Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஜப்பானில் ஆபத்தான நிலையில் அணு உலைகள்! நெருக்கடி நிலை பிரகடனம்!!

Posted on March 12, 2011 by admin

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனா, ரஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, கனடா, சிலி, பிலிப்பின்ஸ், மெக்சிகோ உள்ளிட்ட பசிபிக் கடலோர நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

எல்லா நாடுகளிலும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஆழிப் பேரலை கடலோரப் பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

o ஜப்பானில் ஆபத்தான நிலையில் அணு உலைகள்!  

o நெருக்கடி நிலை பிரகடனம்!!

o 1000 பேருக்குமேல் சாவு!

o 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

டோக்கியோ: ஜப்பானில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

தலைநகர் டோக்கியோவின் வடமேற்குப் பகுதியில் சுமார் 400 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 8.9 அலகுகளாகப் பதிவானது. 33 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. கார்கள், பஸ்கள், ரயில், வீடுகள் என ஒரு நகரையே கடல் நீர் அடித்துச் சென்றுவிட்டது.

கடலோரப் பகுதிகளில் மின்சாரமும் தொலைத் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன. மியாகி மாநிலத்தில் உள்ள செண்டாய் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானங்களையும், கார்களையும் கடல்நீர் அடித்துச் சென்றது.

நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை ஒன்றிலும் கட்டுக்கடங்காமல் தீ எரிந்து கொண்டிருக்கிறது.

செண்டாய் நகரின் ஒரு பகுதியில் மட்டும் 200 முதல் 300 உடல்கள் கிடைத்திருக்கின்றன. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்றும், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

அணுமின் நிலையம் எரிந்தது:

கடலோரப் பகுதியில் இருக்கும் ஓனகவா அணுமின் நிலையம் தீப்பற்றி எரிவதாகவும், இதையடுத்து அந்தப் பகுதியில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அங்கு கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதை ஜப்பான் அரசு மறுத்திருக்கிறது. கதிர்வீச்சு ஆபத்தில்லை என சர்வதேச அணுசக்தி முகமையும் அறிவித்தது.

ஆனால், ஃபுகுஷிமா பகுதியில் உள்ள மற்றொரு அணு உலையில் குறைந்த அளவு கதிர்வீச்சு ஏற்பட்டிருக்கலாம் என ஜப்பான் வர்த்தக அமைச்சர் தெரிவித்தார். இந்த அணு உலையைக் குளிர்விப்பதற்கான கருவிகளை அமெரிக்கா அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருக்கிறார். அணு உலையைக் குளிர்வித்தாலும் அதன் கதிர்வீச்சு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுனர்கள்

மிகப் பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் காரணமாக ஜப்பானின் 5 முக்கிய அணு உலகைகள் பேராபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகளில் இரண்டு உலைகளில் குளிரூட்டும் கருவிகள் செயல்படாமல் போனதால் வெப்பம் மிகவும் அதிகரித்து கதிர்வீச்சு வெளியாகும் நிலையில் உள்ளதால், அந்தப் பகுதிகள் முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பல ஆயிரம் மக்கள் இந்த அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

இவற்றில் ஏதாவது ஒரு அணு உலை வெடித்தாலும், ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை வெடித்த போது ஏற்பட்டதைவிட பல மடங்கு அதிக சேதத்தை ஜப்பானும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளும் அனுபவிக்க நேரிடும் என்பதால், மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.

ஃபுகுஷிமா பகுதியில் உள்ள பெரிய அணு உலையில் வெப்ப நிலை மிக பயங்கரமாக அதிகரித்தது. இதனால் உலையின் உள்ளே அழுத்தமும் கதிர்வீச்சும் 1000 மடங்கு அதிகரித்து அது வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. டோக்கியோவிலிருந்கு 170 கிமீ தொலைவில் உள்ளது இந்த அணு உலை. ஆனால், கடும் முயற்சிகளுக்குப் பிறகு அதன் அழுத்த நிலை இன்று காலை குறைக்கப்பட்டதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இதனால் இந்த அணு உலை வெடிக்கும் என்ற அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பூகம்பம் காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதால், இந்த அணு உலையின் வெப்பத்தைத் தணிப்பதற்குத் தேவையான தண்ணீர் ஏற்றப்படவில்லை என்றும்,

இருப்பினும் அப்பகுதியில் இருந்த 3000க்கும் அதிகமான மக்கள் அலறியடித்துக் கொண்டு வேறு பகுதிகளுக்குச் சென்றனர். இதனை ஜப்பானிய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த அணு உலையைக் குளிர்விப்பதற்கான கருவிகளை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. அணு உலையைக் குளிர்வித்தாலும் அதன் கதிர்வீச்சு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுனர்கள்

மேலும் வடக்கு ஜப்பானின் கடலோரப் பகுதியில் இருக்கும் ஓனகவா அணு மின் நிலையத்தின் வெளிப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர மேலும் 3 அணு உலைகள் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும், இந்தப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒட்டியுள்ள மேலும் 6 அணு உலைகள் மூடப்பட்டன. அங்கெல்லாம் அணு உலைகள் குளிர்ந்த நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜப்பானில் தொடரும் நிலநடுக்கம்-மீண்டும் சுனாமி பீதி:

இந் நிலையில் இன்று அதிகாலை மத்திய ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. ஜப்பானில் தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கத்தால் மீண்டும் சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் மீட்பு பணிக்கு உதவ 50 நாடுகள் முன்வந்துள்ளன. நிவாரண உதவிகள் வழங்க இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன

அணை உடைந்தது:

ஃபுகுஷிமா பகுதியில் உள்ள அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டதாக கியோடா செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதில் சுமார் 1800 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.

50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை:

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனா, ரஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, கனடா, சிலி, பிலிப்பின்ஸ், மெக்சிகோ உள்ளிட்ட பசிபிக் கடலோர நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஆழிப் பேரலை கடலோரப் பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில்…

ஜப்பானை அடுத்து அமெரிக்காவையும் சுனாமி தாக்கியது. ஓரிகன் பகுதியில் 7 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் அந்தப் பகுதியிலிருந்த மக்கள் முன்னரே வெளியேற்றப்பட்டுவிட்டனர். இதனால் அங்கு உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. முன்னதாக ஹவாய் தீவுகளையும் சுனாமி தாக்கியது. அங்கு சேதம் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb