[ முந்தைய தலைமுறையில் ஆணும் பெண்ணும் தனி அறையில் விடப்பட்டதும், அந்த ஆண்மகன் பேசக்கூட தைரியமில்லாத பெண்ணிடம் தன் முழு பலத்தையும் காட்டிவிட்ட பின்பே வெளியே வருவான். அதுவும் ஒரு இயந்திரத்தனமான செக்ஸ் அணுகுமுறைதான். குழந்தைகள் பிறப்பதற்கு மட்டும் உறவு என்கிற எண்ணத்தில்தான் கணவன்-மனைவி உறவு இருந்தது.
செக்ஸ் எஜுகேஷன் பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் தேவை என்பது பலரது அனுபவத்தில் கண்ட உண்மை. தலைமுறை இடைவெளியில் செக்ஸ் அணுகுமுறையில் இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென்ற ACTION-ல இறங்கியிருப்பது வெல்கம்.
ராங் அப்ரோச்சுல ஆண்களை மட்டும் ஓரேயடியாக குறை சொல்ல முடியாது. ஃபர்ஸ்ட் நைட்டை குட் நைட்டாக மாற்றுவதும், பேட் நைட்டாக மாற்றுவதும் பெண்கள் கையில் இருக்க. ஒரு ஆணுக்கு தேவையான வசந்தங்களை சுமந்து கொண்டு வரும் பெண்களே அந்த ஆணிண் ஆசையை தீர்த்து வைக்கலாம் அல்லவா?
இன்றைய ஜெனரேஷனில் ”ராங் அப்ரோச்” ரொம்பவே அதிகமாகிவிட்டது.]
சில ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஒரு பிரபலமான ஊரில் ஜும்ஆவின்போது ஒரு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதாவது: ‘இனி நமது ஊரில் 16 வயதுக்குக் கீழுள்ள பெண்ணுக்கு திருமணம் முடிக்க அனுமதி கிடையாது. ஊர் ஓலை எனும் திருமண அனுமதிக்கடிதமும் அளிக்கப்படமாட்டாது’. ஜும்ஆவுக்கு வந்திருந்த அத்தனைப்பேரும் கப்சிப். ஒருவர்கூட எதிர்த்து கேட்கவில்லை ஒரு கேள்வியைக்கூட!
ஏதோ வழமையாக அறிக்கையை காது கொடுத்து கேட்காமல் இருக்கும் பழக்கத்தில் இதனையும் எவரும் கண்டுகொள்ளவில்லை ஒருவரைத்தவிர!
ஆம்! அப்பொழுதுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்குத்திரும்பியிருந்த ஒரு இளைஞர் வீட்டிற்கு வந்ததும் ஒரு கடிதத்தை ஊர்தலைவருக்கு அனுப்பினார். அதில், ‘ஷரீஅத்துக்குப் புறம்பான இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு உங்களுக்கு அனுமதி வழங்கியது யார்? பெண்களுடைய விஷயத்தில் கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கே புதிதாக சட்டத்தை இயற்ற துணிவில்லாதபோது உங்களுக்கு எங்கிருந்து வந்தது இப்படியொரு துணிவு?’
கடிதம் எழுதிய அந்த இளைஞர் விசாரிப்பதற்காக அழைக்கப்பட்டார். அவர் அந்த சபைக்குள் நுழைந்ததுதான் தாமதம் அந்த ஊர்த்தலைவர் ‘ஷரீஅத் சட்டத்தையெல்லாம் மாற்றக்கூடிய அளவுக்கு நாங்கள் அதிகாரம் படைத்தவர்களல்ல. அதுபோன்ற சட்டத்தை நாங்கள் கொண்டுவருவதாக இல்லை. ஆகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று பதிலளித்தார்.
அந்த கடிதம் வரைந்த இளைஞருக்கு அந்த ஊர் தலைவர் மார்க்கத்திற்குப் புறம்பாக நடக்கக்கூடிய மனிதரல்ல என்று நன்றாகத் தெரியும். பிறகு ஏன் அவர் ஷரீஅத்துக்குப் புறம்பாக இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவர முயலவேண்டும்! தனிமையில் அவரைச்சந்தித்துப் பேசும்போதுதான் உண்மை விளங்கியது.
ஊர்த்தலைவர் (முதவல்லி) சொன்னார்: ‘சகோதரரே! நான் அந்த சட்டத்தை கொண்டுவர நினைத்ததற்குக் காரணம் இரண்டு. ஒன்று எங்கள் வீட்டுக்கருகில் ஒரு பள்ளிக்கூடம் உண்டு. அதில் மாணவிகளும் படிக்கிறார்கள். எனக்குத் தெரிந்த, சுமார் 14 வயதுடைய ஒரு மாணவியும் படித்துக் கொண்டிருந்தார். திடீரென்று சிலதினங்களாக அவரைக் காணவில்லை. விசாரித்ததில் அவர் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் முடித்துக்கொண்டு விட்டார் என்றார்கள். எனக்கோ அதிர்ச்சி. அந்த பெண் வயதுக்கு வந்தே ஒருவாரம் தானே இருக்கும். அதற்குள் ஏன் இப்படியொரு அவசரம். திருமணம் என்றால் என்னவென்றாவது அந்த இளம்பெண்ணுக்குப் புரியுமா?’
அடுத்து இரண்டாவது நிகழ்ச்சி: ‘ஒரு இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. முதலிரவில் மணமகனின் அரக்கத்தனமான நடவடிக்கையின் காரணமாக அந்த பெண் அரண்டு போய் கிட்டத்தட்ட பைத்தியக்காரி நிலைக்கு ஆளாகி விட்டாள். இதையெல்லாம் பார்த்த நான் ‘எமோஷனல்’ ஆகித்தான் 16 வயதுக்குக்கீழுள்ள பெண்கள் திருமணம் முடிப்பதற்கு இனி அனுமதி கிடையாது எனும் சட்டத்தை நடைமுறைப்படுத்த நினைத்தேனேயொழிய மற்றபடி நமது ஷரீஅத்தின் சட்டத்தை மாற்றுவதற்கு எனக்கோ வேறு எவருக்குமோ உரிமையில்லை’ என்று தனது மனத்தாங்கலை கொட்டினார்.
திருமணம் என்பது வெறுமனே ‘இருஉடற்சேர்க்கை’ மட்டுமல்ல என்பதை உணர்த்துவதற்காகத்தான் இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.
– நிர்வாகி, நீடூர்.இன்ஃபோ
முதலிரவின் முக்கியத்துவம்
பொதுவாக ஆண்வர்க்கம் பெண்ணின் உணர்ச்சிகளை-மனநிலையை மதிக்காமல், போட்டோந்துக் கொள்ளாமல் ஒரு செல்ஃபிஷ் செக்ஸ் உறவில் ஈடுபடுவதுதான் பெண் இனத்தின் குமுறல்கள். அதற்காக எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டவில்லை. அது அவர்களது குற்றமா? இயற்கையின் படைப்பில் நிகழந்ததாக இருந்தாலும், ஆண்களுக்கு போட்டோய வைப்பது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்.
பெரும்பாலும் முதலிரவில் தான் ”ஃபோர்ஸ் செக்ஸில்” பெண்கள் வாழ்க்கையே வெறுத்து விடுகிறார்கள். மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த இளம்பெண்கள் அன்றைய தின முதலிரவில் இதயம் படபடக்க…. பயம் கலந்த வெட்கம், கூச்சம் இத்தனையும் சுமந்து கொண்டு எக்ஸாமினேஷனுக்கு போகும் ஸ்டூடண்ட் போல் நுழைவார்கள்.
அங்கே மணமகனோ பாய்ந்து கடித்து ஒருவழி பண்ணியாக வேண்டுமென்ற துடிப்போடு காத்திருப்பான். மண வாழ்க்கையின் முதல் தாம்பத்ய உறவு என்பது பலருக்கு வேதனை, சிலருக்கு இன்பம்.
ஒரு பெண்-ஆண் வாழ்க்கையில் முதல் இரவு வாழ்க்கையில் ஏற்படும் உறவு தான் மணவாழ்க்கையின் முதல் பரீட்சை, முதல் வசந்தம் எல்லாமே.
நமக்கு பசி எடுத்துவிட்டால், டைனிங் டேபிளில் வைக்கப்பட்ட சூடான உணவை மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது போல தான் செக்ஸ் அப்ரோச்சும். பெண் என்பவள் மலருக்கு சமம். தேனை குடிக்க வரும் வண்டு மலரை காயப்படுத்தாமல் அமர்ந்து தான் தேனை உறிஞ்சிவிட்டு பறக்கும். முன்பின் தெரியாத ஆணும், பெண்ணும் தனித்துவிடப்பட்ட அறையில் உணர்ச்சிகளுடன் விடப்படும் போது இறுக்கம் அதாவது பெண்ணின் டென்ஷனை போக்க மனம்விட்டு பேச வேண்டும்.
