தீராத விளையாட்டுப் பிள்ளைகள்!
கோவை அப்துல் அஜீஸ் பாகவி
ஒரு நபித்தோழர் வீட்டு வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்।.
தெருவில் மாடு ஒன்று இடையனோடு செல்லாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தது. அவன் சாட்டடயால் ஒரு அடி அடித்தான் மாடு நடக்கத் தொடங்கியது. இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நபித்தோழர் அந்தச் சாட்டையடி தன்மேல் விழுந்தது போல் துள்ளி எழுந்தார்.
”நான் பாடம் பெற்றுக் கொண்டேன்
நான் பாடம் பெற்றுக் கொண்டேன
நான் பாடம் பெற்றுக் கொண்டேன்,
எஜமானன் சொல்லுக்கு கட்டுப்படாத யாரும் தண்டனை பெற்றே தீருவர்” என்று முனகிக் கொண்டே அவர் எழுந்து சென்றார்.
இது முஃமின்களின் குணம். தன்னை சுற்றி நடைபெறுகிற எந்த ஒரு சிறு நிகழ்விலிருந்தும் பாடம் பெற்று விழிப்படைந்த கொள்ள வேண்டியது அவரது இயல்பாக இருக்க வேண்டும் என்பது குர்ஆனுடைய எதிர்பார்ப்பு.
சில வருடங்களுக்கு முன் மதுரையில்; மிக மோசமான வன்முறைகள் நடந்தன. சுயநலத்தோடு பொய் செய்திகளை பரப்பி வருகிற ஒரு நாளேடு வெளியிட்ட கருத்தக் கணிப்பால் கொடூரமமான வன்முறைகள் அரங்கேறின.
குண்டர்களின் வெறியாட்டங்களுக்கு மூன்ற அப்பாவி மனித உயிர்கள் பலியாயின. அரசு சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் அச்சத்தின் பிடிக்குள் தள்ளப்பட்பட்டார்கள். ஒரு பெரிய நாட்டில் அங்காங்கே ஏதாவது கலவரம் நடப்பது,
வன்முறை வெடிப்பதும் சகஜம் தான் என்றாலும் இந்த வன்முறை சராசரியானது அல்ல. பொருளாதாரத்திலும் தொழில் நுட்பத்திலும் வளர்ச்சியடைந்து, கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள ஒரு மாநிலத்தில் ஆளும் தரப்பை சார்ந்தவர்களின் நாற்றம் பிடித்த குடும்பச் சண்டையால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்த அப்பாவி மனித உயிhகள் பலியாகயிருக்கிறார்கள். காவல் துறையின் மேற்பார்வையில் இத்தனை அராஜகங்களும் அரங்கேறியிரக்கின்றன.
பசுவின் கன்றுக்காக தன் மகனையே தேர் காலடிக்கு காணிக்கையாக்கிய மனு நீதிச் சோழனின் கதைகளை சொல்லிச் சொல்லியே ஓட்டு வாங்கிய தலைவர்கள் தங்கள் வாரிசுகளின் வாலாட்டல் குறித்து வாய் மூடிய மௌனச்சாமிகளாக மோனத்தவம் இருக்கிறார்கள். தானைத் தலைவர்கள் தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் கைமாறுகளில் இதுவும் ஒன்று என்று என மக்களும் எடுத்துக் கொண்டு விட்டார்கள். என்ன பெரிதாக நடந்துவிட்டது போல அரசாங்கம் அமைதியாக இருக்கிறது.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்பது பொல மதுரை கலவரங்களுக்கு தில்லியில் தீர்வு காணப்பட்டு விட்டது. குடுமப பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்ட விதத்தில் ஆளும் கட்சி ஆசுவாசம் அடைந்து விட்டிருக்கலாம். ஆனால் மக்கள் ஆசுவாசம் அடைந்து விட முடியாது. ஏனெனல் அவர்களது பாதுகாப்பு குண்டர்களின் கைகளில் இருக்கிறது. அந்த குண்டர்கள் அரச பாதுகாப்பில் இருக்கிறார்கள். இது சமூக ஆர்வலர்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
நாட்டில் உள்ள நல்லவர்களும் முஸ்லிம்களும் பெற்றுக்கொள்ள வேண்டிய சில முக்கியமான பாடங்கள் இருக்கின்றன. இஸ்லாம் அந்தப்பாடங்களை கற்றுத்தருகிறது.
