இந்தியர்கள் ஏழைகள், ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல – ஸ்விஸ் வங்கி
( Indians are poor but India is not a poor country – Swiss Bank )
ஸ்விஸ் வங்கியில் கள்ளத்தனமாகப் போடப்பட்டிருக்கும் கருப்புப் பணம் எவ்வளவு தெரியுமா? மூர்ச்சையாகி விடாதீர்கள். வெறும் 280 லட்சம் கோடி தான் அதாவது ரூபாய். 280,00,000,000,0000.
இந்த தொகையின் மூலம் இந்தியா அரசு, 30 வருடங்களுக்கு வரியில்லாத பட்ஜெட்டைப் போடலாம்.
60 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம்.
20 கோடி மாணவ மாணவியர்க்கு 50 ஆண்டுகளுக்கு இலவசக் கல்வி தரலாம்.
உலக வங்கியிடம் கடன் கேட்க வேண்டாம்; அவர்களுக்கு வேண்டுமானால் நாம் கடன் கொடுக்கலாம்.
இந்தியாவின் எந்த ஒரு குக்கிராமத்திலிருந்தும் கூட தலைநகர் டெல்லிக்கு அகலமான நால்வழி சாலை அமைக்கலாம்.
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் 60 ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய்.2000 வீதம் பெறலாம். அதாவது ஒரே தடவையில் முழுத் தொகையும் பெறுவதாக இருந்தால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ரூபாய். 14 லட்சத்து 40 ஆயிரத்தைப் பெறலாம். அதாவது ஒவ்வொரு இந்தியனும் மில்லியனர். கனவல்ல, ஜோக்கல்ல! பொய்யல்ல! உண்மையிலும் உண்மை இது. ஆனால் உலகப்பார்வையில் இந்தியர்கள் என்றாலே ஏழைகள் என்ற பார்வைதான் உள்ளது.
”இதற்கெல்லாம் காரணம் யார்?” என்று கேட்டால் பாமரன் கூட சொல்வான் அரசியல்வாதிகள் என்று!
வெள்ளைக்காரன் நம்நாட்டை சுரண்டினான் என்று பேசும் நம்மவர்கள் அவர்களைவிட பன்மடங்கு சுருட்டி வெள்ளைக்காரன் நாட்டிலேயே முடக்கி வைத்திருக்கும் இந்த கருப்புப்பண முதலைகளை விரட்டியடித்தால் என்ன இந்தியாவை விட்டு. இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக!
குறைந்தபட்சம் உச்ச நீதி மன்றம் இவ்விஷயத்தில் விடாப்பிடியாக இருந்து நாட்டு மக்களுக்கு இந்த இமாலயத் தொகையை மீட்டுத்தந்தால் இந்தியாவின் கவுரவம் இமயமலையைவிட உயரத்துக்குச் செல்லும் என்று உண்மையான குடிமகன் எண்ணுவதில் என்ன தவறு இருக்க முடியும்?