இப்னுன்நூர்
“பூமியிலுள்ள யாவற்றையும் செலவு செய்தாலும் அவர்களின் சிறப்பை நீ பெறவே முடியாது”
இப்படி ஒரு அதிர்ச்சி பதிலை அந்த நாயகத் தோழர் எதிர்ப்பார்க்கவே இல்லை. அண்ணலார் صلى الله عليه وسلم அவர்களின் இப்பதிலை கேட்டு அசந்தே போனார் அப்துல்லாஹ் பின் ரவாஹா (رَضِيَ اللَّهُ عَنْهُ) என்ற ஸஹாபி.
அன்று வெள்ளிக்கிழமை. கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் ஒரு போருக்காக சிறு படையை தயார் செய்து, அதிகாலையே அனுப்பி வைத்தார்கள். அப்படையில் இப்னு ரவாஹா (رَضِيَ اللَّهُ عَنْهُ) அவர்களும் இணைக்கப் பட்டிருந்தார்கள்.
ஆனால் அவரோ தன்னை அப்படையில் இணைத்துக் கொண்டாலும் மனம் இணையவில்லை. காரணம், அன்று ‘ஜும்ஆ’வுடைய நாள். போருக்குச் செல்கிறோம், திரும்பி வருவதும், மீண்டும் கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்களை சந்திப்பதும் நிச்சயமில்லாதது.
எனவே இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களுடன் இணைந்து ‘ஜும்ஆ’வை நிறைவேற்றிவிட்டு மீண்டும் படையில் சென்று நம்மை இணைத்துக் கொள்வோமே என்ற உளப்பூர்வமான உண்மை ஆசையிலும், ஆர்வத்திலும் நினைத்தவாறே தன் எண்ணங்களை எதார்த்தமாக நிறைவேற்றி முடித்தார்.
ஆனால், தொழுகை முடிந்தது. கூட்டம் கலைந்தது. அப்போது இப்னு ரவாஹா (رَضِيَ اللَّهُ عَنْهُ) அவர்கள், கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பார்வையில் பட்டுவிட்டார்கள். பெருமானார் صلى الله عليه وسلم
“அப்படியானால் நீர் பூமியிலுள்ள……..” என்ற மேற்கண்ட அதிர்ச்சி பதிலை அப்போதுதான் அண்ணலம்பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
சரி, நாம் இதிலிருந்து பெற வேண்டிய படிப்பினை என்ன? கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் கட்டளைக்கு அப்படியே அடிபணிய வேண்டும் என்பது தானே!
அந்த ஸஹாபியின் எண்ணம் பெருமானார் صلى الله عليه وسلم அவர்களுடன் அந்த ‘ஜும்ஆ’வை சேர்ந்து தொழுவோம் என்ற உயர்வான உணர்வை பிரதிபலித்தாலும், கட்டளைக்கு கட்டுப்படாததால் ஒரு சிறப்பை இழக்க நேரிட்டது.