மென்மையான பேச்சு, டச்சிங் மூலம் உணர்ச்சிகளை தூண்டி அன்பு, பாசத்துக்கு பேசிக் டச் கொடுத்துவிட்டு பின்பு அப்ரோச் பண்ணினால் அந்த பெண்மையானது ஆணின் தாகத்தையும் தீர்த்துவிட்டு, தனக்குள் ஒரு சந்தோஷத்தை ஈர்த்துக் கொள்ளும்.
செக்ஸ் எஜுகேஷன் பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் தேவை என்பது பலரது அனுபவத்தில் கண்ட போட்டோசல்ட். தலைமுறை இடைவெளியில் செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்புல இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென்ற ACTION-ல இறங்கியிருப்பது வெல்கம்.
முந்தைய தலைமுறையில் ஆணும் பெண்ணும் தனி அறையில் விடப்பட்டதும், அந்த ஆண்மகன் பேசக்கூட தைரியமில்லாத பெண்ணிடம் தன் முழு பலத்தையும் காட்டிவிட்ட பின்பே வெளியே வருவான். அதுவும் ஒரு இயந்திரத்தனமான செக்ஸ் போட்டோலேஷன்தான். குழந்தைகள் பிறப்பதற்கு மட்டும் உறவு என்கிற எண்ணத்தில்தான் கணவன்-மனைவி உறவு இருந்தது.
எனக்கு தெரிந்த ஒரு வயதான அம்மாவுக்கு எண்பது வயசு இருக்கும். அவங்களோட முந்தைய தலைமுறை உறவுகளை பற்றி கேட்டவுடன், அவங்களுக்கு கோபம் வந்திடுச்சு. அப்புறம், ஒரு ஆராய்ச்சிக்காக கேட்கிறேன் என்று சொன்னதும் தான் ஒப்பனா சொன்னாங்க. முந்தைய தலைமுறையில் பகலில் செக்ஸ் உறவுக்கு தடை. இரவில் விளக்கு வெளிச்சம் துளி கூட இல்லாமல் செக்ஸ் அப்ரோச். அதில்! பெண்ணின் உணர்ச்சிகளை ஓப்பனாக காட்டினால் குற்றம்.
”எங்க சுகத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது. அவங்க ஆசைய மட்டும் தீர்த்துட்டு போயிடுவாங்க. எப்படியோ ஆறு குழந்தைகளையும் படிக்க வெச்சு இப்போ பேரன் பேத்தி எடுத்தாச்சு”ன்னு சொன்னாங்க. முந்தைய தலைமுறையில பரஸ்பர செக்ஸ். அதாவது செக்ஸ் ACTION அப்ரோச்சுல சம போட்டோமை என்பது கிடையாது. இன்றைய ஜெனரேஷனில் சம போட்டோமை இருந்தாலும் ராங் அப்ரோச் ரொம்பவே அதிகமாகிவிட்டது.
ராங் அப்ரோச்சுல ஆண்களை மட்டும் ஓரேயடியாக குறை சொல்ல முடியாது. ஃபர்ஸ்ட் நைட்டை குட் நைட்டாக மாற்றுவதும், பேட் நைட்டாக மாற்றுவதும் பெண்கள் கையில் இருக்க. ஒரு ஆணுக்கு தேவையான வசந்தங்களை சுமந்து கொண்டு வரும் பெண்களே அந்த ஆணிண் ஆசையை தீர்த்து வைக்கலாம் அல்லவா?
ச்சீ….. வெட்கமாக இருக்குப்பா……. என்று சொல்வது நாணம். என்ன…. விளையாடுறீங்களா? நீங்க சொல்றபடி என்னால ஒத்துப் போக முடியாது என்று ஆண்களை விரட்டினால் என்ன ஆகும்?
பாலியல் சுகம் தரும் விலை மாதரை தேடி போவான். அப்புறம்….. எய்ட்ஸ்…..எய்ட்ஸ்…
– டாக்டர். ஷர்மிளா