டாக்டர், அஹ்மது பாகவி PhD
பார்போற்றும் ஹதீஸ் கலையின் பேரரசர்
அமீருல் முஃமினீன் ஃபில்ஹதீஸ்
இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஹிஜ்ரி 194-256
அலை அடங்கிய ஆழிய நடுக்கடலை அந்தக் கப்பல் கிழித்துச் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் ஒரு மாணவரும் பயணம் செய்தார். அவரிடம் ஆயிரம் பொற் காசுகள் இருந்தன. கப்பலில் வழிப்போக்கன் ஒருவன் மாணவருக்குப் பயணத் தோழனாகக் கிடைத்தான்.அவனுடைய நடை உடை பாவனைகளைக் கண்டு அவனை நல்லவன் என நம்பிய மாணவர், தம்மிடம் ஆயிரம் பொற்காசுகள் இருப்பதை அவனிடம் வெள்ளை மனத்தோடு கூறினார்.
ஒருநாள், காலை நேரம்… மாணவரின் சகத் தோழன் விழித்தெழுந்து, கூச்சல் போட்டு அழுது புலம்பினான். அவனைச் சுற்றிப் பிரயாணிகள் கூடிவிட்டனர். கப்பல் பணியாளர்கள் பரிவோடு அவனை விசாரித்த போது அவன் சொன்னான், நான் ஆயிரம் தங்கக்காசுகள் வைத்திருந்தேன், அதனைக் காணோம். யாரோ எடுத்துக் கொண்டார்கள்.
அவனது பேச்சினை உண்மை என நம்பி, பணியாட்களும் கப்பலில் ஒருவரையும் விடாது சோதனை போட்டனர். கப்பல் பரபரப்போடு காணப்பட்டது. நமது மாணவரின் நிலையோ தர்ம சங்கடமாகப் போய்விட்டது. தம் பணத்தை அபகரிப்பதற்கே அந்த வழிப்போக்கன் சு10ழ்ச்சி செய்கிறான் என்பதை உணர்ந்த மாணவர் திடுக்கிட்டார். தம் பணம் என்று எவ்வளவுதான் சொன்னாலும், கப்பற் பணியாட்கள் நம்பப் போவதில்லை என உணர்ந்த மாணவர், ஆயிரம் பொற்காசுகளையும் கடலிலே வீசி எறிந்து விட்டார்.
ஒவ்வொருவராகச் சோதனை போட்டும், யாரிடத்திலும் அந்தப் பணம் அகப்படாதததைக் கண்ட பணியாட்கள் மிகவும் கோபமடைந்தனர். வேண்டுமென்றே பொய் சொல்லித் தங்களை அலைக்கழித்து விட்டான் என அந்த வழிப்போக்கனை கண்டபடி திட்டிப் பலர் முன்னிலையில் அவனைக் கேவலப்படுத்திவிட்டார்கள்.
பயணம் முடிந்து பிரயாணிகளனைவரும் சென்றபின் அந்த வழித் தோழன், மாணவரைத் தனிமையில் சந்தித்துக் கேட்டான்,
‘ஆமாம், அந்த ஆயிரம் தங்கக் காசுகளை என்ன செய்தீர்கள்?’
‘அதனைக் கடலில் எறிந்து விட்டேன்!’
‘அவ்வளவு பெருந் தொகையை வீணாக்க உங்கள் மனம் எப்படித் துணிந்தது?’
‘எனது மதிப்பு மிகுந்த வயதினைச் செலவு செய்து நான் சேகரித்துள்ள மாபெரும் புனிதச் செல்வமாம் கல்விக் கருவூலத்தை அந்தச் சில பொற்காசுகளுக்காக அழித்துவிட என்னால் இயலாது’ என்று பதில் அளித்தார் அம் மாணவர்.
யார் அந்த அதிசய மாணவர்?
யார் அந்த அதிசய மாணவர்? திருட்டுப் பட்டத்தைச் சுமக்க விரும்பாமல், தம் சொந்தப் பணம் ஆயிரம் பொற்காசுகளையும் தூக்கியெறிந்த அற்புதமானவர் யார்?
அவர் தாம் பிற்காலத்தில், ‘ஹதீதுக் கலைப் பேரரசர்’ என நபிமொழிக் கலை வல்லார்களால் புகழப்படும் பேறு பெற்ற இமாம் புகாரீ ரஹ்மதுல்லாஹி
கி.பி.12-ம் நூற்றாண்டில்.
வானைத் தழுவினாற் போன்ற உயர்ந்த மினாராக்களைக் கொண்ட மஸ்ஜிதுகளும், வேதம் ஓதும் கூடங்களும், நபிமொழி மன்றங்களும் தாம் அன்றைய புகாராவின் புகழுக்கு முழு முதற் காரணமாக விளங்கின.
சோவியத் ரஷ்யாவின் இன்றைய உஸ்பெக்கிஸ்தான் மாகாணத்திலுள்ள புகாரா, அன்று இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால், இஸ்லாமியக் கலைகளும் அங்கே சிறப்புற்று விளங்கின. ‘இல்முல் ஹதீஸ்’ என்னும் நபிமொழிக் கலையில் பேரும் புகழும் பெற்ற பல முஹத்திஸ்கள் நிரம்பியிருந்ததால் ஹதீஸ் பயிலும் மாணவர்களுக்கு புகாரா ஒரு மத்தியக் கேந்திரமாகத் திகழ்ந்தது.
பிறப்பு
புகாராவின் பெரும் முஹத்திஸ்களில் ஒருவரும் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஹம்மாதுப்னு ஜைத், அபூ முஆவியா ஆகியோரின் மாணவரும் அப்துல்லாஹிப்னு முபாரக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் நண்பருமான இஸ்மாயீல் அவர்களின் அருந்தவச் செல்வராக ஹிஜ்ரீ 194, ஷவ்வால் பிறை 13-ம் நாள் வெள்ளியன்று ஜும்ஆவுக்குப் பின் இமாம் புகாரீ ரஹ்மதுல்லாஹிஅலைஹி பிறந்தனர்.
இமாமவர்களின் இயற்பெயர் முஹம்மது, அன்புப் பெயர் அபூ- அப்துல்லாஹ், ஹதீதுக்கலை உலகில் அவர்கள்’அமீருல்முஹத்திஸீன்’ என்றும் ‘அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படு கிறார்கள். பல பெயர்கள் இருப்பினும் சொந்த ஊரான புகாராவைச் சேர்த்து ‘புகாரீ’ என்ற பெயராலேயே இமாமவர்கள் உலகுக்கு நன்கு அறிமுகமாகி உள்ளனர்.
இமாமவர்கள் நடுநிலையான உயரமும், கோதுமை நிறமும், மென்மையான தேகவாக்கும் பெற்றிருந்தனர். இமாமவர்கள் தூய வெண்ணிற ஆடையினை மிகவும் விரும்பி அணிவார்கள்.
இமாமவர்கள் இளவயதிலேயே தந்தையாரை இழந்துவிட்டனர். பின்னர் இறையன்பும், பக்தி நிறைஉளமும் கொண்ட தம் அன்னையாரின் அரவணைப்பில் நாளொரு ஞானமும், பொழுதொரு அறிவும் பெற்று வளர்ந்தனர். அந்தோ! இவ்விளம்பருவத்திலேயே இமாமவர்களின் இரு விழிகளின் பார்வையும் குன்றிவிட்டது. அன்புக் கணவர் மறைந்த துயரத்தின் ஈரம் உலருவதற்கு முன் மகனின் பார்வையும் குன்றி விட்டதால், அன்னையார் ஆறாத் துயரடைந்தனர். தம் மகனுக்குக் கண் பார்வையை மீண்டும் தருமாறு இறைவனை இரவும் பகலும் இறைஞ்சிய வண்ணமிருந்தனர்.
ஒரு நாள் இரவில் பிரார்தனை புரிந்து கொண்டிருந்த ஆன்னையாரை நித்திரை ஆட்கொண்டது. தூக்கத்தில் கனவு ஒன்று காணுகின்றனர். கனவில் நபி இப்ராஹீம் கலீலுல்லாஹ் அலைஹிஸ்ஸலாம் தோன்றி, ‘உம் புதல்வருக்கு அல்லாஹ் கண்ணொளி தந்துவிட்டான்’ எனக் கூறி மறைந்தனர். காலை புலரும் போது கண் விழித்த அன்னையார் தம் திருமகனின் இருவிழி களும் உண்மையிலேயே ஒளிபெற்றுத் திகழ்ந்ததைக் கண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினர். இறையருளைப் பெற்ற இமாம் அவர்களின் பார்வை அபார சக்தி வாய்ந்ததாய் ஒளிர்ந்தது. பின் நாளில், மங்கிய இரவுகளில் நிலா வெளிச்சத்திலேயே இரண்டு பெரிய நூல் களை எழுதி முடிக்கும் ஆற்றலை அக்கண்கள் பெற்றிருந்தன. இத்தகவலை இமாம் இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹி
இளமை
இமாமவர்களுக்குப் பத்து வயதாகும் பொழுதே குர்ஆனை மனனம் செய்துஅடிப்படைக் கல்வியையும் முடித்துக் கொண்டனர். அந்தச் சின்னஞ்சிறு உள்ளத்தில் புனிதப் போர்களில் (ஜிஹாதில்) கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படவே, உடலை வலுப்படுத்த ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்தனர். அம்பினைக் குறிப்பார்த்து, இலக்கு நோக்கி எய்வதில் திறமையும் பெற்றனர். அடிப்படைக் கல்வியை முடித்துக் கொண்ட இமாமவர்களுக்கு அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு
அறிவாற்றல்
புகாராவிலிருந்து நபிமொழி மன்றங்களில் மிகப் பெரிதாகத் திகழ்ந்தது இமாம் தாகிலீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மன்றமாகும். இந்த மன்றத்தில் இமாமவர்கள் சேர்ந்து ஒரு சில நாட்களே சென்றிருந்தன. ஒரு நாள்.. ஆசிரியப் பெருந்தகை தாகிலீ ரஹ்மதுல்லாஹி
இடை மறித்துப் பேசியவர் சிறிய வயதுடைய புது மாணவர் என்பதை அறிந்து கொண்டு, ‘பேசாமலிரு’ என்று ஆசிரியர் அதட்ட, இமாமவர்கள் விடாப்பிடியாக, ‘தங்களின் சமூகத்தில் மூல நூல் இருப்பின், அதைத் தாங்கள் சற்றுப் புரட்டிப் பார்க்கலாமே!’ என்று கூறினார். புதிய மாணராக, சிறியவராக இருந்தாலும், பேச்சு அறிவுத் தெளிவோடு ஒலிப்பதை உணர்ந்த ஆசிரியர், மூல நூலை எடுத்து, அந்த ஹதீதின் ஸனதைப் பார்த்த போது சிறுவர் கூறியது உண்மையாக இருக்கக் கண்டு வியந்தார். ஆசிரியர், ‘சிறுவரே! நான் சொன்ன ஸனது சரியில்லை என்றால், சரியான ஸனது எப்படி இருக்கும்?’ என வினவினார்கள். இமாமவர்கள், ‘இப்ராஹீமிடமிருந்து அறிவித்தவர் ஜுபைர் இப்னு அதீயாகும். அபூஜுபைர் அல்லர்’ என்று சரியான ஸனதைக் கூறினார்.
இந்தச் சமயத்தில் இமாமவர்களின் வயது என்ன? இச்சம்பவத்தைப் பற்றி வினவியபோது, ‘எனக்கு அப்போது பத்து அல்லது பதினொன்று இருக்கும்’ என இமாமவர்களே விடை பகர்ந்துள்ளனர்.
கல்வி
புகாராவில் அல்லாமா பேகந்தீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடமும் இமாமவர்கள் கல்வி பயின்றிருக்கின்றனர். ஒருமுறை அல்லாமா பேகந்தீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை, அறிஞர் சலீமுப்னு முஜாஹித் சந்திக்க வந்திருந்தனர். இருவரும் அளவளாவிக் கொண்டிருந்த போது அல்லாமா பேகந்தீ ரஹ்மதுல்லாஹி
இச்சம்பவத் தொடரை அறிஞர் சலீம் அவர்கள் இதோ இவ்வாறு விளக்குகிறார்கள். ‘இவ்வாறு ஒரு சிறுவனைப்பற்றி அல்லாமா அவர்கள் கூறக் கேட்டதும், நான் அசந்து விட்டேன். நான் அங்கிருந்து புறப்பட்டு அச்சிறுவரைச் சந்தித்தபோது, ‘என்னஉங்களுக்கு எழுபதாயிரம் ஹதீதுகள் மனனமிருப்பதாகச் சொல்கிறார்களே!’ என நான் வினவினேன். உடனே சிறுவர், ‘ஆமாம், அத்துடன் ஹதீதுகளை அறிவித்திருக்கும் ஒவ்வொரு ராவீயின் வரலாறும் தெரியும். ஸனதின் தொடரில் எந்த இடத்தில் யாரைப்பற்றி நீங்கள் வினவினாலும், அவரைப் பற்றி அவரது ஊர் பெயரோடு அவரது பிறந்த நாளையும், இறந்த நாளையும் என்னால் சொல்ல முடியும்’ என்று கூறினார்.
இவ்விளம் வயதில் இமாமவர்களிடம் இமாமின் ஆசிரியர் அல்லாமா பேகந்தீ ரஹ்மதுல்லாஹி
புகாராவில் வாழந்த ஹதீது வல்லுநரிடம் கற்றுத் தேறும் போது இமாம் அவர்களுக்கு வயது 16. அதன் பின்னர் ஹஜ்ஜு செய்வதற்காக அன்னையரோடும், அருமை சகோதரர் அகமதோடும் மக்கா சென்றனர். ஹஜ்ஜு முடிந்து அன்னையும் சகோதரரும் ஊர் திரும்பிட இமாம் புகாரி மட்டும் மாநபி ஸல்லல்லாஹு
கல்வித்திருநகர் பக்தாத் மாநகரில்
பஸ்ராவையும் கூஃபாவையும் விட்டு நீங்கிய இமாம் அவர்கள் பல்கலைகளின் உறைவிடமாம், பண்பாளர் இருப்பிடமாம் பாக்தாத் மாநகர் சென்றனர். அங்கே நான்காவது மத்ஹபின் சிறப்பு மிக்க தலைவர் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடமும், முஹம்மது இப்னு சாயிக், முஹம்மது இப்னு ஈசா சபாக், சுரைஜ் இப்னு நுஃமான், போன்ற மதிப்பிற்குரிய முஹத்திஸ்களிடமும் பாடம் கற்றுக் கொண்டனர். அதன் பின் சிரியா (ஷாம்), எகிப்து (மிஸ்ர்), ஜஸீரா (பஹ்ரைன்), குராசான், மரு, பல்ஃக், ஹிராத், நைஷாப்பூர், ரிஆ முதலிய இடங்களுக்கும் சென்று கல்வி தேடினார்கள். நைஷாப்பூரில் இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹ்வைஹி ரஹ்மதுல்லாஹி அலைஹி இடம் சேர்ந்து கல்வி பயின்றார்கள்.
இக்கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழே உள்ள ”Next” ஐ ‘‘கிளிக்” செய்யவும்.