தேவை! கதிரியக்கம் பற்றிய விழிப்புணர்வு!
ஜப்பானில் அணு உலை விபத்து நிகழ்ந்து அதன் மூலம் உலகின் பல நாடுகளிலும் கதிரியக்கம் பரவுவதாக பல வதந்திகள் வலம் வருகின்றன. மீடியாக்கள் தங்கள் பங்குக்கு எதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கணும் என்பதை விடுத்து திரித்து சில செய்திகளை மட்டும் பெரிதாக்கி வெளியிட்டு வருகின்றன.
வழக்கம் போல மக்கள் இப்போ அரசியல்வாதிகள் பண்ணும் கூட்டணி கூத்துக்கு சிரிக்கவா? இந்த கதிரியக்கம் பற்றி கவலைபடுவதா என்ற யோசனையில் இருக்கிறார்கள். அரசியல் குழப்பத்தை தெளிவு படுத்த என்னால் இயலாது ஆனால் இந்த கதிரியக்கம் பற்றி எனக்கு வந்த ஒரு முக்கிய தகவல்களை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை. அதாங்க விழிப்புணர்வு. தொடர்ந்து பதிவை படியுங்கள்… உங்களுக்கு வேறு தகவல் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்துவிட்டால் போதும், அதைப்பற்றிய பல புரளிகளை கிளப்பிவிட்டுவிட்டு மக்களை குழப்பத்திலும், தேவையற்ற சஞ்சலங்களிலும் ஆழ்த்துவதில்தான் நம்மவர்களுக்கு எவ்வளவு இன்பம்?! இப்படித்தான் 2000 ஆண்டு உலக அழிவுன்னு சொன்னாங்க, அப்புறம் மிகச்சமீபத்துல 2012, 21 டிசம்பர் அன்றைக்கு உலகம் அழியப்போகுதுன்னு ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு அது இன்னும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில இப்போ அணு உலை பாதிப்புகளால் நிலைகுலைந்துபோயுள்ள ஜப்பான். அணு உலை இருக்கும் கட்டிடங்களின் கூரைகள் வெடித்ததை அணு உலையே வெடித்துச் சிதறிவிட்டது, அதனால் சுற்றுச்சூழலில் கதிரியக்கம் பரவி, உலகெங்கும் அமில மழை பெய்யப்போகிறது ஜாக்கிரதை என்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி ஜப்பான் நாட்டு சுக்குபா நகரில் பணிபுரியும் இந்திய அணு விஞ்ஞானி திரு.அனிர்பன் பந்தோப்தியாய ஒரு விளக்கமளித்திருக்கிறார். அது பின்வருமாறு……
சுனாமி தாக்கியதும் ஜப்பானில் உள்ள அணு உலைகளின் உற்பத்தி உடனே நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரியக்க தொடர் வினைகள் எதுவும் அதில் இருக்காது. தொடர் வினைகள் இருந்து கொண்டே இருந்தால் மட்டுமே அணு உலை வெடிப்பதற்கு சாத்தியம் உண்டு. எனவே ஜப்பானின் அணு உலை வெடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. செர்னோபில் விபத்து போன்றதொரு நிகழ்வு நடக்க வாய்ப்பே இல்லை.
தற்போது ஜப்பானில் உள்ள அணுமின் நிலையத்தில் வாயுக்கள் வெளியாவதாலும், சுற்றுப்புற தட்ப வெட்ப மாற்றங்களாலும் கட்டிடங்களின் கூரைகள் மட்டுமே தற்போது வெடித்துள்ளன. அணு உலை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரியக்கம் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால் அணு உலை சூடாவதும், கதிரியக்கம் வெளியாவதும் இரு வேறு தனி தனி நிகழ்வுகள்.
மேலும் நாம் அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம், காற்றில் கதிரியக்கம் பரவுவதை பற்றி வெளிவரும் செய்திகள். நாம் சில அடிப்படையான விசயங்களை அறிந்து கொண்டால் இதை பற்றி வரும் வதந்திகளை பற்றி கவலைபடவேண்டாம். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
நம் உடல் உறுப்புகளை தாக்கும் கதிர்வீச்சுகளில் அயோடின் கதிர்வீச்சு மட்டுமே ஆபத்தானது.
யுரேனியம் போன்றவை, உடனடியாக எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது.தொடர்ந்து மிக மிக அதிக அளவிலான கதிர்வீச்சு உடலில் பட்டு வந்தால் மட்டுமே உடல்நல பாதிப்புகளை உருவாக்கும்.ஜப்பானிலுள்ள ஆறு அணு உலைகளில் உள்ள மொத்த யுரேனியத்தின் அளவு அதை விட குறைவாகவே இருக்கும்.
அயோடின் கதிர்வீச்சு பற்றிய சில உண்மைகள்
எதிர்காலத்தில் இதனால் நமக்கு பாதிப்பு வரலாம் என்றும் அதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோடின் சத்து குறைபாடு நமக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் உடம்பில் அயோடின் சத்து குறைவாக இருந்தால், அப்போது காற்றில் உள்ள அயோடினை நம் உடம்பு உறிஞ்சும். அப்படி உறிஞ்சப்படும் அயோடினில் கதிர்வீச்சு இருந்தால் நம் உடல் பாதிக்கப்படும்.
எனவே அயோடின் நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக்கொண்டால் நலம், கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம்.
source: http://kousalya2010.blogspot.com/2011/03/blog-post_18.html