இஸ்லாத்தில் மனித உரிமைகள்
வானத்தையும், வளம் மிக்க இந்த பூமியையும் உருவாக்கி காத்து, அதன்பால் மனித குலத்தை தழைக்கச்செய்து, அவர்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, ஒருவருடன் ஒருவர் வாஞ்சையுடன் வாழ வழி வகுத்த வல்ல அல்லாஹ்வின் கருணையால் இந்த உலகம் அமைதி பெற வேண்டுமானால், அதற்கு ஒரே வழி இஸ்லாம்தான். ஆம்! உலக அமைதி என்றாவது ஒரு நாள் இஸ்லாத்தினூடாகத்தான் நிறைவேறும். காரணம், இஸ்லாம் மட்டுமே முழுமையான மனித உரிமையை பாதுகாக்கிறது.
இஸ்லாத்தில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்ட விதம் எல்லோரையும் பிரமிக்க வைக்கிறது,
1. ஒருவர் மற்றொருவரின் உயிர் மற்றும் உரிமையை பறிக்கக்கூடாது.
2. யாரும் யாரையும் கேலி செய்யக்கூடாது.
3. அவதூறு கற்பிக்கக்கூடாது.
4. தேவையற்ற பட்டப் பெயர் சூட்டி இழிவு படுத்தக்கூடாது.
5. புறங்கூறக் கூடாது – தரக்குறைவாகப் பேசக்கூடாது.
6. உளவு பார்க்கக் கூடாது.
7. உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கக் கூடாது.
8. ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் சிறையில் அடைக்கக் கூடாது.
9. அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராக வாதிடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
10. அரசை நடத்துபவர்கள் மக்களின் முன் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.
11. மக்களின் பேச்சிற்கும் கருத்துக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
12. பொது நல விதி முறைகளுக்கு உட்பட்டு கட்சிகள், மன்றங்கள் மூலம் மக்கள் கூடி வாழ உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
13. இறை மார்க்கத்தில் நிர்பந்தமில்லாத தீர்மானிக்கும் உரிமை உள்ளது.
14. பிற சமய உணர்வுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
15. செய்யாத குற்றத்திற்கான தண்டனையிலிருந்து தப்பிக்கப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
16. வறியோர்க்கு வாழ்வாதார உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
17. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை உள்ளது.
18. மக்களால் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் அவர்கள் பங்கு பெற்றுச் செயலாற்றும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
19. சட்டபூர்வமான பாதுகாப்பு அனைவருக்கும் கிட்ட ஏற்பாடுகள் உள்ளன.
20. மனித நேயம், மனித மாண்புகள் பாதுகாக்கப்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
21. அனைவரும் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.
22. சர்வதேச சகோதரத்துவத்தை நிறுவி வாழ இஸ்லாம் அழைக்கின்றது.
23. சமூகத்திற்கு ஊறு விளைவிப்பதை ஒழுக்கக்கேடாக அறிவிக்கின்றது.
24. விபச்சாரம் பெரும் குற்றமாக்கப்பட்டுள்ளது.
25. நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
26. மது, சூது அறவே தடுக்கப்பட்டுள்ளது.
27. எல்லோரும் எத்தருணத்திலும் பொறுமையைக் கடை பிடிக்கப் போதிக்கின்றது.
28. பிறர் நலம் பேணுதல் வலியுறுத்தப்பட்டுள்ளது
29. திருட்டு, பொய், கொலை, மற்றும் கையூட்டு அறவே தடுக்கப்பட்டுள்ளது.
30. இருப்போர் கண்டிப்பாக இல்லாதோர்க்குக் கொடுத்தல் கடமையாக்கப்பட்டுள்ளது.
31. ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
32. பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர், அண்டை வீட்டார் உறவுகள் மற்றும் உரிமைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது.
33. நல்வாழ்வை நாட வைக்கும் மரணசிந்தனை, மறுமை நம்பிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
34. விதவைகள் மறுமணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
35. வட்டி வாங்குவதும், கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
36 வரதட்சணை கேட்பதும்,கொடுப்பதும் பெருந்தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட மனித உரிமைகள் எல்லா நாடுகளிலும் பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே இஸ்லாம் கூறும் அமைதி உலகில் ஏற்படும் என்பது திண்ணம்.
source: http://satyamargam.com/1274