[ அல்குர்ஆன் 18:54 ஐ படித்துப் பாருங்கள். குர்ஆனில் ஒவ்வொரு உதாரணத்தையும் மனிதர்களுக்காக அல்லாஹ் மேல் விளக்கம் தேவையில்லாத நிலையில் விளக்கியுள்ளதாகக் கூறி, ஆயினும் மவ்லவிகளாகிய உங்களைப் போன்ற மனிதர்கள் அதிகமாக வீண் தர்க்கம் செய்பவர்களாக இருக்கிறீர்கள் என கண்டிக்கிறான்.
நீங்கள் அனைவரும் சிறிது நிதானமாகச் சிந்திக்க வேண்டும். மார்க்கப் பணியை சுயமரியாதையின்றி செய்து, பள்ளி முத்தவல்லிகள், மதரஸா நிர்வாகிகள் முன்னிலையில் கைகட்டி, பணிந்து கையேந்தி நிற்கும் மிகக் கேவலமான நிலை இருக்கிறது. மார்க்கத்தின் அடிப்படையே தெரியாத பணம் படைத்த முத்தவல்லிகள், தலைவர்கள் இடும் கட்டளையை ஏற்று மார்க்க முரணான செயல்களை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள்?
அவர்களது அராஜக, குர்ஆன், ஹதீஸுக்கு முரணான கட்டளைகளை நிறைவேற்றாவிட்டால், பணி நீக்கம் என்ற பெயரால் பந்தாடப்படுகிறீர்கள்! இந்த இழிவுகளையும், கேவலங்களையும், ஊர்ஊராக அலையும் அவலங்களையும் எப்படி உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது? பிழைப்புக்கு வேறு வழி தெரியாத காரணத்தால், வறுமை உங்களை பயமுறுத்துவதால்தானே இத்தனை இழிவுகளையும், கேவலங்களையும், நாடோடி வாழ்க்கையையும் சகித்துக் கொண்டு வாழ்கிறீர்கள்?
மவ்லவிகளாகிய, உலமாக்களாகிய, அல்லாமாக்களாகி, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே அல்லாஹ்வை அஞ்சியும், பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உணவளிப்பதுபோல் உங்களுக்கும் நிச்சயமாக உணவளிப்பான் என்று உறுதியாக அந்த அல்லாஹ் மீது ஆதரவும் வைப்பவர்களாக இருந்தால், அல்குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நடுநிலையோடு, அந்த இறைவாக்குகள் நேரடியாக, தெளிவாக என்ன கூறுகின்றன என்பதை அப்படியே ஏற்று அதன்படி நடக்க முன் வாருங்கள்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு; லாஹிர் (வெளிப்படையான) அர்த்தங்கள் உண்டு; பாத்தின் (அந்தரங்க) அர்த்தங்கள் உண்டு; பதினாறு கலை கற்றவர்களால்தான் குர்ஆன், ஹதீஸை விளங்க முடியும் போன்ற ஏமாற்றுப் பிதற்றல்களை விட்டொழியுங்கள். இல்லை என்றால் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் நீங்கள் தப்பவே முடியாது.
அல்குர்ஆன் வசனங்களில் இவை எல்லாம் குறைஷ் காஃபிர்களுக்காக இறங்கியவை; இவை எல்லாம் யூதர்களுக்காக இறங்கியவை; இவையெல்லாம் கிறிஸ்தவர்களுக்காக இறங்கியவை; இவையெல்லாம் மஜூஸிகளுக்காக இறங்கியவை; இவை அனைத்தும் எங்களைக் கட்டுப்படுத்தாது, நாங்கள் மவ்லவிகள் – அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள், அல்லாஹ் எங்களைத் தண்டிக்க மாட்டான் என்று யூதர்கள் சொன்னது போல் (பார்க்க: 2:80,81) நீங்களும் அகம்பாவத்துடன் சொன்னால், உங்களைப் பீடித்துள்ள நீங்கள் மீளத்துடிக்கும் அவலங்களிலிருந்து இவ்வுலகிலும் உலகம் அழியும் வரை மீட்சியில்லை. மறுமையிலும் கடும் தண்டனையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது.
இந்த மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மவ்லானாக்கள், அல்குர்ஆன் சுமார் ஐம்பது (50) இடங்களில் மிகக் கடுமையாக எச்சரித்துள்ள எச்சரிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு, முதுகுக்கு பின்னால் தூக்கி எறிந்துவிட்டு, ஹராமான வழியில் மார்க்கத்தை மதமாக்கி அதனையே பிழைப்பாகக் கொண்டிருப்பதால், அவர்களே மனாருல் ஹுதா ஜூலை 2007 பக்கம் 17’ல் குறிப்பிட்டுள்ள ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்’ என பட்டியலிட்டிருக்கும் 11 கடும் விளைவுகளோடு, அவர்களே குறிப்பிட்டுள்ளபடி இன்னும் பல ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான் ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன், ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது என எழுதி தங்களை மறந்து ஊருக்கு உபதேசம் செய்துள்ளார்கள்.]
உண்மையிலேயே உலமாக்களுக்கு இறைவனுடைய அச்சம் இருந்தால்!
இந்த மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மவ்லானாக்கள், அல்குர்ஆன் சுமார் ஐம்பது (50) இடங்களில் மிகக் கடுமையாக எச்சரித்துள்ள எச்சரிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு, முதுகுக்கு பின்னால் தூக்கி எறிந்துவிட்டு, ஹராமான வழியில் மார்க்கத்தை மதமாக்கி அதனையே பிழைப்பாகக் கொண்டிருப்பதால், அவர்களே மனாருல் ஹுதா ஜூலை 2007 பக்கம் 17’ல் குறிப்பிட்டுள்ள ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்’ என பட்டியலிட்டிருக்கும் 11 கடும் விளைவுகளோடு, அவர்களே குறிப்பிட்டுள்ளபடி இன்னும் பல ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான் ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன், ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது என எழுதி தங்களை மறந்து ஊருக்கு உபதேசம் செய்துள்ளார்கள்.
அல்குர்ஆன் 2:44, 61:3, 62:5 அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கைகளை மவ்லவிகள் கண்டு கொள்வதாக இல்லை; தவ்றாத் கொடுக்கப்பட்டு அதை ஓதுவதன்றி அதன்படி செயல்படாத யூத ஆலிம்களை, ஏடுகளைச் சுமக்கும் கழுதைகள் என்று அல்லாஹ் கடிந்து கூறுவது போல், அல்குர்ஆன் கொடுக்கப்பட்டு அதை ஓதுவதன்றி அதன்படி செயல்படாமல், முன்னோர்களின் கற்பனைகளின்படி செயல்படும் இந்த மவ்லவிகளும் ஏடுகளைச் சுமக்கும் கழுதைகள் என்பதில் சந்தேகமுண்டா? சுய விளக்கங்களைக் கொண்டு, அல்லாஹ்வின் வசனங் களைப் பொய்ப்பிக்கும் இந்த மவ்லவிகளின் உதாரணம் மிகக் கெட்டதாகும் என்பதை மறுக்க முடியுமா? (மீண்டும் பார்க்க 62:5)
மவ்லவிகள், ஆலிம்கள் அல்லாமாக்கள், மவ்லானாக்கள் எனக் கூறிக் கொள்ளும் இவர்கள் மக்களிடம் மிகக் கடுமையாக எச்சரிக்கும் ஹரா மான சம்பாத்தியங்கள் அனைத்தையும் பற்றி அல்குர் ஆனில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப் படுகின்றன. ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளும் ஹராமான சம்பாத்தியத்தைப் பற்றி சுமார் ஐம்பது (50) இடங்களில் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹராம்கள் அனைத்தையும் ஒருங்கே ஒருவன் செய்தாலும் மார்க்கத்தைப் பிழைப்பக்கிக் கொண்டிருக்கும் இந்த மவ்லவிகளை விட குறைந்த அளவு பாவியாகத்தான் இருப்பான் போலும். இந்த எச்சரிக்கைகள் இந்த மவ்லவிகளின் உள்ளங்களைத் தொடுவதாக இல்லை. காரணம் அல்லாஹ் 5:13ல் சொல்லுவது போல் அவர்களின் உள்ளங்கள் ஹராமான உணவால் இறுகிவிட்டன. இந்த 5:13 கூறும் இழிகுணங்கள் அனைத்தும் இவர்களிடம் காணப்படுகின்றன.
மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வதால் ஏற்படும் பெரும் கேடுகளை கீழ்வரும் இறைவாக்குகளை படித்துப் பார்த்து விளங்கிக் கொள்ள முடியும்.
2:41,78,79,109,146,159,161,162,174,175,176,188, 3:77,78,187,188, 4:44,46, 5:13,62,63, 6:20,21,26,27,91, 9:9,34, 10:73, 11:18-22, 31:6,
மார்க்கப் பணிக்கு கூலி வாங்குவது ஹராம் என்பதைக் கூறும் இறை வாக்குகள். 11:29,51, 25:57, 26:109. 127,145, 164,180, 34:47, 36:21, 38:86, 52:40, 68:46.
மார்க்கப் பணிக்கு கூலி வாங்குகிறவர்கள் நேர்வழியில் இல்லை. கோணல் வழிகளில் இருக்கிறார்கள் என்பதை 36:21 இறைவாக்கு உறுதிப் படுத்துகிறது.
மக்களில் மிகப் பெருந் தொகையினர் வழிகேட்டில் சென்று நரகை நிரப்புவார்கள் என்பதை 32:13, 11:119 இறைவாக்குகளும், அதிகமான மக்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள், நேர்வழியை விளங்கமாட்டார்கள், சிந்திக்கமாட்டார்கள், உண்மையை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் எனக் கூறும் பல இறைவாக்குகளும் உறுதிப் படுத்துகின்றன. நேர்வழி நடந்து சுவர்க்கம் அடைபவர்கள் மிகமிக சொற்பமானவர்கள். அந்தச் சொற்பமான நேர்வழி நடக்கும் முஸ்லிம்களும் இந்த மவ்லவிகள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
எனவே மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளும் இந்த மவ்லவிகள் வழிகேட்டில் சென்று நரகை நிரப்பும் முஸ்லிம்களின் ஆதரவைப் பெறும் கட்டாயத்தில் – அவசியத்தில் இருக்கிறார்கள். நரகை நிரப்பும் பெருங்கொண்ட முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதாக இருந்தால் வழிகேடுகளைத்தான், கோணல் வழிகளைத்தான் நேர்வழி என்று அறிந்த நிலையிலேயே அவர்களிடம் சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஷைத்தானின் தூண்டுதலால், மக்களின் மனோ இச்சையும் வழிகேடுகளைத்தான் நேர்வழியாக அவர்களுக்குக் காட்டும்.
இந்த இடத்தில் நமது ஆதித் தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையைவிட ஷைத்தானின் துர்போதனைக்கு, அவனின் மதிமயக்கும் ஆசை வார்த்தையில் மயங்கியதை – தவறிழைத்ததை இங்கு நமது கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தனைக்கும் ஷைத்தான் தனக்கும், தனது சந்ததிகளுக்கும் பகிரங்கமான விரோதி என்பதை அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைக் கொண்டும், தனது சொந்த அனுபவத்திலும் கண்டு கொண்டவர்கள். (பார்க்க 2:30-39, 7:11-25, 15: 30-43, 18:50,20:116-127 26:95, 34:20, 38:74-85) அந்த ஆதத்தையே மதி மயங்கச் செய்து, மனோ இச்சைக்கு வழிப்பட்டு, அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையை மீறச் செய்தான் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? இன்னும் அல்குர்ஆனில் ஷைத்தானைப் பற்றிய எச்சரிக்கை களைப் பாருங்கள்.
2:168,208,268, 4:38,60,119,120, 6:43,142, 7:201,202 8:48, 14:22, 16:63, 17:27,53, 61-65, 22:3, 24:21, 25:27-30, 29:38, 31:21, 35:6, 36:59-65, 41:36, 43:62, 47:25, 58:19, 59:16 ஷைத்தானைப் பற்றிய இந்த அனைத்து அல்குர்ஆன் வசனங்களையும் நடுநிலை யோடு, பொறுமையோடு நிதானமாகப் படித்து, உணர்கிறவர்கள், ஷைத்தான் எப்படி எல்லாம் சாகசங்கள் செய்து மனிதனை மதிமயங்கச் செய்து அவன் காட்டும் கோணல் வழிகளை நேர்வழி போல் நம்பச் செய்து கழுத்தறுக்கிறான்; அதற்கு மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்டவர்கள், கேவலம் இந்த அற்ப உலக வாழ்க்கைக்காக, அந்த ஷைத் தானின் துர்போதனைகளையே நற்போ தனைகளாக மக்களை நம்பச் செய்து அவர்களை வழிகேட்டில் இழுத்துச் சென்று நரகில் தள்ளுகிறார்கள் என்பதை எளிதில் விளங்க முடியும்.
மார்க்கத்தைக் கொண்டு பணம் பண்ணும் இந்த மவ்லவிகள் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் மக்களை நேர்வழியிலிருந்து வழிகேட்டில் இழுத்துச் செல்கிறார்கள் என்பதை, அல்குர்ஆன் நேரடியாக, தெளிவாகச் சொல்லும் ஒரு கருத்தை மாற்றி இதை இப்படி விளங்க வேண்டும், அப்படி விளங்க வேண்டும், என்று கூறி அந்த வசனத்தின் அசல் கருத்தை மாற்றி விடுவார்கள். இது 2:159, 161, 162 இறைவாக்குகள்படி பெருங்குற்றம் என்பதை உணர மாட்டார்கள்.
இதற்கு இந்த ஆக்கத்தை எழுதிக் கொண்டிருந்தபோதே நடந்த ஒரு சம்பவத்தை ஆதாரமாகத் தருகிறோம். இரண்டு காதியானி சகோதரர்கள் எம்மை சந்திக்க வந்தார்கள். அவர்களது பேச்சில் பல ஆதம்கள் படைக்கப்பட்டனர் என்ற கருத்தை எடுத்து வைத்தனர். உடனே நாம் எமது வாதத்தை வைக்காமல் அல்குர் ஆன் 4:1 இறைவாக்கை எடுத்துக் காட்டி, அதில் ஒட்டுமொத்த மனிதர்களையும் அழைத்து ஒரே ஆன்மாவிலிருந்து உங்களைப் பல்கிப் பெருகச் செய்தான் என்று அல்லாஹ் நேரடியாகவே கூறுகிறான் என்று அல்குர்ஆனில் இருப்பதை அப்படியே எடுத்து வைத்தோம். உடனே அவர்கள் இந்த குர்ஆன் வசனத்தில் உள்ளது நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் நீங்கள் நஃப்ஸ் ஆன்மா என்பதைத் தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இங்கு நஃப்ஸ் – ஆன்மா என்று குறிப்பிடுவது ஆதத்தை அல்ல; அல்லாஹ்வையே குறிப்பிடுகிறது; மனிதனை அல்லாஹ் தனது சாயலில் படைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறான் என்று சுய விளக்கம் கொடுத்து ஷைத்தானைப் பின்பற்றினார்கள். இப்படி அவர்கள் கூறியதும் எமக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. தயவு செய்து உங்களின் சுய விளக்கத்தை நிறுத்துங்கள். உங்களோடு பேசுவதில் பலனில்லை. “அல்லாஹ்வின் அடியார்கள், மூடர்கள் அவர்களுடன் வார்த்தையாட முற்பட்டால் ‘ஸலாம்’ சொல்லி விலகி விடுவார்கள்” என்ற 25:63 அல்குர்ஆனின் கட்டளையை எடுத்துக் கூறி முற்றுப்புள்ளி வைத்தோம்.
இந்த 4:1 வசனத்தில் அல்லாஹ் “உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவிலிருந்தே படைத்தான்; அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்’’ என்று நேரடியாக கூறுகிறான். காதியானிகளின் சுய விளக்கப்படி அந்த ஆன்மா அல்லாஹ் என்றால், அல்லாஹ் தன்னிலிருந்தே தன் மனைவியைப் படைத்ததாகப் பொருள்படுகிறதே, உலக மக்கள் அனைவரும் அல்லாஹ் பெற்றெடுத்த பிள்ளைகள் என பொருள்படுகிறதே (நவூதுபில்லாஹ்) இது எவ்வளவு அபத்தமான விளக்கம். அல்லாஹ் எவரையும் பெறவுமில்லை என்ற 112:3 இறை வாக்குக்கு முரண்படுகிறதே! படைத்த இறைவனையே மறுக்கும், அவனுக்கு இணைவைக்கும் கொடிய குற்றம் என்பதை காதியானிகள் ஒருபோதும் விளங்க மாட்டார்கள். காரணம் அவர்கள் பெற்றிருக்கும் போதனை அப்படித்தான். அல்குர் ஆனில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு விளக்கியுள்ளதை அவர்கள் ஏற்க மாட்டார்கள். அல்லாஹ்வின் விளக்கத்திற்கே மேல் விளக்கம் கொடுக்கும் அல்லாஹ்வை விட ஆற்றல்மிக்க அறிவாளிகள் (நவூது பில்லாஹ்) இந்த காதியானிகள்.
காதியானிகள் மட்டுமல்ல மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகள் அனைவருமே அல்லாஹ், அவனது தூதர் விளக்கியுள்ளது உங்களுக்குப் புரியாது-விளங்காது; அதைப்புரிய வைக்கும் – விளங்க வைக்கும் ஆற்றல் எங்களுக்கே இருக்கிறது; நாங்கள் அல்லாஹ்வை விட, அவனது தூதரைவிட ஆற்றல் மிக்கவர்கள் (நவூதுபில்லாஹ்) என்ற மேல் எண்ணத்தில் அல்குர்ஆனிலுள்ள நேரடியான – தெளிவான கருத்துக்களை திரித்து, வளைத்து, மறைத்து சுய விளக்கங்கள் கொடுத்து மக்களை வழி கெடுத்து நரகில் தள்ளுவார்கள். ஷைத்தானும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதால், அந்த ஷைத்தானின் வலையில் சிக்கி இருக்கும் பெருங் கொண்ட மக்களும் இந்த மவ்லவிகளின் பின்னால் கண்மூடிச் சென்று நரகில் விழுவார்கள், விளக்கில் விழும் விட்டில்களைப் போல்.
இப்போது இந்த மவ்லவிகளிடமும், உலமா சபைகளிடமும் நாம் பகிரங்கமாகக் கேட்கிறோம். அல்லாஹ் மக்களுக்காக அல்குர்ஆனில் விளக்கியுள்ளதையும், இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்காக நடைமுறைப்படுத்திக் காட்டியதையும், உலகிலுள்ள அனைத்து மக்களும் அவரவர்களது மொழியில் படித்து அல்லது படிக்கக் கேட்டு விளங்கமுடியும் என்று ஒப்புக் கொள்ளக் கூடியவர்கள் உங்களில் யாராவது உண்டா? அவற்றை நாங்கள் விளக்கித்தான் நீங்கள் விளங்க முடியும் என்று கூறக்கூடியவர்களே நீங்கள் அனைவரும். அதாவது அல்லாஹ்வை விட, அல்லாஹ்வின் தூதரைவிட மக்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் எங்களுக்கே இருக்கிறது (நவூதுபில்லாஹ்) என்று ஆணவம் பேசும் நிலையில்தானே நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்.
இந்த ஆணவம் எதுவரை உங்களிடம் காணப்படுகிறதோ அது வரை இந்த உலகிலும் உங்களுக்கு இழிவுதான். மறுமையிலும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் உலக முடிவு நாள் வரையுள்ள மக்கள் அனைவர் முன்னாலும் இழிவை அடைவதோடு மிகக் கடுமையான வேதனையை அனுபவிக்க நேரிடும். நீங்கள் அனைவரும் சிறிது நிதானமாகச் சிந்திக்க வேண்டும். மார்க்கப் பணியை கூலிக்காகச் செய்து, அந்த கூலிக்காகத்தானே பள்ளி முத்தவல்லிகள், மதரஸா நிர்வாகிகள் முன்னிலையில் கைகட்டி, பணிந்து கையேந்தி நிற்கும் மிகக் கேவலமான நிலை இருக்கிறது.
மார்க்கத்தின் அடிப்படையே தெரியாத பணம் படைத்த முத்தவல்லிகள், தலைவர்கள் இடும் கட்டளையை ஏற்று மார்க்க முரணான செயல்களை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள்? அவர்களது அராஜக, குர்ஆன், ஹதீஸுக்கு முரணான கட்டளைகளை நிறைவேற்றாவிட்டால், பணி நீக்கம் என்ற பெயரால் பந்தாடப்படுகிறீர்கள்! இந்த இழிவுகளையும், கேவலங்களையும், ஊர்ஊராக அலையும் அவலங்களையும் எப்படி உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது? பிழைப்புக்கு வேறு வழி தெரியாத காரணத்தால், வறுமை உங்களை பயமுறுத்துவதால்தானே இத்தனை இழிவுகளையும், கேவலங்களையும், நாடோடி வாழ்க்கையையும் சகித்துக் கொண்டு வாழ்கிறீர்கள்? இந்த கூலிக்காகத்தானே மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் அல்லாஹ்வைவிட, அவனது தூதரைவிட, உங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று ஆணவத்துடன் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.
மக்களிடம் கையேந்துவதைத் தவிர்த்து, எப்போது நீங்கள், நீங்களே உங்கள் மனாருல்ஹுதா பத்திரிக்கையில் எழுதி இருப்பது போல்,உங்கள் கைகளால் உழைத்து உண்ண முன் வருகிறீர்களோ அன்றுதான் உங்களைப் பிடித்துள்ள பீடைகள் அகலும். போலிக் கண்ணியம் போய் உண்மையான கண்ணியம் கிடைக்கும். அல்லாஹ்வை விட, அவனது தூதரைவிட மக்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் எங்களுக்கே இருக்கிறது என்ற உங்களின் மமதை – ஆணவம் – தற்பெருமை அகலும். குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்லும் நேர்மை உண்டாகும்.
இதற்கு மவ்லவிகளாகிய, உலமா சபையினராகிய நீங்கள் முன்வந்தால், மக்களிடம் கையேந்தாமல், ஹலாலான முறையில் உங்கள் கைகளால் உழைத்து உண்ணும் உயர்ந்த நிலையை அடைய, அதற்குரிய திட்டங்களை தீட்ட இறையருளால் வழி பிறக்கும். அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் வழி காட்டல்படி அதாவது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி, தொழில் கல்வி இம்மூன்றும் இணைந்த கல்வித் திட்டத்தை ஏற்று அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மவ்லவிகளாகிய நீங்கள் வீழ்ந்து கிடக்கும் அதல பாதாளத்திலிருந்து கரையேற முடியும்.
அதற்கு மாறாக மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள அல்குர்ஆன் வசனங்களில் இவை எல்லாம் குறைஷ் காஃபிர்களுக்காக இறங்கியவை; இவை எல்லாம் யூதர்களுக்காக இறங்கியவை; இவையெல்லாம் கிறிஸ்தவர்களுக்காக இறங்கியவை; இவையெல்லாம் மஜூஸிகளுக்காக இறங்கியவை; இவை அனைத்தும் எங்களைக் கட்டுப்படுத்தாது, நாங்கள் மவ்லவிகள் – அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள், அல்லாஹ் எங்களைத் தண்டிக்க மாட்டான் என்று யூதர்கள் சொன்னது போல் (பார்க்க: 2:80,81) நீங்களும் அகம்பாவத்துடன் சொன்னால், உங்களைப் பீடித்துள்ள நீங்கள் மீளத்துடிக்கும் அவலங்களிலிருந்து இவ்வுலகிலும் உலகம் அழியும் வரை மீட்சியில்லை. மறுமையிலும் கடும் தண்டனையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது.
யூத, கிறிஸ்தவ, காஃபிர்கள் விபச்சாரம் செய்தால் தண்டனை உண்டு; அதே சமயம் நாங்கள் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை; அவர்கள் திருடினால் தண்டனை உண்டு; நாங்கள் திருடினால் தண்டனை இல்லை; அவர்கள் கொலை செய்தால் தண்டனை உண்டு; நாங்கள் கொலை செய்தால் தண்டனை இல்லை; லூத் அலைஹிஸ்ஸலாம் சமூகம் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டதுதான் குற்றம்; நாங்கள் அதில் ஈடுபடுவது குற்றமில்லை என்று கூறினால் அது எவ்வளவு பெரிய அறிவீனமோ, அதைவிட மிகப்பெருத்த அறிவீனம் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வது, யூத, கிறிஸ்தவ, காஃபிர்களுக்கே தடை செய்யப்பட்டிருந்தது. நாங்கள் தாராளமாக மார்க்கத்தை எங்களின் பிழைப்புக்குரிய வழியாகக் கொள்ளலாம் என்று விதண்டாவாதம் செய்வதாகும்.
அன்று கலீஃபாக்களுக்கும், கவர்னர்களுக்கும் அரசு கருவூலத்திலிருந்து சம்பளம் கொடுத்ததை இன்று நீங்கள் மார்க்கப் பணிக்காக வாங்கும் கூலிக்கு ஒப்பிட்டுப் பேசுவது அதை விட மடமையாகும். உண்மையில் அந்த கலீஃபாக்களுக்கும், கவர்னர்களுக்கும் அவர்கள் செய்த மார்க்கப் பணிக்காக சம்பளம் கொடுக்கப் பட்டிருந்தால், அன்றிருந்த நபிதோழர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் மார்க்கப் பணி செய்தார்கள். அவர்கள் இமாமத் செய்வதற்காகக் கூலி கொடுக்கப்பட்டிருந்தால், அன்று கவர்னர், கலீஃபா வாக இல்லாமல் மற்ற பள்ளிகளில் இமாமத் செய்த இமாம்களுக்கு சம்பளம் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி ஒரேயொரு ஆதாரத்தையாவது உங்களால் காட்ட முடியுமா? நிச்சயமாக காட்ட முடியாது; அவர்கள் கலீஃபாக்களாக, கவர்னர்களாக மக்களின் இவ்வுலகக் காரியங்களை கவனித்து வந்ததால், அதற்காக மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டார்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
முழு நேரப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என்று கூறியும் நீங்கள் கூலி வாங்க முடியாது. நபிமார்கள் அனைவரும் உங்களைவிட உண்மையிலேயே முழுநேரம் மார்க்கப்பணி புரிந்தார்கள். அப்படியானால் அந்த நபிமார்களே உங்களைவிட கூலி வாங்கத் தகுதி படைத்தவர்கள். அந்த நபிமார்களுக்குத் தான் கூலி வாங்கத் தடை விதித்து அல்லாஹ் எச்சரித்துள்ளான். காரணம் இவ்வுலக வாழ்க் கைக்குரிய தேவையான பொருளாதார தேடலை, மார்க்கத்துடன் இணைத்து விட்டால், மார்க்கத்தை உள்ளது உள்ளபடி சொல்ல முடியாது; திரித்தல், வளைத்தல், மறைத்தல் போன்ற அனைத்து வழிகேடுகளும் வந்து புகுந்து விடும். வழிகேட்டில் செல்லும் மக்களை திருப்திப்படுத்தி அவர்களிட மிருந்து ஆதாயம் அடைய வழி கேடுகளை நேர்வழியாகக் காட்டும் கட்டாயம் ஏற்பட்டு விடும் என்ற காரணத்தினால் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மார்க்கப் பணிக்கு, இமாமத்துக்கு கூலி வாங்குவதை மிக மிகக் கடுமையான குற்றமாக சுமார் ஐம்பது இடங்களில் பல்வேறு கோணங்களில் கூறி தடுத்துள்ளான்.
மவ்லவிகளாகிய, உலமாக்களாகிய, அல்லாமாக்களாகி, உலமா சபையினராகிய நீங்கள் அனைவரும் உண்மையிலேயே அல்லாஹ்வை அஞ்சியும், பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உணவளிப்பதுபோல் உங்களுக்கும் நிச்சயமாக உணவளிப்பான் என்று உறுதியாக அந்த அல்லாஹ் மீது ஆதரவும் வைப்பவர்களாக இருந்தால், மேலே நாம் எடுத்தெழுதியுள்ள அல்குர்ஆன் வசனங்கள் அனைத் தையும் நடுநிலையோடு, நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்கள், நாதாக்கள் போன்றோர்களின் மேல் விளக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு, அந்த இறைவாக்குகள் நேரடியாக, தெளிவாக என்ன கூறுகின்றன என்பதை அப்படியே ஏற்று அதன்படி நடக்க முன் வாருங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு; லாஹிர் (வெளிப்படையான) அர்த்தங்கள் உண்டு; பாத்தின் (அந்த ரங்க) அர்த்தங்கள் உண்டு; பதினாறு கலை கற்றவர்களால்தான் குர்ஆன், ஹதீஸை விளங்க முடியும் போன்ற ஏமாற்றுப் பிதற்றல்களை விட்டொழியுங்கள். இல்லை என்றால் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் நீங்கள் தப்பவே முடியாது.
இதற்குப் பின்னரும் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நாதாக்கள், வலிமார்கள், முன்னோர்கள் கூறி இருப்பது, எழுதி வைத்திருப்பதுதான் எங்களுக்கு வேத வாக்கு-அல்குர்ஆன் நேரடி கருத்துக் களை விட, ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் நேரடி கருத்துக்களைவிட எங்கள் முன்னோர்களின் சுயகருத்துக் கள்தான் மேலானவை, சரியானவை என்பதுதான் உங்களின் முடிவாக இருந்தால், முன்னோர்களின் முடிவையே சிறந்த முடிவாக எடுத்து நடந்தவர்களின் நாளை மறுமையின் நிலை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறி இருப்பதை கீழ்வரும் இறை வாக்கு களை படித்து விளங்கி படிப்பினை பெற முன் வாருங்கள். அவை வருமாறு:
2:170, 5:104, 7:28,70,71, 10:78, 11:62,87,109, 12:40, 14:10, 21:53,54, 26:73,74,76, 31:21, 34:43, 37:17,69, 43:22,23, 53:23, 56:48
இறைவனது இத்தனை நேரடி தெளிவான கருத்துக்களை முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு, நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்களின் சுய கருத்துக்களுக்கு நீங்கள் முக்கியத் துவம் கொடுத்தால், நீங்கள் எந்த அளவு வழிகேட்டில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணராவிட்டாலும் மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.
நாங்கள் தான் மார்க்க அறிஞர்கள் என ஆணவம் பேசும் உங்களின் ஆபத்தான நிலையை சிறிது நோட்டமிட்டுப் பாருங்கள். அல்குர்ஆன் 25:30-ல் உள்ளபடி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் முறையிடுவது போல், உங்கள் புரோகித முன்னோர்களின் சுய விளக்கங்களைக் கொண்டு அல்குர் ஆனை முற்றிலும் புறக்கணிக்கிறீர்கள். அவர்கள் சுயநலத்துடன் கற்பனை செய்த பொய்யான இட்டுக்கட்டிய ஹதீஸ்களைக் கொண்டு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைகளைப் புறக்கணிக்கிறீர்கள்.
நீங்களே எடுத்தெழுதியுள்ள கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் “உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள்” என்ற நற்போதனைக்கு முரணாக மக்களிடம் கூலி வாங்கி, சுமையேற்றி கடுமையாக ஆகி விடுகிறீர்கள். (பார்க்க 52:40, 68:46) நீங்கள் பெரிதும் மதிப்பதாகச் சொல்லும் அந்த நான்கு இமாம்களின் போதனைகளுக்கு முரணாக அவர்களின் பெயர்களாலேயே அப்பட்டமான பொய்களை அவிழ்த்து விடுகிறீர்கள்.
கிறிஸ்தவர்களைப் பின்பற்றி, குர்ஆனிலும், ஹதீஸிலும் பதிவுச் செய்யப்படாது உங்களின், புரோகித முன்னோர்களின் போதனைகளைக் காலங்காலமாக எவ்வித பார்வையும், பரிசீலனையும் இல்லாமல் பின்பற்றல், அதாவது கண்முடிப் பின்பற்றலின் விளைவே தக்லீது -மத்ஹபுகள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இந்த வழி கெட்ட மத்ஹபுகளை குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும், ஆலிம்கள், உலமாக்கள் என பீற்றிக் கொள்ளும் நீங்கள் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் தப்ப முடியுமா? நிதானமாகச் சிந்தியுங்கள்.
ஆக நீங்கள் அல்குர்ஆனையும் பின்பற்றவில்லை; ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் பின்பற்றவில்லை; நேர் வழி நடந்த கலீஃபாக்களையும் பின்பற்றவில்லை; நபி தோழர்களையும் பின்பற்றவில்லை; அந்த நான்கு இமாம்களையும் பின்பற்றில்லை; யூத, கிறிஸ்தவ ஊர் பெயர் தெரியாத அநாமதேய பேர்வழிகளின் சுய நலத்துடன் கூடிய கற்பனைக் காவியங்களையே பெரிதும் மதித்துப் போற்றி, அவற்றையே வேத வாக்காகக் கொண்டு, நீங்களும் வழி கெட்டு, பெருங்கொண்ட மக்களையும் வழி கெடுத்து நரகில் கொண்டு தள்ளுகிறீர்கள். பிழைப்பை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வழிகேட்டில் செல்லும் பெருங்கொண்ட மக்களைத் திருப்திப்படுத்தி ஆதாயம் அடைய, ஷைத்தானின் தூண்டுதலின் அடிப் படையிலுள்ள அவர்களின் மனோ இச்சைக்கு ஏற்றவாறுதான் நீங்கள் ‘பிக்ஹு’ என்ற பெயரால் மார்க்க சட்டம் சொல்லுகிறீர்கள். ஷைத்தானின் நேரடி ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்து அபுஜஹீலை தலைவனாகக் கொண்ட தாருந்நத்வா உலமாக்களுக்கும் உங்களுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை, அவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் அப்படியே பின்பற்றுகிறீாகள் என்பதை உணருங்கள். வழிகேட்டில் சென்று நரகை நிரப்பும் பெருங்கொண்ட கூட்டம் உங்கள் பின்னால் அணி வகுப்பார்கள் என்பதே உங்களுக்குரிய ஒரே பிளஸ் பாயிண்ட். ஆனால் நாளை மறுமையில் உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதேயாகும்.
மதரஸாக்களுக்கு வந்து சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது என்பதையும் ஒப்புக் கொண்டு எழுதி இருக்கிறீர்கள். புரோகிதக் கல்வியின் இழி நிலையை மக்கள் இப்போது உணர்ந்து வருகிறார்கள். மக்கள் தைரியத்துடன் அல்குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படித்து சிந்தித்து விளங்க ஆரம்பித்து விட்டார்கள். மவ்லவிகளாகிய நீங்கள் மக்களிடமிருந்து சத்தியத்தை மறைத்த காலம் மலையேறி வருகிறது. அல்குர்ஆனை தொடக்கூடாது, அதனை உங்களால் விளங்க முடியாது என்று கூறி மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. இன்னும் சில வருடங்களில் உங்கள் புரோகித மதரஸாக்களில் புரோகித கல்வி கற்று விட்டு லெப்பை வேலை பார்க்க, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பமாட்டார்கள். அந்த அளவு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
மார்க்க விளக்கம் கொடுக்க அதிகாரம் பெற்றவர்கள் அதாவது குர்ஆன், ஹதீதுக்கு மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் எங்களுக்கே உண்டு என பறைசாற்றும் மவ்லவிகளே! நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.மேலதிக விளக்கம் தேவையில்லாத நிலையில் மார்க்கம் சம்பூர்ணமாக நிறைவு பெற்று விட்டது என்பதை 5:3,2:159, 3:19,85, 33:36, 59:7 இறைவாக்குகள் உறுதி செய்கின்றன. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்களை இரவும் பகலைப் போன்று வெள்ளைவெளேர் என்ற நிலையில் விட்டுச் செவ்வதாக உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். எனவே குர்ஆன், ஹதீஸில் மேல் விளக்கம் கொடுக்க, குலாம் அஹமது மிர்சா காதியானி, ரஷத் கலீஃபா, டாக்டர் சகோதரர்கள் போன்றோர் பிதற்றுவது போல் ஒரு நபியோ, ஒரு ரசூலோ வர வேண்டிய அவசியம் இல்லை; மவ்லவி, ஆலிம், அல்லாமா, மவ்லானா, ஷேகு, என மனிதர்களிலிருந்து எவரது மேல் விளக்கமும் அவசியமே இல்லை; அல்குர்ஆனிலுள்ள எடுத்து நடக்க வேண்டிய ஒரே பொருளைத் தரும் ‘முஹக்கமாத்’ வசனங்கள் மயக்கமே தராத தெளிவான நிலையில் அருளப்பட்டுள்ளன என்பதை மறுப்பவர்கள் நிராகரிப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்.
அல்குர்ஆன் 18:54ஐ படித்துப் பாருங்கள். குர்ஆனில் ஒவ்வொரு உதாரணத்தையும் மனிதர்களுக்காக அல்லாஹ் மேல் விளக்கம் தேவையில்லாத நிலையில் விளக்கியுள்ளதாகக் கூறி, ஆயினும் மவ்லவிகளாகிய உங்களைப் போன்ற மனிதர்கள் அதிகமாக வீண் தர்க்கம் செய்பவர்களாக இருக்கிறீர்கள் என கண்டிக்கிறான்.
எனவே காலம் கடப்பதற்கு முன்னர், மவ்லவிகளாகிய நீங்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள புரோகித கல்வியை தூக்கி எறிந்து விட்டு, முழுக்க, முழுக்க அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான, அக்கல்வியைக் கற்றுத் தேறி வெளிவரும் அறிஞர்கள் சொந்தக் காலில் நின்று, தங்கள் கைகளால் பொருளீட்டி அவர்களும் சாப்பிட்டுக் கொண்டு, மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழும், அதாவது நீங்கள் பெரிதும் மதித்து நடப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அந்த மரியாதைக்குரிய இமாம்கள் நடந்து காட்டியது போல் நடக்க வழிவகை காணும் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி, தொழிற் கல்வி மூன்றும் இணைந்த நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித் தந்த கல்வியை நடைமுறைப்படுத்த முன் வாருங்கள்.
தொடர்ச்சிக்கு ”NEXT” ஐ ‘‘கிளிக்” செய்யவும்