Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனிதனைப் படைத்ததன் நோக்கம் என்ன?

Posted on February 28, 2011 by admin

ஸயீத் ரஹ்மான்

[ மூன்றாவது வகையைச் சேர்ந்த மேலோட்டமான முஸ்லிம், அல்லாஹ்வை தொழுவான். திருக்குர்ஆனை சப்தமாக ஓதுவான், இஸ்லாத்தை வெறித்தனமாக நேசிப்பான். ஆனால், அவனது ஈமானில் ஆழம் இருக்காது. அவன் சத்தியத்தின் அருகில் இருக்கின்றான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவன் முழுமையாக சத்தியத்தினுள் நுழையவில்லை.

அவன்தான் மார்க்கக் கடமைகளை இயந்திரம் போல் செய்கிறான். ஆனால், அவனது உள்ளம் அதில் ஈடுபடவில்லை. திருக்குர்ஆன் இந்த வகை முஸ்லிம்களை இவ்வாறு எச்சரிக்கிறது:

‘ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் – முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன் அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக ஆகிவிட்டனர்.’ (அல்குர்ஆன் 57:16) ]

இவ்வுலகிலுள்ள கோடானு கோடி மக்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்)

2. விலகிச்செல்லும் முஸ்லிம்கள்

3. மேலோட்டமான முஸ்லிம்கள்

4. இறைவிசுவாசிகள் (முஃமின்கள்)

இறைநிராகரிப்பாளன் (காஃபிர்) என்பவன் சத்தியத்தை நிராகரிப்பவன் அல்லது சத்தியத்தை மறைப்பவன் ஆவான். அவனது மனோ இச்சைகளுக்கே அவன் தீனி போடுவான். அவனால் இறைவனால் படைக்கப்பட்டுள்ள பிரமாண்டங்களை கண்டுணர இயலாது. தெய்வீகத் தகுதிகளில் இருந்து அவன் தன்னையே நிராகரித்துக் வாழ்வான். அவன் உண்பதையும், உறங்குவதையும், குடிப்பதையும், கும்மாளமடிப்பதையும் தவிர வேறு எதனையும் சிந்திக்க மாட்டான். இவனைப்பற்றித்தான் இறைமறை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

‘நிச்சயமாக அல்லாஹ்; எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.’ (அல்குர்ஆன் 47:12)

இரண்டாவது வகையினரான விலகிச்செல்லும் முஸ்லிம்களைப்பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

‘அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் – அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்து கொள்க: ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!’ (அல்குர்ஆன் 58:19)

இவ்வகையைச் சேர்ந்த முஸ்லிம், ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததினால் அவன் முஸ்லிம் பெயரை வைத்துள்ளான். அந்தப் பெயர் ஒன்றுதான் அவனை இஸ்லாத்தில் இணைக்கிறது. அவன் அனைத்து எல்லைகளையும் தாண்டுகிறான். தனது மனோ இச்சைக்கு இரையாகின்றான்.

மூன்றாவது வகையைச் சேர்ந்த மேலோட்டமான முஸ்லிம், அல்லாஹ்வை தொழுவான். திருக்குர்ஆனை சப்தமாக ஓதுவான், இஸ்லாத்தை வெறித்தனமாக நேசிப்பான். ஆனால், அவனது ஈமானில் ஆழம் இருக்காது. அவன் சத்தியத்தின் அருகில் இருக்கின்றான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவன் முழுமையாக சத்தியத்தினுள் நுழையவில்லை.

அவன்தான் மார்க்கக் கடமைகளை இயந்திரம் போல் செய்கிறான். ஆனால், அவனது உள்ளம் அதில் ஈடுபடவில்லை. திருக்குர்ஆன் இந்த வகை முஸ்லிம்களை இவ்வாறு எச்சரிக்கிறது:

‘ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் – முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன் அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக ஆகிவிட்டனர்.’ (அல்குர்ஆன் 57:16)

நான்காவது வகையினரான ‘முஃமின்’:

மேற்சொன்ன இந்த மூன்று வகையினருக்கும் நேரெதிரான வகையினர்தான் நான்காவது வகையினரான ‘முஃமின்’ இஸ்லாத்தின் உண்மையான இறைவிசுவாசி. பூமியில் மகிழ்ச்சிகரமான மனிதன் அவன். அவன் யாருக்கும் அடிமைஏவல் புரிய மறுக்கிறான். அப்படி அடிமை வேலை வாங்குபவரை எதிர்க்கிறான். அவனது உள்ளம் இஸ்லாத்தின் இறைக்கொள்கையால் நிரம்பிவழியும். அவன் உளப்பூர்வமாக இறைவனிடம் தன்னை ஒப்படைக்கிறான்.

அவனுக்காகவே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

‘எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காhயங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.’ (அல்குர்ஆன் 31:22)

நாம் சிந்தித்துப் பார்த்தால் ஒரு நொடியில் தெரிந்துவிடும் நாம் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பது. ஆனால், அல்லாஹ் நம்மைவிடத் தெளிவாக இதனை அறிவான். அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகின்றான்:

‘ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.’ (அல்குர்ஆன் 2:148 )

மேற்கண்ட வசனத்தின்படி நமக்கென்று ஒரு திசையை, இலக்கை நாம் கொண்டிருக்க வேண்டும். அது மிக முக்கியம். ‘சரியும், தப்பும் சரிசமமாக இருக்க முடியாது’, அதேபோல், ‘சத்தியத்தின் பக்கம் இருப்பவர்களும் அசத்தியத்தின் பக்கம் இருப்பவர்களும் சமமாக முடியாது’.

அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

‘எனவே, (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாக மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 32:18)

‘எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீஐம அவனுக்கு அழகாக் காண்பிக்கப் பட்டுள்தோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு எப்பாவாரா?’ (அல்குர்ஆன் 47:14)

”நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?”” என்றும் இறைவன் கேட்பான். ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே! (அல்குர்ஆன் 23:115,116)

ஆகவே, நம்மை இந்த உலகில் படைத்ததன் நோக்கத்தை நாம் அறிந்து, அந்த நோக்கத்தின்படி வாழ்வதற்குண்டான தகுதிகளை நமக்குள் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மேற்காணும் வசனத்தின் ‘வீணுக்கக்hக அல்ல’, ‘கணக்கு’, ‘உண்மையான அரசன்’ ஆகிய வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த வார்த்தைகளைப் பார்த்தாலே தெரியும் இவை அல்லாஹ்வின் வார்த்தைகள் தானென்று.

மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்? இதை இறைவனே கூறுவதைப் பார்ப்போம்.

‘பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.’ (அல்குர்ஆன் 76:2)

வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் வீழும் மனிதன் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை மறக்கலாம். ஆனால், மனிதனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கியது அவனது அருளே என்பதை மறந்திட வேண்டாம். இறைவனின் எச்சரிக்கை இதோ:

‘எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.’ (அல்குர்ஆன் 17:36)

எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதனைப் படைத்தததன் நோக்கத்தை மிகத்தெளிவாக மேற்கண்ட வசனத்தின் வாயிலாகக் கூறுகின்றான்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் அனைத்து இறைச்செய்திகளும் இதனையே கூறுகின்றன.

கீழ்க்கண்ட வசனங்களில் அல்லாஹ் நம்மைப் படைத்ததன் நோக்கத்தை அழகுறச் சொல்வதை மறக்காமல் கவனிப்போம், சிந்திப்போம்.

‘இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.’ (அல்குர்ஆன் 51:56,58)

ஸயீத் ரஹ்மான், Impact International, London

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 7

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb