Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அலங்காரத்தை மறைத்துக்கொள்ளுங்கள் – அல்லாஹ்வின் அருள் கிட்டும்!

Posted on March 23, 2011 by admin

அலங்காரத்தை மறைத்துக்கொள்ளுங்கள் – அல்லாஹ்வின் அருள் கிட்டும்!

இஸ்லாம் பெண்களுக்கென சில ஒழுக்க மாண்புகளையும் தனித் தன்மையான தோற்ற அமைப்பையும் அமைத்துள்ளது. மஹ்ரம் அல்லாத அன்னிய ஆண்களிடையே செல்வதற்கோ அல்லது வீட்டிலிருந்து வீதிக்கு வருவதற்கோ அவள் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகளை நிர்ணயித்துள்ளது. அதுதான் முஸ்லிம் பெண்களுக்குரிய “ஹிஜாப்’ பர்தா என்று சொல்லப்படும் ஆடையாகும்.

தங்களை முஸ்லிம்களென வாதிக்கும் பலருடைய இல்லங்களில் காணப்படுவது போன்று முரண்டு பிடிக்கும் பெண்களை உண்மை முஸ்லிமின் இல்லங்களில் காண இயலாது.

ஒருவர் தனது மனைவியை அல்லது சகோதரியை அல்லது மகளை அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவளாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இஸ்லாமின் ஒழுக்கப் பண்புகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அவர் அவனுக்குரிய வீரத்தை இழந்து மார்க்கத்திலிருந்து விலகி அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகி விட்டார் என்பதுதான் பொருளாகும். கண்டிக்காமலிருந்த குற்றத்திற்காக உண்மையான பாவமன்னிப்புக் கோருதலைத் தவிர வேறெந்த பரிகாரமும் அவருக்கு இருக்க முடியாது.

முஸ்லிம் பெண்மணி இஸ்லாமிய அமுதுண்டவள்; இஸ்லாமெனும் நீண்ட நிழலில் இளைப்பாறியவள். எனவே இஸ்லாமின் ஹிஜாபை திருப்தி கொண்ட நிம்மதியான இதயத்துடனும், ஆழிய விருப்பத்துடனும் ஏற்றுக் கொள்வாள். இது இரட்சகனாகிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

ஹிஜாப் அணிவது அவணின் வற்புறுத்தலுக்காக இல்லை; அவணின் அகம்பாவத்தை திருப்திப்படுத்துவதற்காகவும் இல்லை. எவ்வித ஆதாரமுமின்றி அருள்மறையின் வழிகாட்டுதலின் மேன்மையை விளங்கிக் கொள்ளாத வெட்கமற்ற சில பெண்கள் ஹிஜாபைப் பேணாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

   அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள் :  

“முதலாவதாக ஹிஜ்ரத் செய்த பெண்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! தங்களது ஆடை ஆபரணம் போன்ற அலங்காரத்தை வெளிக் காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்ஸ என்ற பொருள் கொண்ட திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டபோது தங்களது போர்வைகளைக் கிழித்து மறைத்துக் கொண்டனர்.” ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், “அப்பெண்கள் தங்களது போர்வைகளை ஒரப்பகுதியில் கிழித்து தங்களை மறைத்துக் கொண்டனர்” ஏன்று காணப்படுகிறது.

   அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:   

”நாங்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஒரு சமயம் இருந்தபோது குறைஷிப் பெண்களையும் அவர்களது மேன்மைகளையும் நினைவு கூர்ந்தோம்.” அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: ”நிச்சயமாக குறைஷிப் பெண்களுக்கு சில சிறப்புகள் உள்ளன. அல்லாஹ்வின் வேதத்தை உண்மைப்படுத்துவதில் காட்டும் உறுதி, அருளப்பட்டதை ஈமான் கொள்வது போன்ற விஷயங்களில் அன்சாரிப் பெண்களை விட சிறந்த பெண்களை நான் பார்த்ததில்லை.

(….தங்கள் அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பை மறைத்துக்கொள்ளவும்…) என்ற பொருளுடைய வசனம் அருளப்பட்டபோது அப்பெண்களிடம் ஆண்கள் இது விஷயத்தில் அருளப்பட்ட வசனங்களை ஒதிக்காட்டச் சென்றார்கள். ஒவ்வொரு ஆணும் தனது மனைவி, மகள், சகோதரியிடமும் நெருங்கிய ஒவ்வொரு உறவினரிடமும் ஒதிக்காட்டினார்கள். உடனே அனத்துப் பெண்களும் தங்களது கம்பளி ஆடைகளை எடுத்து தங்கள் மீது சுற்றிக் கொண்டனர். இவ்வாறு அல்லாஹ் அருளியதை விசுவாசித்து உண்மைப் படுத்தினார்கள். ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் தங்களது தலையில் துணி போர்த்தியவர்களாக ஸுப்ஹுத் தொழுகைக்கு வந்தார்கள். அது பார்ப்பதற்கு, காகம் தலையில் உட்கார்ந்திருந்ததைப் போன்று இருந்தது.” (நூல்: ஃபத்ஹுல் பாரி)

அல்லாஹ் அந்த அன்சாரிப் பெண்கள் மீது அருள் பொழியட்டும்! அவர்களது இறைவிசுவாசத்தில்தான் எவ்வளவு உறுதி! அவர்கள் அல்லாஹ்விற்குப் பணிவதில் எவ்வளவு நேர்மை! அருளப்பட்ட சத்திய வசனங்களை ஒப்புக் கொள்வதில் எவ்வளவு அழகு! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசித்த ஒவ்வொரு பெண்ணும் அந்த அன்சாரிப் பெண்களை அடியொற்றி நடப்பது ஆச்சரியமல்ல. அப்போது தனித்தன்மையான இஸ்லாமிய கலாச்சார ஆடையை அணிந்து, தங்களது அழகு அலங்காரங்களை மறைத்துக் கொள்வது அவர்களுக்கு சிரமமாகத் தோன்றாது.

இந்த இடத்தில் பல்கலைக் கழகத்தில் பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணை நினைவு கூறுகிறேன். அப்பெண்மணியிடம் அன்சாரிப் பெண்களிடம் காணப்பட்டதற்கு சற்றும் குறையாத ரோஷ உணர்வு வெளிப்பட்டது. டமாஸ்கஸ் பல்கலைக் கழகத்தில் பர்தா அணிந்திருந்த அந்த இளம் பெண்ணிடம் “இந்தக் கடுமையான கோடை காலத்தில் பர்தா அணிவது சிரமமாக இல்லையா?” என ஒரு தினசரி பத்திரிகையின் நிருபர் கேட்டபோது அப்பெண்மணி அருள்மறையின் திருவசனத்தையே பதிலாகக் கூறினார்: (நபியே!) கூறுவீராக! நரக நெருப்பு மிகக் கடுமையான வெப்பமுடையது…

இவ்வாறான பரிசுத்தப் பெண்கள் இன்றும் இஸ்லாமிய இல்லங்களை அலங்கரித்து மிகச் சிறப்பான முறையில் குழந்தைகளைப் பராமரித்து வருகிறார்கள். சமூகத்தில் இத்தகைய பெண்கள் இன்னும் அதிகமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

தனது பெண்கள், வீட்டிலிருந்து வெளியேறும்போது இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பின்பற்றி வெளியே செல்கிறார்களா? ஹிஜாபைக் கடைப்பிடிக்கிறார்களா என்று கண்காணிப்பது உண்மை முஸ்லிமின் பொறுப்பாகும். மனைவியோ அல்லது சூழ்நிலையோ மிகைத்து, மார்க்கத்தை மீறுவதற்கு தூண்டும்போது கணவன் திருத்த முடியாமல் பலவீனப்பட்டு நிற்பானேயானால் அது அவனது மார்க்கமும் ஆண்மையும் அவனிடமிருந்து அகற்றப்பட்டுவிட்டதன் அடையாளமாகும்.

source: ”முஸ்லிம் பெண்மணி in பெண்மணிக்கு” http://www.readislam.net/portal/archives/925

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb