செய்திகள் ஒரு பார்வை
வாஷிங்டன்: அமெரிக்காவின் பல்கலைக்கழகங்கள் இணையதள உலகம் ஆகியவற்றில் அரபுமொழி இவ்வாண்டு மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
சமூக இணையதள நெட்வொர்க்கான ஃபேஸ் புக்கில் உலகின் முதல் 10 மொழிகளில் அரபு மொழி 20 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால், அரபு உலகத்தில் இணையதள பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலிலும், காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை அடைய அரபு மொழியால் இயலவில்லை எனவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் இணையங்களில் அரபுமொழி பயன்பாடு அதிகரிப்பு!
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அரபுமொழியின் மீதான விருப்பம் அதிகரித்துள்ளது. ரஷ்ய, லத்தீன் மொழிகளை இதில் அரபு மொழி முறியடித்துள்ளது. கல்வி கலாசாலைகளில் எட்டாவது இடத்தை அரபு மொழி பிடித்துள்ளது. இத்தகவல் மாடர்ன் லாங்குவேஜ் அசோசியேஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
1998 ஆம் ஆண்டில் அரபுமொழி படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 5500 ஆகும். ஆனால், 2002 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 10,584 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 35000 ஆக உயர்ந்துள்ளது. 2154 அமெரிக்க கல்லூரிகளில் நடத்திய ஆய்வுகளில்தான் இவ்விபரத்தை கண்டறிந்துள்ளது மாடர்ன் லாங்குவேஜ் அசோசியேஷன்.
சர்வதேச அரசியலில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்த வளர்ச்சிக்கு காரணம் என அவ்வமைப்பு கூறுகிறது. அல்காயிதா நடத்தியதாக கூறப்படும் அமெரிக்க தூதரகத் தாக்குதல்களுக்கு பிறகு அரபு மொழி முதல்கட்டமாக அதிக வளர்ச்சியை கண்டது. பின்னர் இரண்டாவது கட்டம் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தாகும் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், அரசியல் காரணங்களை விட வேலைவாய்ப்புகள்தான் மொழிகளை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் என ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் பேராசிரியரான ரஸ்ஸல் பர்மான் கூறுகிறார்.
புதிய வேலைவாய்ப்புகள், பாரம்பரியத்தை உறுதியாக பற்றிக் கொள்வதற்கான விருப்பம், உலகமயமாக்கலின் வளர்ச்சி, கலைஇலக்கிய உலகின் புதிய வாய்ப்புகள் ஆகியன வெளிநாட்டு மொழியை படிப்பதில் மாணவர்களை தூண்டுவதாக பர்மான் தெரிவிக்கிறார்.
நன்றி: மாத்யமம் செய்திகள்
இந்தியாவின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்கு துணை போவதில்லை
லண்டன்: இந்தியாவின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்கு துணை போவதில்லை எனவும், அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கத் தூதரகங்கள் தங்களது தலைமையிடத்துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.
பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் ஒற்றுமையுடன் வாழ விரும்புவதால், பயங்கரவாதத் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.
இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார்.
மூடி மறைத்து முக்காடிட்டு வரும் அம்மணியை தெரிகிறதா?
மூடி மறைத்து முக்காடிட்டு வரும் அம்மணியை தெரிகிறதா? இவர் அம்மணமாக திரிந்த கதை நமக்கு தேவையில்லை என்றாலும் இவர்களை முக்காடிட வைத்து மேற்கத்திய உலகின் முன் தோலுரித்த இறைவன் புகழுக்குரியவன்.
இந்தியா, இங்கே இஸ்லாமிய சட்டங்களும் இல்லை அதை நடைமுறைப்படுத்த எந்த நிர்பந்தமும் இல்லை என்ற நிலையிலும் தற்போது அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் சர்கோஸி மற்றும் முன்னாள் நிர்வாண மாடலும் அவரது இன்றைய மனைவியுமான கார்லா புரூனி ஆகியோர் பிள்ளை வரம் வேண்டி மூடத்தனத்திற்கு முன் மண்டியிட்ட காட்சி தான் இது.
சர்கோஸி சமீபத்தில் தான் பிரான்ஸில் முஸ்லீம்கள் புர்கா அணிய தடை விதித்து சட்டமியற்றி கையெழுத்திட்டு அதன் மை காயுமுன் அவர் மனைவிக்கே புர்கா அணிவித்து அம்பலப்படுத்திய இறைவனின் செயலை மேலும் புகழ்கின்றோம்.
(கேடுகெட்ட) நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக பீற்றிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் ஒன்றான பிரான்ஸின் அதிபராக இருந்தாலும் வழிகெட்ட ஒரு சாரார் நம்பும் சமாதிகளில் போய் வேண்டி இவர் தான்னுடைய மதத்தின் மீது வைத்துள்ள பிடிப்பையும் கிருஸ்தவ உலகிற்கு பறைசாற்றியுள்ளார். ஏற்றுக்கொண்ட கொள்கையில் கூட தரித்திருக்காத இவர்கள் தான் முஸ்லீம்களோடு விபரீதமாக விளையாடுகிறர்கள்.
இந்திய வந்துள்ள சர்கோஸி தன் மனைவியை ,e;jpahtpy; ரிஜிஸ்டர் செய்துள்ளாரா என தெரியவில்லை அப்படியே டெல்லியோடு திரும்பி போய்விட்டால் நல்லது தப்பித்தவறி தமிழகம் வர நேர்ந்தால்… ரிஜிஸ்டர் செய்யாதவற்றை திருடும் கும்பல் அருகி வந்தாலும் அவர்களின் தொழில் பெருகி உள்ளதாக கேள்விப்படுகிறோம்.
நன்றி: அதிரை அமீன்