[ ஒரு ஆடம்பரத் திருமணம் பத்து குமர்களின் இயல்பான திருமணத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறது. மறைமுக பாலியல் ஒத்திவைப்பு இயற்கைக்கு முரணானது.
அமுக்கமாக, அடக்கமாக, சாமர்த்தியமாக, சந்தர்ப்பவாதமாக தவறு நடக்கும். தடுக்கும் சக்தியை சமூகம் இழக்கும்.
21 வயதில் ஆண்களுக்கும், 19 வயதிற்குள் பெண்களுக்கும் உடன் திருமணம் நடைபெற வேண்டும். பால் உறவுகள் இதன்மூலம் மதிக்கப்பட வேண்டும்.
ஆண்களின் வருமானம், பாலியல் கற்பு நம்பகத்தன்மை விழுந்து கொண்டிருக்கிறது. பெண்கள் வெளி உலகில் கால்பதிக்கின்றனர். காலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை மகளிர் நடமாட்டம் சங்கோஜமின்றி இயல்பாக உணரப்படுகிறது.
ஆண் – பெண் நேரடிப்பார்வை, கலந்துரையாடல், பணி நேர நெருக்கம், குறைந்த இறுக்கமான ஆடை சலனத்தை மனதில் ஏற்படுத்தவே செய்யும். சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கும் மனம் பாவச் செயலில் கனவு காண்கிறது.]
தொழில் நகரங்களில் விபச்சாரம் பெருகுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபச்சாரத்தின் தன்மைகள் பல வடிவங்களாகி வெகு இயல்பாக கருதுமளவுக்கு நடைமுறையாகி வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
நகரமயம், நாகரீகம் ஏராளமான செயற்கைக் கட்டுப்பாடுகளை விதித்ததால் இயற்கை நுகர்வு வீணடிக்கப்படுகிறது. 25 ஆண்டுகள் படிப்பு ஆண்களுக்கு வாழ்வியல், இல்லற இன்பத்தை தடுக்கவல்லது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய படிப்பு பாதி வாழ்நாளை வீணடிக்கிறது. சாகும்வரை கல்வி ஞானம் நிலை மாறி பட்டம் படிக்க ஆர்வம் திருமண வயதைத் தள்ளிப்போடுகிறது.
ஆண்களின் வருமானம், பாலியல் கற்பு நம்பகத்தன்மை விழுந்து கொண்டிருக்கிறது. பெண்கள் வெளி உலகில் கால்பதிக்கின்றனர். காலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை மகளிர் நடமாட்டம் சங்கோஜமின்றி இயல்பாக உணரப்படுகிறது.
ஆண் – பெண் நேரடிப்பார்வை, கலந்துரையாடல், பணி நேர நெருக்கம், குறைந்த இறுக்கமான ஆடை சலனத்தை மனதில் ஏற்படுத்தவே செய்யும். சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கும் மனம் பாவச் செயலில் கனவு காண்கிறது.
சினிமா, ஆடல் பாடல், தொலைக்காட்சி நடனப்போட்டிகள் விரசத்தைத் தூண்டுகின்றன. பணக்கார ஆடம்பரத் திருமணங்கள் ஏழை, நடுத்தரவர்க்க குடும்பங்களில் நடைபெறும் திருமணச்செலவை பன்மடங்கு அதிகரிக்கச் செய்கின்றன.
ஒரு ஆடம்பரத் திருமணம் பத்து குமர்களின் இயல்பான திருமணத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறது. மறைமுக பாலியல் ஒத்திவைப்பு இயற்கைக்கு முரணானது. அமுக்கமாக, அடக்கமாக, சாமர்த்தியமாக, சந்தர்ப்பவாதமாக தவறு நடக்கும். தடுக்கும் சக்தியை சமூகம் இழக்கும்.
இன்றைய நாட்களில் விபச்சாரத்தை வரையறுப்பது கடினம். கண்டுபிடிப்பது சிரமம். ஆண் – பெண் சந்திப்புகள் அதிகரித்துவிட்டன. சின்னத்திரைகள் இரட்டைவசன ஆபாசங்கள் நடுவீட்டில் நுழைந்து விபச்சாரத்துக்கு சாமரம் வீசுகின்றன.
கண் விபச்சாரம், கால் விபச்சாரம், ஆடை விபச்சாரம், வீட்டு விபச்சாரம், கல்விக்கூட விபச்சாரம், மத வளாக விபச்சாரம், திரைப்படத்துறை விபச்சாரம், பயணி விபச்சாரம், மருத்துவமணை விபச்சாரம், அரசியல் இடைத்தரக விபச்சாரம் தொழில் ரீதியான விபச்சாரத்தை போட்டிக்கு அழைக்கிறது.
சிற்றுண்டி சாலை, பேருந்து நிலையம், பூங்காவில் மணிக்கணக்கில் இளம்பெண் நெருக்கமாக உரையாடும் காட்சி பரிதாபத்திற்குரியது. விபச்சாரம் சகல ஆற்றலுடன் அனைவரையும் சுவீகரிக்கிறது
தடுக்க, கண்டிக்க, குறைக்க, அப்புறப்படுத்த ஒருவருக்கும் துணிச்சலில்லை.
சளி, மலம், சிறுநீர், உடல் இயக்கத்திற்குரியவை. பாலியல் உறுப்பகளின் இயக்கமும் அவ்வாறே இறைவனால் படைக்கப்பட்டது. மீற முயலக்கூடாது. படுதோல்வி ஏற்படும். அதைத்தான் சமூகம் அடைந்து கொண்டிருக்கிறது.
21 வயதில் ஆண்களுக்கும், 19 வயதிற்குள் பெண்களுக்கும் உடன் திருமணம் நடைபெற வேண்டும். பால் உறவுகள் இதன்மூலம் மதிக்கப்பட வேண்டும். அருவெறுக்கக்கூடாது.
வயதைக் காரணம் காட்டி, படிப்பைக் காட்டி, குடும்பச் சூழலை குறைகூறி திருமண வைபவங்களை தள்ளிப் போடுகின்றனர். ஆண் துணையின்றி பெண், பெண் துணையின்றி ஆண் தனித்து வாழ சமூகத்தில் இடமளிக்கக்கூடாது. பலதார மனம் சிலருக்கு அவசியத் தேவை. மன உளைச்சலுக்கு இடமளித்தால் மிருகம் வெளிப்படும்.
சினிமாவும், சின்னத்திரையும் திட்டமிட்டு பாலியல் உணர்வை திணிக்கிறது. சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் மவுனம் காக்கின்றனர். 10 லட்சம் ரூபாய் திருமணச் செலவை அங்கீகரிக்கும் சமுதாயம் புனிதக் கூறுகளை ஒருக்காலும் பெற முடியாது. கண், காது, இறுக மூடுவதால் பிரச்சனை தீராது.
நன்றி: தரமணியார், முஸ்லிம் முரசு, ஜனவரி 2011