Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

Posted on February 18, 2011 by admin

”பொம்பள சிரிச்சாப் போச்சு…” என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது?

ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.

ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது இச்சையைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான்.

எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பழமொழி தெரிவிக்கின்றது. 

ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.

இஸ்லாமிய மார்க்கம் இதைத் தான் வலியுறுத்திக் கூறுகின்றது. பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன் 33:32)

அதுவும் அல்லாஹ் யாரை நோக்கிக் கூறுகின்றான்? சதாவும் வஹீயின் பாதுகாப்பில் இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரை நோக்கிக் கூறுகின்றான் எனும் போது மற்றவர்களின் நிலைமை எம்மாத்திரம்?

அல்லாஹ் பெண்களை வியாபாரம், தொழில், கல்வி, குடும்ப விவகாரங்கள் தொடர்பாக வெளியே செல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரங்களில் வரைகளையும், வரம்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் இந்த வரம்புகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

தொடரும் அவலங்கள்

பெண்கள் இன்று வெளியே ஆட்டோ, கார், பஸ் ஆகியவற்றில் பயணம் செய்கின்றனர். இவற்றிற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் ஆட்டோ, கார், பஸ் டிரைவர்கள் கண்டக்டர்களிடம் அநாவசியமான பேச்சுக்கள்.

மளிகை, துணி, காய்கறி கடைகளில் சென்று பொருட்கள் வாங்குவதற்கு மார்க்கம் தடை விதிக்கவில்லை. ஆனால் அந்தக் கடைகளில் அதிலும் குறிப்பாக ஏ.சி. போடப்பட்ட நகைக் கடைகளில் ஒய்யாரமாக, உல்லாசமாக உட்கார்ந்து ஊர்பட்ட கதைகளைப் பேசிக் கொண்டிருப்பது.

மேற்கண்ட வியாபாரிகள் வீடுகளுக்கு வருகின்றனர். இதல்லாமல் கணவனின் நண்பர்கள் என்று பலர் வருகின்றனர். இத்தகையோரிடம் கட்டுப்பாடற்ற முறையில் பேச்சுக்கள் நீள்கின்றன.

தொலைபேசியில் தொடரும் பேச்சுக்கள்

இன்று தொலைபேசி முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாகும். தொழில், வியாபாரம், குடும்பம், மருத்துவம் இன்னும் எண்ணிலடங்கா துறைகள் ரீதியிலான இதன் பயன்பாடுகளை நாம் பட்டியஆட முடியாது. இன்று வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களின் ஒரேயொரு ஆறுதல் தொலைபேசியில் தங்கள் துணைவியருடன் உரையாடுதல் தான். ஒரு தடவை மனைவியுடன் போனில் பேசி விட்டால் ஏதோ தாயகம் சென்று திரும்பிய ஒரு திருப்தி கிடைக்கின்றது.

இப்படிப்பட்ட இந்தத் தொலைபேசி, முன் பின் தெரியாத பலருடன் பல கட்டங்களில் நீண்ட நேரம் பேசுவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது. வட்டிக் கடைக்காரர்கள், வீடியோ கேஸட் விநியோகிஸ்தர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போன்றவர்களிடம் பேசுவதற்காக இந்தத் தொலைபேசிகள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகின்றன.

பாட்டு கேட்டு ஃபோன் செய்தல்

டிவிக்கள் அதிலும் கலர் டிவிக்கள் ஒவ்வொரு வீட்டிலும் சீரழிய ஆரம்பித்த பின் மார்க்கோனி கண்டுபிடித்த ரேடியோவுக்கு மவுசு இல்லாமல் போனது. நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகள். தமிழகத்தில் உள்ள மக்களை நரகப் படுகுழியில் கொண்டு போய் தள்ளுவதற்காக சன் நெட்வொர்க் நிறுவனத்தார் சன் டிவி, கேடிவி என்று எக்கச்சக்க சேனல்கள் ஆரம்பித்தது போதாது என்று சுமங்கஆ போன்ற கேபிள் டிவிக்களையும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பார்த்துக் கெட்டுப் போங்கள்! பார்த்துக் கெட முடியாத இடங்களில் கேட்டுக் கொண்டே கெட்டுப் போங்கள் என்று சூரியன் எஃப்.எம். போல் பலர் ஆரம்பித்துள்ளனர்.

உங்களை நாங்கள் கெடுக்காமல் சும்மா விட மாட்டோம் என்று இந்த எஃப்.எம். அலைவரிசைகள் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன.

இப்போது இரண்டு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களும் ஒரு ரேடியோவை கட்டிக் கொண்டு பாட்டைக் கேட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்கின்றனர்.

இந்த எஃப்.எம். ரேடியோக்கள் கையாளும் புது முறை, கலாச்சாரத்தை மேலும் சீரழிக்கத் துவங்கியுள்ளது. வீட்டுப் பெண்களிடம் போன் செய்து உங்களுக்குப் பிடித்த பாட்டு என்ன? என்று கேட்கின்றனர். அதற்கு பாத்திமா பீவியும், பரக்கத் நிஸாவும் எங்களுக்கு இன்ன பாட்டு வேண்டும் என்று கேட்கின்றனர். இந்தப் பாட்டை விரும்புவதற்குக் காரணம்? என்று கேட்கும் போது, நாங்கள் திருமணம் முடித்ததும் முதன் முதஆல் பார்த்த படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது என்று பதில்.

அடுத்து நிலைய அறிவிப்பாளர், உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? என்று கேட்கிறார். உடனே இந்தப் பெண், விஜய் என்றோ அஜீத் என்றோ தங்களுக்குப் பிடித்த நடிகரைக் கூறுகின்றார்கள். டிவியிலும் இது போன்ற கேள்விக்குப் பதில் சொல்லும் பெண்களுக்கு அருகில் கணவனும் வெட்கம் கெட்டுப் போய் நிற்கின்றான்.

இது மாதிரி சொல்லும் போது இப்படிப்பட்டவளை இழுத்துப் பிடித்து சாத்தாமல் எருமை மாடு போல் அட்டியின்றி ஆத்திரமின்றி அப்படியே அசையாமல் நிற்கின்றான். ஒரு பெண்ணின் உள்ளம் அனைத்தும் தான் கொண்ட கணவனுக்கே சொந்தம் என்ற நிலை மாறி அடுத்தவனுக்கும் அங்கு இடமிருக்கின்றது என்றாகி விடுகின்றது. அதாவது தனது கணவனை விட அஜீத் தான் தனக்குப் பிரியம் என்ற படுமோசமான நிலைக்கு இவள் போகின்றாள் என்பதை அவளுடைய வார்த்தையே எடுத்துக் காட்டுகின்றது.

பெண்களைப் பற்றி இங்கு எழுதுவதால் ஆண்கள் ரொம்ப சுத்தம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. அடுத்து அப்படியே மைக்கைத் திருப்பி கணவனிடம், உங்களுக்குப் பிடித்த நடிகை யார்? என்று கேட்கிறார்கள். இந்த ஆடவனும் வெட்கமில்லாமல் ஏதேனும் ஒரு விபச்சாரியின் பெயரைக் கூறுகின்றான். டி.வி. அறிவிப்பாளர்களைப் பொறுத்தவரை குடும்பக் கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைப்பது என்ற தீர்மானத்தோடு தான் வருகின்றார்கள். அதனால் தான் ஆணிடத்தில் கேட்கும் போது, பிடித்த நடிகை யார்? என்று கேட்பதும் பெண்ணிடத்தில், பிடித்த நடிகன் யார்? என்று கேட்பதும் இவர்களது வாடிக்கையாக உள்ளது.

இப்போது விஷயத்திற்கு வருவோம். எஃப்.எம். ரேடியோ வந்த பிறகு அனைத்துப் பேருந்துகளிலும், டீக்கடைகளிலும் இந்தக் குரல் தான் ஓங்கி ஒலிக்கின்றது.

இந்தப் பெண்மணி வீட்டிஆருந்து பேசுகின்ற இந்தப் பேச்சைக் கேட்டு பேருந்தில் பயணம் செய்யும் முஸ்லிம்கள் வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கின்றது. இதில் இந்தப் பெண் தான் வசிக்கின்ற முகவரி, தன் கணவர் பார்க்கும் வேலை, தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டை உட்பட எதையும் விடாது சொல்லித் தொலைக்கின்றாள்.

இதில் நிலைய அறிவிப்பாளரிடம் பேசும் போது கொஞ்சுகின்ற கொஞ்சல், சிணுங்குகின்ற சிணுங்கல், குழைகின்ற குழைவு இத்தனையும் கேட்கும் போது உண்மையில் நம்மால் பேருந்தில் இருக்க முடியவில்லை. கணவனிடம் காட்ட வேண்டிய கொஞ்சலையும் குழைவையும் யாரோ ஒரு நிலைய அறிவிப்பாளரிடம் காட்டுவது மட்டுமல்லாமல் அதைப் பகிரங்கமாக, பலர் கேட்கும் அளவுக்குக் காட்டுகின்றார்கள்.

இதில் பெயர், முகவரியை வேறு தெளிவாக அதிலேயே அறிவித்து விடுகின்றார்கள். இதைக் கேட்பவர்களில் அல்லாஹ் கூறுவது போல் உள்ளத்தில் நோயுள்ளவர்கள், சபல புத்தியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? சந்தர்ப்பம் கிடைக்காதா என்று சதி வலை பின்ன மாட்டார்களா?

ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டில் உள்ளவர்களுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 893)

இத்தகைய பெண்கள் மறுமையில்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவது போல் இத்தகைய பெண்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 24:24,25)

இந்த வசனத்தின் படி மறுமையில் இவர்களது நாவுகளே அல்லாஹ்விடம் பேசும். அப்போது அல்லாஹ்விடமிருந்து தப்ப முடியாது. எனவே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று இத்தகைய பெண்களுக்கு நாம் அறிவுரை கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

source: http://safwanlanka.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

38 − 34 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb