அவருக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் அவரிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான அவர் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச்…
Day: December 16, 2010
நீங்கள் என்ன ஜாதி?
மவ்லவி,எம்.ஏ.இப்ராஹீம் பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி [ ஜும்ஆவுக்கு பின்னால் வந்து பரபரப்புடன் கலந்து கொள்ளும் சில பிரமுகர்கள், மற்றவர்களின் பிடரிகளை தாண்டி தாண்டி வரும் காட்சியை பல மஸ்ஜிதுகளில் காணலாம். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஜும்ஆ தினத்தில் மனிதர்களின் பிடரியைத் தாண்டி வருபவர் நரகத்திற்கான பாலத்தை எடுத்துக்கொண்டார்’ (நூல்: திர்மிதீ) என எச்சரிக்கிறார்கள்.] நீங்கள் என்ன ஜாதி? முஸ்லீம்களைப் பொறுத்தவரை இது தேவையில்லாத கேள்வியாக இருந்தாலும் நாடு…
ஷஃபாஅத் ஓர் நற்பாக்கியம் (1)
ஷஃபாஅத் ஓர் நற்பாக்கியம் (1) மவ்லவி, ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி [ ‘நல்ல மனிதன் செய்திருக்கும் நல்லமல்கள் சுவனத்துக்கு உரிமை பெற போதுமானதாக இருக்காது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீர் எண்ணினாலும் எண்ணி மாளாது.’ என்று திருக்குர்ஆனின் (14:34), (16:18) வசனங்கள் கூறுகின்றன. எண்ணியே முடிக்க முடியாதபோது, அவ்வனைத்துக்கும் நன்றி செய்ய எவ்வாறு முடியும்? எனவே எவரும், இறைவனுக்கு முழுக்க நன்றி செலுத்தியிருக்க முடியாது. அல்லாஹ்வின் தயவும், தாராளத் தன்மையும் இல்லையாயின் சுவனம் செல்ல முடியாது. நபிகள் நாயகம்…
ஷஃபாஅத் ஓர் நற்பாக்கியம் (2)
ஷஃபாஅத் ஓர் நற்பாக்கியம் (2) மவ்லவி, ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி 1. நபிமார்கள் தயக்கம் காட்டியபோது ‘மறுமை நாளில் எல்லா மக்களும் உயிர்த்தெழப்படும்போது எல்லோரும் என்ன செய்வது? என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்பார்கள். சூரியன் தலை உச்சிக்கு அருகாமையில் தகதகத்துக் கொண்டிருக்கும். தங்களின் கேள்வி கணக்குகளை முடித்துக் கொண்டு சுவனமோ, நரகமோ சென்று விட்டால் தேவலாம் என்று தோன்றும். ஆனால் விசாரணை நடப்பதற்கான அறிகுறியையே அவர்கள் காணமாட்டார்கள்.எனவே எல்லோருமாகச் சேர்ந்து நபி…
”தபர்ருஜ்” என்றால் என்ன?
தபர்ருஜ் என்றால் என்ன? ‘பெண்கள் தங்களின் அழகு மற்றும் அலங்காரங்களை அந்நிய ஆடவருக்கோ அல்லது மஹர்ரமற்றவர்களுக்கோ (திருமணம் செய்ய ஆகுமான உறவினர்கள் மற்றும் பிறர்) வெளிக்காட்டுவதும், பொது இடங்களில் மேக்கப்புடன் தங்களை அலங்கரித்துக் கொண்டு தோன்றுவதும், அந்நிய ஆண்களின் இச்சையைத் தூண்டும் வேறு எந்த விதமான காரியங்களைச் செய்வது தபர்ருஜ் ஆகும்’ தபர்ருஜ் செய்வதனால் விளையும் தீமைகள்: இமாம் அத்தாபி அவர்கள் தங்களின் ‘அல் கபாயிர்’ (பெரும் பாவங்கள்) என்ற நூலில் கூறுகிறார்கள்: ‘பெண்கள் சபிக்கப்படுவதற்கான மற்ற…