டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலீ, பிஎச்.டி, ஐ.பீ.எஸ் (ஓ)
2011 ஏப்ரல், மே மாத வாக்கில் தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் முக்கிய இரண்டு அணிகள் உருவாகுவது தெளிவாக தெரிகிறது. ஓன்று ஆளும் கட்சி கூட்டணி மற்றொன்று எதிர்க்கட்சி கூட்டணி. அதனைத் தொடர்ந்து மற்ற சமூக அமைப்புகளும் ஒரளவிற்கு தங்கள் நிலைப்பாட்டினை எடுத்து விட்டன.
குறிப்பாக ஆதி திராவிட சமூகத்தினைச் சார்ந்த தொல். திருமாவளவன், ஜெகன் மூர்த்தி ஆகியோர் ஆளுங்கட்சி கூட்டணிக்கும், டாக்டர். கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், செ.கு. தமிழரசன் போன்றோர் எதிர்க்கட்சி கூட்டணிக்கும் தங்கள் ஆதரவினைத் தெரிவித்து போட்டி போட எத்தனை தொகுதிகள் என்றும், ஒதுக்கப்படும் தேர்தல் நிதி நிர்ணயிக்கப் பட்டு விட்டதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன..
ஆகவே அந்த சமுதாய இயக்கங்களால் எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் ஏற்கனவே அரசியல் அமைப்புப் பிரிவ 15(4)ல் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளுக்கும், அதற்கு மேலும் பெற உத்திரவாதம் வழங்கப்பட்டு விட்டது என்றே கூறலாம்.
ஆனால் இஸ்லாமிய சமுதாய அமைப்பில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆளுங்கட்சிக்கும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-மனிதநேயக் கட்சி எதிர்க் கட்சி கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்து அதன் தலைவர்கள் படம் இரண்டு அணி தலைவர்களுடன் பத்திரிக்கைகளிலும் பிரசுரிக்கப் பட்டன. ஆனால் மற்ற சமுதாய அமைப்புகளின் நிலைப்பாடும் உதிரி சமுதாய அரசியல் கட்சிகளின் ஆதரவும் மதில் மேல் பூனiபொல் இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஏற்கனவே ஆதரவு தெரிவித்த சமுதாய அரசியல் கட்சிகளுக்கு இரண்டு அணியிலும் முக்கியம் கொடுத்து தலித் சமுதாய மக்களுக்கு ஒருக்கீடு செய்யப்படும் அளவிற்கு தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்படுமா என்பது சந்தேமாகவே உள்ளது. இன்னும் ஒரு படிமேலே போய் ஒரு சீட்டுக் கிடைத்தாலும் போதும் தாங்கள் ஆதரவு தெரிவித்த கூட்டணியிலேயே தொடர்வோம் என்ற நிலை எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏன் இந்த பரிதாபமான நிலை என்பதினை மூன்று உதாரணங்களைச் சொல்லி விளக்கலாம் என நினைக்கின்றேன்:
கல்லூரி மாணவப்பருவத்தில் கேள்விப் பட்டது
1) நமது சமுதாய இயக்கம் ஒன்று சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டிற்காக நமது நாட்டிலும், வளைகுடா நாடுகளிலும் ஏராளமான பணம் வசூல் செய்யப்பட்டது. மாநாடு செலவு போக மீதியள்ள பணத்தினைக் கொண்டு சமுதாயம் செயல்படுவதிற்கு ஒரு சொந்தக் கட்டிடம் இல்லாமல் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது, அதற்குப் பதிலாக ஒரு சொந்தக்கட்டிடம் வாங்கலாம் என சிலர் முயற்சி செய்தனர்.
அதற்கு அன்றைய சமுதாயத் தலைவர்களில் ஒருவர் தன்னால் தான் அவ்வளவு பெரிய தொகை வசூல் செய்யப்பட்டது என்றும், தான் நடத்தும் ஒரு மாதப்பத்திரிக்கை நலிவடைந்து இருப்பதாகவும் அதனை தொடர்ந்து நடத்த அந்த மீதிப்பணத்தினை தர வேண்டும் என வாதிட்டாராம். ஆனால் அப்போதிருந்த தலைவரும், பொருளாதாரரும் தங்களுடைய அமைப்பிற்க ஒரு சொந்தக் கட்டிடம் வேண்டும் என உறுதியாக இருந்து மன்னடி பகுதியில் கட்டிடம் வாங்கப்பட்டதாம். இது எதனைக் காட்டுகிறது என்றால் எப்படி தன் செல்வாக்கால் கட்சிப் பணத்தினை தன் சொந்த பத்திரிக்கைக்கு சுயநலமே பெரிது என அபகரிக்கப் பார்த்தார் அந்த சமுதாய முன்னோடி என்பது பரிந்து இருக்கும் என நம்புகிறேன்.
நேரில் கண்டது:
2) 1991 ஆம் ஆண்டு நான் சென்னை சட்டம், ஒழுங்கு டி.சியாக பணியாற்றிய போது கண்ட ஒரு சம்பவம். மறைந்த தேசிய தலைவர் ஒருவருக்கு தென் சென்னையில் ஒரு விருந்து கொடுக்கப் பட்டது. அவருடைய பாதுகாப்பு பணியினை மேற்பார்வையிட நான் நியமனம் செய்யப்பட்டேன். நமது சமுதாய இயக்கத்தலைவர் ஒருவரும் அதில் கலந்து கொண்டிருந்தார்.
சமுதாய தலைவர் தேசிய தலைவர் அருகில் சென்று தனக்கு வேலூரில் போட்டியிட வாய்ப்புத் தர வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தார். அப்போது தேசிய தலைவர் அருகில் இருந்த தஞ்சாவூர் எம்.பியின் பக்கம் காட்டி அவரை சந்திக்கவும் எனக் கூறினார். உடனே நமது சமதாய தலைவரை அந்த எம்.பி பார்த்து சமுதாய மக்கள் உங்கஎ; மீது வெறுப்பாக உள்ளனர். ஆகவே வேறு ஒருவர் பெயரைச் சொல்லுங்கள் அவருக்கு வாய்ப்புக் கொடுப்பதினை பரிசீலிக்கலாம் என்றார்.
ஆனால் சமுதாயத்தலைவர் தனக்குத்தான் அந்த வாய்ப்புத்தர வேண்டும் என வாதிட்டார். அந்தப் பேச்சு தேசிய தலைவர் எழுந்து விட்டதால் பாதியிலேயே முடிந்து விட்டது. ஆகவே அந்த சமுதாயத் தலைவரின் செயல் தனக்கு கிடைக்காத பலன் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற செயலாகத் தெரியவில்லையா?
சமுதாயத் தலைவர்களிடமிருந்து கசிந்தது:
3) வருகிற சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஏற்கனவே ஒரு சமுதாய இயக்கம் ஆதரவு தெரிவித்திருந்தது. அதனை விரும்பாத மற்றொரு சமுதாய இயக்கம் அந்தக் கூட்டணித் தலைவர்களிடம் ஏற்கனவே ஆதரவு தெரிவித்த சமுhய இயக்கத்தினை வெளியேற்றினால் தங்கள் ஆதரவு அந்தக் கூட்டணிக்கே என்ற வாதிடுவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இது சமுhயத்திற்குள்ளேயே காலை வாரி விடும் உன்னத செயலாக உங்களுக்குத் தோனவில்லையா?
நான் மேலே குறிப்பிட்ட சம்பவங்களிலிருந்து சமுதாய இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன என்று பார்ப்போமேயானால்:
1) நமது சமுதாய அரசியல் கட்சிகள் தாங்கள் சார்ந்திருக்கும் கூட்டணியில் தூக்கி எறியும் ஒரு இடம் கொடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் தாராள மனப்பக்குவம்.
2) தேர்தல் செலவிற்காக கூட்டணியில் ஒதுக்கப்படும் செலவு தொகையினை கனிசமான அளவிற்கு பங்கு போட ஆயத்த நிலை. தேர்தல் வேட்டையினை மாநாடுகளுக்கு செய்தது போல நம் நாட்டிலும், வளைகுளா நாட்டிலும் ஈடுபட்டு ஒரு முடிந்த அளவு வலைவீசி, அழியும் கண்மாயில் மீன் பிடிப்பது போன்று வசூல் வேட்டையில் இறங்குவது.
3) சமுதாய இயக்கங்களிடையே ஒருவொருக்கொருவர் காலை வாரிவிடும்; ஐந்தாம் படை வேலை.
4) சமுதாய பொதுக் கோரிக்கைகளான சமுதாய இட ஒதுக்கீடு அதிகப்படுத்துதல், வேலை மற்றும் கல்வியில் குறைந்தளவு ஒதுக்கப்பட்ட 3.5 சதவீதம் உத்திரவாதம், நலிந்த ஊர்களான திருநெல்வேலி மேலப்பாளையம், ஸ்ரீவைகுண்டம், முதுகுளத்தூர், இளையான்குடி, இடையக்கோட்டை, பழனி, தாராபுரம், பாபநாசம், இராஜகிரி, நாகை பரங்கிப்பேட்டை, புவனகிரி, சதுரங்கப்பட்டினம் போன்ற சமுதாய ஊர்களில் தனி தொழில் மையங்கள் அமைத்தல், மைனாரிட்டி கமிஷன் சேர்மன் பதவிக்கு சுழற்சி முறையில் சமுதாய தலைவர் ஒருவருக்கு கிறித்துவ சமுதாயத்தினவருக்கு ஒதுக்கப்படுவது போல ஒதுக்குவது போன்ற குறைந்த பட்ட உத்திரவாதங்களை முன் வைத்து அதன் பின்பு கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுக்காது கூப்பிட்ட குரலுக்கு ஓடி ஆதரவு அளிக்கும் தலைவர்கள் நம்மிடையே உலவுவது.
