[ தாயின் வயிற்றில் இருக்கும் போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. நூற்றுக் கணக்கில் செலவழித்து டொனிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை.
முன்பெல்லாம் பெண் பூப்பு எய்தியவுடன் நாள்தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்தம்மாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய்வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரிக வாழ்க்கையில் “பாஸ்ட் புட்” கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலை அழித்துக் கொண்டு வருகிறார்கள்.
நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழல்லகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன. இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்திய காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தைப் பேற்றை ஓர் இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.]
தாயின் வயிற்றில் இருக்கும் போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறது சித்த மருத்துவம். நூற்றுக் கணக்கில் செலவழித்து டொனிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை.
ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:
குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?
பூமியில் எந்த மண்ணிலும் விதை போட்டு தாவரங்களை வளர்க்கலாம். அதனால் பெண் மலடு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் கடலும் கடல் சார்ந்த இடத்திலும் மலையும் மலைசார்ந்த இடத்திலும் வயலும் வயல் சார்ந்த இடத்திலும் காடும் காடு சார்ந்த இடத்திலும் பாலை நிலத்திலும் செடி, கொடிகளை வளர்க்கலாம். இந்த வகையில் பெண்களுக்கு மலடு என்ற சொல்லே இல்லை. பித்தத்தாலும் என்பது நம் உடலில் காணப்படும் நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் மாறுபாடுகளினால் தாய்மை அடைவது தடுக்கப்படுகிறது.
கர்ப்பப் புழுவாலும் கர்ப்பப் புழு என்பது கருப்பையில் காணப்படுகின்ற கர்ப்பப் புழுவைக் குறிக்கும். இவை கருப்பையை வந்தடையும் விந்துவை அழித்துவிடுவதால் கருத்தரிப்பதில்லை.
கருத்தரிப்பதற்குத் தடையாக இருக்கும் நோய்கள் எவை?
மேக நோய்: மேக நோயினைத் தொடர்ந்து (Venereal Disease) கிருமிகள் தாக்குதலுக்கு கர்ப்பப் பை உட்படுவதால் நாட்பட்ட நிலையில் (Chronic Pelvic Inflammat-ory Disease) இது சரியாகக் குணப்படுத்தப்படாமல் இருந்தாலும் குழந்தைப் பேறு பாக்கியம் அடைவதில் தடை ஏற்படுகிறது.
வைசூரி: அம்மை நோய்கள் போன்று வைரஸ் கிருமிகள் உடலில் ஏற்படுத்துகின்ற பாதிப்பு பெண்ணுக்கு குழந்தைப் பேறின்மையை உண்டாக்குகிறது.
அறியாத கலவியினால்… : இது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.
சில தம்பதியர்க்கு தாம்பத்திய உறவு பற்றி தெளிவான அறிவு காணப்படுவதில்லை. தாம்பத்திய உறவைப் பற்றி போதிய அளவுகூடத் தெரியாமல் சிலர் இருக்கின்றனர். குறிப்பிட்ட நாட்கள் முக்கியமானது என்பதும் தெரிந்திருக்கவேண்டும். இதுவும் குழந்தைப் பேறின்மைக்கு ஒரு காரணமாகின்றது. இவ்வகைக் காரணங்களால் ஏற்படக் கூடிய குழந்தைப் பேறின்மைக்குத் தனித்தனியாக சிகிச்சை முறைகளும் மருந்துகளும் தெளிவாகத் தொகுத்துக் கொடுத்துள்ளனர். இதனை நுட்பமாகப் புரிந்து கொண்டு சிகிச்சையளித்தால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய குழந்தைப் பேறின்மைத் தன்மையை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
சித்த மருத்துவத்தில் கருக்குழாய் அடைப்பு, (Fallopian tube block) சினைப்பை கட்டிகள் (PCOS) கருப்பை சவ்வு அழற்சி Endometriosis) ஒழுங்கற்ற மாத விலக்கு((Irregular Menstruation), கருப்பைக் கழலை Fibroid Uterus) பெரும்பாடு (அதிகமாக கட்டி கட்டியான உதிரப்போக்கு), தைரொய்ட் சுரப்பி கோளாறு (Thyroid Dysfunction)> சினை முட்டை சரிவர வளராமை போன்ற காரணங்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பப்பைக் கோளாறுகளின் அறிகுறிகள் என்ன?
கருப்பைப் கோளாறுகள் பெண்கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித்தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது ”கணைச் சூடு” என்ற விதமாய்த் தொடங்குகின்றன. பழங்கால பாட்டிகள் கணைச்சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெய்யை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண்ணெய் என்ற மருந்தை தயார் செய்து கொடுக்கப்படுகிறது.
இந்த கணச் சூடு பூப்பு எய்திய காலத்தில் கர்ப்பச் சூடாக மாறும். இதனால் ரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக மாதவிலக்கு மாறுபாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளைபடுகிறது. நம் சமூகத்தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஒவ்வொரு நோய்க்ற் காக தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்.
கர்ப்பப் பை வளர்ச்சியில் எப்போது அக்கறை செலுத்த வேண்டும்?
முன்பெல்லாம் பெண் பூப்பு எய்தியவுடன் நாள்தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்தம்மாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய்வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரிக வாழ்க்கையில் “பாஸ்ட் புட்” கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலை அழித்துக் கொண்டு வருகிறார்கள்.
நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழல்லகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன. இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்திய காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தைப் பேற்றை ஓர் இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.
முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங் கற்கண்டு, ஏலக்காய் நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஓர் உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும். தேனும் தினைமாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.
நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக் கட்டி, கருப்பைக் கட்டி போன்றவைகள் உருவாகி மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
சித்த மருத்துவத்தில் நோய் தீர்க்கும் வழிமுறையும் நோய் வராமல் தடுக்கும் முறையும்…: எஸ்.கே.எம். சித்த மருத்துவமனையில் தேரையர் சித்தர் அருளிய நோய் அணுகா விதிகளை பின்பற்றி வருகிறோம். முதலில் உடலைச் சுத்தம் செய்ய வேண்டும். வாரத்துக்கு இருமுறை (செவ்வாய்வெள்ளி இரு தினங்கள் மருந்து சாப்பிடும் முன்பு) எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் நம் உடல் சூடு, கண் எரிச்சல், உடலில் ஏற்படும் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
45 நாள்களுக்கு ஒரு முறை நசியம் (மூக்கில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை) செய்கிறோம். மூக்கிற்கும், மூலாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் கருவாய், எருவாய், மலவாய் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. கட்டி, கழலை ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, செக்ஸ் உறவு பற்றிய போதிய விவரம் தெரியாமை போன்ற காரணங்களினால் அதிக உதிரப்போக்கு, 6 மாதத்துக்கு ஒரு முறை உதிரப்போக்கு,
ஒரு நாள் மட்டும் தீட்டு படுதல், சிறுநீர் கழிக்கும்போது தீட்டு படுதல் போன்ற காரணங்களுக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை செய்து எல்லாம் இயல்பாக இருந்த பெண்களுக்கு நசியம் செய்து கொடுத்து மகப்பேறு அடைந்துள்ளனர். மாதவிலக்கு உண்டான 3 நாள்கள் மூலிகை கற்கங்களை காலையில் 6 மணிக்கு நீராகாரம் (அல்லது) மோரில் அரைத்துக் கொடுத்து அநேகம் பேர் மகப்பேறு அடைந்துள்ளனர்.
கலிக்கம் (கண்ணில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை): ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கலிக்கம் செய்கிறோம்.
உடலை நோய் வராமல் இருக்கச் செய்யும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உடலே உணரும் வகையில் செய்யலாம்.
குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்து என்னென்ன?
குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் உள்ளன. என்ன காரணத்தில் மகப்பேறின்மை உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருந்துகள் கொடுக்கப்படும்.
வெண் பூசணி லேகியம், கரிசாலைக் கற்ப மாத்திரை, வான்குமரி லேகியம், நரசிங்க லேகியம், குன்ம குடோரி மெழுகு, கர்ப்ப சஞ்ஜீவி எண்ணய், லவண குணாதி எண்ணெய், அஸ்வகந்தி லேகியம், நிலக்கடம்பு சூரணம், சதாவரி லேகியம், நந்தி மெழுகு, குன்ம உப்பு சூரணம், கர்ப்பப் பை சஞ்ஜீவி சூரணம், அகத்தியர் குழம்பு, அசோகப்பட்டை சூரணம், அமுக்கரா சூரணம், சித்தாதி எண்ணெய், கலிங்காதி தைலம், மேக ரா எண்ணெய், பஞ்ச மூலிகை சூரணம், குமரி எண்ணெய், அதிமதுரசூரணம், திரிபலாக்கற்ப சூரணம், கடுக்காய் சூரணம், மலைவேம்பாதி தைலம், சண்டமாருத செந்தூரம், புங்கம்பட்டை தைலம், திரிகடுகு ஆகிய மருந்துகள் உள்ளன.
source: http://ammathamil.com/