Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அரசாங்கங்களின் அராஜகங்களை அம்பலப்படுத்தும் ஜூலியன் யார்?

Posted on January 1, 2011 by admin

ஞாநி

[ பெரும் யானையைக்கூட சிறு அங்குசம் ஆட்டி வைக்க முடியும் என்பது போல, உலக அரசுகளை ஆட்டி வைத்திருக்கும் விக்கி லீக்சின் ஜூலியனையும் விக்கிலீக்சையும் முடக்க அமெரிக்கா உள்ளிட்ட பல பெரிய நாடுகள் கடும் முயற்சி செய்கின்றன. இணையதளத்துக்கான சர்வரை ரத்து செய்வது, யாரும் விக்கிலீக்சுக்கு இணைய வழியே பணம் நன்கொடை செலுத்தவிடாமல் தடுப்பது என்று எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பயன் தரவில்லை.

ஜூலியனும் விக்கிலீக்சும் பெரும் ஸ்தாபனங்கள் அல்ல. மொத்தம் ஐந்து பேர்தான் இதில் முழு நேர ஊழியர்கள். எண்ணற்ற ஆதரவாளர்கள். விக்கி லீக்சின் இணையதளத்தை ஒரு நாட்டிலிருந்து செயல்படவிடாமல் தடுத்தால் இன்னொரு நாட்டில் இருந்து உடனடியாக இயங்கக்கூடிய அளவுக்குத் தயார் நிலையில் எப்போதும் விக்கிலீக்ஸ் இருந்து வருகிறது.]

அரசாங்கங்களின் அராஜகங்களை அம்பலமாக்கத் துடிக்கும் ஒவ்வொரு சமூகப் போராளிக்கும், 39 வயதாகும் ஜூலியன் ஒரு ரோல் மாடல். அவர் 2006ல் தொடங்கிய விக்கிலீக்ஸ் இணையதளம் நான்காண்டுகளாக அம்பலப்படுத்தி வரும் உலக அரசு ரகசியங்கள் எல்லா நாட்டு அரசாங்கங்களையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றன.

மக்களுக்கு நியாயமான விஷயங்கள் நடக்க வேண்டுமானால், ஜனநாயகம் தழைக்க வேண்டும். அதற்கான அடிப்படைத் தேவை ஒளிவு மறைவற்ற பகிரங்கமான நிர்வாகம். அதைச் செய்யத் தவறும் அரசுகள்தான் ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் எதிரிகள். எனவே, அவற்றை அம்பலப்படுத்த வேண்டும். சுருக்கமாக இதுதான் ஜூலியனின் கொள்கை.

ஜூலியன் முதன்மை ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் விக்கிலீக்ஸ் இது வரை அம்பலப்படுத்திய விஷயங்கள் பல. சோமாலியாவில் ஒரு லோக்கல் தலைவர் ஆள் தூக்கி வேலைகளுக்காக அடியாட்களை அனுப்பக் கேட்டு எழுதிய கடிதத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. கென்யாவில் நடக்கும் அரசு ஊழல்கள் அடுத்த லீக்.

ஸ்விட்சர்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளின் முக்கிய வங்கிகளில் நடந்த ஊழல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

நெதர்லாந்திலிருந்து டிரஃபிகுரா என்ற கம்பெனி விஷக் கழிவுகளைக் கப்பலில் ஏற்றி எந்த நாடும் அதை அனுமதிக்காத நிலையில் ஆப்பிரிக்க நாடான ஐவரியில் அபிட்ஜான் துறைமுகத்தில் கொண்டு இறக்கியது. அந்த நகரின் பல பகுதிகளில் இந்தக் கழிவுகள் கொட்டப்பட்டன. இவற்றால் பாதிக்கப்பட்டு 30 ஆயிரம் பேருக்குக் கடும் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டன. ஒரு லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. தான் பொறுப்பில்லை என்று சொன்ன கம்பெனி, கடைசியில் நஷ்ட ஈடாக 19 கோடி டாலர்கள் கொடுத்தது. கழிவுகளின் விஷத் தன்மை பற்றி ஆராய குழு நியமித்தது. மிண்ட்டன் அறிக்கை எனப்படும் இந்தக் குழுவின் அறிக்கையை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

சர்ச் ஆஃப் சயண்டாலஜி என்ற ஒரு கிறித்துவ அமைப்பு ரகசிய இயக்கமாகவும் பகிரங்க மிஷனரியாகவும் இயங்கிய அமைப்பாகும். வருடத்துக்கு 50 கோடி டாலர் சம்பாதிக்கும் இந்த அமைப்புக்கு, போதைப் பொருள் உட்பட நிறைய வணிகங்கள் உள்ளன. உறுப்பினர்கள் கடத்தல், மர்ம மரணம் எல்லாம் நடந்தன. அமெரிக்க அரசின் பல துறைகளில் இதன் உறுப்பினர்கள் ஊடுருவியிருப்பதாக அமெரிக்க அரசே நடவடிக்கை எடுத்தது. இந்த அமைப்பின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

ஜூலியன் அதிரடியாக வெளியிட்ட ஆவணங்களில் ஆப்கானிஸ் தான், இராக் யுத்தங்களில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றிய ரகசியக் குறிப்புகள் முக்கியமானவை. இராக்கில் பாக்தாத் நகரில் ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர்கள் இருவர், அமெரிக்க ராணுவத்தின் வான் வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதன் ராணுவ வீடியோவை ஜூலியன் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை அமெரிக்காவுக்குக் கொடுத்தது. கௌண்டனாமா பேயிலிருக்கும் அமெரிக்க ராணுவச் சித்ரவதை முகாமின் ஆவணங்களையும் ஜூலியன் அம்பலப்படுத்தினார்.

இந்த வருடம் ஜூலியனும் விக்கிலீக்சும் நடத்திய அதிரடித் தாக்குதல், உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்கத் தூதரகங்கள், அந்தந்த நாடுகள் பற்றி தங்கள் அமெரிக்க மேலிடத்துக்கு அனுப்பி வந்த ரகசிய செய்திகளை வெளியிட்டதாகும். அமெரிக்கா உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிவருவதை இந்த ஆவணங்கள் நன்றாகவே அம்பலப்படுத்திவிட்டன. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான், இராக் எல்லோரைப் பற்றியும் அமெரிக்கா வெளியில் சொல்வதற்கும் ரகசியமாக வைத்திருக்கும் கருத்துக்கும் சம்பந்தமே இல்லை.

ஒவ்வொரு நாட்டு உள் அரசியலிலும் அமெரிக்கா தலையிடுவதை ஆவணங்கள் காட்டிக் கொடுத்துள்ளன. இந்தியாவில் மூன்றாவது அணி ஆட்சிக்கு வருவது ஆபத்து; பி.ஜே.பி., காங்கிரஸ் இருவருமே நமக்குச் சாதகமானவர்கள் என்று தில்லியிலிருந்து அமெரிக்கத் தூதர் தேர்தல் சமயத்தில் கூறியிருக்கிறார். ராகுல் காந்தி, சோனியா, பிரகாஷ் காரத் என்று பலரைப் பற்றியும் கருத்துகளும் சொல்லியிருக்கிறார்.

ஜூலியனும் விக்கிலீக்சும் பெரும் ஸ்தாபனங்கள் அல்ல. மொத்தம் ஐந்து பேர்தான் இதில் முழு நேர ஊழியர்கள். எண்ணற்ற ஆதரவாளர்கள். விக்கி லீக்சின் இணையதளத்தை ஒரு நாட்டிலிருந்து செயல்படவிடாமல் தடுத்தால் இன்னொரு நாட்டில் இருந்து உடனடியாக இயங்கக்கூடிய அளவுக்குத் தயார் நிலையில் எப்போதும் விக்கிலீக்ஸ் இருந்து வருகிறது.

ஜூலியனையும் விக்கிலீக்சையும் முடக்க அமெரிக்கா உள்ளிட்ட பல பெரிய நாடுகள் கடும் முயற்சி செய்கின்றன. இணையதளத்துக்கான சர்வரை ரத்து செய்வது, யாரும் விக்கிலீக்சுக்கு இணைய வழியே பணம் நன்கொடை செலுத்தவிடாமல் தடுப்பது என்று எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பயன் தரவில்லை.

கடைசியாக ஜூலியனை ஸ்வீடனில் செக்ஸ் விவகாரத்தில் சிக்கவைத்து, லண்டனில் கைது செய்தார்கள். ஏதோ பயங்கரவாதியைத் தேடுவதுபோல உடனே ஜூலியன் வாண்ட்டட் பட்டியலில் சேர்க்கப்பட்டு இண்ட்டர்போல் மூலம் எல்லா நாடுகளும் உஷார்படுத்தப்பட்டன. ஆனால் அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜூலியன் எப்போதும் ஒரே இடத்தில் தங்காமல் ஊர் ஊராக நாடு நாடாக மாறிக்கொண்டே இருப்பவர். உலக அரசுகளை அம்பலப்படுத்தும் ஆவணங்களைத் திரட்டித் தொகுத்து வெளிப்படுத்துவதென்றால் சும்மாவா? பலமுறை விமான நிலையங்களிலேயே நாளைக் கழித்திருக்கிறார். கடைசியில் ஜூலியன் தானாகவே லண்டன் போலீசில் சரணடைந்தார்.

ஜூலியனுடன் உறவு வைத்த அன்னா, ஏற்கெனவே ஸ்வீடன் தூதரக அலுவலராக கியூபா நாட்டில் இருந்தபோது, காஸ்ட்ரோவுக்கு எதிராக அமெரிக்க சி.ஐ.ஏ. பண உதவியுடன் வேலை செய்த தன்னார்வ அமைப்புடன் தொடர்பில் இருந்தவர். அதற்காக வெளியேற்றப்பட்டவர். தாம் விரும்பியே ஜூலியனுடன் உறவு கொண்டதை வெளிப்படுத்தும் தமது டிவிட்டர் பதிவுகளையெல்லாம் அன்னா அழித்துவிட்டார். எனவே அமெரிக்கா திட்டமிட்டுத்தான் அவரை ஜூலீயனை ஈர்த்து, வீழ்த்த அனுப்பியிருக்கிறது என்று கருதப்படுகிறது. ஜூலியன் விடை பெற்றுச் சென்று சில நாட்கள் கழித்துதான் இரு பெண்களும் சந்தித்துப் பேசி போலீஸில் புகார் தந்தார்கள்.

ஜூலியனை ஸ்வீடனுக்கு அனுப்பக்கூடாது. அப்படி அனுப்பினாலும் அங்கிருந்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அவரது வழக்கறிஞர்கள் இப்போது போராடி வருகிறார்கள். இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஜூலியன், உள்ளே இருந்தபோதுகூட விக்கி லீக்சைத் தடை செய்ய முடியவில்லை. அடுத்தடுத்து அமெரிக்க அரசு ஆவணங்களை வெளியிட்டபடிதான் இருந்தது.

ஜூலியனோ, விக்கிலீக்சோ, அவர்களுடைய ஆதரவாளர்களோ எதற்கும் அசருவதாக இல்லை. ஜூலியனுக்கு ஆதரவாக ஐரோப்பா முழுவதும் பேரணிகள் நடக்கின்றன. பிரேசில், ரஷ்ய நாட்டு அதிபர்கள் ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜூலியன் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். ஆஸ்திரேலியாவின் குயினிஸ்லாந்து மாநிலத்தில் பிறந்த ஜூலியனுக்கு அப்பா யாரென்று தெரியாது. அம்மா கிறிஸ்டீன் ஒரு பொம்மலாட்டக் கலைஞர். ஜூலியனுக்கு ஒரு வயதானபோது கிறிஸ்டி மறுமணம் செய்தார். ஒரு தம்பி பிறந்தான். இந்தத் திருமணமும் முறிந்தது. தம் இரு குழந்தைகளைத் தம்மிடமிருந்து முன்னாள் கணவர்கள் பிரித்துவிடக் கூடாது என்பதற்காக கிறிஸ்டி, ஊர் ஊராக ஓடி ரகசியமாக வாழ்ந்தார். தலைமறைவு வாழ்க்கை அப்போதே ஜூலிக்குப் பழகிவிட்டது.

ஜூலியின் திருமணமும் முறிந்துவிட்டது. ஒரு மகன் இருக்கிறான். தன் 16வது வயதிலேயே கம்ப்யூட்டர் நிபுணராகத் திகழ்ந்தார் ஜூலியன். எந்த இணையதளத்தின் ரகசியப் பூட்டையும் உடைத்துத் திறந்து உள்ளே செல்லும் ஹேக்கிங் கலையில் அவர் ஒரு மேதையானார். ஹேக்கிங் பற்றி இரு நூல்கள் எழுதியிருக்கிறார். ஹேக் செய்பவர் எந்தக் கணினியிலும் நுழையலாம். ஆனால் அதைப் பாழ்படுத்தக் கூடாது. தகவல்களைச் சிதைக்கக்கூடாது. பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்பது ஜூலியனின் அறக் கோட்பாடு. கணிதம், இயற்பியல் எல்லாம் பல்கலைக்கழகங்களில் படித்தபோதும் அவர் டிகிரி முடிக்கவில்லை. விக்கிலீக்ஸ் தொடங்கிய பின்னர் ஜூலியனுக்கு உலகம் முழுவதுமிருந்து பல விருதுகள் வந்து குவிந்தன.

source: நன்றி: குமுதம்



Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb