கர்ப்பம் தரிப்பது தாய்மைப்பேறு அடைவது ஒரு பெண்ணிற்கு கிடைத்திடும் சுகங்களில் ஒன்று. அந்த சுகத்துடன் பல்வேறு கனவுகளுடனும் கற்பனைகளுடனும் கருவை சுமக்கும்போது அது சிலருக்கு கலைந்து சிதறும் நிலை உருவாவதும் உண்டு.
கர்ப்பபையில் கருதரித்த கரு 28 வாரங்களுக்குள் கலைந்து கர்ப்பப்பையை விட்டு வெளியேறுவதைத்தான் கருச்சிதைவு என்பர்.
பொதுவாக கருச்சிதைவு இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ ஏற்படலாம். செயற்கையாக மேற்கொள்பவை ஆபத்தான விளைவுகளை சில வேளைகளில் ஏற்படுத்துவதும் உண்டு. சட்டரீதியற்ற முறையிலும் நிகழ்கிறது.
கருச்சிதைவின் அறிகுறி வெவ்வேறு வகைகளில் ஏற்படுகிறது. முதலாவதாக கர்ப்பிணிப் பெண்ணிற்கு அடிவயிற்றில் வலி ஏற்படுவதுடன் ரத்தப்போக்கும் அவ்வப்போது சிறு துளிகளாக வெளிப்படும். இத மூன்று மாதங்களுக்குள் ஏற்படும். இதுப்போன்ற நிலையால் பயப்படத் தேவையிராது. ஆனால் இந்த நிலையில் மருத்துவரை உடனடியாக அணுகுதல் நல்லது என்கிறார் ஒரு லேடி டாக்டர்.
சிலருக்கு வயிற்று வலி இல்லாமல் ரத்தப்போக்கு மட்டும் ஏற்படுவது உண்டு. குடும்பத்தில் ஒரு சில பெண்களுக்கு கர்ப்ப நிலையிலேயே முதல் சில மாதங்களுக்கு ரத்தப்போக்கு இருப்பதுண்டு. அந்த நிலையிலும் மருத்துவரை உடனே அணுகுதல் நல்லது. கர்ப்பிணிப் பெண்களில் அதிகமானோர் உணர்ச்சிவசப்படுவதும், கவலை மற்றும் அதிக சந்தோஷம் ஆகிய நிலைகளில் உணர்வுகளுக்கு ஆளாகும் போதும் உடல் நெகிழ்வதாலும் கருக்கலைய வாய்ப்புண்டு.
இதை தவிர்க்க மனம் அமைதிப்படல் வேண்டும். குறிப்பாக மனஅழுத்தத்தை (டென்ஷன்) குறைத்து ஓய்வாக இருக்க வேண்டும். அதுவும் முடியாத பட்சத்தில் மருத்துவ ஆலோசனையோடு ஓய்விற்கு மருந்து எடுக்கலாம்.
இன்னும் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படுவதுண்டு. ரத்தப்போக்கும் ஏற்படும் பரிசோதித்து பார்த்தால் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி திறந்திருக்கும். எப்பொழுது கர்ப்பப்பை வாய் திறந்து விட்டதோ அதற்கு மேல் கருகலைந்து வெளியேறுவதை கட்டுப்படுத்த இயலாத நிலை உருவாகிவிடும். இவ்வேளையில் தாமதியாமல் மருத்து வரை அணுக வேண்டும்.
பெரும்பாலான இடங்களில் குறிப்பாக மலை பிரதேசங்களில் அதிலும் பின்தங்கிய இடங்களில் உள்ள வயது மூத்த பெண்மணிகளின் துணையுடன் இவ்வாறான கருக்கலைப்பு கலைந்த கருவினை வெளியேற்றல் போன்றவற்றை செய்கின்றனர். இது முற்றிலும் தவறான செயல். இவ்வாறு செய்வதால் சில வேளையில் தாயின் உயிருக்கும் ஆபத்தை தோற்றுவிக்கும்.
அதோடு போதிய சுகாதார இன்மை காரணத்தினால் வேறு தொற்றுக்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. பெரும்பாலும் இவர்கள் ஆயுதமாக கைகளையே பயன்படுத்துவர். இது அனைத்தும் தவறான வழிகள்.
அதோடு 28 வாரத்திற்குள் வயிற்றில் சிதைந்த கருவினை முற்றுமாக வெளியேற்றி விட வேண்டும். இல்லாவிடில் அந்த சிறு பகுதி கூட வேறு தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடும். அதனால் தான் மருத்துவரின் உதவியுடன் கருச்சிதைவினை அகற்ற வேண்டும். தொடர்ந்து ஏற்படும் ரத்தப்போக்கினால் ரத்தச்சோகை ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே உடனே கலைந்த கருவை முழுவதுமாக வெளியேற்றுவது தான் ஒரே சிறந்த வழி.
இது பொதுவாக சிகிச்சைக்கேற்றவாறு மருந்து கொடுத்தோ லேசான மயக்கத்திலோ சிகிச்சை அளிக்கப்படும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ரத்தச்சோகைக்கான மருந்துக்களை உட்கொள்ள வேண்டும். கருச்சிதைவுக்குப் பின் ஒரு மாதத்திற்கு ஆரோக்கியமான நிலை உருவாகும் வரை அப்பெண் ஓய்வெடுக்க வேண்டும். குறைந்தது மூன்று மாதங்களுக்காவது மீண்டும் கர்ப்பம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை முழுமையாக பின்பற்றினால் அடுத்த கர்ப்பம் தரிக்கும்போது எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
ஆண்டுக்கு 68 ஆயிரம் பெண்கள் பலி:
இன்று உலக நாடுகளில் காணப்படும் பிரச்சினைகளில் ஒன்று பாதுகாப்பற்ற உறவுகள். அதனால் ஏற்படும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு. பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் ஆண்டு தோறும் 68 ஆயிரம் பெண்கள் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.
பாதுகாப்பற்ற கருக்கலைப்பு அதிகமாக வளர்ந்து வரும் நாடுகளான ஆப்பிரிக்கா உள்ளிட்ட 33 நாடுகளிலேயே அதிகம் காணப்படுவதால், பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு பெண்களின் கல்வியறிவின்மையும், விழிப்புணர்ச்சி இல்லாமையும் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
உலகமெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர். எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
கருக்கலைப்பு என்பது ஒருவரின் தப்பை மறைக்கும் ஒரு கருவி மட்டுமல்ல, ஒரு சிசு கொலை செய்யப்படுகிறது. தாயின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
கருக்கலைப்பு ஆபத்தானது
பெண்களின் உடல்நலம் குறித்து அவர்களும் அக்கறைப்படுவதில்லை. மற்றவர்களும் கண்டு கொள்வதில்லை. ஆண் குழந்தையை வளர்க்க எடுத்துக் கொள்ளும் சிரத்தையை பெரும்பாலான பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை. இப்படி பெண்ணுக்கு பிறந்ததிலிருந்து உண்டாகும் புறக்கணிப்பு பல்வேறு நிலைகளிலும் தொடர்கிறது.
பெண்களுக்குரிய பிரச்சினைகளில் முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமாக இருப்பது கருக்கலைப்பு உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியது.
எனினும் கருக்கலைப்பு எண்ணிக்கை குறைவதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் ஐந்தரை கோடி கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. இதில் பெரும்பாலும் பாதுகாப்பில்லாமல் செய்யப்படும் கருக்கலைப்புகளே.
தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி கருக்கலைப்பு செய்வதால் பெண்களின் உடல்நிலை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. கிருமிகள் தொற்று, மலட்டுத்தன்மை ஆகியவை இதனால் உண்டாகும் முக்கிய பாதிப்புகள்.
பாதுகாப்பற்ற உறவும், அதைத் தொடர்ந்து கருக்கலைப்பும் படித்தவர்கள் மத்தியில் கூட அதிகம் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் காக்க கணவன், மனைவி இருவரும் கலந்தாலோசித்து உறவு வைத்துக் கொண்டால் கருக்கலைப்பு செய்யும் வாய்ப்பு நேராது. ஒவ்வொரு முறை கருக்கலைப்பு செய்யும்போதும் கருப்பை பத்து சதவீதம் பாதிப்படைகிறது.
முழுமை பெறாத கருக்கலைப்பு செய்யப்படும்போது கருப்பையில் சில கருத்துகள்கள் தங்கிவிடுகின்றன. கடுமையான ரத்தப் போக்கு, தாள முடியாத வலி, மாதவிடாய் வெளியேறம் பகுதியில் கட்டி அல்லது கோழை வெளியேற்றம், காய்ச்சல், மயக்கம், நாற்றம் ஆகிய அறிகுறிகள் முழுமையற்ற கருக்கலைப்பை உணர்த்தும். அப்படி நேர்ந்தால் தாமதிக்காமல் கருப்பையை சுத்தம் செய்ய வேண்டும். கருக்கலைப்புக்கு எப்போதும் தேர்ந்த மருத்துவரின் உதவியையே நாடுங்கள்.
கருக்கலைப்பு தவறு: ஏன்?
தன் குட்டியைத் தானே தின்னும் நாய், பாம்பு பற்றி கேள்விப்படுகிறோம். அவை எல்லாம் புலால் உண்பவை. ஆனால் தன் வயிற்றுக் குழந்தையை பிறக்கும் முன் தானே கொல்லும் கொடூர தாயைப் பற்றி கேள்விப்படுகிறோம் இப்போது! இனி அம்மா என்று யாரை அழைப்பது?
கருக்கலைப்பு சாதாரண “ஆபரேஷன்” அன்று. அது திட்ட மிட்டு செய்யும் மனிதக் கொலை!
கருக்கலைப்பு செய்யும் பெண்களில் 33 சதவீதம் மீண்டும் குழந்தை பெற முடிவதில்லை!
கருக்கலைப்பு செய்யும் பெண்களில் 30 சதவீதம் மன நோய்க்கு இரையாகி வாழ்வை இழக்கின்றனர்!
பொ¢ய உயிரைக் காக்க சிறிய உயிரைக் கொல்லுதல் “அபார்ஷன் ” என்பது தவறு! உயி¡¢ல் பொ¢யது சிறியது என்பது இல்லை!
இன்று கொலை செய்யப்படுவது குழந்தையல்ல! அது நாளைய ஞானி, விஞ்ஞானி, வழிகாட்டும் தலைவன், தலைவி, கவிஞன், சிந்தனையாளன் சிறந்த படைத்தலைவன் என்பதை நினைவில் கொள்க!
ஆரோக்கியமான உடல்தான் இனிமையான வாழ்க்கைக்கு அடித்தளம் பெண்கள் நலமாக இருந்தால்தான் குடும்பம் நலமாக இருக்கும்.
Arranged by: by: Abu Safiyah
”கருக்கலைப்பு செய்வது குற்றமா?” – ஓர் இஸ்லாமியப்பார்வை: