Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்ராயிலில் தஞ்சம் புகும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்!

Posted on January 29, 2011 by admin

இஸ்ராயிலின் தலைநகர் டெல் அவிவ் -க்கு குடியேறுகிறார் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்.

சவூதி அரேபியா மறுப்புத்தெரிவித்த காரணத்தால் எகிப்தின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை வரவேற்க இஸ்ராயில் தயாராகிறது.

இந்த தகவலை டெல் அவிவ் -இல் உள்ள எகிப்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே துனிஷிய சர்வாதிகாரியை சில தினங்களுக்கு முன் ஏற்றுக்கொண்டு அபயமளித்த சவூதி அரேபியா முபாரக்கை கை கழுவி விட்டது தங்களது நாட்டிலும் ஏதேனும் குழப்பம் எற்பட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதன் மூலம் அரபியரான எகிப்து அதிபர் முபாரக்கை ஏற்றுக்கொள்ள மற்ற அரபு நாடுகள் எதுவும் முன் வரவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஏற்கனவே முபாரக்கின் குடும்பத்தார்களான அவரது மகனும் மனைவியும் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனுக்குப் பறந்து விட்டனர்.

பிறந்த மண்ணில் கடந்த 30 ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தி வந்தவரின் கதி நாட்டைவிட்டு ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணம் என்னவென்பதை மற்ற அரபு நாட்டுத் தலைவர்கள் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டால் தப்பித்தார்கள். இல்லையேல் இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கும் இதே கதிதான் என்பது உறுதி.

செய்தி உதவி: அல் ஜஸீரா

www.nidur.info

 

பிற செய்திகள் ஒரு பார்வை!

அதிகறித்து வரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை!

வாஷிங்டன்: அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையைவிட முஸ்லிம் மக்கள்தொகை இரண்டு மடங்கு அதிக வேகத்தில் அதிகரிக்கும்.

2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23. 6 கோடியைத் தாண்டும் என்றும் அது கூறுகிறது.

அதேபோல முஸ்லீம் மக்கள் தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்தோனேசியாவை விரைவில் பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள் தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரிக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.

இது குறித்து 27 01 2011 அன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தற்போதைய சூழல் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொகையில் 26.4 சதவிகிதம் முஸ்லிம்கள் இருப்பார்கள். கடந்த 2010ல் இருந்த 6.9 பில்லியன் மக்கள்தொகையில் 23.4 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

கடும் போராட்டங்களுக்குப்பின் அமெரிக்க நகரத்தில் மசூதி கட்ட நகராட்சி ஒப்புதல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவில் உள்ள டெமிகுலா நகரில் மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாதக் கணக்காக மசூதி கட்ட பேச்சுவார்த்தை, போராட்டங்கள், மனுக்கள், கடிதங்கள் அனுப்பும் போராட்டங்கள் எல்லாம் நடத்திய பிறகு, தற்போது மசூதி கட்ட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மசூதி கட்ட அனுமதி அளிப்பது குறித்து நேற்று டெமிகுலா நகர கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. சுமார் 9 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் மசூதி கட்ட நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 4-0 என்று இத்திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.

இது குறித்து தெற்கு கலிபோர்னியாவின் இஸ்லாமிக் ஷுரா கவுன்சில் தலைவர் ஷகீல் செய்யது கூறியதாவது,

இந்த திட்டத்திற்கான எதிர்ப்புகள் வெறுக்கத்தக்கவை. இனி நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார்.

 

பிரிட்டனில் தலைவிரித்தாடும் இஸ்லாமோ ஃபோபியா – பிரிட்டனின் முதலாவது முஸ்லிம் பெண் அமைச்சர் ஸயீதா வர்ஸி கருத்து!

பிரிட்டன் முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாக மாறிவிட்டதாக பிரிட்டனின் முதலாவது முஸ்லிம் பெண் அமைச்சர் ஸயீதா வர்ஸி கருதுகின்றார். பிரதமர் டேவிட் கமெரூனின் கன்ஸவர்டிவ் கடசியின் இணைத்தலைவரும் அமைச்சருமான ஸயீதா கருத்துரைக்கையில், பிரித்தானிய சமூகத்தில் மத சகிப்புத்தன்மை படிப்படியாகக் குறைந்து வரும் ஒருவகைப் போக்கு நிலவுவதாக எச்சரித்துள்ளார்.

இரவு விருந்துபசார வைபவங்களில் மக்கள், முஸ்லிம் விரோதப் போக்கு, இனவெறி குறித்தெல்லாம் பகிரங்கமான கதையாடல்களை நிகழ்த்துமளவுக்கு பிரிட்டனில் இவ்விடயம் சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாத்தைப் பின்பற்றும் அனைவரையும் ‘மிதவாதி’ என்றோ ‘தீவிரவாதி’ என்றோ அடையாளப்படுத்துகின்ற போக்கை அவர் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இத்தகைய கருத்துப் போக்கே மக்கள் மத்தியில் எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்த்து மத சகிப்புத் தன்மையை அறவே தகர்த்தெறிந்து, முஸ்லிம்கள் பற்றிய பிழையான புரிதலை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தோடு தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, சமூக பகிஷ்கரிப்புக்கும் உள்ளாக்கப்படல் வேண்டும் என்பதோடு, அத்தகையவர்களின் செயற்பாடுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முழு மொத்த முஸ்லிம் சமூகமும் பழிவாங்கப்படும் நிலை முற்றாக நீங்க வேண்டும் என்று அமைச்சர் ஸயீதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்லாம் பற்றிய பிழையான பிரதிபிம்பம் கட்டமைக்கப்படுவதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இத்தகைய துரதிருஷ்டவசமான போக்கை மாற்றியமைப்பது என்பது சமூகமும், சமயத் தலைவர்களும் மட்டுமின்றி அரசாங்கமும் முனைப்போடு செயற்படுவதன் மூலமே சாத்தியமாகும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்பும் நாம் இத்தகைய சவால்களை எதிர்கொண்டு வெற்றிகண்டுள்ளோம். எனவே, ஒரே தேச மக்கள் என்ற வகையில் இதுபோன்ற நெருக்கடிகளை ஒருங்கிணைந்து எதிர்த்து வெல்வது சாத்தியம் என்பதில் தாம் உறுதியோடு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது பிரிட்டனில் 2.9 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகையில் இது 4.6 வீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.பிரிட்டன் முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாக மாறிவிட்டதாக பிரிட்டனின் முதலாவது முஸ்லிம் பெண் அமைச்சர் ஸயீதா வர்ஸி கருதுகின்றார்.

பிரதமர் டேவிட் கமெரூனின் கன்ஸவர்டிவ் கட்சியின் இணைத்தலைவரும் அமைச்சருமான ஸயீதா கருத்துரைக்கையில், பிரித்தானிய சமூகத்தில் மத சகிப்புத்தன்மை படிப்படியாகக் குறைந்து வரும் ஒருவகைப் போக்கு நிலவுவதாக எச்சரித்துள்ளார்.

இரவு விருந்துபசார வைபவங்களில் மக்கள், முஸ்லிம் விரோதப் போக்கு, இனவெறி குறித்தெல்லாம் பகிரங்கமான கதையாடல்களை நிகழ்த்துமளவுக்கு பிரிட்டனில் இவ்விடயம் சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தைப் பின்பற்றும் அனைவரையும் ‘மிதவாதி’ என்றோ ‘தீவிரவாதி’ என்றோ அடையாளப்படுத்துகின்ற போக்கை அவர் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார். இத்தகைய கருத்துப் போக்கே மக்கள் மத்தியில் எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்த்து மத சகிப்புத் தன்மையை அறவே தகர்த்தெறிந்து, முஸ்லிம்கள் பற்றிய பிழையான புரிதலை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத்தோடு தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, சமூக பகிஷ்கரிப்புக்கும் உள்ளாக்கப்படல் வேண்டும். ஆனால், அத்தகையவர்களின் செயற்பாடுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முழு மொத்த முஸ்லிம் சமூகமும் பழிவாங்கப்படும் நிலை முற்றாக நீங்க வேண்டும் என்று அமைச்சர் ஸயீதா தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்லாம் பற்றிய பிழையான பிரதிபிம்பம் கட்டமைக்கப்படுவதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய துரதிருஷ்டவசமான போக்கை மாற்றியமைப்பது என்பது சமூகமும், சமயத் தலைவர்களும் மட்டுமின்றி அரசாங்கமும் முனைப்போடு செயற்படுவதன் மூலமே சாத்தியமாகும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

“இதற்கு முன்பும் நாம் இத்தகைய சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளோம். எனவே, ஒரே தேச மக்கள் என்ற வகையில் இதுபோன்ற நெருக்கடிகளை ஒருங்கிணைந்து எதிர்த்து வெல்வது சாத்தியம்” என்பதில் தாம் உறுதியோடு இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது பிரிட்டனில் 2.9 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்த சனத்தொகையில் இது 4.6 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 மோடிக்கு ஆதரவாகக் கருத்து கூறிய தேவ்பந்த் துணைவேந்தர் ராஜினாமா!

மோடிக்கு ஆதரவாகக் கருத்து கூறியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து தேவ்பந்த தாருல் உலூம் மதரஸாவின் துணை வேந்தராகப் புதிததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மெளலானா குலாம் முஹம்மது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் என்ற மத்ரஸாவின் துணை வேந்தராக குஜராத்தைச் சேர்ந்த மெளலானா குலாம் முஹம்மது வஸ்தன்வி என்பவர் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடியின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதில்லை; மாறாக மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் குஜராத் முஸ்லிம்கள் பலனடைகின்றனர் என மெளலானா குலாம் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் பதவியில் இருந்து மெளலானா குலாமை நீக்க வேண்டும் என்று தாருல் உலூம் மாணவர்கள் மற்றும் ஆசியரிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மெளலானா குலாம் தன்னுடைய பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தாருல் உலூமின் ஆலோசனைக் குழுதான் என்னைத் தேர்ந்தெடுத்தது. ஆலோசனைக் குழுவின் கூட்டம் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நான் பதவி விலகுவேன் என மெளலானா குலாம் செவ்வாய்க் கிழமையன்று கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

20 உறுப்பினர்களைக் கொண்ட தாருல் உலூமின் ஆலோசனைக் குழு கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி கூடியபோது மெளலானா குலாமை துணை வேந்தராகத் தேர்ந்தெடுத்தது. இந்த ஆலோசனைக் குழுவில் தற்போது 17 பேர் மட்டுமே இருப்பதாகவும் அவர்களில் 14 பேர் மட்டுமே ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

மோடி குறித்து மெளலானா குலாம் கூறிய கருத்துகள் பிரச்சனை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கோத்ரா கலவரத்திற்குப் பின் மோடிக்கு தான் நற்சான்றிதழ் வழங்கவில்லை என்று மெளலானா குலாம் மறுத்துள்ளார்.

இந்திய ஊழலின் தலைநகரம் தமிழகம்!

2009ஆம் ஆண்டு இந்திய ஊழலின் தலைமை இடமாகத் தமிழகம் திகழ்ந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு பீரோ வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்ற ஊழல் தொடர்பான தகவல்களை தேசிய குற்றப் பதிவு பீரோ (NCRB) வெளியிட்டுள்ளது. இந்த தகவலின் படி நாடு முழுவதும் 5 ஆயிரம் அரசு அதிகாரகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரிகளிடம் இருந்து 61 கோடி ரூபாய் பணம் மீளப் பெறப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் 5 ஆயிரம் பேரில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 790 பேர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஊழலில் தமிழக அதிகாரிகள் முதலிடத்தைப் பெற்று நமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழகத்தைத் தொடர்ந்து ஒரிசாவைச் சேர்ந்த அதிகாரிகள் 561 அதிகாரிகள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 542 பேர், கேரளாவைச் சேர்ந்த 477 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 430 அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஊழல் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகளில் 375 அதிகாரிகள் “ஏ” கிரேடு நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் ஆவர். 789 பேர் “பி” கிரேடு அதிகாரிகள். 3,039 பேர் கடைநிலையில் அரசு ஊழியர்கள். இவர்களே பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் என்று அந்தப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இத்துனை பேர் மீது ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதே? அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா எனில், ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டவர்களில் 34 சதவீதம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

ஊழல் பணத்திலிருந்து சொத்து சேர்த்தவர்களிடமிருந்து 60.91 கோடி ரூபாய் சொத்துகளை அரசு பறிமுதல் செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் தம்பதியான அர்விந்த் மற்றும் டினு ஜோஷி ஆகியோரிடமிருந்து 23 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்திருப்பதுதான் இதுவரையிலான அதிகபட்சப் பறிமுதல். 2008ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துகள் 25.4 கோடிகள். இது 60.891 கோடிகளாக உயர்ந்துள்ளது.

நன்றி: செய்திகள் உதவி ”இந்நேரம்” மற்றும் ”தட்ஸ் தமிழ்

”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 12 = 21

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb