oooooo1
பொதுவாக மதிப்புறு முனைவர் பட்டம் பெறுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற அடைமொழியைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்பது அதன் விதிகளுள் ஒன்று. ஆனால் இவற்றை இந்தியர்கள், அதுவும் குறிப்பாக தென்னிந்தியர்கள் பின்பற்றுவதே இல்லை. காரணம் பெருமைப்பட்டுக்கோள்வதில் அவர்களுக்குறிய போதை என்றுதான் சொல்ல வேண்டும். (போதை என்கின்ற சொல் சற்று கடிணமாகத்தெரியலாம்! ஆனால் உண்மை அதுவாகத்தானே இருக்கிறது!
விதிவிலக்காக மிகச் சரியாக அதை கடைபிடிக்கும் ஒருவர் துணை-முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள். திருச்சிக்கு ஒருமுறை அவர் வந்த போது ஒரு நிர்வாகி வரவேற்பு விளம்பரத்தில் டாக்டர். ஸ்டாலின் என்று அடித்து இருந்தார். அவரை அழைத்து அவ்வாறு அடிப்பது தவறு என்று அறிவுரை வழங்கினார்.
oooooo2
நமக்கெல்லாம் பொன்னி அரிசியைத் தவிர வேற எந்த ரக அரிசியும் தெரியாது. அந்த நாள்லே நெல் ரகங்கள்லே 4 லட்சம் இருந்ததாம். தினமும் மனுஷன் ஒரு ரக அரிசியை சாப்பிட்டா அவன் எல்லா அரிசியையும் சாப்பிட்டு முடிக்க 500 வருடங்கள் ஆகுமாம். ஆனால் இன்றைக்கு இருக்கிற அரிசிகள் விரல் விட்டு எண்ணிடலாம்.
ஸீரக சம்பான்னு ஒரு அரிசி… அது ருசி சொல்லமுடியாது. அப்பிடிப்பட்ட ருசி. அதில் எத்தனை வகை தெரியுமா? ஈர்க்குச்சி சம்பா, ஊசி சம்பா, இலுப்பை சம்பா, கருவாலன் சம்பா, கம்பஞ்சம்பா, கனகசம்பா, கோட்டைசம்பா, மல்லிகைசம்பா, மாப்பிள்ளைசம்பா, மூங்கில்சம்பா, பொய்கைசம்பா, பொட்டிச்சம்பா, வரகசம்பா, சின்னட்டிசம்பா, சீரகசீம்பா, சுண்டரப்புழுகுசம்பா, சூரியசம்பா, சொல்லச்சம்பா, ரங்கச்சம்பா, அரைச்சம்பா, பூலன்சம்பா, இடயப்பட்டிசம்பா, காச்சம்பா, அரைச்சம்பா, பூவானிசம்பா, டொப்பிச்சம்பா, பிரியாணிசம்பா, ஆனால் இன்றைக்கு…!
என்றைக்கு ரசாயண உரங்கள் வர ஆரம்பித்ததோ.. அன்றிலிருந்து நிலத்தோட சத்தும் குறைய ஆரம்பித்துவிட்டது.
oooooo3
இந்திய டாக்டர்கள் 56,000 பேர் வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்றுள்ளதாக புள்ளியியல் விபரம் ஒன்று தெரிவிக்கின்றது. சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
லண்டன் , அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு தான் இந்திய டாக்டர்கள் பெருமளிவில் வேலை தேடி செல்வதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் நர்சுகளும் இதே போல் மேலை நாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.
இதனால் இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் நர்சகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010 க்கும் ஆண்டுக்கான சர்வதேச புலம் பெயர்வோர் குறித்த அறிக்கை.
oooooo4
நம் உடலில் இருந்து வெளியேற கூடிய (80-90) சதவிகித நச்சு கழிவுகள் நம் மூச்சின் மூலம் வெளியேறுகின்றது…(மல ஜலம் மூலம் வெளியேறக்கூடிய நச்சு கழிவுகள் வெறும் 10-20 சதவிகிதம் மட்டுமே..)