Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வாழ்க்கை என்னும் ஓடம் – ஜப்பான் ஒரு படிப்பினை!

Posted on March 16, 2011 by admin

டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலீ, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)

10.3.2011 இரவு 8.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் தொலைக்காட்சி(ஏ.யு.எஸ்) நிலையம் 22.2.2011 அன்று நியூஜிலாந்து நாட்டின் கிரைட்சர்ச் நகரில் நடந்த நில நடுக்கத்தினைத்தின் தொடர்பாக உலகின் நில அமைப்பு சம்பந்தமான ‘ஹை எர்த் மேட் அஸ்’ அதாவது நம்மை எப்படி நில அமைப்பு வடிவமைத்தது…. என்ற டாக்குமெண்டரியியில், 

கொலோரடா நதியும் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பாறைகள் அமைப்பான கிரேண்ட் கேன்யன்,

மெக்ஸிக்கோ நாட்டின் பூகம்பம்,

சிலி நாட்டில் பூமிக்கடியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத கிரிஸ்டல் பார்மேஷன்,

அண்டார்டிக்காவில் உள்ள பனிப்பாறை, எரிமலை,

ஈரானில் உள்ள சிறிய குழிகளுக்குள் ஓடும் நீரூற்று,

இந்தியாவில் உள்ள இமயமலை எப்படி ஏற்பட்டது?

2004ஆம் ஆண்டு கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட பூகம்பமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகளின் அழிவினையும்,

இனிமேலும் பூகம்பம் பூகோளத்தில் ஏற்பட்டுள்ள பாறைக் கோடுகளின் அமைப்பால் அமெரிக்கா, ஜப்பான, நியூஜிலாந்து, பாக்கிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் ஏற்பட வழியுண்டு என்பதினை, தெள்ளத்தெளிவாக நேரில் படம் பிடித்ததினை விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.

அவைகளின் தாக்கத்தினை அமெரிக்கா சென்ற போது கிரேண்ட் கேன்யன் மற்றும் 2004ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட சுனாமியின் தாக்கங்களை நேரில் பார்த்ததால் எனக்கும் மற்றவர்களைப் போல இறைவனின் உலக படைப்புகள் கண்டு வியப்பாக இருந்தது.

அப்போது நான் சரித்திரத்தில் படித்த ஹிரித்துவ பைபிளில் உள்ள நோவா மற்றும் இஸ்லாத்தில் உள்ள நூகு நபி அவர்களை ஏகத்துவம் போதித்ததிற்காக எப்படி அந்த நாட்டு மன்னன் கொடுமைப்படுத்தினான் என்றும் அவனிடமிருந்து தப்பித்துச் கப்பலில் சென்ற பின்பு அந்த நாடு பேரலையால் அழிந்தது என்றும் படித்து இருக்கிறேன். அது ஒரு கதைபோலத் தெரிந்தது. தமிழகத்தில் பூம்புகார், மதுரை அழிந்தெதந்தால் வெறும் கதையல்ல உணமை நிகழ்வுகளாக தெரிந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலை சென்னையிலும் மற்றும் தமிழக கடல் நகரங்களிலும் ஏற்பட்ட போது தான் அதன் சீற்றத்தினை என்னால் உணர முடிந்தது.

11.3.2011 மறுநாள் மதியம் டி.வி பார்த்துக் கொண்டிருந்த போது ஜப்பானை 8.9ரிக்டர் அளவிளான பூகம்பம் தாக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சுனாமி பேரலை ஏற்படுவதிற்கு எச்சரிக்கை இடப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. அந்த பூகம்பம் நடக்கும் போது அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் பிரதமர் பேருரை ஆற்றிக்…. ஒளிபரப்பி அமெரிக்காவில் கலிபோர்னியா-நவேடா-அரிசோனா. ஆகவே டி.வியிலிருந்து என் கண்களை அகற்ற முடியாத ஆவல் ஏற்பட்டது.

அந்நாட்டு அரசவைக்கட்டிடம் கட்டிடம் ஆடியது. அமைச்சர்களும், உறுப்பினர்களும் மேஜைகளின் அடியில் பதுங்கினர். கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள நகரங்கள் ஆட்டம் கண்டன. மக்கள் தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்கள் உயிரை கையில் பிடித்து ஓடுவதிற்கு முன்னால் 10 மீட்டர் அளவு சுனாமி அலைகள் தன் கோரப்பிடியில் அவர்களை சூழ்ந்து கொண்டது. வானுயரக் கட்டிடங்கள் பொருட்காட்சிகளில் விற்கும் வடநாட்டு பெரிய அப்பளம் எண்ணெய் கொப்பறையில் மிதப்பது போல மிதந்து சென்றன. படகு போன்ற சொகுசு கார்கள் ஒன்றோடு ஒன்றாக மோதி தகர டப்பாவாகியது.

படகுகள், கப்பல்கள் அடித்துச் செல்லப்பட்டு பெரிய படகுகள, கார்கள் தண்ணீரில் மிதக்கும் வீடுகள் மேல் சவாரி செய்தது. அந்தக் காட்சி ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஓடும் என்ற பாடலை நினைவூட்டியது. அதி வேக ரயில் ஒன்று அடித்துச் செல்லப்பட்டு தண்டவாளம் மட்டும் கயிற்று ஏணி தொங்குவது போல காட்சி தந்தது. வீடுகளும், அலுவலகங்களும், வர்த்தக கட்டிடங்களும் இருந்த இடம் தெரியாத அளவிற்கு தரை மட்டமானது. மியாகி நகரில் மட்டு சாவு பத்தாயிரம் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மற்ற நகரங்களின் எண்ணிக்கை வந்த வண்ணம் உள்ளன. நகரங்கள் தகர்ந்து மக்கள் பலியாகுவதினைப் பார்த்து சோகத்தில் இருக்கும் போது புகிஸமோவிலுள்ள அணு உலையில் ஒன்று வெடித்துச் சிதறியது. பாதிப்பினை கணக்கிட்டு மற்ற நான்கு அணு உலைகளில் பாதிப்பு வரக்கூடாது – அடுத்த அணு உலை வெடித்தது. மற்ற உலைகளும் உடையும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை தகவல்கள் கூறுகின்றன.

சுனாமியால் பாதிக்கப்பட்ட 20 லட்ச மக்கள் குடிப்பதிற்கு தண்ணீரில்லை, கடுங்குளிரிலிருந்துக் காப்பாற்ற, உணவினைச் சமைப்பதிற்கும், சூடு செய்வதிற்கும் மின்சாரமில்லை. காரணம் அனு உலைகள் வெடித்ததினால் ஏற்பட்ட தாக்கம் தான் அவைகள். படுப்பதி;ற்கு போதிய வசதியில்லை, உடுப்பதிற்கும் மாற்றுத் துணியுமில்லை. அந்த சோகங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல மீட்புப் பணியினர் ஒரு நர்சரி பள்ளியில் படிக்கச் சென்று தப்பித்த 7 பிஞ்சுக் குழந்தைகள் படகில் மீட்கப்பட்டனர். ஆனால் அவர்கள் பெற்றோர் உயிருடனில்லை என்ற செய்தி நெஞ்சைப் கசக்கிப் பிழிய வைத்தது.

ஜப்பானில் 1923 ஆம் ஆண்டு ரிக்டர் 8.3 அளவிலான நில நடுக்கமும், 1995 ஆம் ஆண்டு ரிக்டர் 7.2 அளவான நில நடுக்கமும் முன்பு ஏற்பட்டு அழவினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தளவிற்கு கோர சம்பவங்கள் நடந்ததாகத் தெரியவிலிலை. பூகோலத்தில் பார்த்தால் வட பசிபிக் கடலில் தென் கொரியாவிற்குக் கீழே ஒரு வால் போன்ற சிறிய நிலப்பரப்பில் நான்கு பக்கமும் கடல்களால் சூழ்ந்த பகுதிதான் ஜப்பான். ஆனால் அந்த நாட்டினைப் பார்த்து ஒரு காலத்தில் உலகமே பயந்தது என்றால் ஆச்சரியமில்லையா?

