Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஜப்பானின் அணுமின் உலை கதிர்வீச்சு அன்றும் இன்றும்

Posted on March 15, 2011 by admin

தொடரும் அன்றைய ஹிரோஷிமா நாகசாஹியின் பாதிப்பு

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து பேருந்தில் வந்துக்கொண்டிருந்தேன் .60 வயது மதிக்கத்தக்க ஒரு முஸ்லிம் வயோதிகரும், 10 வயது உடைய ஒரு சிறுவனும் BHEL பேருந்து நிறுத்த இடத்தில ஏறினர்.

முதியவர் தலையில் தொப்பி, முகத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட வெண் தாடி, கட்டம் போட்ட கைலி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். பையனைப் பார்த்தமாத்திரத்திலேயே அவரது பேரன் என்று தெரிந்துவிட்டது.

பால் வடியும் வதனம். வெண்ணிறம், அளவெடுத்த நாசி. கொவ்வை செவ்வாய், படிய வாரிய தலை. முழு கால் சராய். இதுதான் பையனின் திருமேனி.

என் இருக்கைக்கு அருகே இடமிருந்ததால் இருவரும் என் அருகே அமர்ந்தனர். சிறுவன் அல்லது ஒல்லியான ஆள் பஸ்ஸில் ஏறினால் நான் அவர்களுக்கு முன்னுரிமை தந்து, என் அருகில் அமரசெய்வது வழக்கம். காரணம் எனக்கு இடம் விஸ்தாரமாக கிடைக்கும் அல்லவா? முதியவரது முகத்தில் கவலை ரேகைகள் ஓடி ஒளிந்துக்கொண்டிருந்தன. அவரிடம் பையன் ஏதோ சைகையில் கேட்டான்.

சைகையில் அவரும் பதில் கூறினார். கண்டக்டரிடம் “இரண்டு கும்பகோணம”‘ என்று சொன்னபோதுதான் அவர் ஊமை இல்லை என்பது தெரிந்தது. மெல்ல அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

“தம்பி ! இவன் என் மக வயத்து பேரன். சின்ன வயசுலே அவளை கட்டிக்கொடுதுட்டேன். அவ புருஷன் இப்ப சிங்கபூருளே இருக்கான்.” என்றார்.

“ஒங்க மகளோ மருமகனோ ஊமையா?” என்றேன்.

நீண்ட பெருமூசுக்குப்பின் அந்த முதியவர் கூறினார் “அதெல்லாம் இல்லே தம்பி .இரண்டுபேரும் நல்லாத்தான் இருக்காங்க. இந்த பய அப்பனோட தாத்தா வம்சத்திலே ஒருத்தர் ரெண்டாவது உலக மகா யுத்தத்திலே ஜப்பான்லே குண்டு போட்ட ஹிரோஷிமாவிலே இருந்திருக்கிறாரு. அவரே அணுகுண்டு கதிர் வீச்சு பாதிச்சு இருக்கு.

அவரோட வம்சா வழியிலே யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லே. ஆனா என் தலை விதி அல்லாஹ் சோதிச்சிட்டான். என் மருமகனுக்கு அந்த கதிர் வீச்சு பாதிப்பு வம்ச வியாதியா வந்திருக்கு.

இது யாருக்கும் தெரியலே. இந்த பய பொறந்து பேச்சு மூச்சு இல்லாமே பேத்த பேத்த முழிச்சான். பெரும் செலவு செய்து வைத்தியம் பார்த்தோம்.

மொதல்லே மூளை பாதிச்சதுன்னு சொன்னாங்க. வைத்தியத்திலே அது சரியா போச்சு. பின்னாடி பேச்சு வரலே. காது கேக்கலே. அப்புறம்தான் கதிர்வீச்சு பாதிப்புன்னு கண்டு புடிச்சாங்க.

BHEL லே இதுக்கு ஒரு ஸ்கூல் இருக்குன்னு தெரிஞ்சு சேர்த்தோம். இங்கேதான் தங்கி படிக்கிறான்” என்றார்.

அணுகுண்டு கதிர் வீச்சு எத்தனை தலைமுறை தாண்டி ஜப்பானை காணாத அணுகுண்டு பற்றித் தெரியாத இந்த அப்பாவி சிறுவனை பாதித்துப்பதைக் கண்டு வேதனையுற்றேன். ஒரு விதத்தில் எனக்கு ஆறுதல் .இந்த சிறுவனை அப்படியே விட்டுவிடாமல், விடா முயற்சியாக இந்தப் பெரியவர் செய்த தொண்டு அறிய தொண்டு.

சில தினங்களுக்கு முன் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தைத்தொடர்ந்து வந்த சுனாமியின் தாக்குதலில் வெடித்துச்சிதரும் இந்த அணு உலை வெடிப்பு கதிர்வீச்சை தொலைகாட்சியில் காணும்போது அந்த ஏதும் அறியா அப்பாவிச் சிறுவனின் வதனமே என் கண் முன் விரிகிறது.

இந்த அணு உலைகள் எத்தனையெத்தனை ஊனமுல்ல தலைமுறையினரை உலகிற்கு தாரைவார்க்கப் போகிறதோ! நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

இன்று மீண்டும் ஒரு ஹிரோஷிமா நாகசாஹி….!

ஆழிப்பேரலையும் ஜப்பானியர்களுக்கு புதிதல்ல! சுனாமி என்ற சொல்லே ஜப்பானியச் சொல்தான். ஆனால், இந்த முறை 8.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கமும், 10 மீட்டர் உயரத்துக்கு ஆழிப்பேரலையும் எப்போதும் இல்லாத அளவுக்கு இணைந்து வந்துவிட்டது. ஜப்பானின் கடலோரப் பகுதியில், ஆழிப்பேரலை எச்சரிப்பு மணி, வானொலி அறிவிப்புகள், ஊடகங்கள் என மக்களுக்குச் சுனாமி குறித்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதால், பல லட்சம் உயிர்கள் சற்று முன்னதாகவே காப்பாற்றப்பட்டுவிட்டன. இப்போது இயற்கையின் சீற்றம் முடிந்து, அணுஉலையின் சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர் ஜப்பானியர்கள்.

ஜப்பானை உலுக்கிப் போட்ட மிகப் பெரிய பூகம்பமும், அதைத் தொடர்ந்து பெரும் சீரழிவை ஏற்படுத்திய சுனாமியும், ஜப்பானின் அணு உலைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விட்டன. பூகம்பம் ஏற்பட்டவுடனேயே அணு உலைகளை மூடியது ஜப்பான். இருப்பினும் பூகம்பத்தின் அதிர்வு காரணமாக, அவற்றில் 2 அணு உலைகளில் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்தன. இதன் காரணமாக அணு உலைகளில் வெப்பம் அதிகரித்து அழுத்தம் பல ஆயிரம் மடங்கு அதிகரித்து விட்டது.

இதன் காரணமாக அவை வெடித்துச்சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர்க்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது ஜப்பான். இதில் புகுஷிமோவில் உள்ள ஒரு அணு உலையில்

வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்து கதிர்வீச்சும் வெளியாகத் தொடங்கியுள்ளது.

ஜப்பானின் மூன்றில் ஒரு பங்கு மின் தேவையை அணுமின் உலைகள்தான் பூர்த்தி செய்கின்றன. அனல் மின்நிலையமோ புனல் மின்நிலையமோ அமைக்கப் போதுமான இயற்கை வளம் அங்கு இல்லை. அமெரிக்க அணுகுண்டு வீச்சால், கதிர்வீச்சைச் சந்தித்த தைரியத்தாலோ என்னவோ, அந்த நாட்டில் 50-க்கும் மேற்பட்ட அணுஉலை மின்நிலையங்கள் உள்ளன. தற்போது இவற்றில் 11 மின் நிலையங்கள் நிலநடுக்கம் காரணமாக மூடப்பட்டுவிட்டன. ஆனகவா அணுஉலைக்கூடத்தில் உள்ள மூன்று உலைகளும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் தானாகவே உற்பத்தியை நிறுத்திவிட்டன. ஆனால் மற்ற இடங்களில் உள்ள உலைகள் பெரும்பாலும் 1970-ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டவை. அவை மனிதர்களால் நிர்வகிக்கப்படுபவை.

புகுஷிமா அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலைக்கூடம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவுடன் அதில் கடல்நீரைப் பாய்ச்சி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். இனி அந்த முதல் உலையைப் பயன்படுத்தவே முடியாது. இப்போது மூன்றாவது உலை வெடித்து, உருகிக்கொண்டிருக்கிறது. உலைக் கலன் 15 செ.மீ. கனமுள்ள எஃகு தகட்டினால் மூடப்பட்டுள்ளது. இதுதான் இப்போது உருகிக்கொண்டிருக்கிறது. இது வெடித்தால், ஹைட்ரஜன் அணுவெடிகுண்டு விளைவித்த சேதத்தைக் காட்டிலும் அதிக சேதம் விளையும்.

ஏறக்குறைய, இந்த நிலைமை செர்னோபில் அணுஉலைக் கூடத்துக்கு ஏற்பட்டதைப் போன்றதுதான். ஏற்கெனவே, அங்கே கதிர்வீச்சினால் உயிரிழப்புகள் நூற்றுக்கணக்கில் ஏற்பட்டுவிட்டதாகவும், 1.76 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்புகள் உள்ளதா என்பதை அறிய ஜப்பானியர்கள் தாற்காலிக முகாம்களில் சோதிப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

உலக நாடுகள் அனைத்தும் ஜப்பானின் நிலைமைக்காகப் பரிதாபப்பட்டாலும், வேதனையைத் தெரிவித்தாலும் அவர்களை வேறு இடங்களுக்கு, தேவைப்பட்டால் வேறு நாடுகளுக்குப் பாதுகாப்பாகச் சிறிதுகாலம் கொண்டுபோய் வைத்திருக்கும் வாய்ப்புகளையும்கூட நல்க வேண்டும். அந்த அளவுக்கு அங்கே நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மின்சாரத்தை நம்பியிருக்கும் ஒரு நாட்டில், அணுஉலை விபத்து காரணமாக தற்போது மின்உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. தொழில்துறைக்கு மின்சாரம் அளிக்க முடியவில்லை. வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்க முடியவில்லை. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் மின்சாரம் அளிக்க முடியவில்லை. மின்சாரம் கிடைத்தால், தற்போது உருகும் உலைக்கூடத்தில் கருவிகள் செயல்படத் தொடங்கி, நிலைமையை விரைந்து கட்டுப்படுத்திவிடலாம் என்கிறார்கள். அதற்கும்கூட வழியில்லை.

2007-ம் ஆண்டு காஸிவாஸகி அணுமின் நிலையம் (8000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டது) நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோது, அதை இரண்டு ஆண்டுகளுக்கு மூடி வைத்த அனுபவம் ஜப்பானுக்கு உண்டு. இருந்தாலும்கூட, தற்போதைய நிலைமை, எல்லா அனுபவங்களையும் மீறியதாக இருக்கிறது.

இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள எந்தவொரு நாட்டாலும் முடியாது என்பதைத்தான் மீண்டும் இயற்கை நமக்குச் சொல்கிறது. இந்தியாவில் அணுமின் நிலையங்களை தனியார் அமைக்க ஒப்பந்தங்கள் போட்டுள்ளோம். அதற்கான இழப்பீடு குறித்துத்தான் நாம் முரண்படுகிறோம். உயிர்இழப்புகள் குறித்து அல்ல. அணுஉலைக்கூடங்களைப் பொறுத்தவரை இந்தியா ஒருமுறைக்கு நூறுமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

விஞ்ஞானம் மனிதனின் நாகரிக மேம்பாட்டுக்கு உதவி இருக்கிறது என்பது உண்மை. ஆனால், எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்தாக மட்டுமே முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வசதிகளைப் பெருக்கி வாழ்க்கையை வளமாக்குவது சரி. எப்படி, எந்த அளவுக்கு என்பதைப் பொறுத்துத்தான் அதற்கு நாம் என்ன விலை கொடுக்க நேரும் என்பதை இயற்கையின் சீற்றம் ஜப்பான் மூலம் உணர்த்தி இருக்கிறது.

இந்தியா விழித்துக்கொள்ள வேண்டும்

இந்திய அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை தொழில்நுட்ப ரீதியாக ஆராயுமாறு பிரதர் மன்மோகன் சிங் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை தாங்கும் திறன் அணுசக்தி நிலையங்களுக்கு எந்தளவு உள்ளது என்பது குறித்து ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை, ஜப்பான் அணுசக்தி அமைப்பு ஆகியவற்றுடன் இந்தியா தொடர்பில் இருப்பதாக என்று நேற்று நாடாளுமன்றத்தில் பேசுகையில் பிரதமர் தெரிவித்தார்.

2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது சென்னை – கல்பாக்கம் அணுமின் நிலையமும், 2002-ல் குஜராத் நிலநடுக்கத்தின்போது கக்ராபூர் அணுமின் நிலையமும் எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருந்ததையும் மன்மோகன் சிங் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இருந்தபோதும் ஜப்பானில் தற்போது நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக குளிரூட்ட இயலாத அணு உலைகள் வெடித்துள்ளதால், இந்தியாவில் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டுத் திருந்துவது ஒருவகை. பார்த்துத் திருந்துவதும் ஒருவகை.

Posted by: Abu Safiyah



Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 82 = 83

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb