டெல்லி: தெலுங்கானா விவகாரம் குறித்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி மத்திய அரசிடம் அளித்துள்ள 6 பரிந்துரைகள் :
பரிந்துரை 1: ஆந்திராவை பிரிக்காமல் ஐக்கிய ஆந்திராவாக தொடர்ந்து நீடிக்க வைக்கலாம். அதில் தெலுங்கானாவைச் சேர்ந்தவரை முதல்வர் அல்லது துணை முதல்வராக்கலாம்.
பரிந்துரை 2: ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிக்கலாம். இதில் ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திர மாநிலங்கள் இருக்கலாம்.
பரிந்துரை 3: ஹைதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக்கலாம். ஹைதராபாத் தவிர்த்த மற்ற பகுதிகளை ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிக்கலாம். இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஹைதராபாத் தலைநகராக இருக்கலாம்.
பரிந்துரை 4: மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரித்துவிட்டு, ஹைதராபாத்தை மேலும் விரிவாக்கலாம். ஹைதராபாத்துடன் ஆந்திரா, தெலுங்கானாவின் மேலும் பல பகுதிகளை இணைத்து அதை தனி யூனியன் பிரதேசமாக்கலாம்.
பரிந்துரை 5: மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாகப் பிரித்து அதில் ஹைதராபாத்தை தெலுங்கானாவின் தலைநகராக்கலாம்
பரிந்துரை 6: ஆந்திராவை பிரிக்காமல் தெலுங்கானா பகுதியை தனி கவுன்சிலாக்கலாம்.
இவ்வாறு 6 பரிந்துரைகளை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி முன் வைத்துள்ளது
”தெலுங்கானா பிரச்சனியில் முஸ்லீம்களின் நிலைப்பாடு என்ன?” அறிவதற்கு கீழே ”கிளிக்” செய்யுங்கள்