ஆணும் பெண்ணும் ஒன்றல்ல
[ எந்த கணவனை எடுத்துக் கொண்டாலும் அவன் தன் அன்பை, தன் மனைவியின் மீது கொண்டுள்ள நேசத்தை நீண்ட நேரம் பேசி தெரிவிப்பதைவிட, பாலுறவு மூலம் வெளிப்படுத்தவே முயலுவான்.
ஆனால், பெண் இதற்கு மாறானவள். அவன் எப்போதும் தன் பக்கத்திலேயே இருக்கவேண்டும்,
தன் காதலை அவன் நிறைய வெளிப்படுத்த வேண்டும்,
தனக்காகவே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என நினைப்பாள்.
அதாவது பாலுறவை விட காதலை அதிகமாக எதிர்ப்பார்ப்பாள்.
பெண் இயல்பிலேயே வெற்றியாளனை மட்டுமே விரும்பி, தோற்றுப் போகிறவனையோ, சோம்பேறியையோ தவிர்க்கும் குணம் உள்ளவள்.
தன்னை ஆண் நேசிக்கவேண்டும், தனக்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும், தனக்கு உண்மையாக இருக்கவேண்டுமென எண்ணமிடுவாள்.]
திருமணமாகி மகிழ்ச்சியுடன் இல் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஆண்-பெண்ணிடையே சில காலத்திற்குப் பிறகு பிரச்சினைகள் ஏற்படுவது ஏன்? இதற்கான அடிப்படைக் காரணம் என்ன?
சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆண் பெண் உறவில் பிரச்சினை ஏற்பட அவர்களுக்கு இயல்பிலேயே உள்ள குணங்கள்தான் அடிப்படைக்காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
என்னதான் பொருத்தம் பார்த்தாலும், உறவாக இருந்தாலும், காதலித்து மணந்தாலும் அடிப்படையாக அமைந்த இயல்பான குணங்கள்தான் அவர்களது வாழ்வை ஆட்டி வைக்கிறது.
மனிதரின் இயல்பான குணம் ஒரே இடத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆடும் யானையும் புல்லையும் தழை களையும்தான் தின்கிறது, புலியும் சிங்கமும் இறைச்சியைத்தான் தின்கின்றன. நாமும் காட்டில்தானே பிறந்தோம் விலங்குகளை வேட்டையாடி கறி சாப் பிடுவோம் என ஆடும் யானையும் நினைப்பதில்லை. நாம் ஏன் புல்லைத் தின்னக் கூடாது என புலியும் சிங்கமும் நினைப்பதில்லை. ஏன் என்றால் அவை அடிப்படை குணங்கள்.
இப்படித்தான் ஒரே வீட்டில் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தாலும் ஆணுக் கும் பெண்ணுக்கும் என சில அடிப்படை குணங்கள் இருக்கின்றன. இந்த குணம் எந்த நிலையிலும் மாறாது. ஆனால் அடக்கிக் கொள்ளலாம்.
ஆணின் அடிப்படை குணம் என்ன?
ஓர் ஆண் வெளியே வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தால் அவனைப் பார்த்து, பொட்டச்சி மாதிரி வீட்டிலேயே புகுந்துகொண்டு இருக்கிறான் என்பார்கள்.
இதே வேலையை ஒரு பெண் செய்யட்டுமே.. ஆம்பளை மாதிரி பாடுபட்டு வந்து வீட்டக் காப்பாத்தறாய்யா? என்பார்கள். அப்படியும் இல்லாவிட்டால் ஆம்பள மாதிரி ஊரைச் சுத்தறாய்யா என்பார்கள்.
ஆக, ஆண் என்பவன் வெளி உலகத்தோடு தொடர்பு கொண்டிருப்பதும், பெண் என்பவள் வீட்டோடு தொடர்பு கொண்டிருப்பதும் பாரம்பரியமான அடிப்படை குணங்கள்.
வெளி உலகத் தொடர்பு என்கிற போது அதைச் சார்ந்த குணங்கள் வளரும். வீட்டோடு தொடர்பு என்கிற போது அதைச் சார்ந்த குணங்கள் வளரும். இப்படிப் பார்த்தால் ஆணுக்கு இருக்கும் அடிப்படை குணம் போர்க் குணம். பெண்ணின் அடிப்படை குணம் அரவணைக்கும் குணம்.
போர்க்குணம் உள்ள ஆண் வாழ்க்கையில் முன்னேறவேண்டும், வெற்றி பெறவேண்டும் என நினைக்கிறான். அப்போதுதான் தன்னைச் சேர்ந்தவர்களை திருப்தி படுத்த முடியும், தன்னால் ஒரு பெண்ணை கவர முடியும் என நினைக்கிறான்.
பெண்ணைப் போல மென்மையான குணங்களை வெளிப்படுத்தினால் தன்னை மற்றவர்கள் ஆணாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்ற உணர்வு அவனுள் சிறுவயதிலிருந்தே இருக்கும்.
ஆண் பிள்ளை அழும்போது என்ன பொட்டச்சி மாதிரி அழுகிறாய் என்பார்கள்?
ஆணின் கண்ணில் எதற்கும் சிறுதுளி கண்ணீர் கூட வரக்கூடாது என்பார்கள். ஆண் என்பவன் எல்லாரைக் காட்டிலும் சிறந்து விளங்கவேண்டும் என போதிப்பார்கள்.
வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற வெறியுடன் போராடி உயர்ந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள், நீ நினைக்காத இடத்திலிருந்துகூட உன்னை தேடி பெண் வருவாள் என்பார்கள். இதெல்லாம் நம் வீட்டில் கேட்கும் வார்த்தைகள்.
ஆண் குழந்தை ஓடும்போது தவறி விழுந்தால்கூட, ம்.. எழுந்து ஓடு என தூண்டுவார்கள்.
போராட்ட குணத்தின் மூலமே பிறரை விட விஞ்சி நிற்க வேண்டும் என பழக்கப்படுத்தப் படுகிறான். இதற்கு மென்மையான குணம் தடையாக இருக்கும் என நினைத்து அதனை முற்றிலுமாக தனக்குள்ளேயே புதைத்து விடுகிறான்.
தான் எதை இழந்தாலும், தனக்கு எத்தனை துன்பம் வந்தாலும் அதற்காக கண்ணீர் விடுவதை ஆண் தவிர்ப்பது இதனால்தான். எப்படியாவது தனது தகுதியை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் என்ற வெறி அவனுக்குள் இருப்பதால், ஒரு இலக்கை அடைந்தால்கூட அதோடு நின்றுவிடாமல் அடுத்து அடுத்து என ஓட ஆரம்பிக்கிறான். வாழ்க்கையில் முன்னேற்றம், உயர்வு, குடும்பத்தாரின் வசதி வாய்ப்பு என்பதே அவனுடைய இலக்கு. அதில் யாரேனும் குறுக்கிட்டால், அது மனைவியாக இருந் தால்கூட உடனே எதிரியாகப் பார்க்க ஆரம்பித்துவிடுவான். இதெல்லாம் அவனது அடிப்படை குணங்கள்.
ஆனால் பெண், இதற்கு முற்றிலும் மாறுபட்டவள்
அன்பு காட்டி அரவணைப்பதன் மூலமாகவே எல்லாருடைய இதயத்திலும் இடம்பிடித்துவிடலாம், மரியாதையைப் பெற்றுவிடலாம், அதன் மூலம் பிரச்சினையில்லாமல் வாழ்க்கையை நகர்த்தலாம் என பெண் நினைக்கிறாள். இதுதான் அவளது அடிப்படை குணம்.
பெண் எச்சரிக்கை குணம் கொண்டவள். இவன் நம்மை வைத்துக் காப்பாற்றுவான், பிறரை விட இவன் உயர்ந்தவன், நம்மை அதிகமாக நேசிப்பவன் என்ற நம்பிக்கை அவளுக்கு வரவேண்டும். அப்போதுதான் அவள் ஓர் ஆணிடம் தன்னை ஒப்படைப்பாள்.
பெண் இயல்பிலேயே வெற்றியாளனை மட்டுமே விரும்பி, தோற்றுப் போகிறவனையோ, சோம்பேறியையோ தவிர்க்கும் குணம் உள்ளவள்.
தன்னை ஆண் நேசிக்கவேண்டும், தனக்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும், தனக்கு உண்மையாக இருக்கவேண்டுமென எண்ணமிடுவாள்.
ஆண் அப்படிப்பட்டவனாக இருந்தாலும், தனது போராட்ட குணத்தால் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமலோ, அல்லது அதை வெளிப்படுத்த பாலுறவை மட்டும் பயன்படுத்தினாலோ அவனை சந்தேகமாகப் பார்ப்பாள். இதுதான் அவர்களுக்குள் பிரச்சினையின் ஆரம்பம்.
இந்த அடிப்படை குணத்தை புரிந்து கொண்டால், ஆண் பிள்ளை என்றாலே இப்படித்தான் இருப்பான் என பெண்ணும், பெண் இப்படித்தான் இருப்பாள் என ஆணும் ஒரு முடிவுக்கு வருவார்கள். இதனால் பிரச்சினை பெரிதாகாது.
எந்த கணவனை எடுத்துக் கொண்டாலும் அவன் தன் அன்பை, தன் மனைவியின் மீது கொண்டுள்ள நேசத்தை நீண்ட நேரம் பேசி தெரிவிப்பதைவிட, பாலுறவு மூலம் வெளிப்படுத்தவே முயலுவான்.
ஆனால், பெண் இதற்கு மாறானவள். அவன் எப்போதும் தன் பக்கத்திலேயே இருக்கவேண்டும், தன் காதலை அவன் நிறைய வெளிப்படுத்த வேண்டும், தனக்காகவே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என நினைப்பாள். அதாவது பாலுறவை விட காதலை அதிகமாக எதிர்ப்பார்ப்பாள்.
வெளியுலக வேலையில் மூழ்கியிருப்பதால், உட்கார்ந்து காதலை வெளிப் படுத்திக் கொண்டிருப்பதை வெட்டித்தனமாக அவன் நினைப்பதும், இவருக்கு வேறு வேலைகள்தான் முக்கியமாக இருக்கிறது, நாம் முக்கியமில்லை என அவள் நினைப்பதும் பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகிறது.
ஆண் பெண் இருவரும் எப்போதுமே வேறுபட்ட குணம் கொண்டவர்கள்தானா? திருந்தவே மாட்டார்களா? என நினைக்கலாம். அதற்கு அவசியம் இன்றி இருவருமே மாறியிருக்கிறார்கள்.
பொருளாதார தேவை, வாழ்க்கை முறை, சமூக அமைப்பு, சுதந்திரம் என எல்லாவற்றிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும் செயல்பட ஆரம்பித்து விட்டாள்.
கணவனைப் போல அவளும் வெளி வேலைக்குப் போகிறாள். மனைவியைப் போல அவன் வீட்டிலிருந்து குடும்பத்தை பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறான். இருவருமே சேர்ந்து நீண்டநேரம் பிள்ளைகளோடு, தனிமையில், குடும்பத்தோடு எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
எண்ணத்தால், செயலால் ஒன்றுபட்டு வாழ முற்படுகிறார்கள். இதனால் பிரச்சினைகள் பரவலாகக் குறையத் தொடங்கியுள்ளது.
அப்படியிருந்தால் பிரச்சினைகள் எப்படி முளைத்து வந்து அவர்களை விவாகரத்து வரை கொண்டு போகிறது?
சிலர் இன்னும் திருந்தாமல் இருப்பது, அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது சுற்றத்தாரின் தலையீடுகள், தம்பதியரிடையே தலைதூக்கும் அளவுக்கு அதிகமான சுதந்திர மனப்பான்மை, ஈகோ போன்றவை காரணமாக இருக்கலாம்.
இத்தகைய நெருடல்கள் போன்றவை பிரச்சினைக்கு காரணமாகின்றன. இவ்வாறு ஏதேனும் ஏற்பட்டால் அவர்கள் முன்னதாக தாம்பத்ய ஆலோசனை மூலம்; அதை தீர்த்துக் கொள்ளலாம்.
source: http://chenaitamilulaa.bigforumpro.com/t2494-topic