Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எகிப்தின் இஃவானுல் முஸ்லிமீன் – ஒரு வரலாற்று பார்வை

Posted on February 20, 2011 by admin
எகிப்தின் இஃவானுல் முஸ்லிமீன் – இமாம் ஹஸனுல் பன்னாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி – ஒரு வரலாற்று பார்வை

எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற லட்சிய இயக்கத்தை தோற்றுவித்த இமாம் ஹஸனுல் பன்னாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், 12 பிப்ரவரி 1949, சனிக்கிழமை இரவு 8.00, அன்று ஷஹீதாக்கப்பட்டு தற்போது 63-வது வருடம் நிறைவுறுகிறது.

எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் இஃவான்களின் பங்கு முக்கியத்துவமானதாகும்.

நபியவர்கள் கூறினார்கள்; அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர் நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்” (அபூதாவூத்)

புனர் நிர்மாணம் என்றால் என்ன? என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் விளக்கம் தருகின்ற போது, ”மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதனங்கள் அகற்றப்படுதல், மார்ர்க்கத்தில் மறக்கப்பட்ட அல்லது இல்லாது செய்யப்பட்டவற்றை மீண்டும் கொண்டு வருதல்” போன்ற விளக்கங்களை அளித்துள்ளனர். (ஃபத்ஹுல் பாரி).

அது போன்றே நவீன கால அறிஞர்கள் இதற்கு விளக்கம் அளிக்கின்ற போது, ”மார்க்கத்தை குறித்து காலத்தின் பண்புகளுக்கு ஏற்ப விளங்கி நடைமுறைப்படுத்தல்” என்றனர்.

இப்பொழுது புனர்நிர்மாணம் ஒன்று அவசியப்படுகிறது. அதன் இலக்கு என்ன?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அதே இலக்குதான் அதனுடைய இலக்காகவும் இருக்கும். அதிகாரத்துடன் தலைமையை வழங்க இங்கும் ஒரு கிலாபத் அவசியப்படுகிறது. 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அதே இலக்குடன் அதே வழிமுறையுடன்; காலத்திற்குரிய இயல்புடனும் பாஷையுடனும் ஒரு புனர்நிர்மாணப் பணி ஆரம்பிக்கின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது முதல் பணியை ஆரம்பித்தபோது, எவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் அதுவும் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் ஆரம்பித்தார்களோ அதேபோன்று, சில மனிதர்களுடன் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் அந்தப்புனர் நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது. அதுதான் இன்று பரந்து விரிந்து உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கமாகும்.

இந்த இயக்கம் ஸுஹைபுர்ரூமி போன்ற பிலால் போன்ற சமூக அந்தஸ்தற்ற ஆறு நபர்களுடன்தான் ஆரம்பித்திருக்கிறது. இமாம் ஹஸனுல் பன்னாவின் உரைகளினால் கவரப்பெற்ற இவர்கள் இமாமவர்களின் வீட்டுக்கு வந்து ”நீங்கள் குறிப்பிடுவதுப் போன்று பலப் பிரச்சனைகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீர என்ன வழி? நாங்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் என்னச் செய்வது என்பதுதான் தெரியாமல் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு வழிக்காட்டுகிறீர்களா?” என்றுக் கேட்டார்கள். அவர்களது உணர்வுகளால் கவரப்பட்ட இமாமவர்கள் அவர்களுக்கு வழிக்காட்டும் பணியை ஆரம்பித்தார்கள். அன்றே அவர்கள் தமக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் ”அல் இஃவானுல் முஸ்லிமீன் என்பது.

இந்த நிகழ்வு 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுகள் நடந்து முடிந்து 79 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று சுமார் 90 நாடுகளில் இந்த தாஃவக் காணப்படுகிறது. இன்னும் 21 வருடங்களில் 2028 ஆகின்றபோது இந்த புனர்நிர்மாணப் பணி அதன் உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். அதாவது முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுகின்ற, அதற்குத் தலைமையை வழங்குகின்ற இடத்திற்கு இஸ்லாம் வந்து சேர்ந்திருக்கும்.

இன்னும் 21 வருடங்களில் இது சாத்தியப்படுமா? இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சாத்தியப்படப் போகிறது. அல்லாஹ்த்தாஅலா அல்குர் ஆனில் கூறுவதைக் கேளுங்கள்: “அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.” (அல்குர் ஆன் 2:261)

இஸ்லாமிய தாஃவா என்பது, அதனது ஒரு முயற்சி எழு நூறு மடங்கு பரகத் பொருந்தியது. எழு நூறு மடங்கு விளைவைத் தரக்கூடியது. இதுதான் மேற்கூறிய வசனத்தின் பொருள். சுமார் 90 நாடுகளில் பரவியுள்ள இந்த தஃவாவின் மொத்த அங்கத்தவர்களை எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தால் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் இந்த தாவாவுக்காக செலவுச் செய்யும் நாணயங்களை எழு நூறு மடங்கால் அதிகரித்துப் பார்த்தால் எவ்வளவு தொகை காணப்படப்போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை.

எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை. எனவே இன்னும் இருபத்தியொரு வருடங்களில் 2028ம் ஆண்டில் உலகிற்கு வழிகாட்டும் சக்தியாக, தலைமையை வழங்கும் சக்தியாக இஸ்லாம் தான் இருக்கப்போகிறது. அதற்கான பணி பலமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அன்றைய நாள் அந்த அதிசயத்தை கண்களால் காணும் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கும் தரவேண்டும் என பிரார்த்திப்போம்.

இஸ்லாத்திற்காக தங்களையே அர்ப்பணித்த இஃவான்கள்

அல்லாஹ் எமது இறைவன், முஹம்மது எமது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், திருக்குர்ஆன் எமது சாசனம், போராட்டம் எமது பாதை, வீரமரணம் எமது வேட்கை எனும் முழக்கத்துடன் இறையாட்சிக்கு பாடுபட்ட ஹஸன் அல் பன்னாவை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஷஹீதாக்கினார்கள்.

”ஏன் புத்தகங்களை எழுதுவதில்லை?” என்று ஒரு தடவை ஷஹீத் ஹஸனுல் பன்னாஹ்விடம் கேட்ட போது அவர் சொன்னார் “நான் மனிதர்களை எழுதுகிறேன்.” என்றார். ஆம் அவர் எழுதிய மனிதர்கள் ஏகாதிபத்தியங்கள் நடுங்கும் புத்தகங்களை எழுதியது மாத்திரமல்ல, மீண்டும் இவ்வுலகில் சத்திய ஸஹாபாக்களை நினைவுபடுத்தும் அளவு இஸ்லாத்திற்காக எதையும் தியாகம் செய்யவும் துணிந்தார்கள்.

நாசர் தன் ஆட்சி காலத்தில் 1954 ல் ஒட்டு மொத்த இஃவான்களையும் கூண்டோடு சிறை பிடித்தார். சிறைச்சாலைகளில் கொடுமையோடு தேர்ச்சி பெற்ற வேட்டை நாய்களை விட்டு கடிக்க வைப்பார்கள். பல தடவை அவர்களின் தோல் புயங்கள், கால் உடைக்கப்பட்டு உள்ளங்கை கிழிக்கப்பட்டு குற்றுயிராக கிடப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் தான் சையது குதுபை விடுவித்து கல்வி அமைச்சர் பதவி தருகிறோம், அதை மறுத்து விட்டு சொன்னார்கள் “என்னை இஸ்லாத்தின் எதிரிகள் என்ன செய்து விட முடியும். தனிமை சிறையில் அடைத்தால் அது இறைவனுடான உரையாடல், தூக்கிலிட்டால் அது ஷஹாதத், நாடு கடத்தினால் அது ஹிஜ்ரத்” என்று முழங்கினார்கள்.

தலைமை நீதிபதியாக இருந்த அப்துல் காதர் அவ்தா இஸ்லாத்துக்கு முரணான மனித சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்குவதை தன் பதவியை ராஜினாமா செய்தார்கள். பெண் என்றும் பாராமல் ஜைனப் கஜ்ஜாலி சிறையில் சித்ரவதை செய்யப்பட்டார்கள்.

அத்துணை கொடுமைகளையும் சகித்து கொண்டு சிறையிலிருந்து தான் உலக புகழ் பெற்ற திருக்குர்ஆன் விளக்கவுரையான பீ லீலாலில் குர்ஆன் (திருக்குர்ஆனின் நிழலிலே) புத்தகத்தை ஸைய்யது குதுப் எழுதினார்கள். ஜைனப் கஜ்ஜாலியின் “என் வாழ்வின் மறவா நினைவுகளும்” உலகையையே உலுக்கிய குதுபின் “மைல் கற்கள்” உள்ளிட்ட புத்தகங்கள் வெளியாயின.

உஸ்தாத் செய்யித் குதுப், யூஸுஃப் ஹவ்வாஷ், அப்துல் ஃபத்தாஹ் இஸ்மாயில் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த போது இஸ்மாயில் உரத்த குரலில் நீதிமன்றத்தில் முழங்கினார்கள் “கஃபாவின் ரட்சகன் மீது ஆணையாக நான் வெற்றியடைந்து விட்டேன்”. இவை அனைத்தும் “அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டார்கள் என்பதற்காக தவிர வேறு எதற்காகவும் பழிவாங்கவில்லை.” என்று இறைவன் சூரத்துல் புரூஜில் குறிப்பிடும் படியே நடந்தது.

நன்றி: மீள்ப்பார்வை

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb