Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சளித்தொல்லையும், விட்டமின் ”C” யும்

Posted on November 26, 2010 by admin

Image result for orange

சளித்தொல்லையும், விட்டமின் ”C” யும்

உலகில் பரவலாக எல்லோருக்குமே ஏற்படக்கூடியது, முகத்தை சுளிக்க வைத்து, நம்மிடமிருந்து மற்றவர் சற்று ஒடுங்கி நிற்கும் அளவுக்கு தொற்று அச்சுறுத்தலைக் கொண்டது. உயிர்குடிக்கும் தீவிரம் இல்லாது போனாலும், நம்மை வாட்டி நோகடிப்பது. ஆங்கிலத்தில் கோல்ட் – Cold என்றும் வடமொழியில் ஜலதோஷம் என்றும் அறியப்படும் சளி.

இதன் தன்மை அறிந்துதான், உணர்ந்துதான் பொதுவாக தொல்லை என்பதை உடன் சேர்த்தே “சளித்தொல்லை என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்”.

மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் தீரும், மருந்து இல்லாவிட்டால் ஒரு வாரம் நீடிக்கும் என்று உண்மையை கிண்டலாக சொல்லி நாம் நமது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்கிறோம். பொதுவாக சளித்தில்லை ஏற்பட்டால் நாம் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடுவதில்லை.

வைட்டமின் என்று நாம் அழைக்கும், விட்டமின், உயிர்ச்சத்துகளில் சி வகை சளிக்கு நல்லது என்பது பரவலான ஒரு நம்பிக்கை. ஆரஞ்சுப்பழத்தில் இந்த உயிர்சத்து சி அதாவது விட்டமின் சி நிறைந்துள்ளது.

ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டால் சளி அதிகரிக்கும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால் ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி சளிக்கு நல்லது என்று மறுசாரார் நம்புகின்றனர். சளித்தொல்லையை சமாளிக்க விட்டமின் “சி”யை மாத்திரைகளாக உட்கொள்ளுபவர்கள் உலகில் அதிகம். ஊட்டச்சத்து மாத்திரைகளாக கருதப்படும் மல்ட்டிவிட்டமின்கள் அதாவது பல விட்டமின்களின் கலவை மாத்திரைகள் கூட இன்றைக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் வேடிக்கை என்ன்வென்றால், சளித்தொல்லைக்கு விட்டமின் சியை மாத்திரையா ஒட்டிக்கொண்டாலும் சரி, ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதம் மூலம் ‘விட்டமின் சி’யை பெற்றாலும் சரி, எல்லாம் வீண், கால விரயெமே என்று அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இந்த விட்டமின் சியை மாத்திரைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒன்றேல் சளியை வராமல் தடுக்க அல்லது சளி வந்தாலும், அதன் அறிகுறிகளின் தீவிரத்தை தணிவுபடுத்த.

ஆனால் இத்தகைய மாத்திரைகள், சளியைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அதன் தீவிரத்தை குறைப்பதுமில்லை என்று அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாரத்தான் எனப்படும் நெடுந்தூர ஓட்டத்தில் பங்கேற்போர், ஸ்கீயிங் என்பபடும் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்போர், மிகத்தீவிரமான சளியால் துன்புறுவோர், மன அழுத்தத்தால் அவதியுறுவோர், இவர்களுக்கு மட்டும்தான் இந்த விட்டமின் சி மாத்திரைகள் கொஞ்சம் பயன் தருகின்றன. மற்றவர்கள் சளி வந்தால், இந்த விட்டமின் சி மாத்திரைகளை சாப்பிட மெனக்கெட வேண்டாம் என்று கூறுகின்றனர்.

ஈந்த ஆய்வாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் 11 ஆயிரம் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இவர்கள் கூறுவது என்னவென்றால், 365 நாட்களும் விட்டமின் சியை சாப்பிடுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை என்பதுதான்.

கோக்ரேன் லெபாரட்டரி என்ற மருத்துவ ஏட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு பொதுவாக விட்டமின் சியை வழமையாக அன்றாடம் உட்கொள்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சளி ஏற்பட குறைவான வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்தது.

மேலும் அன்றாடம் விட்டமின் சியை உட்கொள்பவர்களுக்கு சளி பிடித்தால் அதன் தீவிரம் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதும் ஆராயப்பட்டது. பொதுவாக கடைகளில் கிடைக்கும் விட்டமின் சி மாத்திரைகளில் இருப்பதைப்போல் 4 மடங்கு அதாவது 2 கிராம் விட்டமின் சியை ஆய்வுக்குட்படுத்தப்பட்டோர் உட்கொண்டனர். ஆய்வின் முடிவில், உலகின் பல்வேறு பகுதியிலிருந்தான தரவுகளின்படி, விட்டமின் சி மாத்திரைகள் மிகக் குறைவான பயனையே தந்தனவாம். அன்றாடம் விட்டமின் சியை உட்கொண்டவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 2 விழுக்காடு மட்டுமே குறைவாக சளிபிடிக்கும் ஆபத்தில்லாதிருந்தனர். சளியின் தீவிரமும் மிகச் சிறிய அளவே குறைந்தது.

பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகம் இவற்றைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்களின் கருத்தில், இந்த் ஆய்வை சுருங்கச் சொன்னால், மற்றவர்கள் ஆண்டில் 12 நாட்கள் சளியால் அவதியுற்றால், அன்ராடம் விட்டமின் சி சாப்பிடுபோர் ஆண்டில் 11 நாட்கள் அவதியுறுவர்.

ஆண்டுக்கு 3 அலது 4 முறை நமக்கு சளி பிடிக்கிறது. சளி பிடித்தால், தலைவலி, மூக்கடைப்பு, தொண்டை வலி, காய்ச்சல், இருமல், முக்கொழுகுதல் என அதன் சகாக்களும் சேர்ந்து நம்மை உண்டு இல்லையென ஆக்கிவிடுகின்றன.

கிண்டலாக இதையும் சொல்லக் கேட்டிருப்போம், நமக்கெல்லாம் சளிபிடித்தால் எப்படி அவதியுறுகிறோம், பத்து தலை ராவணன் எப்படி சமாளித்திருப்பார் என்று. கேலியும், கிண்டலும் ஒருபுறம் இருக்கட்டும். நம்மில் அனைவருமே அறிந்தது, அனுபவத்தால் உணர்ந்தது, இந்த சளித்தொல்லை. நாம் பலரும் நம்பிய விட்டமின் சியும் இபோது பயனற்றதாக அறிவியலர்கள் கூறியதால் கவலை ஏற்படுகிறது அல்லவா. கவலையை விடுங்கள், கொஞ்சம் ஆறுதலான தகவலும் உண்டு.

விட்டமின் சி பொதுவாக அனைவருக்குமே பலன் தராது என்றாலும், இச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அது பலன் தரும் என்பதை பிரித்தானிய வல்லுனர்கள், கண்டறிந்துள்ளனர். அபெர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த நுண் உயிரியலாளர் ஹியூக் பென்னிங்க்டன் என்பவர், சளிக்கு விட்டமின் சி மாத்திரைகளும், ஆரன்ச்ஜு வழச்சாறும் பெரிதாக ஒன்றும் பயன் தரவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் அவற்றை உட்கொள்வதால் கேடொன்றுமில்லை, தீங்கொன்றுமில்லை என்கிறார். இவற்றை சாப்பிடுவதால் குணமாகும், சளி குறையும் என்ற நம்பிக்கையே சளியால் அவதியுறுபவர்களுக்கு ஆறுதலாக இருக்கும், அவர்கள் ஓரளவு தெம்பைப் பெறுவார்கள் என்கிறார் பென்னிங்க்டன்.

மறுபுறத்தில் எக்கினாசியா என்ற ஒரு தாவரத்தின் மூலமான மருந்து சளிக்கு நல்ல பயனுள்ள நிவாரணமளிப்பதாக அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியகாந்தி பூவைப்போல காட்சியளிக்கும் இந்த எக்கினாசியா பூக்களின் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, கிட்டத்தட்ட சலிபிடிக்கும் வாய்ப்பை பாதியளவு குறைக்கிறதாம். என்ன் எக்கினாசியா எங்கே கிடைக்கும் என்பதுதானே உங்கள் கேள்வி….? குலேபகாவலி பூவைப்போல் நாடு நாடாகத் தேட வேண்டியதுதான்! 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

58 − = 53

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb