Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குழந்தைகளிடம் செல்பேசி கொடுக்காதீர்கள்!

Posted on March 21, 2011 by admin

குழந்தைகளிடம் செல்பேசி கொடுக்காதீர்கள்!

[ அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.

நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால் உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள் மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும்.]

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.

“என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.

என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும் விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு.

நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம், சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.

அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.

3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள். ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட ஊக்குவிப்பதில்லை.

மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும்.

நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது. வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது.

ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால் உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள் மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb