Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்திய வங்கிகளில் முஸ்லிம்கள் நிராகரித்த 75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்!

Posted on March 21, 2011 by admin

CMN.SALEEM

75 ஆயிரம் கோடி! இது சாதாரண தொகையல்ல, மாபெரும் தொகை தான்!

ஒருபுறம் இவ்வளவு பெரிய தொகை முஸ்லிலிம்களுக்கு பயன்படாமல் போகிறதே என்று எண்ணுவதைவிட; எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் இஸ்லாம் அதை ஹராம் என்று தடுத்திருக்கும்போது அதை சீண்ட மாட்டோம் என்று ஒதுக்கித் தள்ளியதில்,

இந்திய முஸ்லிம்களின், ஈமானின் அழுத்தம் எட்டுத்திக்கிலும் பறைசாற்றப்படுகிறது என்பதை நாம் பூரிப்புடன் உணர வேண்டும்.

எங்களைப்படைத்த ”அல்லாஹ்வுடன் போர் புரிய நாங்கள் தயாராக இல்லை” என்பதை உலகிற்கு ஓங்கி ஒலிக்கச்செய்கிறது இந்த செயல்.

“வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம்முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும், ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானி) – adm. nidur.info]

ஒரு அரசு சட்டங்கள் இயற்றும் போதும் திட்டங்கள் தீட்டும் போதும் எந்த மக்களின் நலனிற்காக இவற்றை இயற்றுகிறதோ அந்த மக்களின் இயல்போடு ஒத்துப் போகின்ற வகையில் அந்த சட்டங்களும், திட்டங்களும் இயற்றினால் தான் அது வெற்றி பெறும். இல்லையென்றால் அது வெற்றி பெறாது என்பதற்கு நமது நாட்டில் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதுவும் இந்தியாவைப் போல மத ரீதியாக, சாதி ரீதியாக, இன ரீதியாக, மாநில ரீதியாக, மொழி ரீதியாக, கொள்கை ரீதியாக வேறுபாடுகளை அதிகம் கொண்டுள்ள மக்கள் வாழும் நாட்டில் சட்டங்களும் திட்டங்களும் மிகவும் கவனமாக பல ஆய்வுகளின் அடிப்படையில் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தினால் மட்டும் தான் அது வெற்றி பெறும்.

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக வாழும் மதச்சிறுபான்மை மக்களான முஸ்லிம்களின் இயல்போடு ஒத்துவராத, அந்த மக்களோடு ஒன்றிப்போக இயலாதவங்கியியல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைமுறையில் இருந்தகாரணத்தால் வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வங்கிகளோடு பண பரிவர்த்தனை செய்ததின் காரணமாக இந்தியா முழுவதும் ஏறக்குறைய 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிப் பணம் கேட்பாரற்று, முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது. கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக 2005ல் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட – RBI Legal News and Views என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2005ஆம் ஆண்டே 75 ஆயிரம் கோடி முடங்கிக் கிடந்தது என்றால், கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கி கிடந்தது என்றால் இப்போது இந்த தொகையின் அளவு என்னவாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆக, முஸ்லிம்களின் மார்க்கம் மிகக் கடுமையாக தடை செய்துள்ள, பெரும்பாவங்களில் ஒன்று என்று எச்சரிக்கை செய்துள்ள, வட்டி அடிப்படையிலான இந்திய வங்கியியல் நடைமுறைதான் இவ்வளவு பெரிய தொகையை முஸ்லிம் சமூகம் நிராகரித்ததற்கான அடிப்படைக் காரணம்.

வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, வட்டி கணக்கு எழுதுவது, அதற்கு சாட்சியாக கையெழுத்திடுவது அனைத்தும் பெரும் பாவம் என்று இஸ்லாமிய மார்க்கம் தெள்ளத் தெளிவாக்குகிறது. முழுவதும் வட்டி அடிப்படையிலான வங்கியியல் நடைமுறை காரணமாக முஸ்லிம்கள் வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் கூட பிற எல்லா சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்னுக்கு இருக்கிறார்கள். இதனால் இந்த சமூகம் பொருளாதார ரீதியாகமுன்னேறிய சமூகமாக மாறுவதற்கு, முஸ்லிம் சமூகத்தவர் பெரிய பெரிய தொழிற்சாலை தொடங்குவதற்கு, பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு, பங்குகள் மூலம் பெரிய அளவிலான நிதியைத் திரட்டி பெரும்தொழில் செய்வதற்கு, ஏழைமாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு என்று பிற சமூகங்களைப் போல நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தங்கு தடையின்றி செயல்பட இயலாத நிலையில் உள்ளது. மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார பின்னடைவிற்கு இன்றைய வங்கியியல் நடைமுறையும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

முஸ்லிம்களின் சமூக – பொருளாதார – கல்வி நிலையைப் பற்றி ஆய்வு செய்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களின் அறிக்கையில் வங்கி பரிவர்த்தனையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் வெறும் 12 விழுக்காடு தான் முஸ்லிம்கள். மக்கள் தொகையில் 6 விழுக்காடு உள்ள ஏனைய சிறுபான்மை மக்கள் 8 விழுக்காடு அளவிற்கு வங்கி பரிவர்த்தனை செய்கின்றனர்.

நாட்டின் முன்னேற்றம் என்பது நாட்டு மக்கள் அனைவரது சமூக – பொருளாதார – கல்வி முன்னேற்றத்தில் தான் அடங்கியுள்ளது. 110 கோடி இந்திய மக்களில் ஏறக்குறைய 25 கோடிமக்களை புறக்கணித்து விட்டுஅல்லது அவர்களின் முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளாமல் நாட்டின் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை. இதைஉணர்ந்த டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்றைய வங்கியியல் நடைமுறைக்கு மாற்றாக இருக்கக்கூடிய வட்டியில்லா – வங்கியின் நடைமுறை குறித்து ஆய்வு செய்திட மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் ஆனந்த் சின்ஹா அவர்களது தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

ரிசர்வ் வங்கி. இந்தக் குழு 2006ல் தந்த அறிக்கையில் இன்றைய சூழலில் தற்போதைய ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களுக்குட்பட்ட வட்டியில்லா வங்கி இந்தியாவில் அமைப்பது சாத்தியமில்லை என்று அறிக்கை தந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் பொதுவுடமை கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சமூகஇயக்கங்களின் இடைவிடாத பெரும் முயற்சியின் காரணமாக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இதில் சிறப்புக் கவனம் எடுத்துள்ளார்கள்.

தற்போதைய பொருளாதார சிக்கல்களிலும் உலகளவில் வட்டியில்லா வங்கிகளின் வெற்றியைத் தொடர்ந்து மத்தியரிசர்வ் வங்கியும் இந்த வட்டியில்லா – வங்கியை இந்தியாவில் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளது. இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவர் வி.ஙி.ழி ராவ் அவர்கள் “நாங்கள் வட்டியில்லா வங்கியின் செயல்பாட்டினை ஆய்வு செய்து வருகிறோம் ரிசர்வ் வங்கியின் வரைவு செயல் திட்டத்திற்காக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். நேரடியாக இந்தியாவில் வட்டியில்லா வங்கிகளை அனுமதிப்பதா அல்லது தற்போதைய பொதுத்துறை வங்கிகளிலேயே ஒரு வட்டியில்லா வங்கி கவுண்டரை திறப்பதா என்ற விவாதங்கள் நடந்து வரும் வேளையில் மாநிலங்களவைத் துணைத்தலைவர் ரஹ்மான்கான் அவர்கள் ஒரு அருமையான திட்டத்தை பிரதமர் அவர்களிடம் அளித்துள்ளார்.

மலேசியாவில் 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தாபுங் ஹாஜி என்ற நிறுவனம் மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது. அதாவது ஹஜ்ஜுக்கு செல்ல நிய்யத் செய்தோர் இந்த வங்கியில் பணம் சேமிப்பதற்கான திட்டம் இது முழுக்க ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

மலேசியாவில் வெற்றிகரமாக செயல்படும் தாபுங் ஹஜ் என்ற இந்த நிறுவனம் ஹஜ் செல்வோர் சேமிக்கும் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்கிறது. முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இந்த தொழில் முதலீடு நடக்கிறது. மிகப்பெரிய நிறுவனமாக இன்று வளர்ந்துள்ளது. இதே போன்ற ஒரு நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கி முஸ்லிம்களின் பணத்தை சேமிப்பதற்கு அதை “லாப – நட்டத்தை பகிர்ந்து கொள்ளுதல்” என்ற அடிப்படையில் பல்வேறு தொழில்களில் ஷரியத் சட்டத்திற்குட்பட்டு முதலீடு செய்தால் மிகப்பெரிய பொருளாதார புரட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்துள்ளார் ரஹ்மான்கான். பிரதமர் அவர்களும் அமைச்சரவைச் செயலாளரிடம் இந்தத் திட்டத்தை ஆய்வு செய்யுமாறு பணித்துள்ளார்.

இது குறித்து ரஹ்மான் கான் கூறுகின்ற போது “இந்த திட்டம் குறித்து பல அறிஞர்களிடமும் உலமாக்களிடமும் கலந்து பேசியதில் அனைவருமே ஆதரவு தெரிவிக்கின்றனர். இது போன்ற நிறுவனத்தை தொடங்கி சோதனை செய்த பிறகு முழுமையான இஸ்லாமிய வங்கியை தொடங்கலாம்” என்றார்.

அமெரிக்க வங்கிகளில் கோடிக்கணக்கான டாலர்களை போட்டு வைத்திருந்த அரபு நாடுகள், அந்த நாடுகளின் தொழிலதிபர்கள்; செப்.11 தாக்குதலுக்கு பிறகான அரசியல் போக்கின் காரணமாக பெருமளவு பணத்தை திருப்பி எடுத்ததும் அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. இப்படி திருப்பி கொண்டு வரப்பட்ட டிரில்லியன் கணக்கான டாலர்களை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைத் தேடி வருகின்றார்கள் என்ற செய்தி மத்திய கிழக்கிலிருந்து வரும் பத்திரிகைகள் மூலம் அறிய முடிகிறது.

இந்த நேரத்தில் இந்தியா வட்டி இல்லாத வங்கியை தொடங்கினால் இந்த அன்னிய முதலீடு பெருமளவு இந்தியாவில் முதலீடு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நமது ட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். கேரள மாநில அரசு இதற்கான வேலையைத் தொடங்கிவிட்டதை நாம் சென்ற இதழிலேயே செய்தி வெளியிட்டிருந்தோம். மனிதனுக்கு எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்பதை மனிதனால் முடிவு செய்ய இயலாது. மனிதனை படைத்த இறைவனால் தான் முடியும்.

-CMN.SALEEM

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

75 + = 84

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb