ஓர் ஆங்கில திரைப்படம் படத்தின் பெயர் நவீன யுகம் (ModernTimes) கதாநாயகன் சார்லி சாப்லின் அப்படத்தில் வரும் ஒரு காட்சி.
குடும்பத்தை பிரிந்து வேலைக்குச் செல்கிறான் கதாநாயகன். அது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. எனினும் நமது கதாநாயகனின் வேலை மிக எளிதானது தான். ஒரு மிகப் பெரிய கூடம். அதனுள் ஒரு சிறிய அறை.
சுழலுகின்ற உலோகப்பட்டை ஒன்று அந்த அறையின் ஒரு பக்கமாக உள்ளே நுழைந்து மறுபக்கம் வழியாக அடுத்த அறைக்குச் சென்று கொண்டிருக்கும். அந்த உலோகப்பட்டை மீது திருகு மறைகள் (screws) வரிசையாக வைக்கப்பட்டு அவை அறைக்குள்ளே வரும்.
நமது கதாநாயகன் செய்ய வேண்டியதெல்லாம் முதலில் வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட வேண்டும் மூன்றாவது திருகு மறையை எடுத்து ஒரே ஒரு தடவை மட்டும் திருகி அப்படியே அந்த உலோகப்பட்டையின் மீது வைத்து விட வேண்டும்.
அதுபோலவே மீண்டும் தொடர்ந்து வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட்டு மூன்றாவதை எடுத்து ஒரே ஒரு தடவை திருகி வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் வேலை. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வேலை. மணியடித்தால் அன்றைய வேலை முடிந்தது.
வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் நமது கதாநாயகனுக்கு அந்த திருகு மறைகள் எங்கிருந்து வருகின்றன. எதற்காக வருகின்றன. அவை எங்கே செல்கின்றன. எதற்கு அவை பயன்படுத்தப்படுகின்றன? – இவை எதுவுமே தெரியாது! அதே அறையில் அவரோடு சேர்ந்து இன்னும் ஏழெட்டு பேர். அவர்கள் அனைவருக்கும் அதே வேலைதான் . அவர்களுக் ஒருவருக்கொருவர் கூட பேசிக்கொள்ள முடியாது. அருகில் உள்e தொழிலாளியிடன் பேச்சுக்கொடுத்தால் அவர் அந்த மூன்றாவது திருகு மறையைத் தவற விட்டு விடுவார். அப்படி அவர் தவறவிட்டு விட்டால் தொழிற்சாலையின் எல்லா இயக்கங்களுமே நின்று போய்விடும்!
ஓடி வந்தான். தாயைக் கட்டிப்பிடித்தான். நண்பனைக் கண்டிப்பிடித்தான். ஹலோ எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் எல்லாம்? எங்கிருந்து வருகிறீர்கள்? எல்லாரும் நலம்தானா? பார்த்து நீண்ட காலமாகிவிட்டதே! நீங்கள் யாரும் அருகில் இல்லாததால் நான் தவித்துத்தான் போய்விட்டேன். வாருங்கள், எல்லாரும் போய் தேனீர் அருந்தலாம் என்று அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான்.
ஒரு சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும் திடீரென்று தொழிற்சாலையின் சங்கு ஒலிக்கத் தொடங்கியது. அனைவரும் வெளியே ஓடி வந்தனர். காவலர்கள் சிலரும் உயர் அதிகாரிகள் சிலரும் நமது கதாநாயகன் வேலை பார்க்கும் அறைக்கு ஓடி வந்தனர். என்ன நடந்தது? உலோகப்பட்டையில் வைக்கப்பட்ட திருகு மறைகளுள் ஒன்று திருகப்படாமல் வந்து கொண்டிருந்ததாம். அதனால் தொழிற்சாலையின் அனைத்து இயக்கங்களும் நின்று விட்டனவாம். பிடித்தார்கள் நமது கதாநாயகனை! திட்டித்தீர்த்தார்கள்! தண்டனையும் கொடுத்தார்கள்!
