[3] நபித்தோழர்கள் / தோழியர்
சான்று [3:1] ஹதீஸ்
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَظَرْتَ إِلَيْهَا قَالَ لَا قَالَ فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِي أَعْيُنِ الْأَنْصَارِ شَيْئًا
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு (அவையில்) இருந்த(ஒரு)போது அவர்களிடம் ஒருவர் வந்து, தாம் அன்சாரிப் பெண்களுள் ஒருவரை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். “அவ்வாறாயின், நீர் சென்று அவளைப் பார்த்துக்கொள்வீராக! ஏனெனில், அன்சாரி(ப்பெண்)களின் கண்களில் (குறை) ஒன்றுண்டு” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு – முஸ்லிம் 2783)
அன்ஸாரிப் பெண்களில் பெரும்பாலோருக்குக் கண்கள் சற்றே சிறுத்தும் விழிகளில் நீலநிறம் கலந்துமிருக்கும். முகத்தைத் திரையிடாமல் திறந்திருந்தால் மட்டுமே அந்தக் குறையை அறியமுடியும். மேலும், முகத்திரை(நிகாப்) அணிந்து முழுக்க மூடியுள்ள பெண்களின் கண்களைப் பார்க்க முடியாது.
சான்று [3:2] ஹதீஸ் :
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ حَدَّثَنَا يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ح وَحَدَّثَنَاه قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ أَهَبُ لَكَ نَفْسِي فَنَظَرَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَعَّدَ النَّظَرَ فِيهَا وَصَوَّبَهُ ثُمَّ طَأْطَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ فَلَمَّا رَأَتْ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًا جَلَسَتْ فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا …
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என்னையே அளிக்க வந்துள்ளேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தாழ்த்தியபின் தமது தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் விஷயத்தில் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி(அந்த அவையில்) அமர்ந்துகொண்டார்.
அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இப்பெண் தேவையில்லையென்றால், இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்” என்றார் … (அறிவிப்பாளர் : ஸஹ்லிப்னு ஸஅத் அஸ்ஸாயிதீ ரளியல்லாஹு அன்ஹு – முஸ்லிம் 2785)
அந்த அவையில் இருந்த நபித்தோழர்கள் உட்பட அனைவரும் பார்க்கும் வண்ணம் முகத்திரை இன்றியே அப்பெண் அங்கு வந்திருக்கிறார் என்பதை, அவரைப் பார்த்து விரும்பிய நபித்தோழரின் சொற்களிலிருந்து அறிய முடிகிறது. திறந்த முகத்துடன் அவைக்கு வந்த அப்பெண்ணை நிமிர்ந்து பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “முகத்தை மூடிக்கொள்” என்று கட்டளையிடவில்லை.
பின்னர், அப்பெண்ணை விரும்பிய நபித்தோழருக்கு அவர் மனனமிட்டிருந்த குர்ஆன் வசனங்களை மஹராக்கி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணம் செய்து கொடுத்தார்கள்.
சான்று [3:3] ஹதீஸ் :
وعن عمار بن ياسر رضي الله عنهما: أن رجلاً مرت به امرأة فأحدق بصره إليها. فمر بجدار، فمرس وجهه، فأتى رسول الله -صلى الله عليه وسلم-، ووجهه يسيل دمًا. فقال: يا رسول الله إني فعلت كذا وكذا. فقال رسول الله -صلى الله عليه وسلم-: “إذا أراد الله بعبد خيرًا عجل عقوبة ذنبه في الدنيا، وإذا أراد به غير ذلك أمهل عليه بذنوبه، حتى يوافي بها يوم القيامة، كأنه عَيْر
ஒருவர், ஒரு பெண்ணைக் கடந்து செல்லும்போது (அவளது அழகால் ஈர்க்கப்பட்டு) அவள்மீது வைத்த பார்வையை எடுக்காமல் நடந்து சென்றதில் ஒரு சுவரில்போய் முட்டிக் கொண்டார். அவரது முகம் முழுக்க இரத்தமானது. அந்த இரத்தக் கோலத்தோடு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, தான் நடந்து கொண்டதைப் பற்றி விவரித்தார். அதற்கு, “அல்லாஹ் தன் அடியாருக்கு நலன் நாடினால் அவருடைய பாவத்துக்கு இவ்வுலகிலேயே விரைவாக அவரைத் தண்டித்து விடுகிறான். அவ்வாறின்றி மறுமை விசாரணைவரையில் அப்பாவத்துக்குத் தவணை அளிக்க விரும்பினால் அவரைக் கழுதையைப்போல் (பாவப்பொதி) சுமக்க வைத்து விடுகிறான்”என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸர் ரளியல்லாஹு அன்ஹு – அஸ்ஸவாயித் 10/192)
அந்த அழகி, முகத்திரை அணியாமல் பொதுவிடத்துக்கு வந்திருந்தால் மட்டுமே இந்நிகழ்வு சாத்தியமாகும்.
சான்று [3:4] ஹதீஸ் :
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ الْمِصْرِيُّ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ ابْنِ الْهَادِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ وَأَكْثِرْنَ الِاسْتِغْفَارَ فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ فَقَالَتْ امْرَأَةٌ مِنْهُنَّ جَزْلَةٌ وَمَا لَنَا يَا رَسُولَ اللَّهِ أَكْثَرَ أَهْلِ النَّارِ قَالَ تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ وَمَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَغْلَبَ لِذِي لُبٍّ مِنْكُنَّ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ وَمَا نُقْصَانُ الْعَقْلِ وَالدِّينِ قَالَ أَمَّا نُقْصَانُ الْعَقْلِ فَشَهَادَةُ امْرَأَتَيْنِ تَعْدِلُ شَهَادَةَ رَجُلٍ فَهَذَا نُقْصَانُ الْعَقْلِ وَتَمْكُثُ اللَّيَالِي مَا تُصَلِّي وَتُفْطِرُ فِي رَمَضَانَ فَهَذَا نُقْصَانُ الدِّينِ
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (ஒரு நாள் உரையாற்றும்போது), “பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் (அதிகம்) செய்யுங்கள்; அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை (விண்ணேற்றத்தின்போது) நான் கண்டேன்” என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்திசாலியான ஒரு பெண்மணி, “நரகவாசிகளில் அதிகம் பேராக நாங்கள் இருப்பதற்கான காரணம் என்ன? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்து கொள்கிறீர்கள்; அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர்களாகவும் அறிவிற் சிறந்தோரைக்கூட (கவர்ச்சியால்) வீழ்த்தக் கூடியவர்களாகவும் (பெண்களான) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் பார்த்ததில்லை” என்று பதிலளித்தார்கள்.
அப்பெண்மணி, “அறிவிலும் மார்க்கத்திலும் எங்களுடைய குறைபாடு என்ன? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அறிவிலுள்ள குறைபாடு யாதெனில், ஓர் ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியம் நிகர் என்பது (பெண்களின்)அறிவிலுள்ள குறைபாடாகும். (மாதவிடாய் ஏற்படும்) பல நாட்கள் அவள் தொழுவதில்லை; ரமளானில் (மாதவிடாய் ஏற்பட்டால்) நோன்பு நோற்பதுமில்லை. இது (பெண்களின்) மார்க்கத்திலுள்ள குறைபாடு” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு – முஸ்லிம் 114)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவுரை கூறியது ஒரு பெருநாளின் தொழுகைக்குப் பின்னர் என்று மேற்கண்ட ஹதீஸைப் போன்ற ஸஹீஹ் முஸ்லிமின் கீழ்க்காணும் இன்னொரு அறிவிப்புத் தெளிவாக்குகிறது:
صحيح مسلم بشرح النووي – فقامت امرأة من سطة النساء سفعاء الخدين فقالت لم يا رسول الله قال لأنكن تكثرن الشكاة وتكفرن العشير قال فجعلن يتصدقن من حليهن يلقين في ثوب بلال من أقرطتهن وخواتمهن
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ يَوْمَ الْعِيدِ فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ ثُمَّ قَامَ مُتَوَكِّئًا عَلَى بِلَالٍ فَأَمَرَ بِتَقْوَى اللَّهِ وَحَثَّ عَلَى طَاعَتِهِ وَوَعَظَ النَّاسَ وَذَكَّرَهُمْ ثُمَّ مَضَى حَتَّى أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ فَقَالَ تَصَدَّقْنَ فَإِنَّ أَكْثَرَكُنَّ حَطَبُ جَهَنَّمَ فَقَامَتْ امْرَأَةٌ مِنْ سِطَةِ النِّسَاءِ سَفْعَاءُ الْخَدَّيْنِ فَقَالَتْ لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّكُنَّ تُكْثِرْنَ الشَّكَاةَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ قَالَ فَجَعَلْنَ يَتَصَدَّقْنَ مِنْ حُلِيِّهِنَّ يُلْقِينَ فِي ثَوْبِ بِلَالٍ مِنْ أَقْرِطَتِهِنَّ وَخَوَاتِمِهِنَّ
அத்துடன், “அல்லாஹ்வின் தூதரிடம் கேள்வி கேட்ட பெண், உப்பிய-கருத்த கன்னங்களை உடையவராக இருந்தார்” என்று அறிவிப்பாளர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு குறிப்பிட்டுள்ள மேற்காணும் ஹதீஸ் தரும் கூடுதல் தகவலின் அடிப்படையில், பெருநாள் தொழுகைக்குப் பொது இடத்துக்கு வந்த அந்த நபித்தோழி, முகத்தை மறைத்துக் கொண்டு வரவில்லை என்று விளங்க முடிகிறது. முகத்தை மூடியிருந்தால் கன்னங்களைக் கண்டு, அதன் நிறத்தைப் பிறருக்கு எடுத்துக்கூற முடியாது. அப்பெண்மணிக்கு விளக்கமளித்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை முகத்தை மூடிக்கொள்ளுமாறு கட்டளையிடவில்லை.
சான்று [3:5] ஹதீஸ் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால் ரளியல்லாஹு அன்ஹு இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் (கழட்டிப்) போடலானார்கள். (அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு – புகாரீ 964)
இந்த ஹதீஸ், அந்நியரான பிலால் ரளியல்லாஹு அன்ஹு தம் ஆடையை ஏந்திக் கொள்ள, நபித்தோழியர் தம் ஆபரணங்களைக் கழட்டிப் போட்டனர் என்று புகாரீயில் பதிவாகியுள்ளது.
சான்று [3:6] ஹதீஸ் :
“… நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா?” என நான் கேட்டதற்கு, “அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா – புகாரீ 324)
இந்த ஹதீஸின் கேள்வி-பதில் இரண்டும் வெளியில் செல்லும்போது ‘மேலங்கி’யைப் பற்றியே பேசுகிறது. ‘முகத்திரை’யைப் பற்றிக் கேள்வியிலும் பதிலிலும் எவ்விதக் குறிப்பும் இல்லையாதலால், பெண்கள் வெளியில் செல்லும்போது கூடுதலாக மேலங்கிதான் தேவையே அன்றி முகத்திரையன்று என்பதை விளக்குகிறது.
சான்று [3:7] ஹதீஸ் :
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا فُلَيْحٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الصُّبْحَ بِغَلَسٍ فَيَنْصَرِفْنَ نِسَاءُ الْمُؤْمِنِينَ لَا يُعْرَفْنَ مِنْ الْغَلَسِ أَوْ لَا يَعْرِفُ بَعْضُهُنَّ بَعْضًا
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபுஹுத் தொழுகையை இருட்டில் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் (அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் இல்லம்) திரும்புவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் (யாரென) அறியப்பட மாட்டார்கள். அவர்கள் ஒருவரையொருவர் அறிய மாட்டார்கள். (அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா – புகாரீ 872)
மேற்காணும் ஹதீஸில், இருளின் காரணத்தால் நபித்தோழியரை அறிய முடியாது எனக் குறிப்பிட்டிருப்பதால், பகலாக இருந்தால் அறிந்து கொள்ள முடியும் என விளங்க முடிகிறது.
இந்த ஹதீஸை,
وَقَالَ الْبَاجِيُّ : هَذَا يَدُلُّ عَلَى أَنَّهُنَّ كُنَّ سَافِرَاتٍ إِذْ لَوْ كُنَّ مُتَنَقِّبَاتٍ لَمَنَعَ تَغْطِيَةُ الْوَجْهِ مِنْ مَعْرِفَتِهِنَّ لَا الْغَلَسُ
“பள்ளிக்கு வந்து போகும் பெண்கள் முகத்திரை (நிகாப்) அணிந்து கொண்டிருக்கவில்லை என்பதற்குச் சான்றாகக் கொள்ளலாம்” என அல்பாஜி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுவதாக, புகாரீயின் விரிவுரையில் இமாம் அஸ்கலானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிடுகிறார்கள்.
சான்று [3:8] ஹதீஸ் :
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ الْحُدَّانِيُّ عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ عَنْ أَبِي الْجَوْزَاءِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَتْ امْرَأَةٌ تُصَلِّي خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَسْنَاءَ مِنْ أَحْسَنِ النَّاسِ فَكَانَ بَعْضُ الْقَوْمِ يَتَقَدَّمُ حَتَّى يَكُونَ فِي الصَّفِّ الْأَوَّلِ لِئَلَّا يَرَاهَا وَيَسْتَأْخِرُ بَعْضُهُمْ حَتَّى يَكُونَ فِي الصَّفِّ الْمُؤَخَّرِ فَإِذَا رَكَعَ نَظَرَ مِنْ تَحْتِ إِبْطَيْهِ
அல்லாஹ்வின் தூதரின் (ஒரு) தொழுகையின் (கடைசி) வரிசையில் பெண்களுள் பேரழகுப்பெண் ஒருத்தி தொழுதாள். முன்வரிசைகளில் இருந்த ஆண்களில் சிலர் அவளைப் பார்க்கும் ஆவலில் கடைசி வரிசைக்கு வந்தனர். ருகூஉக்குச் செல்லும்போது தம்மிரு முழங்கால்களின் இடையினூடாக அவளைப் பார்த்தனர்… (அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு – திர்மிதீ 3122)
சான்று [3:9] ஹதீஸ் :
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى وَتَقَارَبَا فِي اللَّفْظِ قَالَ حَرْمَلَةُ حَدَّثَنَا وَقَالَ أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ أَبَاهُ كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ الزُّهْرِيِّ يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا وَعَمَّا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَفْتَتْهُ فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ يُخْبِرُهُ أَنَّ سُبَيْعَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ وَهُوَ فِي بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ وَهِيَ حَامِلٌ فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ فَقَالَ لَهَا مَا لِي أَرَاكِ مُتَجَمِّلَةً لَعَلَّكِ تَرْجِينَ النِّكَاحَ إِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ قَالَتْ سُبَيْعَةُ فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي قَالَ ابْنُ شِهَابٍ فَلَا أَرَى بَأْسًا أَنْ تَتَزَوَّجَ حِينَ وَضَعَتْ وَإِنْ كَانَتْ فِي دَمِهَا غَيْرَ أَنْ لَا يَقْرَبُهَا زَوْجُهَا حَتَّى تَطْهُرَ
“என் தந்தையான அப்துல்லாஹ் பின் உத்பா, உமர் பின் அப்தில்லாஹ் பின் அர்கம் அஸ்ஸுஹ்ரீ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், அல் அஸ்லமிய்யாவின் மகள் ஸுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று, அவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டது பற்றியும் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அளித்த தீர்ப்பு என்ன என்பது பற்றியும் (விபரம்) கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, ஸுபைஆ அவர்களிடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ்(கேட்டறிந்து, என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்” என்று உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்கள் :
அல்ஹாரிஸின் மகள் ஸுபைஆ ரளியல்லாஹு அன்ஹா, பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்தவரும் பத்ருப் போராளியுமான ஸஅத் பின் கவ்லா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மணம் புரிந்திருந்தார்.
விடைபெறும் ஹஜ்ஜின்போது ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு இறந்து விட்டார்கள். அப்போது ஸுபைஆ ரளியல்லாஹு அன்ஹா நிறைமாத சூலியாயிருந்தார். ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, இறந்து (இரண்டொரு இரவு) குறுகிய காலத்துக்குள்ஸுபைஆ ரளியல்லாஹு அன்ஹா பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து ஸுபைஆ ரளியல்லாஹு அன்ஹா தூய்மையான பின்னர், பெண்பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார்.
அப்போது, பனூ அப்தித் தார் குலத்தவரான அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக் ரளியல்லாஹு அன்ஹு, ஸுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து, ”திருமணம் புரியும் ஆசையில் பெண்பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப்பின் காத்திருக்க வேண்டிய ‘இத்தா’ காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது” என்று கூறினார்கள்.
ஸுபைஆ ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்:
இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலைநேரத்தில் (வெளியில் செல்லும்போது அணியும்) எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, “நீ பிரசவித்து விட்டபோதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால்(மறு)மணம் செய்துகொள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள் – (புகாரீ 3991)
ஸுபைஆ ரளியல்லாஹு அன்ஹா கண்ணுக்கு சுர்மா இட்டிருந்ததாகவும் கையில் மருதாணி பூசியிருந்ததாகவும் அதைஅந்நியரான அபுஸ்ஸனாபில் பார்த்துவிட்டு நபியவர்களிடம் வந்து கூறியதாவும் அஹ்மதில் இடம்பெற்றுள்ள 26166, 26167 எண்ணிட்ட ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன.
“நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது” என்று அறிவுறுத்துவதிலிருந்து அபுஸ்ஸனாபில் ரளியல்லாஹு அன்ஹு, ஸுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் பேசும் நோக்கில் அங்குச் செல்லவில்லை என்பதை அறிய முடிகிறது. கண்ணுக்கு சுர்மா இட்டு, கைகளில் மருதாணி இட்டு, அதை அந்நியரான அபுஸ்ஸனாபில் ரளியல்லாஹு அன்ஹு பார்க்கும் வகையில் தோற்றமளித்த ஸுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி அவர் விவரித்துக் கூறிய பின்னரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், விதவை ஸுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்களைக் கண்டிக்கவில்லை என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.
எனவே ஒரு முஸ்லிம் பெண் தனது முகத்தையும் தனது முன் கையையும் வெளிப்படுத்திக் கொள்ள இந்த ஹதீஸ் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது. மேலும் இந்நிகழ்வு, ஹிஜாபுடைய வசனம் அருளப்பெற்று ஐந்தாண்டுக்குப் பின்னர், ஹஜ்ஜத்துல் விதாவுக்கும் பின்னர் நடந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
எனில்,
அல்லாஹ்வின் தூதருடைய காலத்துப் பெண்கள் யாருமே முகத்திரை(நிகாப்) அணிந்து முகத்தை மூடிக் கொண்டிருந்த ஹதீஸே இல்லையா எனும் கேள்வி எழும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.