Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இரட்டை வேட முஸ்லீம்கள்!

Posted on January 30, 2011 by admin

இரட்டை வேட முஸ்லீம்கள்!

    ஆமினா மைந்தன்     

இன்று, முஸ்லீம்களாகிய நம்மிடம் இரட்டை வாழ்க்கை வாழும் மனோபாவம் பெருகி விட்டது.

அரசியல்வாதிகளான முஸ்லீம்களிடம் ஆத்மீக உணர்வில்லை, மார்க்கப்பற்று இல்லை.

மார்க்கப்பற்று உள்ளவர்களிடத்தில் அரசியல் ஆர்வமில்லை.

பேச்சாளர்களிடத்தில் செயல் இல்லை.

செயல்படும் சேவையாளர்களிடத்தில் ஒழுக்கம் இல்லை.

தொழுகை, நோன்பு, தாடி, தொப்பி போன்ற வெளிரங்கமான மார்க்கக் கடமைகளை பக்தியுடன் நிறைவேற்றபவர்கள், திரைமறைவில் வட்டி, வரதட்சணை போன்ற தீமைகளுக்கு விளைநிலமாக விளங்குகிறார்கள். வட்டி, வரதட்சணைகளைத் தீயதென வெறுக்கும் நபர்களிடத்தில் தொழுகை, தொப்பி, தாடி இவை எதுவும் இல்லை.

சிலர் வெளிரங்கத்தில் ‘ஸாலிஹான’ மனிதர்களாகவும், உள்ளரங்கத்தில் ‘ஜாஹிலான’ காரியங்களைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். இது, ‘அவாம்’களான பாமரர்களிடம் மட்டுமல்ல ஆலிம்கள், ஹாஜிகள், தலைவர்கள், பிரமுகர்கள், பிரச்சாரப் பெருமக்கள் என அனைவரிடமும் இந்த கோளாரான இரட்டை வாழ்க்கை ஊடுருவி விட்டது.

‘தீன் வேறு, துனியா வேறு,’ ‘மார்க்கம் வேறு, பிஸினஸ் வேறு’ என்ற போலித்தனமான தத்துவ விளக்கங்களும், தீனியத்தான காரியங்களில் மட்டும் அக்கறை செலுத்தினால் போதும், துனியா சம்பந்தப்பட்ட காரியங்களில் எப்படி நடந்தாலும் யாரும் ‘கண்டுகொள்ள’ மாட்டார்கள் என்ற மனோபாவம் அதிகரித்து வருகிறது. ‘வெளியே தெரியாத வரையில் எந்தப் பாவத்தையும் செய்யலாம்’ என்று எண்ணும் இறுமாப்பும் இன்று முஸ்லீம்களில் எல்லாத் தரப்பிலும் காணப்படுகிறது. இது என்ன இரட்டை வாழ்க்கை என்பது புரியவே மாட்டேன்கிறது!

ஆயுதபூஜை செய்வதென்பது முஸ்லீம்களிடம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அதைப் போலவே புத்தாண்டு, தீபாவளியையும், கொண்டாட முஸ்லீம்கள் தயங்காததையும் காண முடிகிறது. சில காலங்களுக்கு முன் நான் கண்ட சில காட்சிகளைப் பற்றி எண்ணியபோது எழுந்ததே இந்த சிந்தனைகள். யாரையும் குறைகூறும் நோக்கமில்லை. ஆனால் ‘இது என்ன இஸ்லாம்?’ என்ற வினாக்கள் இதயத்தை குத்தித் துளைப்பதாலேயே இதை எழுதுகிறேன்.

‘ஹாஜி ….. ஸ்டோர்ஸ்’ என்ற போர்டு கொட்டை எழுத்தில் கண்ணைப் பறிக்கிறது. கடை முதலாளியைப் பார்த்தால் ஸ அழகிய தாடியடனும், வெள்ளைத் தொப்;பியுடனும், ;தக்வாதாரி’யாகத் தோன்றுகிறார். ஐவேளையும் பள்ளிக்குத் தவறாது வந்துவிடுவார். அவர் கடையை நான் பார்த்தபோது கடைமுழுவதும் திபாவளிப் பட்டாசுகள், வெடிகள்! தீபாவளி ஸ்பெஷல் அரேன்ஜ்மெண்ட்!

தீபாவளி கொண்டாடுவது மட்டும்தான் ஷிர்க்கா? அதற்கு உதவி புரிவது, துணைபுரிவது…? ஆயிரக்கணக்கில் வியாபாரம்தான் நடக்கட்டுமே, ஏனிந்த ஆசை! ஜெனரல் வியாபாரம் நடந்தாலே போதாதா? அல்லாஹ் அதில் என்ன குறை வைத்து விட்டான்? ஏன் இந்த வியாபாரம்? அதுவும் தாடியும், தொப்பியும் வைத்துக் கொண்டு! போதாததற்கு ஹாஜி என்று போர்டும் போட்டுக் கொண்டு! நூறு ரூபாய்க்கு வாங்கி உடுத்தும் ஆடையில் பத்து ரூபாய் அளவுக்கு ஹராமான பணம் ஒட்டியிருந்தாலே தொழுகை உள்பட மற்ற இபாதத்துகளும் இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனையின் கருத்தல்லவா?

இதோ இன்னொரு கடை, மிகப்பெரிய கடை, இதுவும் மற்றொரு ஹாஜியாரின் கடைதான்! ஊருக்கே அவர்தான் தலைவர், பெரியபுள்ளி, பெரியதாடி! இவரும் வெள்ளை தொப்பிதான்! மிகப்பெரிய ஜெனரல் மெர்ச்சண்ட் உள்பட பல கடைகளும் உண்டு அவருக்கு. அதில் ஒரு கடையில் உலோகத்தாலும், பிளாஸ்டிக்காலும், மரத்தாலும், மற்ற மத வழிபாட்டுக்கான வித விதமான சிலைகள்! கடை முதலாளியோ தீனுக்காக சேவை செய்யும் தலைவர்!

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ‘தந்தையாக’ வேலை செய்து கொண்டு, வெளியே இப்ராஹீமாக தீனுக்கு வேலை செய்கிறாராம்! கேட்டால் தீன்வேறு, வியாபாரம் வேறாம்! இதில் அவருக்கோ, அவரைத் தலைவராகப் பின்பற்றிச் செல்பவர்களுக்கோ எவ்வித வெட்கமுமில்லை. யாரும் வெளியே இதனைச் சொல்வதும் இல்லை. தொழுதால் போதும், தாடி இருந்தால் போதும்! வெள்ளைத்தொப்பி இருந்தால் போதும்! தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் இவர்களின் மறுமை நிலை எண்ணவாக இருக்க முடியும்? சிந்திப்பார்களா?

இதோ இவர் ஒரு ஆலிம்! அச்சகம் நடத்துகிறார். நல்ல பேச்சாளர்! தீன்சேவை செய்பவர்தான்! சாதாரண ஆலிமல்ல, ஆலிம்களுக்கு முன்னோடியாக விளங்குபவர். ஆனால் கிறிஸ்தவ மதப்பிரச்சார கூட்டத்திற்கு ‘பைபிளின் சுலோகங்களோடுஸ முழுக்க முழுக்க இணை வைப்புக்கு துணைபோகும் வசனங்களுக்கும் தனது அச்சகத்திலிருந்தே நோட்டீஸ் அச்சடித்து கொடுத்திருக்கிறார்! நோட்டீஸைப் பார்த்தவுடனேயே எந்த அச்சகத்தில் அடித்தது என்பது தெரிந்து விடுகிறது. ஆனாலும் அவர் தந்திரசாலி, நோட்டீஸில் தன் அச்சகப் பெயரைப் போடவில்லை. தண்ணீருக்குள் இருந்து கொண்டு ஸ தால், வெளியே தெரியாது என்ற எண்ணம்போலும்!

இன்னொருவரும் வருகிறார். இவர் பெரிய இஸ்லாமியப் பிரச்சாரகர். அல்லாஹ்வும் அவருக்கு பொருளாதார விஷயத்தில் எவ்விதக் குறைவும் வைக்கவில்லை. வசதியானவர்தான். இருந்தும், இந்த நோட்டீசை அச்சிட்டுக் கொடுத்தால் கிடைக்கும் பத்தோ இருபதோ அவரது பத்தியமான இஸ்லாமிய உணர்வைச் சபலப்படுத்தலாமா? ஏனிந்த கோளாறு?

ஷிர்க்கான கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்வது மட்டுமா பாவம்? அது மட்டும்தான் ஈமானைச் சூறையாடுமா? அதற்கு கூலி வாங்கிக்கொண்டு துணை செய்வது ‘ஷிர்க்’ ஆகாதா? ஆலிமாகிய அவரே ஃபத்வா கொடுத்துக் கொள்ளட்டும்! அல்லது தான் செய்தது ‘சரி’யென்றால், அவர் தைரியமாகத் தனது அச்சகத்தின் பெயரை நோட்டீசில் போட்டிருக்கலாமே! ஏன் போடவில்லை? வெளியே தெரியக்கூடாது என்பதால்தானே! அப்படியானால், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கும் தெரியாது என்ற நினைப்பா? இவரைப் போன்றவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்? இறைவனையா? பொது;மக்களையா? அவர்களே தங்களைக் கேட்டுக் கொள்ளட்டும். இத்தகைய இரட்டை வாழ்க்கை வாழும், கோளாரான ஈமானுள்ளவர்களின் போதனைகளினாலா ‘தீன்’ செழிக்கப் போகிறது?

இதென்ன இரட்டை வேடம்? இதென்ன இஸ்லாம்? புரியவில்லை! புரிந்தால் சொல்லுங்கள்!

குறிப்பு: பல ஆண்டுகளுக்கு முன் ஒர் இஸ்லாமிய மாத இதழில் வெளியான கட்டுரையே இது. இதில் பெயர் கூறாமல் குறிப்பிடப்பட்டிருக்கும் சில நபர்கள் தற்போது திருந்தியிருக்கலாம். அல்லாஹ்வே அறிந்தவன். இன்றும் இதுபோல் சிலர் இருக்கவே செய்கின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டே இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

29 − 22 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb