Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அரபு நாடுகளை சுழன்று அடிக்கும் மக்கள் சூராவளி!

Posted on February 22, 2011 by admin

எம்.ஏ.முஹம்மது அலீ

(கட்டுரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது)

வரலாற்றின் பழம்பெரும் நாகரிகம் படைத்த எகிப்தில் உருவான மக்கள் சூராவளி தற்சமயம் அரபு நாட்டில் நிலை கொண்டுள்ளது. இச்சூராவளி தனது நோக்கத்தை அடையாமல் ஓயாது என்றே தெரிகிறது. துனிசியா, எகிப்தைத் தொடர்ந்து லிபியா, ஏமன், பஹ்ரைன், அல்ஜீரியா… என்று ஒவ்வொரு நாட்டையும் துடைத்தெறியாமல் செல்லாது என்றும் தெரிகிறது. இறுதியாக சவூதி அரேபியாவின் மன்னராட்சியைப் பதம் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்ஷா அல்லாஹ், அரபுநாடுகளை ஒரு கலக்கு கலக்கிவிட்டு உலகின் மற்ற பகுதிகளிலுள்ள; மக்களுக்கு எதிரான ஆட்சிகளையும் கூட புரட்டிப்போடாமல் போகாது என்று கூட நம்பலாம். இதோ; இதன் எதிரொலியாக சைனாவில் ”மல்லிகைப் புரட்சி” ஆரம்பமாகிக் கொண்டிருப்பதாகவும் அதைத்தடுக்க அரசு ராணுவத்திற்கு கட்டளையிட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

ஃப்ரெஞ்சுப் புரட்சியைவிட மிகப்பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தலாம். காரணம் இந்த சூராவளி கிளம்பியது பழமையான நாகரிகத்தின் பிறப்பிடமான எகிப்திலிருந்து என்பதால் அவ்வாறு எண்ணத்தோன்றுகிறது.

முழுக்க முழுக்க மேற்கத்திய நாகரிகத்தை தங்களின் தனிப்பட்ட வாழ்வில் பின்பற்றி மக்களை ஏமாற்றுவதற்காக முஸ்லிம் பெயர்தாங்கிகளாகத் திகழ்ந்த இந்த அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டு மக்களாட்சிக்கு வழிவகுத்து ஒதுங்கிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள், இன்னும் உணரவில்லையானால் அதே மக்களால் தங்கள் நாட்டை விட்டே ஓட ஓட விரட்டப்படுவார்கள் என்பது திண்ணம்.

பூமியில் இருந்து இறைவன் அளித்த எண்ணெய் அருட்கொடைகளை தங்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்குமாக பங்கிட்டுக்கொண்டு மிச்சத்தை மட்டும் நாட்டுமக்கள் நலத்துக்கு பயன்படுத்தி வந்த இந்த ஆட்சியாளர்களின் கொட்டம் அடங்கப்போகும் நாள் ஆரம்பமாகிவிட்டது என்றே தோன்றுகிறது.

மறுமை சிந்தனை மறந்து உலக வாழ்வின் உல்லாசத்தில் மிதந்த இந்த ஆட்சியாளர்களுக்கு இப்பொழுதாவது தங்களையும் ஆட்சி செய்யக்கூடிய ஒருவன் இருக்கின்றான் அல்லாஹ் என்கின்ற பெயரில், எனும் நினைவு வந்திருக்க வேண்டும்!

இந்த சர்வாதிகாரிகள் ஒவ்வொருவரும் அட்டைப்போல் ஆட்சியில் ஒட்டியிருந்த காலத்தை பார்க்கும்போது சராசரியாக 30 அல்லது 40 ஆண்டுகள். எத்தனை லட்சக்கணக்கான கோடிகளை சுருட்டியிருப்பார்கள்?! அத்தனையும் அந்தந்த நாட்டு மக்களுக்குப் போய்ச்சேரவேண்டிய செல்வமல்லவா?

எகிப்தின் முன்னால் சர்வாதிகார அதிபர் ஹோஸ்னி முபாரக் ஸ்விஸ் பேங்கில் போட்டிருந்த பணமே 40,000 கோடி டாலர் – அதாவது சுமார் 20 லட்சம் கோடி (ஸ்பெக்ட்ரம் ஊழலோடு ஒப்பிடப்படும்போது (1,76,000 கோடி) அதைவிட இத்தொகை 12 மடங்கு அதிகம். இவ்வளவு இமாலயத்தொகையை இந்த சர்வாதிகாரி கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி ஸ்விஸ் பேங்கில் போட்டு வைத்து என்ன செய்யப்போகிறார்….? (தற்போது இந்த தொகை முடக்கப்பட்டுள்ளது வேறு விஷயம்)

இந்த ஒரு ஆட்சியாளரே இவ்வளவு சுரண்டியிருக்கிறார் எனும்போது மற்ற மற்ற ஆட்சியாளர்கள் விழுங்கியிருக்கும் பணத்துக்கு கணக்கு அவர்களைப்படைத்த அந்த ஏக இறைவனைத்தவிற வேறு எவரால் கண்டுபிடிக்க முடியும்?

அத்தனையும் பொது மக்களுக்கு பயன்பட வேண்டிய செல்வமல்லவா? எவ்வளவு பஞ்சம் பட்டினி உலகெங்கும் தலை விரித்தாடுகிறது? குறைந்தபட்சம் இதனை, தன் சொந்த நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக இவர்கள் பயன்படுத்தியிருந்தால் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை எவ்வளவு சிறந்தோங்கிருக்கும்.

இங்குதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ”ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது…..”

(அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு).

இதுபோன்ற ஆட்சியாளர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே தனது வேதத்தில் இறைவன் பாடம் கற்பித்துள்ளான். ஆனால் உண்மையான ஏழைகளான இந்த ஆட்சியாளர்கள் தங்களை பணக்காரனாக எண்ணிக்கொண்டு அந்த உண்மையான பணக்காரனாகிய அல்லாஹ்வை மறந்து வாழ்ந்தது தவறு என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்.

இதோ உலக மக்களுக்கு அந்த ஏக இறைவன் விடுக்கும் செய்தி:

”(நபியே!) நீர் கூறுவீராக: ”அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;. இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்;. நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;. நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;. நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” (3:26)

”(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.” (3:27)

”முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.” (3:28)

ஃபலஸ்தீனில் மக்கள் படும் தொல்லைகளைக்கண்டு உலகமே கண்ணீர் சிந்தும்போது அண்டைநாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் சுகத்துக்காக கோடி கோடியாய் மக்கள் பணத்தை விழுங்கும் கொடுமை வேறெங்கிலும் உண்டா? என கேட்கத் தோன்றுகிறது. இப்பொழுதுதான் தெரிகிறது; ஏன் ஒரு குட்டி நாடான இஸ்ராயிலிடம் அத்தனை அரபு நாடுகளும் தோற்றுக்கொண்டே இருக்கின்றனர் என்று!

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 59 = 61

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb