உங்கள் குடும்பத்திலோ தெரிந்தவர்களுக்கோ சளித்தொல்லையா? இக்கட்டுரையைப்படித்து தீர்வுக்கு வழி காணுங்கள். நோயைக் கொடுப்பவனும் அல்லாஹ், சுகப்படுத்துபவனும் அல்லாஹ். அதே சமயம் முயற்சி செய்வது நமது கடமை.
ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது.
முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.
இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில் தொற்றி ஜலதோஷம் மோசமடைகிறது.
மூக்கில் ஏற்பட்ட தொற்று காது மற்றும் தொண்டைக்கும் பரவுகிறது. இப்படி ஏற்படும்பொழுது பெரும்பாலான மருத்துவர்கள் ஆன்டிபையோட்டிக்கை பரிந்துரை செய்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. மூக்கடைப்பு இருக்கும் பட்சத்தில் மூக்கால் மூச்சு விட ஆரம்பித்துவிடுவார்கள். தூங்கும்பொழுது வாயைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குவார்கள்.
வ¡யின் மூலம் சுவாசிக்கும்பொழுது கிருமிகள் வடிகட்டப்படுவதில்லை. இதனால் குழந்தைகளின் நோய் எத¢ர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகிறது. தொடர்ச்சியாக வாய¢னாலேயே சுவாசிக்கும்பொழுது தொண்டை அழற்சி பிரச்னை (tonsillitis) ஏற்படுகிறது. ஆகையால் மூக்கடைப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும்.
சளித் தொல்லையை சரி செய்ய
1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!
2. அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!
3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.
6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.
7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.
9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.
10. சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் ‘உ’ இருக்கிறது.வைட்டமின் ‘உ’ ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது. 11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.
12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்
14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.
15. சளி அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். (இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)
16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.
17. ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்.