1914 மற்றும் 1943ஆம் ஆண்டுகளில் நடந்த உலகப் போர்களில் பல நாடுகளில் அந்த நாடு ஆட்சி பீடத்திலிருந்தது. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆசிய, அரேபிய என்று அந்த வெடிப்பினை தடுக்க குளிர்வு முறைகளை மேற்கொண்ட போது ஆசியா மற்றும ஆப்பிரிக்க நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கு சாவு மணி அடித்தது அந்த ஜப்பான் நாடுதான். ஆனால் அந்தோ பரிதாபம் அந்த நாட்டு சர்வாதிகார அரசரால் அட்டூழியங்கள் அதிகமாகி எங்கே உலகில் அந்த நாடு வல்லரசாக ஆகி விடுமோ என்று பயந்த இங்கிலாந்து-அமெரிக்காக் கூட்டுப்படை யாரும் எதிர்பார்க்காமல் ஜப்பானின் கடற்கரை நகரங்களான நாகசாகி, ஹிரோசிமாவில் அனுகுண்டுகளைப் பொழிந்து அழித்து ஜப்பான் உலக சாம்ராஜியமாவதிலிருந்து தடுத்து அமெரிக்கா சாம்ராஜ்ஜியத்தினை நிலை நிறுத்தியுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமில்லைதானே!

ஜப்பான் பூகம்பமும், பேரலையின் அழிவும் சில பாடங்களை நமக்கு நினைவூட்டுகின்றன:

1) ஏரி தெர்மல், நீராவி போன்ற எரி சக்திகளை இன்னும் முழுமையாக நாம் உபபோகப்படுத்தாமல் அமெரிக்காவிடமும், ரஷ்யாவிடமும் அனு உலை ஆலைகள் அமைக்க எதிர்க் கட்சிகள் எதிர்ப்பினையும் மீறி அனு ஒப்பந்தம் செய்து குடியிருப்பு பகுதிகளில் அமைப்பது சுனாமி அலைகள் வந்தால் மக்களை காக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க முடியுமா என்று ஆராய வேண்டும். ரஷ்யாவில் ஏற்பட்ட செர்னோபில் அனு உலை ஆலை வெடித்ததினால் ரஷ்யாவில் உயிர் பலி தடுக்க முடியவில்லையே அது ஏன், என்பதினை வளரும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நாம் யோசிக்க வேண்டாமா?

ஏன் மத்திய பிரதேசம் போபால் நகரில் 1984ஆம் ஆண்டு அமெரிக்காவின் கார்பைடு கம்பெனியில் ஏற்பட்ட விபத்தில் பலியான, நோயுற்ற மக்கள் எத்தனை பல்லாயிரக்கணக்கானோர் என்பதினையும் நாம் அறிவோம். அதே போன்று தான் 2010 வருடம் எப்ரல் மாதம் 20ந்தேதி அமெரிக்காவில் மெக்ஸிகோ கடல் பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஆல் துளை கிணறு வெடித்து 26 பேர்கள் உயிர் இழந்ததோடு அமெரிக்காவின் ஜனாதிபதி பாரக் ஒபாமா, ‘என்விரோன்மென்ட்டல் டிசாஸ்டர்’ என்று சொல்லுமளவிற்கு பிராணிகளுக்கும், கடலில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்தானதாக மாறி அந்தக் கம்பெனி 40 பில்லியன் டாலர் இழப்பீடு கொடு;க்கும் அளவிற்கு வந்தது. அந்த விபத்தினை ஆராய்ந்த போது அந்தக்கம்பெனியின் உற்பத்திப்பெருக்க செலவினைக் குறைத்ததால் சரியான விபத்து நடவடிக்கை எடுக்கத்தவறி விட்டதாக தெரிந்தது. ஆகவே அது போன்ற விபத்துக்கள் கல்பாக்கத்திலோ அல்லது கூடங்குளத்திலோ நடக்கக் கூடாது என்று எல்லோருக்கும் அக்கறை இருப்பது இயற்கைதானே!

2 ஒரு சம்பவம் நடந்த பின்பு எடுக்கும் மீட்பு நடவடிக்கைக்கு முன்பு அந்த சம்பவங்கள் நடக்காத அளவிற்கு இயற்கை சீற்றங்கள் முன்னறே கண்டு பிடிக்கும் கருவிகள் அமைக்க வேண்டும். அதன் பின்பு அந்த சம்பவம் நடந்த பின்பு, ‘மான்டஸ்டர் ரெஸ்கூ பிளான்’ அதாவது எல்லா நடவடிக்கையும் தற்காலிகமாக சக்திக்குநம்மிடையே இருக்கும் சோலார் எரிசக்தியினையும், காற்றாலை, நிறுத்தி விட்டு மீட்பு ஒன்று தான் வேலை என்ற நடவடிக்கையினை எடுப்பது. அது போன்ற நடவடிக்கையில் ஜப்பான் உலகப்போரின் அனுகுண்டு வீச்சிலும், அதன் பின்பு வந்த நிலநடுக்கத்திலும் மீண்டு நவீன நகரமாக எப்போதுமே காட்சியளிக்கும். அது போன்ற பாதிப்புகளை நாமும் சந்தித்து பீனிச பறவை எரியும் சாம்பலிருந்து உயர்ப்பித்தது போல எழும்பி நிற்க பழக வேண்டும்.

3) நமது நாட்டில் நடக்கும் ஜாதி, மதச்சண்டைகள் இதுபோன்ற அழிவுகளைப் பார்த்தாது குறையவேண்டும். குஜராத்தில் லெட்டுர் நகரமே 2001ஆம் ஆண்டு பூகம்பத்தில் அழிந்தது. அதனைப்பார்த்தாது அயோத்தி கொள்ளவில்லையெனில், ஜப்பான் அழிவினைப்பார்த்தாது மத சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டு மத ஒற்றுமைக்கு வழிகாட்ட வேண்டும்.

4) சகோதரர்களுக்குள், உறவினர்களுக்குள், பக்கத்து வீட்டுக்காரர்களுடன் காலடி நிலத்திற்காக வெத்துக்குட்டு சண்டையில் ஈடுபடுவர்கள் இது போன்ற நிகழ்வுகளில் தங்கள் வீடுகள், நிலங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும்போது தங்களது சகோதர, உற்றார் உறவினர் பாசத்தினை அதிகப்படுத்த வேண்டும்.

5) பேராசையுடன், தீய வழியில் தொழில் செய்து கோடி, கோடியாக சம்பாதிப்பவர்கள் இனியாவது ஈகை குணத்துடன், கருணை உள்ளத்துடனும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

6) புதவி சுகமே தன் கொள்கை என்றிருப்பவர்கள் அரசியல் வாதிகள் ஆபத்து வரும்போது மேஜைக்கு அடியில் ஒளியும் ஜப்பான் பாராளுமன்ற உறுப்பினர்கள் போல இல்லாமல் மக்கள் நலனே நமது கொள்கை என்று மக்கள் நல நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

7) மேலை நாடுகளில் சாகும் போது தங்களைப் நல்லடக்கம் செய்வதிற்காக முன் கூட்டியே பணம் செலுத்தி ‘ஃஃபூனரல்’ நடவடிக்கையினை எடுக்கிறார்கள். ஆனால் இன்னாருக்கு, இந்த இடத்தில், இந்த முறையில் தான் சாவு என்பதினை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நேர்ந்த ஜப்பான் அழவினைப் பார்த்தால் அவர்கள் இது போன்ற முன் ஏற்பாடு செய்யத் தயங்குவார்கள் அல்லவா?

8) வீடுகள், அலுவலகங்கள் அப்பளமாக நொறுங்கும் போது நம் இடம் எங்கே இருக்கின்றது என்று தேடும் அளவிற்கு நாசமாகி விடும். ஆகவே இப்போதுள்ள கனினி யுகத்தில் மாஸ்டர் சிட்டி பிளானை பாதுகாக்க நடவடிக்கை எடுதது அதனை மற்றொரு நகரத்தில் பேக்கப்பில் வைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

9) எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பச் சண்டைகள், மத ஜாதிச் சண்ட, மன முறிவுகள், சொத்துத் தகராறு, பணச் சண்டைகள், நகைகள் மீது மோகம் போன்றவைகளைக் குறைத்து இந்த உலகம் ஆடுபவர்களின் பள்ளிவாசலினை இடித்து கோயில் கட்டுவோம் என்பவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆடமட்டும் ஆட வைக்கும் உலகம், ஆடி முடிந்ததும் அடங்க வைக்கும் உலகம் என நினைத்து அனைத்து மதத்தினரும் இறைவனே எங்களை பேரழிவிலுருந்து காப்பாற்று என்று இறைஞ்ச வேண்டும் என்றால் சரிதானே சகோதரர்களே!

Posted by: Dr. A.P. Mohamed Ali PhD., IPS(rd). 

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb