முஸ்லீம்களை வெறுத்தார், இஸ்லாத்தை நேசித்தார் – அம்பேத்கார்
பி. ஜைபுன்னிஸா
[ இந்திய முஸ்லீம் சமூகம் சமுதாய வாழ்வில் மட்டுமல்லாது, அரசியல் வாழ்விலும் தேக்கநிலையில் இருப்பதாகக் காண்கிறார் அம்பேத்கார். அரசியலில் முஸ்லீம்கள் ஆர்வம் காட்டாததையும், மதத்தின் மீது மட்டுமே அவர்களுக்குத் தலையாய அக்கறை உள்ளதையும் உணர்ந்து கூறுகிறார்.
வேட்பாளரின் செயல் திட்டத்தை ஆராய்வதில்லை, அவர்களைப் பற்றி முஸ்லீம்கள் கருத்துச் சொல்வதில்லை.
அவர்கள் விரும்புவதெல்லாம், மசூதியிலுள்ள பழைய விளக்குகளை அகற்றிவிட்டு புது விளக்குகள் போட்டுத்தர வேண்டும்.
மசூதி தொழுகை விரிப்பு கிழிந்து விட்டது, புது விரிப்பு வாங்கித்தர வேண்டும். மசூதி பாழடைந்து இருந்தால் புதுப்பித்துத் தரவேண்டும்.
இவையணைத்தையும் வேட்பாளர் தன் கைகாசில் செய்து தரவேண்டும். இதுமட்டுமே அவர்களது தேவைகள்.
இந்துக்கிடையேயாவது சமுதாயக் கேடுகள் குறித்து விழிப்பணர்வு பெற்று அவற்றை களைவதற்கு நெருக்குதல் தரத் தொடங்கி இருக்கிறார்கள். அதுபோன்ற விழிப்புணர்வு கூட முஸ்லீம் சமூகத்தில் காணப்படவில்லையே என்று ஆதங்கமுற்றிருக்கிறார்.]
இஸ்லாத்தின் சமத்துவக் கொள்கையை மிகவும் அதிகமாகவும், உயர்வாகவும் மதித்தார் அம்பேத்கார். அவரது வருத்தம் இஸ்லாம் இந்தியாவில் தொலைந்து போனது என்பதுதான். இதனை அவரது எழுத்து வடிவிலேயே காண்போம்.
‘இனம் – நிறம் கடந்து பல்வேறுபட்ட மக்களைக் கட்டுக்கோப்பான சகோதரத்துவமுள்ள சமுதாயமாக, ஒன்றுபடுத்த முடியக்கூடிய சமயமாக இஸ்லாம் இருந்துபோதும், இந்தியாவில் – இந்திய முஸ்லீம்களுக்கிடையில் நிலவிய சாதியை ஒழிப்பதில் இஸ்லாம் வெற்றிபெற முடியவில்லை.’
இந்துக்களிடையில் இருக்குமளவு நச்சுத்தன்மையுடன் சாதியுணர்வு முஸ்லீம்களுக்கிடையே காணவில்லை என்றாலும், அவர்களிடையிலும் சாதியுணர்வு இருப்பதைக் கண்டு துன்புற்றார்.
இந்திய முஸ்லீம் சமூகம் சமுதாய வாழ்வில் மட்டுமல்லாது, அரசியல் வாழ்விலும் தேக்கநிலையில் இருப்பதாகக் காண்கிறார் அம்பேத்கார். அரசியலில் முஸ்லீம்கள் ஆர்வம் காட்டாததையும், மதத்தின் மீது மட்டுமே அவர்களுக்குத் தலையாய அக்கறை உள்ளதையும் உணர்ந்து கூறுகிறார். ஒரு பதவியைப் பிடிக்க போராடும் வேட்பாளரை ஆதரிப்பாதற்கு ஒரு முஸ்லீம் தொகுதி வேண்டும் என்ற அவர்களது நிபந்தனை மூலமே இதனை அறியலாம்.
வேட்பாளரின் செயல் திட்டத்தை ஆராய்வதில்லை, அவர்களைப் பற்றி முஸ்லீம்கள் கருத்துச் சொல்வதில்லை. அவர்கள் விரும்புவதெல்லாம், மசூதியிலுள்ள பழைய விளக்குகளை அகற்றிவிட்டு புது விளக்குகள் போட்டுத்தர வேண்டும். மசூதி தொழுகை விரிப்பு கிழிந்து விட்டது, புது விரிப்பு வாங்கித்தர வேண்டும். மசூதி பாழடைந்து இருந்தால் புதுப்பித்துத் தரவேண்டும். இவையணைத்தையும் வேட்பாளர் தன் கைகாசில் செய்து தரவேண்டும். இதுமட்டுமே அவர்களது தேவைகள்.
‘பணக்காரர், ஏழை, முதலாளி, தொழிலாளி, நிலப்பிரபு, குத்தகையாளர், மதகுரு, பொது மனிதர், பகுத்தரிவாளர், மூட நம்பிக்கையாளர் இவர்களுக்கிடையிலான வேறுபாடுகளை, வாழ்வின் மதச்சார்பற்ற மற்ற விஷயங்களை முஸ்லீம் அரசியல் கவனத்தில் எடுப்பதேயில்லை. அவர்கள் அரசியல், அடிப்படையிலேயே மதம் சார்ந்தது.’
இந்து சமுதாயத்திலுள்ள தீமைகள் அனைத்தும் முஸ்லீம் சமூகத்திலும் இடம் பெற்றிருப்பதைக் கண்ட அம்பேத்கார் அவற்றை ஒழிப்பதற்குத் தேவையான ஒழுங்கமைக்கப்பட்ட எந்த ஒரு சமுதாய சீர்த்திருத்த இயக்கமும் அவர்களுக்கிடையில் அறவே காணப்படவில்லையே என்று வருந்தியுள்ளார்.
‘இந்துக்கிடையேயாவது சமுதாயக் கேடுகள் குறித்து விழிப்பணர்வு பெற்று அவற்றை களைவதற்கு நெருக்குதல் தரத் தொடங்கி இருக்கிறார்கள். அதுபோன்ற விழிப்புணர்வு கூட முஸ்லீம் சமூகத்தில் காணப்படவில்லையே என்று ஆதங்கமுற்றிருக்கிறார்.’
இறுதியில் அவரது கோபம் வெளிப்பட்டு ‘முஸ்லீம்கள், சீர்திருத்தத்திற்கு எதிரானவர்களா?’ எனக் கேட்க வைத்தது. முஸ்லீம் உலகுக்கு வெளியே எங்கேயும் காணமுடியாத கடுமையையும், வன்முறையையும் கொண்ட சகிப்புத்தன்மை அற்ற உணர்வும் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் உலகின் தேக்க நிலைக்கு இதுவே காரணம் என்று கூறுகிறார்.’
இந்தியாவில் இந்துக்களே மேல் நிலையில் இருப்பதால், இந்துச் சூழல் சத்தமில்லாமல் தன்னை முஸ்லீம் அல்லாதவராக ஆக்குவதாக உணர்கிறார் அம்பேத்கார். இஸ்லாமிய வழக்கம் ஒவ்வொன்றும் தன் சமூகத்திற்கு உதவிகரமானதா? ஊறுசெய்யக்கூடியதா? என்பதை ஆராய்ந்து பார்க்க நேரம் ஒதுக்காமலே, பத்திரப்படுத்துவதை, வலியுறுத்துவதை நோக்கி இட்டுச் செல்லப்பட்டார் அம்பேத்கார்.
இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களின் பிற்பட்ட நிலைக்குக் காரணம் தனித்தன்மையான இந்துச்சூழல் என்பதை அவர் காண்கிறார். இந்தச் சூழலே ஓயாத பாதுகாப்பின்மை உணர்வை அவர்களிடையே உருவாக்கி, முஸ்லீம்களை பழமைவாதச் சார்பாளர்களாக ஆக்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
(ஆனந்த் தெல்தும்ப்டே எழுதிய முஸ்லீம்கள் குறித்து அம்பேத்கார்’ எனும் நூலிலிருந்து)
நன்றி: முஸ்லிம் முரசு, அக்டோபர் 2009