5) சமுதாய மக்களை ஏமாற்ற மறக்காது பாபர் மஸ்ஜித் கோரிக்கையினை அப்பப்ப தங்கள் ஆர்ப்பாட்டங்களால் ஞாபகப்படுத்தி வசூலில் இறங்குவது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டில் தமிழ்நாடு சமுதாய இயக்கங்கள் எதுவம் தன்னை இணைத்துக் கொள்ளாது வசூல் வேட்டையினை மட்டும் மறக்காமல் ஈடுபடுவது என்ன நியாயம்?
மேற்கு வங்கத்தினைச்சார்ந்த மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசில் தான் பங்கு பெற்றிருக்கிறோம் என்றும் பாராமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகப்படுத்திய உடன் வாளாதிருக்காது தனது எதிர்ப்பினைக் காட்டியதோடு நில்லாமல் யு.பியே சேர்மனிடமும் நேரில் முறையிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஏன் மத்தியில் பார்க்க வேண்டும்?
அருந்ததையர் 3 சதவீத ஒதுக்கீடில் சரியான பலன் கிடைக்கவில்லை என அருந்ததையர் தலைவர் வலசை ராஜேந்திரi; வைத்த வேண்டுகோளை ஏற்று அதனை ஆராய ஒரு உயர் மட்ட குழு அமைக்க வில்லையா? தேவேந்திர குல வேளாளர் ஏழு பிரிவினையும் இணைத்து ஒரு பிரிவாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று இன்று கூட(27.1..2011)பத்திரிக்கையில் வந்த செய்தி படி நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கவில்லையா? அது போன்று நமது சமுதாய நலனுக்கான கோரிக்கையினை முன் வைத்து கூட்டணியில் சேருவதிற்க ஏன் கூச்சப்பட வேண்டும்?
இந்தக் காலத்தில் ‘வாயுள்ள பிள்ளைதான் பிழைத்துக் கொள்ளும்’ என்ற பழமொழியினை சமுதாய தலைவர்கள் மறக்கக் கூடாது. இதனைச் சொல்ல இவர் யார் என என்னை சிலர் கேட்கலாம்? அதற்கு ஒரு உதாரணத்தினைச் சொல்லி பதில் கூறலாம் என நினைக்கின்றேன். ஒரு தடவை தத்துவ ஞானி எமர்ஷனும் அவருடைய மகனும் தாயை இழந்து நின்ற கன்றுக் குட்டியினை வயலுக்கு இழுத்துச் செல்ல எவ்வளவோ முயன்றும் தோல்வியுற்றனர். அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண் அவர்கள் முன் வந்து அந்த கன்றுக் குட்டி வாயினுள் தன் விரலை வைத்த மறு நிமிடமே அந்த கன்று தன் தாய் பசுவின் மடுதான் அந்த விரல் என நினைத்து அந்த வேலைக்கார பெண்ணுடன் சென்றதாம். அது போன்று சமுதாய சேவை செய்ய ஆர்வ முள்ள வேலைக் காரனாக என்னை கருத வேண்டும்.
பிகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தும் ஒரு காலத்தில் ஒரே பிற்பட்ட சமுதாய இயக்கமான மண்டல் இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர்கள் தான். அரசியல் இயக்கத்தில் இருவரும் இரு துருவங்களாக உள்ளனர். ஆனால் பிகார் மக்கள் நலன் பாதிக்கும் போது இணைந்து குரல் எழுப்பியும், பொது நிகழ்ச்சிகளிலும் இணைந்து இன் முகத்துடனும் ஒருவருக்கொருவர் அன்புடன் அரவணைத்துக் கொள்ளும் காட்சிகள் பத்திரிக்கைகளிலும், டி.வி.யிலும் பார்க்கலாம்.
ஆனால் நமது சமுதாய இயக்கங்களைச் சார்ந்த தலைவர்கள் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றி தங்கள் பத்திரிக்கையிலும், மேடை பேச்சுகளிலும,; கேசட்டுகளிலும் புனித குர் ஆனையும், ஹதீஸ_களையும் மேற்கோள் காட்டி வீர முழக்கமிடுவர். ஆனால் உண்மையில் ஒருவர் மற்ற சமுதாய இயக்கத்தினை குழிதோண்டி புதைப்பதிலும், அதன் தவைர்களை கீழ்த்தரமாக தங்கள் பத்திரிக்கைகளிலும் எழுதுவதிலேயே குறியாக இருப்பதின் மூலம் சமுதாய பொது நன்மைகளை மறந்து விடுகின்றனர்.
ஆகவே வருங் காலத்திலாவது சமுதாய தலைவர்கள் வேற்றுமையினை மறந்து பரஸ்பரம் அன்பினைப் பொழிந்து தங்கள் சமுதாய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து நல்ல வழி காட்ட வேண்டும். ஜனநாயக நாட்டில் மைனாரிட்டியாக வாழும் நாம் ஒருவருக்கொருவர் வேற்றமைகளை களைந்து கலந்துரையாடி சமுதாத்திற்கு அதிகமான பலன்களை தேர்தல் நேரத்தில் இனியாவது பெறுவார்களா என பொறுத்திருந்து பார்ப்போமா சொந்தங்களே.
source: http://mudukulathur.com/?p=4360