[ இந்த அணுஉலைகளிலிருந்து முழுமையான கதிரியக்கம் வெளியாக ஆரம்பித்தால் ஏற்படும் அழிவின் அளவு ஹிரோஷிமா – நாகசாகியில் ஏற்பட்டதைவிட 1 லட்சம் மடங்கு அதிகமாக இருக்கும் என ரஷ்யாவில் மூடப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.]
பூகம்பம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் தொடர்ந்தார்ப்போல் அணு உலைகள் ஒவ்வொன்றாக வெடித்து வருவது உலகிற்கு மிகப்பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் சொல்ல வேண்டுமானால் அணு உலைகள் உள்ள நாடுகள் எல்லாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது…
எல்லாவிதமான வசதி மற்றும் விஞ்ஞான முன்னேற்றத்தின் கேந்திரமாக விளங்கிய ஜப்பானாலேயே தனது நாட்டின் அணு உலைகளை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்போது மற்ற நாடுகளைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது!
ஆசிய நாடுகளில் தற்சமயம் மழை பெய்தால் மக்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் பெய்யும் மழையில் அணு உலைகள் வெடித்ததினால் வெளியான கதிர் வீச்சின் துகள்கள் மழையுடன் கலந்து விடும் வாய்ப்புண்டு.
சிறிது நேரத்திற்குமுன் ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் நான்காவது உலையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, பெரும் சத்தத்துடன் அது வெடித்தது. இதைத் தொடர்ந்து இந்த அணுசக்தி நிலையத்தின் ஊழியர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். ஃபுகுஷிமோவிலிருந்து 260 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த கதிர்வீச்சு பரவியுள்ளது. இது உயிருக்கு ஆபத்து விளைவித்தும் அளவுக்கு உள்ளதாக அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஃபுகுஷிமோ நகரமே வெப்பத்தில் தகிக்க ஆரம்பித்துள்ளது.
வெடித்த நான்கு அணு உலைகளிலிருந்தும் கதிர்வீச்சின் அளவு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு பரவியுள்ளதாக ஜப்பான் அரசே அறிவித்துள்ளது.
மேலும், கதிர்வீச்சில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முதலுதவி செய்யும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது.
டோக்கியோவிலும் கதிர்வீச்சு பரவியுள்ளதாகவும், மக்கள் பூட்டிய வீடுகளுக்குள் இருக்குமாறும் ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட நாசத்தை விட அதிகமான துயரத்தைச் சந்தித்துள்ளது ஜப்பான். பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப்பேரிடர்களின் தாக்குதலிலிருந்து மீளும் முன்பே, அந்நாட்டின் அணு உலைகள் மூலம் அடுத்த பேராபத்து நேர்ந்துள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாயிச்சி அணுசக்தி நிலையத்தின் மூன்று அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இந்த மூன்று அணுஉலைகளிலிருந்தும் வெளியேறும் ஹைட்ரஜன் ஜப்பானின் ஒரு பகுதியை முவுமையாக ஆக்கிரமித்துள்ளது. அணுஉலையின் துகள்கள் காற்றில் வேகமாகப் பரவி வருகின்றன.
முதலில் அணு உலையிலிருந்து 20 கிமீ தூரம் வரை குடியிருந்த மக்களை வெளியேறச் சொன்ன அரசு, இப்போது 40 கிமீ வரையுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வருகிறது. இதுவரை 11 லட்சம் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புகலிடம் தேடிப் புறப்பட்டுள்ளனர்.
டோக்கியா வரை அணுக்கதிர் வீச்சு உணரப்பட்டுள்ளதாகவும், உடல் நலத்தைப் பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சின் அளவு அபாய கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அரசுத் தரப்பிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. அணுக்கதிர் வீச்சிலிருந்து தற்காலிகமாகக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அணுஉலைகளிலிருந்து முழுமையான கதிரியக்கம் வெளியாக ஆரம்பித்தால் ஏற்படும் அழிவின் அளவு ஹிரோஷிமா – நாகசாகியில் ஏற்பட்டதைவிட 1 லட்சம் மடங்கு அதிகமாக இருக்கும் என ரஷ்யாவில் மூடப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானை 8 அடி நகர்த்திய பூகம்பம்! – பூமியின் அச்சும் மாறியது
8.9 ரிக்டர் பூகம்பம் காரணமாக, பூமி தனது அச்சிலிருந்து 4 இன்ச் அளவுக்கு இடம் மாறியுள்ளது. அதே போல ஜப்பானின் மத்திய தீவு 8 அடி நகர்ந்துள்ளது.
பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்வாக மேற்கிலிருந்து கிழக்காக சுழன்று வருகிறது.
இந் நிலையில் 2004ம் ஆண்டு இந்தோனேஷியா அருகே ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் 2.76 இன்ச் அளவுக்கு (7 சென்டி மீட்டர்) பூமியின் சாய்வை மாற்றியது. இதனால் பூமியின் சுற்று வேகமும் குறைந்து ஒரு நாளின் சில மைக்ரோ செகன்டுகளும் குறைந்தன. மேலும் அந்தமான் தீவுகளுக்கும் இந்திய கடலோரப் பகுதிகளுக்கும் இடையிலான தூரமும் சில அடிகள் குறைந்தது. மேலும்
இதையடுத்து கடந்த தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கமும் இதே போல பூமியின் அச்சை சில செ.மீ. மாற்றி பூமியின் சுற்று நேரத்தின் சில மைக்ரோ செகன்டுகளைக் குறைத்தது.
இப்போது ஜப்பானை உலுக்கிய பூகம்பமும் பூமியின் அச்சை 4 இன்ச் அளவுக்கு மாற்றியுள்ளதோடு, 24 மணி நேரத்தில் 1.6 மில்லி செகண்டுகளையும் குறைத்துவிட்டது.
அமெரிக்க பூகம்பவியல் கழக விஞ்ஞானி கென்னத் ஹட்நட் கூறுகையில், ஒட்டுமொத்த ஜப்பானும் பூமியின் அச்சிலிருந்து 8 அடி அளவுக்கு விலகியுள்ளது. ஜப்பான் வரலாற்றில் இது மிகப் பெரிய பூகம்பமாகும். இந்த கடும் பூகம்பத்தின் காரணமாக வெளியான மிக மிக அபரிதமான சக்தியே, கடலை கொந்தளிக்க வைத்து பெரும் சுனாமி அலைகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது. 30 அடி அளவுக்கு சுனாமி அலையின் உயரம் இருந்ததற்கும் இதுவே காரணம். குறிப்பாக மியாகி மாகாணத்தை முற்றிலும் சீரழித்துள்ளது இந்த பூகம்பம் என்றார்.
posted by: abu safiyah