அப்படி நீங்கள் முன் வந்து செயல் படுத்தினால், இன்னும் பத்து ஆண்டுகளில் இன்ஷா அல்லாஹ், மவ்லவிகளாகிய நீங்கள், மார்க்கம் அறியாத முத்தவல்லிகள், தலைவர்கள் முன்னால் கைகட்டி வாய் பொத்தி, அவர்கள் காலால் இடும் கட்டளைகளை நீங்கள் தலையால் நிறைவேற்றிவரும் நிலைமாறி,
அந்த முத்தவல்லிகளிலிருந்து, தலைவர்களிலிருந்து, செல்வந்தர்களிலிருந்து அனைவரும், மார்க்க அறிஞர்கள் முன் கைகட்டி, வாய்பொத்தி, அந்த அறிஞர்கள் காலால் இடும் கட்டளைகளை அவர்கள் தலையால் நிறை வேற்றிடும் அற்புதமான நிலை உருவாகிவிடும்.
இன்றைய மவ்லவிகளாகிய உங்களின் இவ்வுலக வாழ்க்கை நிலை பாழ்பட்டதாக ஆகிவிட்டாலும், உங்களின் மறுஉலக வாழ்க்கையாவது சீர்படுவதுடன் எதிர்கால மார்க்க அறிஞர்களின் எதிர்கால நிலையாவது உயரும். மவ்லவிகளாகிய நீங்கள் தயாராவீர்களா?
இந்த கருத்துகளை நாம் மவ்லவி -ஆலிம்களாகிய உங்கள் அனைவரையும் விட பெரிய அறிவாளி என்ற பெருமையுடனோ, அகம்பாவத்துடனோ, ஆணவத்துடனோ எடுத்து வைக்கவில்லை. வல்லமைமிக்க அல்லாஹ் அதிலிருந்து எம்மைப் பாதுகாப்பானாக.
ஆனால், எம்மை விட, மவ்லவி -ஆலிம்களாகிய உங்கள் அனைவரையும் விட, நீங்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள அவுலியாக்கள், இமாம்கள், நாதாக்கள், நபிதோழர்கள், நபிமார்கள் ஆக ஜின், மனித படைப்பினங்கள் அனைவரையும் விட பூரணத்துவம் நிறைந்த மிகப் பெரிய அறிவாளி நம்முடைய எஜமானன் அல்லாஹ் என்றும், அடுத்து அந்த எஜமானன் அல்லாஹ்வுடன் வஹியின் தொடர்புடன் இருந்த நபிமார்கள், ஜின், மனித படைப்புகளிலேயே பெரிய அறிவாளிகள் என்றும் நாம் உறுதியாக நம்புவதால் – ஈமான் கொண்டிருப்பதால், அல்லாஹ்வுடைய கலமாகிய அல்குர்ஆனிலுள்ள “முஹ்க்கமாத்” வசனங்களிலும், அவற்றை செயலில் நடைமுறைப்படுத்திக் காட்டிய இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னத்தை நமக்கு அறியத்தரும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் இருப்பதை அப்படியே ஏற்று நாமும், நீங்களும் செயல்பட வேண்டும்,
மேல் விளக்கம், சுய விளக்கம் என்ற பெயரால் அவற்றைத் திரிக்க, வளைக்க, மறைக்க முற்படக் கூடாது; விளக்கம் கொடுக்கும் அதிகாரம் நபிமார்கள் அல்லாதவர்களுக்கு இல்லை. அது அல்குர்ஆன் பகரா 2:159, 161, 162 எச்சரிக்கைப்படி எம்மையும், உங்களையும் மீளா நரகத்தில் கொண்டு சேர்த்துவிடும் என்றே மிகக் கடுமையாக எச்சரிக்கிறோம்.
அல்லாஹ்வுடைய சொல்லுக்கும், அவனது தூதருடைய சொல்லுக்கும் மாற்றுக் கருத்துக் கொள்வது பகிரங்கமான வழி கேடு என்றும், அது நிரந்தர நரகில் சேர்க்கும் என்று கூறும் அல்குர்ஆன் 33:36, 66, 67, 68 எச்சரிக்கையின் அடிப்படையிலேயும் கூறுகிறோம். அல்லாஹ்வுக்குப் பயந்து சிந்தித்து முடிவெடுக்க முன் வாருங்கள்.
இதனை ஒரு நற்சிந்தனையாகக் கொண்டு ஆக்கபூர்வமான, வெற்றி தரும் நல்ல முடிவுக்கு வாருங்கள்.
– K..M.H. அபூ அப்தில்லாஹ்
source: http://www.annajaath.com/?p=31