இந்தக் கதையைக் குறித்து கொஞ்சம் சிந்தித்து விட்டு மேலே தொடருங்கள்.
தான் உருவாக்க நினைக்கின்ற ஒவ்வொன்றையும் திட்டமிட்டு படைப்பவன் இறைவன். ஒவ்வொரு படைப்பினத்தின் அளவையும் வடிவத்தையும் தீர்மானிப்பவன் அவனே. படைப்பினம் ஒவ்வொன்றும் சென்றடைய வேண்டிய இறுதி இலக்கையும் முடிவு செய்பவன் அந்த இறைவன்தான் அதனதன் இலக்கை நோக்கி அந்தப் படைப்பினங்களை வழி நடத்திச் செல்பவனும் அவனே தான்! இந்த நான்கு அம்சங்களும் எல்லாப் படைப்பினங்களுக்கும் பொருந்தும். அது மிக மிகச் சிறிய அணுவாக இருந்தாலும் சரி. அல்லது மிக மிகப்பெரிய விண்மீனாக இருந்தாலும் சரி அனைத்துப் படைப்பினங்களுக்கும் இது பொருந்தும்.
சான்றாக ஒரு அணுவுக்கு உள்ளே உள்ள எலக்ட்டரான் ஒன்றையே எடுத்துக் கொள்வோம். எலக்ட்ரான் ஒன்றைப் படைத்து, அதன் வடிவத்தை நிர்ணயித்து, அது சென்றடைய வேண்டிய இலக்கினை முடிவு செய்து அந்த இலக்கினை நோக்கி அதனைச் செலுத்துபவன் இறைவனே! அது போலவே நாம் வாழ்கின்ற பேரண்டத்தை இல்லாமையிலிருந்து உருவாக்கி, அதற்கு வடிவம் தந்து, அதன் இலக்கையும் நிர்ணயித்து அதன் இறுதி இலக்கை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருப்பவனும் அவன்தான்!
இந்த நான்கு அம்சங்களையும் இறைவன் தன்னகத்தே வைத்திருப்பதால் எந்த ஒரு படைப்பின் அமைப்பிலும் அதன் செயல்பாட்டிலும் நாம் யாதொரு குறையும் கண்டு விட முடியாது. ஒரு ரோஜா மலரின் வடிவத்தில் நம்மால் ஒரு குறை கண்டு விட முடியுமா? பூமியின் சுழற்சியிலும், கதிரவன் அமைந்திருக்கும் தூரத்திலும் நாம் யாதொரு குறையும் கண்டு விட முடியுமா?
இதில் எந்த ஒரு படைப்பும் வீணக்காக படைக்கப்படவில்லை. ஒன்றுக்கொன்று எந்த ஒரு தொடர்பு இல்லாமலும் படைக்கப்படவில்லை. ஒன்றுக்கொன்று எந்த ஒரு தொடர்பு இல்லாமலும் படைக்கபடவில்லை. அவை அனைத்தும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு, ஒரு ஒருங்கிணைப்பட்ட இயக்கத்துக்குட்பட்டே செயல்படுகின்றன!
நமக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கின்ற நமது பேரண்டத்தின் எந்த ஒரு பகுதியை நாம் ஆய்வுக்கு எடுத்து கொண்டாலும்
அவற்றில் இறைவனின் அறிவாற்றல் வெளிப்படும்!
அவற்றின் அழகு நம்மை வியப்பில் ஆழ்த்தும்!
நாம் உள்ளிழுக்கும் காற்றில், நாம் அருந்திடும் தண்ணீரில் நமது உணவில், விண்ணில், கடற்பரப்பில், ஓசோன் மண்டலத்தில் இவ்வாறு எங்கு நோக்கினும் நாம் இறைவனின் அறிவை, அழகுணர்ச்சியை, கருணையைப் புரிந்து கொள்ள முடியும்!
posted by; Marzuk, Nidur-Neivasal