ஷெர்ஷா
இந்த உலகின் அனைத்துத் துறைகளுக்கும் அனைத்துச் சிக்கல்களுக்கும் இஸ்லாம் தெளிவாக வழிகாட்டுகிறது. அல்குர்ஆனும், நபிமொழியும் தெளிவுபடுத்தாத துறைகள் இந்த உலகில் வந்ததும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை.
தனி மனிதனின் குடும்பம் சார்ந்த தேவைகள், இன்றைய உலகின் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம், ஆட்சிநிர்வாகம், வர்த்தகம் என்று இன்னும் எவ்வளவோ துறைகளுக்கு வழிகாட்டச் சொல்லி முஸ்லிம்களை இஸ்லாம் தூண்டுகிறது. இது கடமை என்றும் வலியுறுத்துகிறது.
அதிலும் குறிப்பாக மதரஸாவில் படித்துப் பட்டம் பெறும் மாணவர்களுக்கு / ஆலிம்களுக்கு இதில் மிகப்பெரும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. மாறிவரும் உலகில் பெருகி வரும் பிரச்சனைகளுக்கேற்ப அனைத்தையும் ஆழமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலும், அவற்றிற்கு இஸ்லாமியத் தீர்வுகளை முன்வைக்கும் அறிவுக்கூர்மையும் இருந்தால் மட்டும்தான் இனி வரும் நவீன காலத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் வலுவாக நிலைநிறுத்த இயலும். அதற்கு ஏராளமான வாய்ப்புகள் தற்போது பெருகி வருகின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் ஸனது வழங்கும் பல மதரஸாக்களில் பள்ளி இறுதித் தேர்வுகள் எழுத இயலாத சங்கடமான சூழ்நிலை நிலவுகிறது. தற்போது இது மாறி வருகிறது.
30 வயதைக் கடந்த 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மக்களில் ஆர்வமுடையவர்கள் விவசாயம் குறித்துப் படித்துப் பட்டதாரியாகிட அற்புதமான வாய்ப்பை கோவை வேளாண் கல்லூரி ஏற்படுத்தியுள்ளது.
B.F.Tech. என்ற வேளாண்மை இளங்கலை படிப்பை 3 ஆண்டுகள் படித்துப் பட்டம் பெறும் வண்ணம் இந்தப் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் உணவு உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதால் அதை உணவாக உட்கொள்ளும் மக்கள் கடும் நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் சமூகம் இதில் விழிப்புணர்வு இல்லாமல், உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், இயற்கையைப் பேண வேண்டிய வழிகாட்டுதல் இல்லாமல் இளம் வயதிலேயே நோய்வாய்ப்பட்டு வருகின்றனர்.
பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியல் முறைகளையும், உணவு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை ஓரளவிற்குப் புரிந்து வைத்துள்ள ஆலிம்கள் இந்தப் படிப்பை தொலைதூரக் கல்வியாகப் படிக்கின்ற நேரத்தில் உணவு உற்பத்தியை இயற்கை வழியில் பெருக்
குவதையும் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வழிமுறையையும் விளங்கிக் கொள்ள முடியும். இந்தப் படிப்பைப் படிப்பவர்கள் விவசாய ஆலோசனை சொல்ல தகுதி பெற்றவர்களாக மாறுகிறார்கள். இதன்மூலம் மிகப்பெரும் புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திட முடியும்.
தமிழகத்தில் ஏறக்குறைய 8 ஆயிரம் பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இதில் 6 ஆயிரம் பள்ளிவாசல்கள் கிராமங்களில் தான் இருக்கின்றன.
இத்தகைய பள்ளிவாசல்களில் பணிபுரியும் ஆலிம்கள் தங்களது பகுதியில் நடைபெறும் விவசாயத்திற்கு ஆலோசனை சொல்வதன் மூலம் மனித இனத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க முடியும். அதன்மூலம் மக்களை நோய்நொடிகளிலிருந்து பாதுகாக்க முடியும். அமெரிக்காவின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட முடியும். நீர்நிலைகளையும் இயற்கை சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும்.
மேலும் விவசாய ஆலோசனை வழங்குவதன் மூலம் அல்லாஹ் அனுமதித்திருக்கின்ற வழியில் தங்கள் அறிவின் மூலம் சம்பாதிக்கவும் முடியும்.
10ஆம் வகுப்பு தேர்வு எழுதாதவர்கள் கூட கோவை வேளாண் பல்கலையில் நடத்தப்படும் திறந்தவெளி கல்லூரியில் வேளாண்மை குறித்து படிக்க இயலும்.
மொத்தத்தில் அல்லாஹ்வின் அருள் நிறைந்த இந்தப் பணியைச் செய்வதற்கு ஆலிம்களுக்கு அற்புதமான வாய்ப்பு! பயன்படுத்திக் கொள்வீர்!
ஆலிம் பெருமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
இஸ்லாமிய நூல்கள் படிக்க ஆர்வம் இருந்தும் அவற்றைப் பெறுவது கடினமாக உள்ள சூழ்நிலையில், ஊரில் நூலகமும் இல்லையேஎன்று ஏங்கும் ஆலிம் பெருமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ஸஸ!
ஆலிம் பெருமக்களின் இல்லம் தேடி அஞ்சல் வழியில் இஸ்லாமிய நூல்களை இலவசமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமிக் அகாடமி செய்துள்ளது
.
ரமளான் மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியது
.
அஞ்சல் வழி நூலகத்தில் உறுப்பினராகச் சேர ஆர்வமுள்ள ஆலிம்கள் உடனே தங்களின் பெயர்களைப் பதிவு கொள்ளவும்
.
உறுப்பினர் கட்டணம் எதுவும் இல்லை
.
அஞ்சல் செலவும் இல்லை
.
அனைத்தையும் அகாடமியே ஏற்றுக் கொள்ளும்
.
இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள ஆலிம் பெருமக்களை அன்புடன் அழைக்கிறோம்.
முகவரி :
உலமா அஞ்சல் வழி நூலகம்
இஸ்லாமிக் அகாடமி
ஐ
.எஃப்.டி. காம்ப்ளக்ஸ்
எண்
138, பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை
– 600 012
தொலைபேசி
: 2662 1101
மின்னஞ்சல்
source: http://www.samooganeethi.org/?p=693