குண்டர்களை மதிக்கக் கூடாது சட்டத்தை மீறீ நடக்கிற குண்டர்களை மதிக்கக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அவர்களுக்கு கட்டுப்படுவதையும், பொதுச் சபைகளில் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவதையும் இஸ்லாம் வன்மiயாக கண்டிக்கிறது. ஏன்? அத்தகையவர்களை புகழ்ந்து பேசுவது கூட பெருந்தவறு என்பது இஸ்லாமின் அறிவுரையாகும். வரம்பு மீறிச் செல்லும் ஒருவன் பகழப்படும் போது அல்லாஹ் கோபமடைகிறான். அவனது அர்ஷ் கிடுகிடுக்கிறது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் மிஷ்காத்)
நபிகள் நாயம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வார்த்தைகளில் தொனிக்கிற கடுமையை சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். சமயத்திலும் சமூகத்திலும் வரம்பு மீறிச் செல்பவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஆவர்களது ஆளுமைக்கு உடன்படுவது மாத்திரமல்ல அவர்களது பராக்கிரமங்களை புகழ்வதே கூட பாவம் என்பதை இந்த நபி மொழி புலப்படுத்துகிறது. குணடர்கள் சமயச்சாயம் பூசிக் கொண்டாலும் சரி சமூக ஆர்வலர்களாக தங்களை காட்டிக் கொண்டாலும் சரி அவர்களை ஒவ்வாமையோடு தான் சமதாயம் பார்க்க வேண்டும். பொதுச் சேவை செய்கிறார்கள் நமக்குச் சார்பாக பஞ்சாயத்து செய்கிறார்கள் என்ற காரணங்களுக்காக குண்டர்களுக்கு முக்கியத்துவம் தருவது சமுதயா நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும்.
குண்டர்களை மதிப்பது தனிமனிம மதிப்பீடுகளையும் பாதிக்கும். சுமதாயத்தின் பண்பாட்டு செழமையையும் பாதிக்கும். என்றைக்காவது ஒரு நாள் தங்களது ஆசை புறக்கிணிக்கப்படுகிற போது அவர்கள் இப்படித்தான் சமூக விரோதச் செயல்களை கட்டவிழ்த்து விடுவார்கள். அது தனிப்பட்டவர்களின் குடும்பத்தையும் நாட்டையும் சேர்ததே பாதிப்புக்கு உள்ளாக்கும். துரதிஷ்ட வசமாக இன்றைய உலகில் குண்டாயிசம் ஹீரோயிசம மாகிவிட்டது. அவர்கள் மதிக்கப்டுவதும் போற்ப்படுவதும் அரசயில் அதிகாரத்திற்கு உயர்த்தப்படுவதும் அன்றாட நடவடிக்கைகளாகிவிட்டன வளமடைந்து வருகிற இந்தியாவின் எதிர்காலத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கிளில் பிரதானமானது சமூகத்தில் குணடர்களின் ஆதிக்கம் பரவிவரவது தான் என்று ஆய்வாளர்களும் சமூக ஆர்வலர்களும் பயப்படுகிறார்கள்.
அரசியலில் அவர்களது பங்களிப்பு சட்த்தின் ஆட்சியை பள்ளிலிளிக்கச் செய்து கொண்டிருக்கிறத. தற்பொதைய இந்தியப் பாராளுமன்ற உறுப்பிளனர்களில் 16 சதவீதம் பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்று சோஷியல்வாட்ச்.ஆர்க் என்ற இணைய தளம் சொல்கிறது. பொறுப்புள்ள குடிமக்கள் குண்டர்களையும் குண்டாயிசத்தையும் முடிந்தசரை தடுக்க கடைமைப்படடுள்ளார்கள். குண்டாயிசத்திற்கு எதிராக பலத்தை பிரயோகிக் இயலுமென்றால் பலத்தை பிரயோகிக்க வேண்டும். அல்லது எழுத்தால் பேச்சால் எதிர்க்க வேண்டும் குறைந்த பட்சம் அஐத வெறுத்து ஒதுக்கவாவது செய்ய வேண்டும். இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த வழிமுறை.
முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள், இயக்கங்களின் பின்னணியில் குண்டாயிசத்தை தங்களது ஆயுதமமவும் பயன்படுத்திக் கொள்ளக் சுடாது. குண்டாயிசத்திற்கு ஆதராவாகவும் நடந்து கொள்ளக் கூடாது. அது சமூக விரோதம் என்பது மாத்திரமல்ல சமயத்திற்கும் விரோதமானது என்பது தான் இங்கு உணர்ந்து கொள்ள வேண்டிய பிரதான பாடமாகும்.தவறான பிள்ளைகளால் தொடரும் துயரம் ஒரு மனிதரின் அந்தஸ்தும் மரியாதையும், ஏன் மன அமைதியும் கூட அவரது நடவடிக்கைகளை மட்டுமே சார்ந்த விசயம் அல்ல அவரது சந்ததிககளின் நடவடிக்களையும் பொறுத்த விசயமாகும்.
ஓரு இறைநம்பிக்கையாளரின் பக்திகரமான வாழ்வு கூட அவரை மட்டுமே பொறுத்த விசயமல்ல. அவரது சந்ததிகளின் நடவடி;கைகளையும் பொறுத்த விசயமாகும். புல புகழ் பெற்ற மனிதர்கள் அவர்களது சந்ததிகளால் மிகுந்த மனசஞ்சலத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நம்மை சுற்றிக்கூட சற்றே பார்வையை சுழற்றினால் தந்தை பாடுபட்டுச் சேர்த்த செல்வத்தை ஊதாரித்தனமாக செலவழித்து குடும்பத்தை அலங்கோலப்படுத்திய பிள்ளைகள் பலர் நம் கண்களுக்கு தட்டுப்படுவார்கள். தந்தை உருவாக்கி வைத்த நிறுவனத்தை தரமற்றதாக்கிய பிள்ளைகள் பலரையும் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.
மானத்தோடும் மரியாதையோடும் வாழ்ந்து கொண்டிருந்த பெற்றோரை அவமமானச் சகதியில் தள்ளிவிட்ட வாரிசுகள் பலரையும் பற்றி வரலாறு உண்டு. காந்தி என்ற பெயருக்கு இந்த தேசத்தில் கிடைக்கிற மரியாதை எத்தகையது? ஆனால் அந்த பெருந்தகையின் புகழ் வாழ்விவில் கூட ஹரிலால் என்ற அவருடய குடிகார மகனால் கறைபடிந்தது உண்டு. இத்தகைய விபத்துக்கள் நிகழும் போது ஏன்தான் இப்படி ஒரு பிள்ளையை பெற்றோமே என்று ஆதங்க்பட்டு நிற்பது அறிவுடைமை ஆகாது. இத்ததகைய ஒரு நிலை நமது பிள்ளைகளின் வழியாக வந்து விடக் கூடாது என்று எச்சரிக்கையாக நடந்து கோள்வதும் அதற்கேற்ற வகையில் பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலத்துவதும பெற்றோரது கடமையாகும்.
முஸ்லிம் பெற்றோர்கள் இது விசயயத்தில் மிகுந்து கவனம் செலுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் மற்ற எல்லவற்றையும் விட ஒரு பெரிய ஆபத்தை பற்றி அவர்களை திருக்குர்ஆன் எச்சரிக்கிறது. ஒருவர் நல்லவராக இருந்து அவரது மக்கள் தவறானவர்களாக இருந்துவிட்டால் அது அவரது புழழ்வாழ்வை மட்டுமல்ல பக்தி வாழ்வை கூட பாதித்து விடும் என்று குர்ஆன் கூறுகிறது. நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு ஒரு ஞானப்பயணம் சென்ற வரலாற்றை பேசுகிற திருக்குர்ஆன் ஒரு நிகழ்வை பதிவு செய்திருக்கிறது.
”அவ்விரு நபிமார்களின் பயணப் பாதையில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு சிறுவனுக்கு அருகே சென்று சட்டென்று அவனை கொலை செய்துவிட்டார்கள். அதிர்ந்து போன மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்; என்ன காரியம் செய்து விட்டீர்? ஏதனால் இப்படிச் செய்தீர்? என்று விளக்கம் கேட்ட போது நபி கிள்ரு அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள். இந்தச் சிறுவனின் பெற்றோர்கள் இருவரும் பக்தி மிக்கவர்வர்கள். இவன் (வளர்ந்து) அவர்களை அக்கிரமம் செய்யுமாறும், அல்லாஹ்வை நிராகரிக்குமாறும் செய்துவிடுவான் என்று பயந்து அப்படிச் செய்தோம்.” (திருக்குர்ஆன் 18:80)
திருக்குர் ஆன் கூறும் கடந்த கால வரலாற்றுத்தகவல்கள் எதுவும் கதைக்காக மட்டுமே சொல்லப்படுவதில்லை. அதையும் தாண்டிய சில பரிய நோக்கங்கள் அந்தச் செய்திகளில் உண்டு. அந்த வரலாறுகளில் இருந்து வாழும் மனிதர்கள் எடுத்தக் கொள்ள வேண்டிய பாடங்களுக்காகவே அவை பேசப்பட்டுயள்ளன. இந்த வரலாற்றுச் செய்தியும் அப்படித்தான். தவறான பிள்ளைகள் காரணமாக பெற்றோர் அக்கிரமம் செய்கிற சூழ்நிலை ஏற்படலாம் என்ற செய்தியும் நல்ல பெற்றோர்கள் இறை நிராகரிப்பிற்கு செல்வதற்கு கூட அந்தப்பிள்ளைகள் காரணமாகக் கூடும் என்ற செய்தியும் இந்த வரலாறு கற்றுத்தருகிற அச்சம் தருகிற பாடங்களாகும்.
முஸ்லிம் பெற்றோர் அதிக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி இது. நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான வசதி வாய்;ப்புக்களை நாம் உருவாக்கி தந்திரக்கிறோம். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம். அவர்கள் மீது அலாதியான அன்பு கொண்டிருக்கிறோம் என்பது தவறானது அல்ல. ஆனால் நமது பாசம் தவறான செயல்களை செய்கிற துணிவை அவர்களுக்கு தந்துவிடக் கூடாது. அப்படி ஒரு துணிச்சலை அவர்கள் பெற்று விடுவார்களானால் அது பெற்றோர்களின் அர்ப்பணிப்புகளை அர்த்தமற்றதாக்கி விடுவது மாத்திரமல்ல அவர்களுக்கே ஆபத்தாக அமைந்து விடக் கூடும். நாம் எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பாராத விதத்தில் மனசஞ்சலம் அடைவதற்கும் அது காரணமாகிவிடும்.
பாசம் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு இலக்கணம் இருக்கிறது. வீட்லிருக்கிற பாத்திரத்தை உடைத்து விட்டால் அம்மா மன்னித்து விடுவார்கள் என்று நினைக்கிற குழந்தைகள், பக்கத்து வீட்டு கண்ணடியை உடைத்து விட்டால் அடித்து பின்னி விடுவார்கள். அடைக்கலமோ ஆதரவோ தரமாட்டார்கள் என்று பயப்பட வேண்டும். இந்த எண்ணம் பிள்ளைகளின் மனதில் உறுதிப்படும் வண்ணம் பாசம் இருக்க வேண்டும். இன்றை சூழ்நிலையில் முஸ்லிம் பெற்றொர்றோர்கள் இந்த அளவு கோலை போனுகிறார்களா என்பது இன்றைய பிரதான கேள்வியாகும்?
கல்விக் கூடங்களுக்கு வாகனத்தோடும் வசதியோடும் அந்தஸ்த்தாக அனுப்பிவைக்கப்படுகிற நம்முயை பிள்ளைகள் அறிவுத் தாகத்தோடும் மரியாதையோடும் நடந்து கொள்கிறார்களா என்பதில் பெரும்பாலும் முஸ்லிம் பெற்றோர்கள் கவனம் செலத்துவதில்லை. அதனால் பல கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம் மாணவர்கள் அடங்காத சக்திகளாக இருக்கிறார்கள். கல்வியின் தரத்தையும் நிறுவனங்களின் சிறப்பையும் சீர்குலைப்பவர்களாக இருக்கிறார்கள். அசிரியை கண்டித்தார் என்பதற்காக ஓரு ஏழாம் வகுப்பு முஸ்லிம் மாணவன் அவரின் கழுத்தை நெறிக்க முயற்சி செய்தான் என்ற அதிர்ச்சி தகவலும், ஒன்பதாவது படிக்கும் மற்றொரு மாணவன் வகுப்பில் விளையாடியதை கண்டித்ததற்காக ஆசிரியரின் இருசக்கர வாகனத்தின் பிளக்கை பிடுங்கி விட்டான் என்ற செய்தியும் முஸ்லிம் மஹல்லாக்களில் நடந்த சில நிகழ்வுகாளகும்.
பிள்ளைகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் வீட்டிற்கு வெளியே பையன் செய்கிற அக்கிரமங்கள் குறித்து கண்டு கொள்ளாத பெற்றோர்களின் தயவு தான் காரணம் என்பது புலப்படும். பெற்றோர்கள் எச்சரிக்கை அடைய வேண்டும். நமது செல்வங்களின் செயல்பாடுகள் நமது மரியாதையை மேம்படுத்தாவிட்டால் கூட பரவாயில்லை. நம்மையே குற்றவாளிகளாக்கி விடாமல் இருக்க வேண்டும் என்பதில் மிக கண்டிப்பான கவனம் செலுத்த வேண்டும். அது அவரது சமூக அக்கறை மட்டுமல்ல சமய அக்கறை சார்ந்த விசயமுமகும்.
பொறுப்பேற்பது பெற்றோர் கடமை தமது வாரிசுகள் பெரியவர்களான பிறகு நடந்து கொள்ளும் தீய செயல்களுக்காகவும் பெற்றோர்கள் பொறுப்பேற்க வெண்டும். அது தூன் சிறந்த பெற்றோரின் பொறுப்புணர்வாகும். அப்படிப் பொறுப்பேற்காதவர்கள் தங்கயளது கடமையிலிருந்து நழவுகிறார்கள் என்றே பொருள். அரசியல் அதிகார பீடங்களில் இருப்பவர்கள் தங்களது செல்வாக்கால் அந்த பொறுப்புணர்வை வேறு வகைகளில் மொழுகி வைக்கலாம். சாமணியர்களுக்கு அது சாத்தியமானதல்ல. குறிப்பாக முஸ்லிம்கள் அப்படித் தப்பித்தக் கொள்ள முடியாது. வளர்நத பிள்ளைகளின் செயலுக்கு அப்பாவிப் பெற்றோர்கள் எப்படி பொறுப்பெற் முடியும் என்று ஒரு கேள்வி வருவதற்கு நியாயமுண்டு. அதற்கான பதிலை இஸ்லாம் தெளிவு படுத்துகிறது. வளர்ந்த பிள்ளைகள் பெற்றோரின் தயவின் காரணத்தால் அல்லது பெற்றொரின் பாசப்பரிவின் காரணத்தால் அல்லது அதிகார பலத்தின் காரணத்தால் தவறு செய்தால் அதற்கு பெறறோரும் பொறுப்பெற்க வேண்டும்.
ஹஜ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் எகிப்தின் ஆளுநராக அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். ஒரு முறை எகிப்தில் ஒட்டகப் பந்தயம் நடந்தது. அதில் கவர்னர் அம்ரின் மகன் முஹம்மதுவும் கலந்து கொண்டார். அவரது ஒட்டகை முதலில் ஒடிக் கொண்டிருந்தது. திடீரென எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஒரு கிப்தி இன இளைஞன் அவரை முந்திச் சென்றான். அப்படி முந்திச் செல்லும் போது அவனது வாயிலிருந்து ஒரு ஆவேச வாக்கியம் வெளிப்பட்டது. அது முஹம்மதை கோபப்படுத்தி விட்டது. அவர் அந்த இளைஞனை நோக்கி இந்தா பிடி! நான் பிரமுகரின் மகனாக்கும்! (குத்ஹா! வ அன இப்னுல் முக்ரமீன்) என்று சொல்லி ஓங்கி ஒரு குத்து விட்டார். கவர்னரின் மகன் தன்னை தாக்கியிருப்தால் இங்கு முறையிட்டால் நீதி கிடைக்காது என்று கருதிய அந்த எகிப்திய இiளுஞன் நேரே மதீனாவுக்கு வந்து ஜனாதிபதி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முறையிட்டான்.
உடனடியாக உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆளுநர் அம்ரையும் அவரது மகனையும் தலைநகருக்கு வரும்படி உத்தரவிட்டார்கள். அவர்கள் வந்ததும், அரசாங்க மண்டபத்தில் வைத்து விசாரித்துவிட்டு எகிப்திய இளைஞனிள் கையில் சவுக்கை கொடுத்து உன்னை தாக்கிய முஹம்மதை அடி என்றார்கள். அவ்விளைஞன் அப்படியே செய்தான். அவன் அவரை அடித்து முடித்ததும் ஆளுநர் அம்ரை சுட்டிக்காட்டி இவரையும் அடி என்றார்கள். அந்த இளைஞன் அதிர்ந்து போனான். இவர் என்னை ஒன்றும் செய்ய வில்லையே என்று கூறினான். அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பேசிய வார்த்தைகள் வெறும் வார்தகைள் அல்ல பெரும் தத்துவங்களாகும். அதுவும் சாமாணிய தத்தவங்கள் அல்ல பெற்றோர்கள், குறிப்பாக அதிகார பொறுப்பில் இருக்கிற பெற்றோர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய தத்துவங்களாகும்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்; ”ஆளுநர் உன்னை நேரடியாக ஒன்றும் செய்யாதிருந்திருக்கலாம், ஆயினும் அவருடைய மகன் உன்னை அடிப்பதற்கு அவரது தந்தை ஆளுநர் என்ற எண்ணம்தான் காரணம். அத்தகைய எண்ணத்தை மகனுக்கு கெடுத்தததற்கு இவரையும் நீ அடிக்கலாம் என்றார்கள்.” (மாலரப இப்னுஹுஇல்லா பி ஸுல்தானி அபீஹி).
பெற்றொர்கள் கொடுத்த துணிச்சலால் அல்லது பெற்றோர்களபை; பற்றிய பயமின்மைனயால் தவறு நடக்கு மென்றால் அதில் பெற்றொருக்கும் பங்கு உண்டு. முஸ்லிம் பெற்றொர்கள் இந்த வழிகாட்டுதலை கடை பிடித்தால், இந்த வழிகாட்டுதல் தருகிற மனோ நிலைக்கு தங்களை பண்படுத்திக் கொள்வார்கள் என்றால் அவர்களது பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள். பெற்றோhரின் அந்தஸ்திற்கும் மரியாதைக்கும் மெருகேற்றுபவர்களாக திகழ்வார்கள். இல்லை எனில் உன்னைப் பெற்றதற்கு ஒரு அம்மிக் குலவியை பெற்றிருக்கலாமே என்று புலம்பும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். குறைந்த பட்சம் பத்ரிக்ககைள் தொலைக்காட்சிகள் மீதோ சூழ்நிலைகள் மீதோ பழியை திருப்பிப் போட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவார்கள்.
சமீபத்தில் முஸ்லிம்கள் கனிசமமாக வசிக்கும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு விசயம் சொன்னார். மிக வேதனையாக இருந்தது. அவரது பள்ளிக் கூடத்தில் 10 ம்வகுப்பு படிக்கும் ஒரு குறும்புக்கார மாணவன் கம்ப்யூட்டர் அறையிலிருந்த மின்சார கம்பிகளை சேதப்படுத்திவிட்டான். அவர் அவனை மிரட்டிய உனக்கு ஹால் டிக்கட் தரமாட்டேன் என்று கூறியுள்ளார். மறு நாள் அவன் வந்து மன்னிப்புக் கேட்பான் என்று எதிர்பார்ததுக் கொண்டிருந்த தலைமையாசிரிக்கு ஆதிர்ச்சி காத்திருந்தது. அவன் அவனது அம்மாவோடு தைரியமாக அவரது அறைக்குள் நுழைந்தான். அவனது தாய் கோபாவேசம் கொண்டு கத்தியிருக்கிறார்.
”நீ யார் என் மகனுக்கு ஹால் டிக்கட் தர முடியாது என்று சொல்வதற்கு? நான் மகளிர் அணித் தலைவியாக இருக்கிறேன். எனக்கு ஆட்சித்தலைவரை தெரியும். காவல் ஆணையாளரை தெரியும். கல்வி அதிகாரியை தெரியும். நான் நினைத்தால் நீ என் மகனை ஒரு நாள் முழவதும் சித்தரவதை செய்தாய் என்று புகார் செய்து இப்போதே கல்வி அதிகாரியை இங்கு வரவைக்க முடியும் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்திரக்கிறார்.”
தலைமையாசிரியர் சொன்னார்; ”அந்த பையனின் நாளைய எதிர்காலத்திற்கு இந்தப்பெண்தான் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு அவரை சமாதானப்படுத்தி ஹால் கொடுத்து விடுகிறேன்” என்று சொல்லியனுப்பினேன் என்று சொன்னார். பிள்ளைகளின் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் அவர்களை காப்பாற்றுகிற மனப்பபான்மை தாய்ப்பாசம் சார்ந்த விசயமல்ல. நீதியையும் நேர்iயையும் அலங்கோலப்படுத்தும் முயற்சியாகும். இதனால் பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோர்களும் அக்கிரமக்காரர்களாகி விடுகிறார்கள்.
துணிந்து அக்கிரமம் செய்கிற மனப்பான்மை அவ்விசுவாசத்தில் தான் பிறக்கிறது. எனவே தான் கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தச் சிறுவன் அவனது பெற்றோர்களை அக்கிரமத்திற்கும் இறை நிராகரிப்பிற்கும் கொண்டு செர்த்து விடுவான் என்று பயந்ததாக குறிப்பிடுகிறார்கள். கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அந்த அச்சம் சரியானது தான் என்பதை நம்மை சற்றி நடக்கிற நிகழ்வுகள் நிதர்சனமாக புரிய வைக்கிகற போது எங்கோ விழுந்த சாட்யைடியை தன் மீது விழுந்துது போல கருதிக் கொள்வது நபித்தோழர்களின் மனோ நிலைக்கு நம்மை உயர்த்தும். நமது பிள்ளைகள் குண்டர்களாகி நாம் குற்றவாளிகளாக மாறமால் இருக்க அது உதவும்.