்த மனைவியின் நிலை என்னவென்பது பற்றி அறிஞர்கள் மத்தியில் மாற்று கருத்து இருப்பதற்கு காரணம் இப்படி ஒரு சம்பவம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் நடக்கவில்லை என்பதேயாகும்.
இதற்கான நேரடியான ஆதாரங்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இந்த பிரச்சனையை எப்படி அணுகுவது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து சிந்தித்தால் இது குறித்து ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.
தலாக் (மணவிலக்கு) போன்ற சட்டவிதிகளை நாம் இங்கு பொருத்திப் பார்ப்பதற்கு முன் (அந்த விதிகள் இங்கு பொருத்தமற்றது என்பதை பின்னர் பார்ப்போம்) கணவன் – மனைவிக்கு மத்தியில் உள்ள உரிமைகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ
(கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும் (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். (அல்குர்ஆன்: 2:187)
கணவன் மனைவிக்கு மத்தியில் இருக்க வேண்டிய நெருக்கம், பாசம், புரிந்துணர்வு, அனுசரிப்பு, மகிழ்ச்சி போன்றவற்றை இதைவிட தெளிவாக விளக்கவே முடியாது என்று கூறும் அளவிற்கு இறைவன் அத்துனை அற்புதமான உதாரணத்துடன் விளக்கியுள்ளான். (ஓடிப் போன கணவன் இது எல்லாவற்றையும் உதாசீணப்படுத்தியவனாவான்)
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ
உங்கள் மனைவிகள் உங்களின் விளைநிலங்களாவார்கள். உங்கள் விளைநிலத்திற்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள். (அல்குர்ஆன் :2:223)
மனைவியை விளைநிலம் என்ற உவமையோடு இறைவன் சுட்டியுள்ளதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். பல்வேறு பேருண்மைகளை இந்த உவமை உள்ளடக்கியுள்ளது. அவற்றையெல்லாம் நாம் இங்கு விரிவாக விளக்கப் போவதில்லை. விளைநிலத்தை வைத்திருப்பவர்கள் அதை பக்குவப்படுத்த – பாதுகாக்க கடமைப்பட்டவர்களாவார்கள். இந்த கடமையை நிறைவேற்றாதவர்கள் விளைநிலங்களில் சொந்தக்காரர்கள் என்ற அருகதையை இழந்துவிடுவார்கள். (ஓடிப் போகும் கணவன் தனது விளை நிலத்தைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் கிளம்பி விடுகிறான்).
وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ
(மனைவிகளாகிய) அவர்கள் மீது கணவர்களுக்கு இருக்கும் உரிமைப் போன்று மனைவிகளுக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு (அல்குர்ஆன் 2:228)
மனைவி கணவனுக்கு அடிமையல்ல, கணவனைக் கண்கண்ட தெய்வமாகவோ, தன்னை விட எல்லா வகையிலும் உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவனுக்கு தலையாட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற உணர்வோ பெண்ணுக்கு இருக்கத் தேவையில்லை. கணவன் மனைவி என்று கைகோர்த்துக் கொண்ட அந்த ஒப்பந்தத்தின் அர்த்தம் ஒருவர்மீது இன்னொருவருக்கு உரிமையுண்டு என்பதின் அடிப்படையிலேயே என்பதை இந்த வசனம் தெளிவாக முன் வைக்கின்றது. (மனைவியை விட்டு ஓடிப் போகும் கணவன் எந்த உரிமையில் அவ்வாறு செய்கிறான் என்பதை யார் விளக்க முடியும்)
இந்த வசனங்களை கருத்தில் கொள்பவர்கள் ஓடிப் போன கணவனுக்காக மனைவி காலம் முழுவதும் காத்திருக்க வேண்டும் என்ற வரட்டு சட்டத்தை – பெண்களை ஜடங்களாக ஆக்கி வைக்கும் சட்டத்தை முன் வைக்க மாட்டார்கள். அவளது மனநிலையையும், வாழ்வாதாரத்தையும், உடல் தேவைகளையும் புரிந்துக் கொண்டு ஒரு வழிகாணவே முயல்வார்கள்.
மஸாயில் என்ற பெயரில் 99 வருடம், 120 வருடம் அந்தப் பெண் காத்திருக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளதையெல்லாம் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இல்லறத் தேவைகளெல்லாம் முடிந்து, தள்ளாத வயதாகி இருக்கும் போது அந்த கணவன் வந்தால் என்ன? வரவில்லையென்றால் என்ன? அதனால் அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. இந்த சட்டத்தை ஆதரி்பபவர்கள் தங்கள் குடும்ப பெண்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் (அல்லாஹ் காப்பாற்றட்டும்) அந்த பெண்ணை இப்படி காக்க வைப்பார்களா… என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தலாக் சட்டம் பொருந்துமா?
ஓடிப் போகும் கணவனிடம் தலாக் கொடுக்கும் சட்டம் இருப்பதால் அவனால் தான் அதை செய்ய முடியும் மற்றவர்கள் இதில் தலையிட முடியாது என்ற கருத்து முந்தைய பதிவில் வைக்கப்பட்டுள்ளது. மனைவியை பிடிக்கவில்லை என்றால் அவளிடமிருந்து விடுதலைப் பெற சொல்லப்பட்ட சட்டம் தான் தலாக். மனைவியை தன் கட்டுப்பாட்டில் அடிமைப் போன்று வைத்துக் கொள்ள சொல்லப்பட்ட சட்டமல்ல. கணவனைப் பிடிக்காத போது மனைவியும் அவனிடமிருந்து விகாரத்தை பெற்றுக் கொள்ளலாம் இதையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த இரண்டு சட்டங்களும் ஒருவரையொருவருக்கு பிடிக்காமல் போகும் போது முன்னெடுக்க வேண்டிய சட்டங்களாகும். ஓடிப் போன கணவன் விஷயத்தில் இதை எப்படி பொருத்திப் பார்க்க முடியும்.
காத்திருக்க வேண்டிய காலம்
கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியிலுள்ள குடும்ப உறவுக்கான விதிகளையும் – சட்டங்களையும் புறக்கணித்து விட்டு ஒருவன் ஓடுகிறான் என்றால் அவனுக்காக (அவன் எங்கிருக்கிறான் என்பதை அறியாத நிலையில்) காலம் முழுதும் காத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் பெண்ணுக்கு தேவையில்லை. அவள் காத்திருக்க வேண்டிய காலம் பற்றி நேரடியாக ஆதாரங்கள் கூறாவிட்டாலும் பிற ஆதாரங்களிலிருந்து காத்திருக்க வேண்டிய காலத்தை நாம் தீர்மானிக்கலாம்.
ஹதீஸ்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள்” என்றார்கள்.
அந்த மனிதர், ‘வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது?’ என்று கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது.” என்று கூறினார்கள்.
அந்த மனிதர், ‘வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?’ என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப்பையும் (வயிறும்) அன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது” என்று கூறினார்கள். (ஸைத் இப்னு காலித் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2429)
கணவன் என்னவானான் என்று தெரியாத நிலையிலிருக்கும் பெண் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள மூன்று சூழ்நிலையில் ஒன்றை சார்ந்தவளாகவே இருப்பாள்.
கணவன் என்னவானான் என்று தெரியாத நிர்கதியாகிவிட்டவள் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகவே தெரிகிறாள். அவள் விஷயத்தில் அவளின் பொறுப்புதாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூகத்தில் கலந்து வாழும் மனித ஓநாய்கள் அவளது இளமையை – தனிமையை கவனித்து அவளை பாழ்படுத்த எண்ணலாம்.
தன் கணவன் உயிரோடு இருக்கிறான். இந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியவரும் போது அந்த நம்பிக்கையே ஒரு பெண்ணை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் காத்திருக்க வைத்து விடும். சமூக போராட்டங்ளுக்கு மத்தியில் அவள் தன்னை காத்துக் கொள்ள தயாராகி விடுவாள். கணவனைப் பற்றிய நம்பிக்கையே அற்றுப் போன நிலையில் ஒரு பெண் எதை முன்னிருத்தி தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை பொறுப்புதாரிகள் சிந்தித்தால் “கிடைத்த பொருள் ஓராண்டுவரை அடைக்கலமாக இருக்கட்டும்” (சில அறிவிப்புகளில் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என்றும் வந்துள்ளது) என்று இந்த ஹதீஸில் வழிகாட்டியுள்ளப்படி அதிகப்பட்சமாக மூன்றாண்டுகள் கணவனைத் தேடும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தலாம்.
தகவல் புரட்சி விண்ணை முட்டும் காலத்தில் வாழ்கிறோம். ஒன்றைத் தெரிந்துக் கொள்வதற்கு மூன்றாண்டுகாலம் என்பது இன்றைக்கு பெரிய பொழுதுதான் என்றாலும் ஹதீஸ்களில் அந்த கெடு வந்துள்ளதால் அதையே கடைபிடிக்கலாம். நம்மாலான அனைத்து வழியிலும் கணவனை தேடி பார்க்க வேண்டும். மனைவி தேவை என்றால் இந்தக் காலகட்டங்களில் அவன் நிச்சயம் தொடர்புக் கொள்வான். அப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டு விட்டால் அவள் அதன் பிறகு காத்திருப்பது அவளது சொந்த விருப்பத்திற்குட்பட்டதாகிவிடும்.
இந்தக் காலகட்டத்திற்குள் கணவனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவள் விஷயத்தில் கணவன் நம்மை விட்டு பிரிந்து விட்டான் என்று முடிவு எடுத்துக் கொள்ள வேண்டிதான் வரும். பிரிந்த கணவனுக்கு மனைவி எத்தகைய நிலையை கடைபிடிக்க வேண்டுமோ அதை கடைபிடித்து விட்டு அவள் வேறு வாழ்க்கைக்கு தயாராகிக் கொள்ளலாம். அதன் பிறகு கணவன் உயிரோடு வந்தாலும் இவளைப் பொருத்தவரை அவனைக் கண்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மீண்டும் அவனை இணைத்து வைக்க எத்தகைய முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவன் ஏதாவது பிரச்சனை செய்வான் என்ற அச்சம் இருந்தால் அவன் நடவடிக்கையை பார்த்து சட்ட ரீதியாக அவனை தண்டனைக்குட்படுத்தலாம்.
(இறைவா நீ அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளன் என்பதை நாங்கள் நம்புகிறோம்)
– ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
source: http://tamilmuslimgroup.blogspot.com