Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாத்தில் முதலாமானவை!

Posted on December 21, 2010 by admin

    மனிதர்களின் தலைவர்    

”மறுமை நாளில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவன் நானே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4575)  

    சொர்க்கத்தின் கதவை முதன் முதலில் தட்டுபவர்   

‘நானே மறுமை நாளில் இறைத் தூதர்களிலேயே அதிமானவர்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்; நானே சொர்க்கத்தின் வாசலை முதன் முதலில் தட்டுபவன் ஆவேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 331)

“நான் மறுமை நாளில் சொர்க்கத்தின் தலைவாயிலுக்குச் சென்று அதைத் திறக்கும்படி கோருவேன். அப்போது அதன் காவலர், நீங்கள் யார்? என்று கேட்பார். நான் முஹம்மத் என்பேன். அதற்கு அவர் ‘உங்களுக்காவே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; உங்களுக்கு முன் வேறு யாருக்காவும் (சொர்க்க வாயிலை) நான் திறக்கலாகாது (எனப் பணிக்கப்பட்டுள்ளேன்)’ என்று கூறுவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 333)

     முதலில் பரிந்துரை செய்பவர்    

”நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதராவேன்; இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 330)

     முதன் முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவர்   

”முதன் முதலில் பரிந்துரை செய்பவனும் நானே! முதன் முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா, ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4575)

    முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர்   

”நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் கூறி விட்டு, ”நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகிவிட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின்றோம்” (21:104) என்னும் வசனத்தை ஓதினார்கள்.

பிறகு ”மறுமை நாளில் முதன் முதலாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவார்” கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3349)

    முதலில் விசாரிக்கப்படுபவர்கள்   

”உலக மக்களில் நாமே (காலத்தால்) பிந்தியவர்களாக இருக்கிறோம். மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் படைப்பினங்களில் அனைவருக்கும் முன் தீர்ப்பளிக்கப்படுபவர்களாவும் இருப்போம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1552)

”நாங்கள் இறுதி சமுதாயம். ஆனால் முதன் முதலில் விசாரிக்கப்படுபவர்கள். ‘எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயமும் அவர்களின் நபியும் எங்கே?’ என்று கேட்கப்படும். நாங்கள் கடைசியானவர்கள்; ஆனால் (தகுதியில்) முந்தியவர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா 4280)

    சொர்க்கம் செல்லும் சமுதாயம்    

”நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும், மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதஇல் நுழைவோம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1550)

    மனித உரிமையில் முதல் தீர்ப்பு     

”(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல் முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6864)

    இறைக் கடமையில் முதல் கேள்வி   

”(இறைகடமைகளில்) முதலாவதாக அடியானிடம் விசாரிக்கப்படுவது அவனது தொழுகை பற்றியதாகும். அதை அவன் முழுமைப்படுத்தியிருந்தால் (சரி!). இல்லையெனில், ‘என் அடியானிடம் உபரியான வணக்கம் இருக்கிறதா? என்று பாருங்கள்’ என்று அல்லாஹ் கூறுவான். ‘உபரியான வணக்கம் அவனிடம் பெற்றுக் கொள்ளப்பட்டால் அதைக் கொண்டு கடமையானதை நிறைவு செய்யுங்கள்’ என்று அல்லாஹ் கூறுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ 463)

    முதல் ஜுமுஆத் தொழுகை   

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாசஇல் நடத்தப்பட்ட ஜுமுஆவுக்கு அடுத்து பஹ்ரைனில் உள்ள ஜுவாஸா எனும் கிராமத்தில் அப்துல் கைஸ் பள்ளியில் தான் முதன் முதலாக ஜுமுஆ நடந்தது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 892)

    முதன் முதலில் சிலைகளுக்கு ஒட்டகத்தை நேர்ந்து விட்டவர்  

குஸாஆ குலத்தைச் சார்ந்த அம்ர் பின் ஆமிர் பின் லுஹை என்பவரை நரகத்தில், தன் குடலை இழுத்துக் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர் தான் முதன் முதஇல் ‘சாயிபா’ ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து விட்டவர்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3521)

    இறைப் பாதையில் அம்பெய்த முதல் மனிதர்  

”அல்லாஹ்வின் பாதையில் (இஸ்லாமியப் படையில்) அம்பெய்த அரபியரில் நானே முதலாமவன்” என்று ஸஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 5674)

    நபிகளாரை மகிவிழ்த்த முதல் தர்மம்  

நான் (ஒரு முறை) உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்ற போது அவர்கள் என்னிடம் ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தையும் அவர்களுடைய தோழர்களின் முகங்களையும் (மகிழ்ச்சியால்) வெண்மையாக்கிய முதலாவது தர்மப் பொருட்கள், தய்யீ குலத்தார் அளித்ததாகும். அதை நீங்கள் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வந்தீர்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4942)

    முஹாஜிர்களில் முதலாமானவர்கள்  

எங்களிடம் (மதீனாவுக்கு முஹாஜிராக) முதன் முதலில் வருகை தந்தவர்கள் முஸ்அப் பின் உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இப்னு உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் தாம். பிறகு எங்களிடம் அம்மார் பின் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் வந்தனர். (அறிவிப்பவர்: பரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3924)

    சொர்க்கம் செல்லும் முதல் அணியினரின் தோற்றம்    

”சொர்க்கத்தில் முதலாவதாக நுழைக்கின்ற அணியினரின் தோற்றம் பௌர்ணமி இரவில் சந்திரன் தோற்றத்தைப் போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள். அங்கு அவர்களின் பாத்திரங்கள் தந்கத்தாலானவையாக இருக்கும். அவர்களுடைய (தலை வாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவையாய் இருக்கும். (அவர்கள் நறுமண ஆவி பிடிப்பதற்காக வைத்திருக்கும்) அவர்களுடைய தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும். (அங்கே) அவர்களுடைய வியர்வை (நறுமணம் வீசுவதில்) கஸ்தூரியாக இருக்கும்.

அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு துணைவியர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் மஜ்ஜை (காலின் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும். (சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது. அவர்களுடைய உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் தூய்மையைக் காலையும் மாலையும் எடுத்துரைத்துக் கொண்டேயிருப்பார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3245)

    சொர்க்கத்தின் முதல் உணவு    

”சொர்க்கவாசிகளில் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3329)

    இஸ்லாத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர்கள்    

முதன் முதலில் இஸ்லாத்தை வெளிப்படுத்தியவர்கள் ஏழு நபர்களாவர். 1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 2.அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, 3.அம்மார் ரளியல்லாஹு அன்ஹு, 4. சுமைய்யா ரளியல்லாஹு அன்ஹா, 5. ஸுஹைப் ரளியல்லாஹு அன்ஹு, 6. பிலால் ரளியல்லாஹு அன்ஹு, 7. மிக்தாம் ரளியல்லாஹு அன்ஹு (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு. (நூல்: இப்னு மாஜா 147)

(அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பதற்கு வேறு செய்திகளில் ஆதாரம் இருக்கிறது.)

    முதல் வஹீ   

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆரம்பாக வந்த(வஹீயான)து உண்மைக் கனவுகளே ஆகும். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 4956)

    மறுமையில் மயக்கம் தெளிந்து எழுபவர்களில் முதலாமவர்   

(மறுமை நாளில்) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்து விடுவார்கள். அப்போது, நான் தான் மயக்கம் தெளி(ந்து எழு)பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இறை சிம்மாசனத்தின் ஓர் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். மூர்ச்சையுற்று விழுந்தவர்களில் அவரும் ஒருவராயிருந்தாரா? அவர் எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து எழுந்துவிட்டாரா? அல்லது மூர்ச்சையடைந்து விழுவதிலிருந்து அல்லாஹ் விதிவிலக்களித்தவர்களில் ஒருவராய் அவர் இருந்தாரா? என்று எனக்குத் தெரியாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3408)

    உலகின் முதல் இறையில்லம்  

நான், ”அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?” என்று கேட்டேன். அவர்கள். ”அல்மஸ்ஜிதுல் ஹராம் இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3366)

     ஹிஜ்ரத்திற்குப் பிறகு மதீனாவில் பிறந்த முதல் குழந்தை  

நான் (என் மகன்) அப்துல்லாஹ் பின் ஸுபைரை (மக்காவில்) சூலுற்றிருந்தேன். சூல்காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டு மதீனா வந்தேன். (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனை பெற்றெடுத்தேன். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அவனைக் கொண்டு சென்று அவர்களுடைய மடியில் அவனை வைத்தேன்.

பிறகு அவர்கள் பேரீச்சம் பழம் ஒன்றைக் கொண்டு வரும்படிக் கூறி அதை மென்று அவனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உமிழ் நீர் தான் அவனது வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனது வாயினுள் வைத்து தேய்த்து விட்டார்கள். பிறகு அவனுக்காக துஆ செய்து இறைவனிடம் அருள் வளம் வேண்டினார்கள். அவன் தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான். (அறிவிப்பவர்: அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 3909)

    பனூ இஸ்ராயில்களின் முதல் குழப்பம்  

”இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால் தான் ஏற்பட்டது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5292)

source: http://dubaitntj.blogspot.com/2010/05/blog-post_8398.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

43 − = 36

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb