பாசம் என்ற சொல்லை உச்சரிக்கும்போதே எல்லோருடைய கண்ணிலும் நிழலாடுவது தாயின் முகமாகத்தான் இருக்கும். இன்னும் ஒருபடி மேலே கூறுவதென்றால் பாசம் என்கின்ற சொல்லுக்கு அர்த்தமே பெண் என்றுகூடச் சொல்லலாம். ஏனெனில் பாசத்தைப்பொழிவதில் பெண்ணினம் வஞ்சனையே செய்வதில்லை, அது பெற்ற குழந்தையாக இருக்கட்டும், சகோதரனாக இருக்கட்டும் அல்லது கணவனாக இருக்கட்டும்.
கணவன் மனைவி என்று எடுதுக்கொண்டால், இன்றைய கணவன்-மனைவியரில் பலரது பிரச்சினையே, ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். எதையும் பொறுமையாக கடைபிடித்தால் பிரச்சினை தானாகவே விலகிபோகும்.
இந்த விஷயத்தில் ஒரு ஆண், பெண்ணிடம் இருந்து எப்படி வேறுபடுகிறான்? குடும்பத்திற்குள் பிரச்சினை என்றால் சட்டென்று பதற்றபடக்கூடியவன் ஆணாகிய கணவன் தான். அந்த பதற்றத்தில் அவன் பிரச்சினைக்குரிய தீர்வையே மறந்து போகிறான். ஆனால், மனைவிதான் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துச் சொல்கிறாள்.
ஒரு ஆண், தனது பலத்தால், அதிகாரத்தால் எதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்று கணக்கு போடுகிறான். இவர்கள் போடுவது தப்புக் கணக்கு. ஆனால், பெண்கள் போடும் மனக்கணக்குதான் எபோதும் ஜெயிக்கிறது. விட்டுக்கொடுத்து போகத் தெரிந்த பெண்கள் இந்த கணக்கில் எப்போதுமே நுற்றுக்கு நுறு வாங்கி விடுகிறார்கள்.
எப்போதுமே ஒரு ஆணிடம் `தான்’ என்ற அகங்காரம் இருக்கிறது. நடைமுறை சூழ் நிலைகளால் அந்த அகங்காரம் சிறு வயதிலேயே அவனது முளையில் பதிவு செய்ய பட்டு விடுகிறது. அதனால், மனைவிக்கு அவன் உத்தரவு இடுபவனாகவே செயல்படுகிறான். மனைவிதான் அவனது உத்தரவை செயல்படுத்த வேடும் என்கிற எழுத படாத சட்டத்தால், அவள் பல அனுபவங்களை பெற்று, மனதளவில் பக்குவம் அடைந்து விடுகிறாள்.
வீட்டில் சமையல் என்றாலும், தனக்கு பிடித்த உணவைத்தான் பெண் சமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் – தேவைபட்டால் கட்டாயபடுத்தும் ஆண், தனது சேவையை மறுபேச்சு கேட்காமல் செய்யும் பெண்ணின் எதிர்பார்பை கேட்டு தெரிந்து கொள்ளவே மறந்துபோய் விடுகிறான்.
வரன் பார்க்கும் விஷயத்தில் கூட ஆணின் கையே ஓங்கி இருக்கிறது. தனக்கு இப்படிபட்ட பெண்தான் வேடும் என்று நினைத்ததை சாதித்துக் கொள்கிறான் அவன். ஆனால், பெண்தான் பாவம். தனது கருத்தை வெளிபடுத்த முடியாமல் மனதிற்குள் புழுங்கித் தவிக்கும் அவளுக்கு எதிர்பாரப்புக்கு மாறான கணவனே பெரும்பாலும் வந்து சேர்கிறான். ஆனாலும், பொறுத்துக்கொண்டு அவனோடு குடும்பம் நடத்துகிறாள். ஆசைகளை மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறாள்.
இப்படி, தனக்காக அன்றி பிறருக்காக தனது வாழ்க்கையையே அர்பணித்துக் கொள்ளும் பெண்ணுக்குள் பாசம் மட்டும் இல்லையேல், இவை எல்லாம் சாத்தியபடாமல் போய் இருக்கும் என்பது மட்டும் உண்மை!