Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சாதனைகள் பெண்களுக்குத் தடையில்லை!

Posted on December 28, 2010 by admin

டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலீ, ஐ.பீ.எஸ் (ஓ)

சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ந்தேதி தென்கிழக்கு ஆசிய கண்டத்தினை உலுக்கி நெய்தல் நகரங்களான கடற்கரை ஓரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட தினமான 2010 டிசம்பர் திங்கள் 26ந்தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் என்ற முஸ்லிம்கள் வாழும் ஊரிலிருந்து இரண்டு படகுகளில் உல்லாசமாக இரண்டு படகுகளில் அருகில் உள்ள தீவினைப்பார்க்க சென்ற சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் விபத்துக்குள்ளாகி 13 பேர்கள் பலியான செய்தி வெளியானது கண்டு அனைத்து உள்ளங்களும் அதிர்ச்சியில் உரைந்தன வென்றால் மிகையாகாது. ( இதைப் பற்றிய முழுமையான செய்திகளுக்கு கட்டுரையின் கீழே பார்க்கவும் )

அந்தக் கோரச்சம்பவத்தினை ஆயும்போது கீழ்கண்ட காரணங்கள் தெரிந்தன:

1) படகில் சென்றவர்கள் உயிர் காக்கும் சாதனமாக லைப்போட் என்ற ரப்பர் டியூப்பினை அணியவில்லை.

2) படகின் சுமைக்கேற்ப பெண்களும், குழந்தைகளும் படகில் ஏற்றப்படவில்லை.

3) படகில் ஒரு பக்கமே பளுவான பெண்களும் மறு பக்கம் குழந்தைகளும் அமரச் செய்திருந்தது.

4) குழந்தைகள் உற்சாகத்தில் அலையினை கையில் தொட முனைந்து அவர்களுடைய பளு படகின் ஒரு பகுதியினை சார்ந்திருந்து சாய்ந்தது.

5) பெண்கள் குழந்தைகளின் இந்த விளையாட்டுச் செயலினை கட்டுப்படுத்தாதது.

6) பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நீச்சல் பழக்கமின்மை.

7) ஆபத்தான நேரத்தில் எப்படி உயிர் காப்பது என ஆண்களுக்கு தெரியாதது.

8) மற்றொரு படகில் சென்ற சில ஆண்களுக்கும் நீச்சல் தெரியாததால் மீனவர்கள் கரையிலிருந்து வேறொரு படகில் வரும் வரை விபத்தில் சிக்கியவர்களை காப்பற்ற இயலாதது.

இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது என்றாலும் கடற்கரை ஓரத்தில் வாழும் இஸ்லாமிய கிராமங்களில் வாழும் ஊர்களில் இப்படிப் பட்ட விபத்துக்கள் ஏற்படும் போது அதனை தடுக்க என்னன்ன வழிகள் என ஊர் ஜமாத்தார்கள் அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்வதுடன், ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளும் கட்டாயமாக நீச்சல் தெரிந்திர ஏற்பாடு செய்வது அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரர்களின் கடமையாகும் என்றால் மிகையாகுமா?

2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி அன்று என் கல்லூரித் தோழனும் பரங்கிப்பேட்டையினைச் சார்ந்த அலி அப்பாஸ் காரைக்காலில் சக தோழர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது சுனாமி அலை வரும் போது அனைவரும் ஒரு மரத்தில் ஏறி தப்பிக்கும் போது நண்பன் அலி அப்பாஸ் மட்டும் மரமேர முடியாததால் அதில் பலியானான் என அறிந்து என் உள்ளம் இன்னும் வேதனையால் துடிக்கிறது. அதனைப்போன்று இந்த படகு விபத்தில் தன் அருமைக் குழந்தைகளையும், தாய்மார்களையும் விபத்தில் சிக்கி பரிதவிக்க விட்டு விட்டு இருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் நிலை எப்படியிருநதிருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். ஆகவே இது போன்ற விபத்துக்களை தடுக்க என்னன்ன வழிகள் என ஆராயந்து நடவடிக்கை எடுத்தால் கடற்கரை ஓர மக்களை சோக இருள் கவ்வாமல் இருக்குமல்லவா?

1) கண்டிப்பாக ஆண்கள் முதல் குழந்தைகள் வரை நீச்சல் பழகியிருக்க வேண்டும். நீச்சல் நீரிலிருந்து மனிதனை காப்பாற்றுவது மட்டுமல்ல மாறாக சிறந்த ஒரு உடற்பயிற்சியாகும். அத்துடன் எவ்வளவு பெரிய டென்சனில் இருந்தாலும் அரை மணிநேர நீச்சலுக்கு சென்று வந்தால் அந்த மன நெருக்கடி ஒரு நிமிடத்தில் பறந்தோடி உற்சாகம மேலோங்கும்;.

2) நீச்சல் செய்பவர்கள் மனதில் எதனையும் சாதிக்கலாம் என ஒரு எண்ணம் ஏற்படும். அதற்கு உதாரணமாக 26.12.2010 அன்று புதுவையில் ஒரு 38 வயது பெண்மனி செய்த சாதனையினை உங்களுக்குச் சொல்லலாமென நினைக்கிறேன். பாண்டிச்சேரி மாநிலம் வில்லியனூரினைச் சார்ந்த குடும்ப நடு வயது பெண்மனி ராணி(38) என்பவர் நீச்சல் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று ஒரு சாதனை செய்ய வேண்டுமென நினைத்து நீச்சல் பயிற்சினை மேற்கொண்டார்.

ஆழிப்பேரலை நாளன்று பாண்டி முன்னாள் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு நீச்சல் குளத்தில் தலையினை மேலே வைத்துக் கொண்டு கால்களை தரை நோக்கியும் ஆனால் தரையில் படாமலும், நீச்சலிடிக்காமலும் ஒரு கிளோ மீட்டர் தூரத்தினை காலை பத்து மணியிலிருந்து மதியம் ஒரு மணிவரை நடந்து சாதனை செய்துள்ளார் என்றால் பாருங்களேன் நீச்சல் சாதனை பெண்களுக்கு விதிவிலக்கல்ல என்பதினை இது காட்டவில்லையா?

3) சிலர் கேட்கலாம் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து உள்ளார்கள் அவர்களால் எப்படி நீச்சல் உடையில் நீந்த முடியுமென்று. இப்போது முஸ்லிம் பெண்களுக்கென உடல் அங்கங்கள் தெரியாது புர்கா வடிவில் நீச்சல் உடைகள் மேலை நாடுகளிலும், அரேபிய நாடுகளிலும் உள்ளன. நமது பெண்களுக்கும் அதனை வாங்கிக் கொடுத்து நீச்சல் பயிற்சி பெண் பயிற்சியாளர்களைக் கொண்டே பயிற்சி கொடுக்கலாம்.

சென்னை போன்ற நகரங்களில் பெண்களுக்கான தனி நேரங்கள் நீச்சல் குளங்களில் ஓதுக்கப்படுங்கின்றன. குளங்கள் உள்ள ஊர்களிலும். பேரிய கண்மாயல் குளிப்பவர்களுக்கும், ஆற்றங் கரையில் உள்ள முஸ்லிம் பெண்கள், சிறார்களுக்கு நீச்சல் பயிற்சி கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

4) சிலர் சொல்வார்கள் மீன் குட்டிகளுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும், அவர்களாக பழகிக் கொள்வார்கள் என்று அசட்டையாக. ஆனால் இது போன்று விபத்துக்கள் ஏற்பட்டால் அங்கு ஏற்படும் உயிர் பலிக்கு அவர்கள் மற்றவர்களை குறை சொல்லத்தான் அவர்களுக்குத் தெரியுமேயொழிய அந்த குறைகளை போக்க எடுத்த நடவடிக்கை என்ன என அவர்களுக்குத் தெரியாது.

ஆகவே வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் முஸ்லிம் ஊர்களில் ஏற்படாதாவாறு நடவடிக்கை எடுப்பது அனைவருடைய கடமையல்லவா சகோதர, சகோதரிகளே?

source: http://mudukulathur.com/?p=3968

 

பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 16 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 10 பெண்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கீழ்க்கரே அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.

தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித் தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலி காப்டரும், அதிநவீன ஹோவர்கிராப்ட் படகும் ஈடுபடுத்தப்பட்டது.

இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி ‘மய்யித்தாக’ மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20 பேர் வரை இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தெரிவிக்கிறது.

கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரிய பட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.

source: http://neetheinkural.blogspot.com/2010/12/16.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 5

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb