Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஹராமான வருமானத்தில் வாழ்க்கையா?

Posted on January 7, 2011 by admin

ஹராமான வருமானத்தில் வாழ்க்கையா? 

  மவ்லவி, எஸ் லியாகத் அலீ மன்பஈ    

[ ஹராமை செய்பவர்கள், அதிலும் குறிப்பாக ஹராமான வருமானத்திலேயே தம் வாழ்க்கையை நடத்துபவர்கள் தக்வா என்ற வட்டத்திற்குள் நுழையவே முடியாது. பிறர் பார்ப்பதற்கு பக்திப் பழங்களாக அவர்கள் பவனி வந்தாலும் சரியே. ஏனெனில், ‘ஹராமான வருமானத்தால் வளர்ந்த உடம்பு நரகத்திற்கே செல்ல அதிக தகுதியானது’ என்ற நபிமொழியும் ‘ஒருவன் ஒரு ஆடையை பத்து திர்ஹம் கொடுத்து வாங்கினான். அவற்றில் ஒரு திர்ஹம் மட்டும் ஹராம் என்றால் அந்த ஆடையை அணிந்து தொழும் எந்த தொழுகையும் அங்கீகரிக்கப்படாது’ என்ற ஹதீஸும் அதை மிகத் தெளிவாகவே நிரூபிக்கின்றன.] 

 பக்தியாளர்களின் பண்பு!  

பிரச்சனைக்குரியவற்றில் புகுந்துவிட நேருமோ என்று அஞ்சி பிரச்சனையில்லாதவற்றையும் விட்டால்தான் ஓர் அடியான் தக்வா உடைய பயபக்தியாளர்களின் பட்டியலில் சேரமுடியும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸஃதீ ரலியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ, இப்னு மாஜா)

‘இந்த வேதம் பக்தியாளர்களுக்கே நேர்வழி காட்டும்’ (அல்குர்ஆன்: 2:2) 

‘பக்தியாளர்களாகுவதற்காக உங்களைப் படைத்த இறைவன வணங்குங்கள்’ (அல்குர்ஆன்: 2:12), மேலும் காண்க: (2:183, 29:45)

இப்படித் திருக்குர்ஆன் நெடுகிலும் எங்கு நோக்கினும் ‘தக்வா’ ‘தக்வா’ என்ற உயிர் மூச்சு ஓடிக்கொண்டிருப்பதையும், அந்த பயபக்திதான் எல்லா அறச்செயல்களுக்கும் ஆணிவேர் – அசல் நோக்கம் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். அந்த தக்வா நம்மிலும் வர, மேலே தலைப்பில் கண்ட நபிமொழி எடுத்து வைக்கிறது.

 சில நேரங்களில் ஹலாலும் கூடாது  

ஆம்! மனிதன் தன்னை இறைபக்தன் என்று நிரூபிப்பதற்கு தாடி, தொப்பி போன்ற புறத்தோற்றமோ, வெளியில் காட்சியளிக்கும் தொழுகைப் போன்ற சில செயல்பாடுகளோ போதாது. மாறாக பிரச்சனைக்குரியவற்றில் புகுந்துவிட நேருமோ என்ற அச்சம் ஏற்பட்டால் பிரச்சனை இல்லாதவற்றையும் விட்டொழிக்க வேண்டும். அதாவது ஹராமில் ஈடுபட்டுவிடுவோமோ என்ற ஐயம் தோன்றினால் ஹலாலைக்கூட ஒதுக்கித்தள்ள வேண்டும். மக்ரூஹை மட்டுமல்லாமல் ஆகுமானவற்றைக்கூட தவிர்க்க வேண்டும். அப்போதுதான் தக்வா உடைய பக்தனாக ஆக முடியும் என்பதைத்தான் மேலுள்ள நபிமொழி விளக்குகிறது.

 ஹராமில் பழுத்த பழங்கள் 

ஹராமை செய்பவர்கள், அதிலும் குறிப்பாக ஹராமான வருமானத்திலேயே தம் வாழ்க்கையை நடத்துபவர்கள் தக்வா என்ற வட்டத்திற்குள் நுழையவே முடியாது. பிறர் பார்ப்பதற்கு பக்திப் பழங்களாக அவர்கள் பவனி வந்தாலும் சரியே. ஏனெனில், ‘ஹராமான வருமானத்தால் வளர்ந்த உடம்பு நரகத்திற்கே செல்ல அதிக தகுதியானது’ என்ற நபிமொழியும் ‘ஒருவன் ஒரு ஆடையை பத்து திர்ஹம் கொடுத்து வாங்கினான். அவற்றில் ஒரு திர்ஹம் மட்டும் ஹராம் என்றால் அந்த ஆடையை அணிந்து தொழும் எந்த தொழுகையும் அங்கீகரிக்கப்படாது’ என்ற ஹதீஸும் அதை மிகத் தெளிவாகவே நிரூபிக்கின்றன.

அதாவது, நூற்றுக்கு பத்து சதவீதம் ஹராம் கலந்துவிட்டால் கூட அதை அணிந்து தொழுதால் தொழுகையே கூடாது என்பது இஸ்லாமியக் கொள்கை. ஆனாலும், முஸ்லீம்களில் பலர் ஹராமையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து வேதனைப்படாமல் இருக்க முடியுமா? அவர்களின் வணக்கம் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும்?

பொதுவாக படித்தவர்கள், நல்ல வேலைகளில் கைநிறைய சம்பளம் வாங்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், அந்த வேலையில் ஹராம் கலந்திருப்பது பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. அரசுத்துறைகளை எடுத்துக்கொண்டால் லஞ்சம் வாங்காத துறை என்று எதுவுமே இல்லை. சம்பளம் மட்டுமே வைத்து வாழ்க்கையை நடத்த எந்த அரசு ஊழியரும் தயாராக இல்லை.

அதுபோல் உத்தியயோகங்களிலேயே மிகவும் அதிக சம்பளம் தரக்கூடிய துறை என்றால் அது வங்கித்துறைதான். எனவே பேங்கில் வேலை பார்ப்பதற்கு – பியூன் வேலையாவது பார்ப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. தற்போது இஞ்சினீயர் வேலையும் நல்ல சம்பளம் கிடைப்பதால் வங்கி வேலையைவிட அதற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. எனினும் சமீபகாலம் வரை வங்கித்துறைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை மற்ற துறைகளைவிட அதிக அளவில் உள்ளது. முஸ்லீம்களிலும் சிலர் வங்கித்துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் ஊதியம் ஹலாலா, ஹராமா என்ற சிந்தனை சமுதாயத்தில் பொதுவாக இல்லை என்றே சொல்லலாம்.

 சாபத்துக்குரியோர் 

வட்டி வாங்குவது ஹராம் என்று தெரிந்து வைத்திருப்போர் வங்கியில் பணிபுரிவது ஹராம் என்று புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். நாம் என்ன வட்டியா வாங்குகின்றோம், வேலைதானே செய்கிறோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் வட்டி வாங்குவோர், கொடுப்போர், அதற்கு சாட்சியாக இருப்போர், (வட்டிக்)கணக்கு எழுதுவோர் இவர்கள் அனைவருமே சாபத்துக்குரியவர்கள் என்ற ஹதீஸ்தான் வட்டி பாடத்தில் இடம்பெறும் முதல் ஹதீஸாகும். (புகாரி. முஸ்லிம்)

இவ்வாறு இருக்க வட்டியையே வருமானமாகக் கொண்ட வங்கியில் பணிபுரிவது எப்படி ஹலாலாகும்? இது நூறு சதம் ஹராம் என்பதில் என்ன சந்தேகம்? முஸ்லீம்கள் இதைத் தவிர்க்க வேண்டாமா? வேறு சில பிரச்சனைகளில் சிலர் சொல்வது போல் கதைக்குதவாத சப்பைக்கட்டுகளை சொல்லியாவது வங்கித்தொழிலை ஹலாலாக்குவதற்கு இதுவரை யாரும் எங்கும் முன்வந்ததில்லை என்பதிலிருந்தாவது இது முழுக்க முழக்க ஹராமான வருமானம் என்பதை உணர்ந்து இனியேனும் அதிலிருந்து விலகிட வேண்டும்.

 என்றைக்கேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? 

ஹராம் கலந்து விடுமோ என்ற அச்சத்தில் ஹலாலைக்கூட தவிர்க்க வேண்டியது அவசியம் என்பதால் தங்களின் வங்கி உத்தியோகத்தை தூக்கியெறிந்த ஒருசிலர் இல்லாமலில்லை. இருந்தாலும் அப்படிப்பட்டவர்கள் ஒருசதவீதம்கூட இல்லை. அடுத்து ஊர்ப்பணத்தை கணக்குவழக்கின்றி விழுங்கும் பேராசைப்பிடித்த ஊர்த்தலைவர்களும், பொது சொத்தை தன்சொத்தாக பாவித்து வரும் அதிகாரம் செலுத்துவோரும் தங்களது தொழுகைகள் எதுவுமே அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை என்றைக்கேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா?

 மறுபடியம் நினைவு படுத்துகிறோம் 

ஹராமான வருமானத்திலேயே தம் வாழ்க்கையை நடத்துபவர்கள் தக்வா என்ற வட்டத்திற்குள் நுழையவே முடியாது. பிறர் பார்ப்பதற்கு பக்திப் பழங்களாக அவர்கள் பவனி வந்தாலும் சரியே. ஏனெனில், ‘ஹராமான வருமானத்தால் வளர்ந்த உடம்பு நரகத்திற்கே செல்ல அதிக தகுதியானது’ என்ற நபிமொழியும் ‘ஒருவன் ஒரு ஆடையை பத்து திர்ஹம் கொடுத்து வாங்கினான். அவற்றில் ஒரு திர்ஹம் மட்டும் ஹராம் என்றால் அந்த ஆடையை அணிந்து தொழும் எந்த தொழுகையும் அங்கீகரிக்கப்படாது’ என்ற ஹதீஸும் அதை மிகத் தெளிவாகவே நிரூபிக்கின்றன.

www.nidur.info

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

49 − = 42

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb