தீனுல் இஸ்லாத்தை தேடிப்பார்க்க வேண்டியுள்ளது!
பேராசிரியர் மவ்லவி, எம். அப்துல் ஹமீது பாகவி
[ நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உதுமான் ரளியல்லாஹு அன்ஹு விருந்துக்கு அழைத்தார்கள்.
ஸஹாபாக்களுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்து போகும்போது உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலடியை எண்ணிக்கொண்டே தொடர்கின்றார்கள்.
காஃபிர்கள், யஹூதிகளிடம் பொய் சொல்வது என்ற எல்லாமும் இருந்தன. ஆனாலும் நன்மையைச் செய்தார்கள். நல்ல பண்புடன் வாழ்ந்தார்கள். ஒரு காஃபிர் உபகாரம் செய்யாவிட்டாலும் துரோகம் செய்வதில்லை. ஆனால் முஸ்லீம்கள் பொய் சொல்லக்கூடாது என்று ஒருநாள்கூட பத்தியம் இருப்பதில்லை.]
தாபியீன்களைப் போல் வாழ்ந்தோம் என்ற வரலாறு கிடையாது. மனிதர்களுக்குள் பல்வேறு மனக்கிளர்ச்சி ஏற்பட்டு மிருகங்களாக மாறி கியாமத் நாளைக் கொண்டுவரும் முயற்சிக்குள் தள்ளப்பட்டு வாழ்கிறோம்.
ஒரு சமூகத்தை வரைமுறைப் படுத்த அல்லாஹ் காலக்கெடு நிர்ணயித்தான். நபியைக் கொடுத்தான். ஸஹாபிகளைக் கொடுத்தான் அவர்கள் மூலம் மனித சமூகத்தை பின்பற்ற வழி ஏற்படுத்தினான்.
நபித்தோழர்கள் அபூபக்கர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு இருவரும் தவ்ராத், இன்ஜீல் ஆகிய வேதத்திலேயே குறிப்பிடப்பட்டவர்கள். அவர்களுடைய பண்புகள், சுபாவங்கள் என்று அல்லாஹ் அதில் பதிவு செய்திருக்கிறான்.
எல்லா ஸஹாபிகளையும் பின்பற்றி அல்லாஹ் வாழச்சொல்லியுள்ளான். இன்று அமல்கள்; விடப்பட்டு தீனுல் இஸ்லாம் எங்கிருக்கிறது என்று தேடிப்பார்க்க வேண்டியுள்ளது.
முழுமையான தீனை கடைப்பிடிப்பவர்கள் இன்று இல்லை. அப்படி இருந்தால் அவர் ‘வலி’யாக இருப்பார். இது கியாமத் நாளின் அடையாளம்.
பெற்ற தாய், தந்தை ஒதுக்கப்பட்டு வாழ்கின்றனர். வியாபரத்தில் நீதம் இல்லை. நீதியில் அநீதி வழங்கப்படுகிறது. ஹராம் எல்லாவற்றிலும் சர்வ சாதாரணமாக வந்துவிட்டது. ஹலால், ஹராம் பிரித்துணர முடியாத அளவில் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள்.
மனித வாழ்க்கை மிருக வாழ்க்கையாக மாறும். ஒருமாதம் ஒரு வாரம்போல் தெரியும். விளைச்சல் இருக்காது. பனிமலை உருகும், மழை இருக்காது.
செருப்பு வார் பேசும். அப்போது கியாமத் வரும். ஒருவன் வெளியே சென்று வீடு திரும்பும்போது அவன் செய்த செயலை அவனது உறுப்பு பேசும். நானோ டெக்னாலஜி வளர்ந்து வருகிறது. இது சாத்தியப்படும் காலம் நெருங்கிவிட்டது.
மனித சமூகத்தில் இப்படி வாழ்ந்தார்களா? என்று ஆச்சர்யப்படுத் விதத்தில் ஸஹாபாக்கள் வாழ்ந்தனர். ‘நுபுவ்வத்’ முடிந்தது. மனித ‘முஹப்பத்’தும் முடிந்துவிட்டது.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உதுமான் ரளியல்லாஹு அன்ஹு விருந்துக்கு அழைத்தார்கள். ஸஹாபாக்களுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்து போகும்போது உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலடியை எண்ணிக்கொண்டே தொடர்கின்றார்கள். எதனால் எனக்கேட்டபோது, எத்தனை காலடிகள் எனது இல்லம் வரை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வைத்தார்களோ அத்தனை அடிமைகளை நான் விடுதலை செய்வேன் எனக் கூறியுள்ளார்கள்.
பஞ்சம், பசாது காலத்தில் 100 ஷஹீதுகளுக்குரிய நன்மையைக் கொடுப்பேன் என அல்லாஹ் கூறுகிறான். அன்று ‘சுன்னத்’ சர்வ சாதாரணமாக இருந்தது. இன்று சுன்னத்துக்கே பஞ்சம் வந்திருக்கிறது. ஆண் பெண் இனத்திற்கிடையில் ஆபாசம் மிகைத்திருக்கிறது. எல்லா பாவங்களும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.
காஃபிர்கள், யஹூதிகளிடம் பொய் சொல்வது என்ற எல்லாமும் இருந்தன. ஆனாலும் நன்மையைச் செய்தார்கள். நல்ல பண்புடன் வாழ்ந்தார்கள். ஒரு காஃபிர் உபகாரம் செய்யாவிட்டாலும் துரோகம் செய்வதில்லை. ஆனால் முஸ்லீம்கள் பொய் சொல்லக்கூடாது என்று ஒருநாள்கூட பத்தியம் இருப்பதில்லை.
விபச்சாரங்கள், பாவங்கள் கைவிடப்பட்டால்தான் விமோசனம் கிடைக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஸஹாபாக்கள் வழியில் வாழ முற்படுவதுதான் ஒவ்வொரு முஸ்லீமுடைய அடையாளமாகும்.
(சில மாதங்களுக்கு முன் சென்னை கச்சேரி சாலை மஸ்ஜிதில் நடைபெற்ற உத்தம நபி உதயதின விழாவில்; நிகழ்த்தப்பட்ட உரைகளின் சுருக்கம்)
நன்றி : முஸ்லிம் முரசு