[ இயல்பிலையே கருக்கலைப்பை வன்மையாகவே எதிர்த்து வந்திருக்கின்றோம். தற்போது போதிய விளக்கங்களோடு எதிர்க்கின்றோம்..! கருக்கலைப்பு என்பது கொலைக்கு சமனானது. எக்காரணத்துக்காகவும் கருக்கலைப்பை அனுமதிக்க முடியாது..!
பெரியவர்கள் விடும் தவறுகளுக்காக ஒரு ஆரோக்கியமான சிசுவை அழிக்க எவருக்கும் உரிமையில்லை..!
எப்படியும், 20 வாரங்கள் வளர்ந்த கருவைக் கலைப்பது சட்டப்படி குற்றம்.
தற்போது ஸ்கானிங் மூலம் சிசுவில் வளர்ச்சிக் குறைபாடிருப்பது கண்டறியப்பட்டாலும் கருக்கலைப்புக்கு பரிந்துரைக்கிறார்கள்.. அது கூட ஒரு வகை கொலைதான்..! இயற்கையான மரணத்துக்கு இட்டுச் செல்லாத அனைத்தும் கொலைதான்..!]
கணவரின் அனுமதி இல்லாமல் ஒரு பெண் தன் கருவைக் கலைக்கலாமா? சட்டப்படி அது செல்லுமா?
லக்னோ ஐகோர்ட்டில் ஒருவர் தன் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். தன் கருத்தைக் கேட்காமலேயே தன் மனைவி கருக்கலைப்பு செய்ய முடிவு செய்து விட்டதாகவும், சட்டப்படி இது குற்றம் என்றும், மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டத்தின் கீழ், தன்னிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். ஆனால் இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
“மெடிக்கல் டெர்மினேஷன் ஆப் பிரெக்னன்சசி’ சட்டத்தின் பிரிவு 3 (4)ல், “கருவுற்ற தாயின் ஒப்புதல் இன்றி, கருக்கலைப்பு செய்யக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.
இதில் கணவரின் கருத்து பெறப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. “தாய் வயிற்றில் உள்ள கரு, தாய் உறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்தக் கருவின் முழு உரிமை தாய்க்கு உள்ளது’ என்று சட்ட வல்லுனர் ஒருவர் தெரிவிக்கிறார். எனவே கருவைக் கலைப்பதற்கும் தாய்க்கு முழு உரிமை உண்டு என்பது சட்டரீதியாக செல்லும்.
ஆனால், கருவைக் கலைக்க சரியான காரணங்கள் சொல்லப்பட வேண்டும். அவை என்னென்ன என்பதை இதே சட்டத்தின் பிரிவு 3(2) சொல்கிறது.
அவை: “பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் ஒருவரால் மட்டுமே கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யும்போதும் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். (1) வயிற்றில் உள்ள கரு 12 வார வளர்ச் சிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
(2) “வயிற்றில் கரு வளர்வது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்; தாய்க்கு உடல் ரீதியான அல்லது மன ரீதியான கடும் காயங்களை ஏற்படுத்தும்; கற்பழிப்பு மூலம் உருவாகிய கரு; கரு வளர்ந்து குழந்தை பிறந்தால், அது உடல்ரீதியாக அல்லது மனரீதியாக ஊனமடைந்ததாக இருக்கும்; மணமான தம்பதியர் கருத்தடைக்காக பயன்படுத்திய வழிமுறைகள் தோல்வியடைந்த நிலை; தாயின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற் படும்’ என்று, பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்கள் இருவர் கருதினால், கருக் கலைப்பு செய்யப்படலாம்.
எப்படியும், 20 வாரங்கள் வளர்ந்த கருவைக் கலைப்பது சட்டப்படி குற்றம்.
இச்சட்டத்தில், தாய்க்கு “கிரேவ் இஞ்ஜுரி’ ஏற்பட்டால் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எந்த வகையான காயத்தை “கிரேவ் இஞ்ஜுரி’ என்று எடுத்துக் கொள்வது என்பது விளக்கப் படவில்லை என்பது அவர்கள் கருத்து.
ஆனால், இந்த வழக்குத் தொடுத்தவர் இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பெண் எப்போது கருவுறுகிறாளோ அப்போதே அக்கருவின் தந்தைக்கு கரு மீது உரிமை பிறந்து விடுகிறது. கருக்கலைப்பு என்பது சட்டம் 21 (வாழ்வதற்கு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை)யை மீறுவதாக அமைகிறது என்றார். மேலும், தனது மனைவி கருக் கலைப்பு செய்யக் கூடாது என்பதை வலியுறுத்துமாறு மருத்துவமனைகள், அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து சட்ட வல்லுனர்கள் கூறும்போது, “கணவனின் முன் அனுமதி இன்றி கருக்கலைப்பு செய்வது சட்டரீதியாக சரி என்று கூறினாலும், அப்படிச் செய்தால், அவர்களிடையே விவாகரத்து ஏற்பட இதுவே வழி வகுத்து விடும். ஆனால் குழந்தை பிறக்கும் வரை, தாயின் வயிற்றில் உள்ள கரு மீது கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. இது மிக வினோதமான விஷயம் தான். தாயின் உறுப்புகளுள் ஒன்றாகக் கரு கருதப்பட்டாலும், கண் இமை போன்றோ, நகங்கள் போன்ற இதைக் கருத முடியாது. கரு உருவாக, கணவன் மிக முக்கியமான காரணகர்த்தாவாக அமைவதால், சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும்’ என்கின்றனர்.
சட்ட வல்லுனர்கள் இப்படிக் கருதினாலும், லக்னோ ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் இறுதியில் தோற்றுப் போனார். கருக்கலைப்பு செய்து கொள்ள கணவனிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் பெண்ணுக்கு இல்லை என்று தீர்ப்பாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்கட்டும்…
கருக்கலைப்பு பற்றி வரும் போது தான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.
வயிற்றில் உள்ள குழந்தைக்கு அழும் ஆற்றல் இருக்குமாம். அதுவும் கருக்கலைப்பு செய்கையில் அந்த குழந்தை (குழந்தை என்று அப்போது சொல்ல முடியாது foetus என்பார்கள்..) முடிந்த வரை போராடுமாம். முடியாத நேரம் வாயை திறந்து அழுமாம்.
இது நான் ஸ்கூலில் வீடியோ ஒன்றில் பார்த்தேன். வாய் திறந்து அழுவதும்…துடிப்பதும் அப்படியே ஸ்கானரில் காட்டினார்கள். ரொம்ப அழுகையாக வந்திச்சு. கிளாசில அழாதவங்க யாருமே இருக்கல..
கரு கலைப்பு என்றால் அதுவரை நான் பெரிதாக எண்ணவில்லை. அதனோட உண்மையான அர்த்தமும், அந்த சொல்லில் அடங்கி இருக்கும் கருத்தும் நேரில் அந்த foetus துடிப்பதை பார்த்தபோது தான் புரிந்தது.
கரு கலைப்பை பற்றி ஊமை கொடுத்த தகவலில் இருப்பது போல எவ்வளவோ சட்டங்கள் இருக்கு. ஆனாலும்.. எத்தனையோ பெண்கள் அதையும் தாண்டி சுலபமாக செய்து விட்டு இருக்கின்றார்கள்.
அதே வீடியோவில் அப்படி செய்த பெண்களோட பேட்டிகள் பார்த்தேன். அதில் இருவர் அதை ஒரு பொருட்டாக எடுக்காமல் கதைத்தார்கள்.
ஒருவர்.. தனக்கு குழந்தையை பார்க்க டைம் இல்லாததால் கருகலைப்பை செய்தாராம்.
மற்றவர் ஒரு நகரத்துப்பெண் 3 கரு கலைப்புக்களை செய்தாராம். அதை தான் 3 கொலை செய்ததாக சுலபமாக சொன்னார். இத்தனைக்கும் அவர் வீட்டினருக்கு தெரியாதென்றும்.. அதில் குறிப்பிட்டார். (அவர் மணமாகாதவர்).
அது ஒரு ஒண்டரை மணி நேர வீடியோ.. முழு பேட்டிகளும் என்னால் பார்க்க் முடியவில்லை.. ஆனால் எனக்கு மனதிலே இன்றைக்கும் அந்த foetus – வருங்கால குழந்தை.. வயிற்றுக்குள்ள.. வாயை திறந்து அழுதது கண் முன்னால் நிறகிறது..எந்த ஒரு குழந்தையை பார்க்கும் போதும் அந்த முகம் தெரியாத குழந்தை தான் கண்ணுக்குள்ள நிற்கிறது. பின்னால் என்னோட கிளாசில் சொன்னார்கள்.. அதை நாங்கள் பார்க்காமல் விட்டிருக்கலாம் என்று.. நானும் இப்போ அப்படித்தான் நினைக்கிறேன்.
உங்களைப் போலவே நாங்களும் இது தொடர்பான ஸ்கானிங் வீடியோக்கள் பாத்திருக்கின்றோம்..! பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.. நாங்கள் எல்லாம் இப்படி இருந்தமா எனும் போது வியப்பாகக் கூட இருக்கும்..!
இயல்பிலையே கருக்கலைப்பை வன்மையாகவே எதிர்த்து வந்திருக்கின்றோம்..தற்போது போதிய விளக்கங்களோடு எதிர்க்கின்றோம்..! கருக்கலைப்பு என்பது கொலைக்கு சமனானது. எக்காரணத்துக்காகவும் கருக்கலைப்பை அனுமதிக்க முடியாது..!
பெரியவர்கள் விடும் தவறுகளுக்காக ஒரு ஆரோக்கியமான சிசுவை அழிக்க எவருக்கும் உரிமையில்லை..! தற்போது ஸ்கானிங் மூலம் சிசுவில் வளர்ச்சிக் குறைபாடிருப்பது கண்டறியப்பட்டாலும் கருக்கலைப்புக்கு பரிந்துரைக்கிறார்கள்..அது கூட ஒரு வகை கொலைதான்..! இயற்கையான மரணத்துக்கு இட்டுச் செல்லாத அனைத்தும் கொலைதான்..!